Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்கானாவில் கோழி கொத்தி குழந்தை சாவு

Posted: 03 Aug 2014 10:41 PM PDT

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் முனுகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சைதலு. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஜான்வி என்ற 8 மாத குழந்தை உள்ளது. சைதலு நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். இதனால் ஸ்ரீதேவி மகள் பெயரையே தனது மகளுக்கு சூட்டி இருந்தார். குழந்தை ஜான்விக்கு சளி பிடித்து இருந்தது. இதற்காக கீதா குழந்தைக்கு

காப்பீட்டு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகளுடன் நடத்திய பேச்சு தோல்வி

Posted: 03 Aug 2014 10:39 PM PDT

மோடி தலைமையிலான மத்திய அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்த்தன. இதனால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அவர்கள் ஒருமித்த கருத்துடன் நாளை இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிசு செய்தது. அதற்கான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.

ஆந்திரா பக்தர்கள் கொல்கத்தாவில் தவிப்பு: விமானம் மூலம் அழைத்துவர சந்திரபாபு நாயுடு ஏற்பாடு

Posted: 03 Aug 2014 10:37 PM PDT

ஆந்திர மாநிலம் ஓங்கோல், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த 45 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காசியாத்திரை சென்றனர். பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள் கொல்கத்தா காளியை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். அவுரா ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் அனைவரும் சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததால் அனைவருக்கும் வாந்தி பேதி எற்பட்டது. இவர்களில் 29 பேர் நிலைமை கவலைக்கிடமானது.

சித்தூர் அருகே பாகனை மிதித்துக்கொன்ற யானை

Posted: 03 Aug 2014 10:14 PM PDT

கேரள மாநிலம் சித்தூர் தாலுகா கொடுவாயூர் அருகேயுள்ள எத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்(வயது 45). இவர் கொச்சி தேவசம்போர்டில் சந்திரசேகரன் என்ற யானையின் பாகனாக கடந்த 25 வருடமாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சசிகுமார் யானைக்கு உணவு கொடுக்க சென்றார். அப்போது யானைக்கு திடீரென்று மதம் பிடித்தது. ஆவேசமாக பிளிறிய யானை சசிகுமாரை துதிக்கையால் சுற்றி வளைத்து காலில்போட்டு நசுக்கியது.

கேரளாவில் மழை நீடிப்பு: 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted: 03 Aug 2014 10:00 PM PDT

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாகி தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் போதுமான மழை பெய்யாத நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலம் முழுவதும் மழை பெய்தது.

10-ந் தேதி ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடிக்கு ஆயிரம் ராக்கி கயிறுகள்

Posted: 03 Aug 2014 09:34 PM PDT

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக்ஷா பந்தன் விழா' வருகிற 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பெண்கள், 'ராக்கி கயிறு' என்ற புனித கயிறை ஆண்களின் கைகளில் கட்டி தங்கள் சகோதரர்களாக நினைத்து கொண்டாடி மகிழ்வார்கள். நரேந்திர மோடி கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

காஷ்மீரில் 8 வயது சிறுமி தலை துண்டித்து படுகொலை: தந்தையின் வெறிச்செயல்

Posted: 03 Aug 2014 08:34 PM PDT

குடும்ப தகராறில் ஆவேசமடைந்த தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் தலையை துண்டித்து 8 வயது சிறுமியைக் கொன்ற சம்பவம் பூஞ்ச் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரானா கிராமத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். தனது குடும்பத்தாரிடையே ஏற்பட்ட தகராறில் ஆவேசம் அடைந்த இவர், நேற்று மாலை வீட்டின் வாசலில் விளையாடிக்

கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பீகாரில் 50000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

Posted: 03 Aug 2014 05:28 PM PDT

நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக சிந்துபால்சவுக் மாவட்டத்தின் வழியாக ஓடும் பட்டா கோஷி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பல பகுதிகளில் மண் அரிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பட்டா கோஷி ஆற்றங்கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன.

