Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விமானக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை:அரசு ஆலோசனை

Posted:

விமானக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் அளவுக்கு சட்டத்தில்  திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


Read more ...

பிரியங்கா காந்திக்கு காங்கிரஸில் முக்கிய பதவி?

Posted:

பிரியங்கா காந்திக்கு காங்கிரஸில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

காப்பீட்டுத் துறை தொடர்பான மசோதா இன்று தாக்கலாகவில்லை!

Posted:

இன்று நாடாளுமன்றத்தில் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதம் என்கிற மசோதா தாக்கலாகவில்லை என்று,


Read more ...

தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு பல வண்ணங்களில் வாக்காளர் அடையாள அட்டை!

Posted:

தமிழகத்தில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு பல


Read more ...

சிங்கள மக்களின் ஆதரவுடனான தீர்வு(?)

Posted:

 

சிங்கள மக்களைப் பகைத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை என்றைக்குமே பெற்றுக்கொள்ள முடியாது என்று சிரேஷ்ட அமைச்சரும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான திஸ்ஸ விதாரண அண்மையில் தெரிவித்திருந்தார். ஆக, தமிழ் தலைமைகள் அதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


Read more ...

இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்த்திரையுலகினர் போராட்டம்!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தொடர்பில் அவதூறு தகவல் வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து, தமிழ்த் திரையுலகினர் இன்று திங்கட்கிழமை கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Read more ...

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல்; வெளியேறுமாறும் அச்சுறுத்தல்!

Posted:

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, தமிழ் மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

வடக்கில் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்: த.தே.கூ கண்டனம்

Posted:

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு வவுனியா ஊடகவியலாளரும், வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபில்நாத்திற்கு தொலைபேசியூடாக தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. 


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளதாக கெலம் மக்ரே அறிவிப்பு!

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவிடம் தான் சாட்சியமளிக்கவுள்ளதாக கெலம் மக்ரே அறிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்!

Posted:

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் உலகத் தலைவர்களின் உத்தேச பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. அவர், கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் உரையாற்றுவார் என்று தெரிகிறது. 


Read more ...

புகலிடம் கோருவோரை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா

Posted:

புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்து இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் பிரஜைகளை மீண்டும் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை நிறுத்துமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையம் (UNHCR) இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

தெற்கு ஜேர்மனியில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்து:4 பேர் கவலைக்கிடம்:35 பேர் படுகாயம்

Posted:

ஜேர்மனியின் மன்ஹெயிம் ரயில் நிலையத்துக்கு அருகே வெள்ளி இரவு 250 பேருடன் ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் இருந்து சார்புரூகேன் என்ற ஜேர்மனிய நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலும் ஹங்கேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இதில் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Read more ...

கிழக்கு சீனாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து!:71 பேர் பலி

Posted:

கிழக்கு சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் சிக்கி குறைந்தது 71 பேர் பலியாகி இருப்பதாகவும் 200 இற்கும் அதிகமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தாய்வானின் முதலீட்டில் இயங்கும் குன்ஷான் நகரிலுள்ள ஷொங்ரொங் மெட்டல் கம்பனியின் கீழ் இயங்கும் வாகன சக்கரங்களின் உட்பகுதியை (wheel hub) பாலிஷ் பண்ணும் வேர்க் ஷாப்பான இந்த தொழிற்சாலையில் வெடி விபத்து நிகழும் சமயத்தில் 264 பேர் உள்ளே இருந்துள்ளனர்.

இந்த விபத்தை அடுத்து குன்ஷான் ஷொங்ரொங் மெட்டல் கம்பனியின் இரு மூத்த நிர்வாகிகள் விசாரணைக்காகப் போலிஸ் கஸ்டடியில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுஷௌ, வுக்ஸி, நன்டொங் மற்றும் ஷங்காய் ஆகிய நகர்களில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.. அமெரிக்காவின் கார் மேக்கர் ஜெனெரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் சப்ளையராக இத் தொழிற்சாலை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


Read more ...

விஷாலின் பெரிய மனசு

Posted:

பார்த்திபன் இயக்கி வரும் ‘கதை திரைக்கதை இயக்கம்’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து போகிறார் விஷால்.


Read more ...

எபோலா நோய் தாக்கிய இரு அமெரிக்கர்கள் பத்திரமாக அட்லான்டா வைத்தியசாலைக்குத் திரும்புகின்றனர்

Posted:

மேற்கு ஆப்பிரிக்காவில் முதலில் இனம் காணப் பட்ட எபோலா வைரஸ் தொற்று நோய் தற்போது மிக வேகமாகப் பரவி வருவதுடன் அதனைக் கட்டுப் படுத்த சர்வதேச தலைவர்களும் சுகாதார அமைப்புக்களும் பாடு பட்டு வரும் போதும் இம்முயற்சிகளுக்கு கட்டுப்படாமல் இது வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதாரத் தாபனமான WHO இன் இயக்குனர் மார்கரெட் சான் கூறியுள்ளார்.


Read more ...

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தைத் தாக்கியது 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமி 6.3 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தைத் தாக்கியுள்ளது.


Read more ...

நேபாளத்தில் பயங்கர நிலசரிவு!:100 வீடுகள் புதையுண்டன!:200 பேரைக் காணவில்லை

Posted:

வடகிழக்கு நேபாளத்தின் ஷுன்கோஷி ஆற்றுக்குக் குறுக்காக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 100 வீடுகள் புதையுண்டதுடன் 200 இற்கும் அதிகமான பொது மக்கள் காணாமற் போயுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™