பாலியல் தொல்லையை விசாரித்து வந்தவருக்கே பாலியல் தொல்லை: பதவியை துறந்த பெண் நீதிபதி

Posted: 03 Aug 2014 05:04 PM PDT

குவாலியரில் பாலியல் தொல்லை குறித்த வழக்குகளை விசாரித்து வரும் விசாகா குழுவின் பெண் தலைமை நீதிபதி, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியின் பாலியல் தொல்லையால் தனது பதவியை துறந்தார். 15 வருடங்கள் டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அப்பெண் வழக்கறிஞர், நீதித்துறை நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின்

நேபாள நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா ரூ.6000 கோடி நிதியுதவி

Posted: 03 Aug 2014 04:22 PM PDT

நேபாள நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா ரூ.6000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று உரையாற்றினார். அப்போது அந்நாட்டை புதிய உயரத்திற்கு இந்தியா அழைத்துச்செல்லும் என்று கூறிய அவர் நெடுஞ்சாலை, தகவல்

நியூயார்க் நகரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் மோடி பேசுகிறார்

Posted: 03 Aug 2014 02:39 PM PDT

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க 'வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்' அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது.

டெல்லி சட்டசபையை கலைக்க ஆம் ஆத்மி ஒரு வாரம் கெடு

Posted: 03 Aug 2014 01:41 PM PDT

ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் டெல்லியில் சட்டசபையை கலைக்க ஆம் ஆத்மி கட்சி, ஒரு வாரம் 'கெடு' விதித்துள்ளது. புதிதாக தேர்தல் நடத்துமாறு அரவிந்த் கெஜ்ரிவால் வற்புறுத்தி உள்ளார். டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து,

கர்நாடகத்தில் 250 அடி ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்: உயிருடன் மீட்க நடவடிக்கை

Posted: 03 Aug 2014 01:34 PM PDT

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தா கட்டி. விவசாயி. இவருடைய மகன் திம்மண்ணா (வயது 6). அதே கிராமத்தில் அனுமந்தா கட்டிக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது. 250 அடி வரை தோண்டியும் தண்ணீர் வரவில்லை. அதன்பிறகு, ஆழ்குழாய் கிணற்றை மேலும் தோண்டாமல் அப்படியே விட்டு விட்டனர்.

புனே நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது

Posted: 03 Aug 2014 01:14 PM PDT

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடந்த 30-ம் தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 44 வீடுகள் மண்ணில் புதையுண்டன. வீடுகளில் இருந்த 160-க்கும் அதிகமானவர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். கடந்த 5 நாட்களாக

வட மேற்கு வங்கத்தில் மூளையழற்சி நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 121-ஐ எட்டியது

Posted: 03 Aug 2014 12:40 PM PDT

'ஜப்பான் மூளையழற்சி' நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காள மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இருவர் இறந்துள்ள நிலையில் மேலும் நான்கு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 3.62 லட்சத்தை தாண்டியது

Posted: 03 Aug 2014 12:33 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து யாத்திரீகர்கள் அங்கு பயணம் மேற்கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் கடந்த ஜூன் 28 ந் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 10 ந் தேதியன்று நிறைவடைகிறது.

விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்: பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

Posted: 03 Aug 2014 12:21 PM PDT

இந்தியாவில் விமான கடத்தல்காரர்களுக்கு தற்போது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் காந்தகார் நகருக்கு கடத்தியது, 2001-ல் அமெரிக்க விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களைத் தகர்த்தது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து இந்த ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்

Posted: 03 Aug 2014 12:08 PM PDT

ஸ்பெயின்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிண்டிகேட் வங்கி தலைவர் எஸ்.கே.ஜெயினுக்கு நான்கு நாள் சி.பி.ஐ. காவல்: நீதிமன்றம் அனுமதி

Posted: 03 Aug 2014 10:47 AM PDT

சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான எஸ்.கே.ஜெயின், சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று டெல்லி, பெங்களூர், போபால் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் காப்பீட்டு மசோதா தாக்கல் நாளை செய்யப்படமாட்டாது: வெங்கையா

Posted: 03 Aug 2014 10:41 AM PDT

காப்பீட்டு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நாடாளுமன்றத்தில் நாளை அம்மசோதா தாக்கல் செய்யப்படமாட்டாது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்த நாயுடு, காப்பீடு மசோதா மற்றும் இந்திய பாதுகாப்பு பரிவர்த்தனை வாரியம்(செபி) ஆகிய முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். அது போல் நீதிபதிகள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™