Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: 20 இடங்களில் பீரங்கி தாக்குதல்

Posted: 17 Aug 2014 10:23 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் சமீபகாலமாக காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த பிறகும் பாகிஸ் தான் ராணுவத்தின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தினசரி நடக்கும் சம்பவமாக மாறி வருகிறது. கடந்த 10 நாட்களில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ

மோடி பிரசாரத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவு: மார்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு

Posted: 17 Aug 2014 10:07 PM PDT

ஊடகங்களும், சமுதாய பொறுப்புணர்வும் என்ற தலைப்பில் பெங்களூரில் கருத்தரங்கு நடந்தது. மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற எம்.பி. யுமான சீத்தாராம்யெச்சூரி இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:– சுதந்திரம் கிடைத்த போது மக்கள் நலன் மீது ஊடகங்களுக்கு இருந்து வந்த மக்களின் குரல்களை பிரதிபலிக்கும் கருவியாக இருந்தன. கடமை உணர்வுடன் செயல்பட்டன. ஆனால் அண்மை காலங்களில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆவணிமாத பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்

Posted: 17 Aug 2014 09:22 PM PDT

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சுவாமி அய்யப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு உள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு பூஜைகள் நடைபெற்றது. சுவாமி அய்யப்பனை தரிசிப்பதற்காக அதிகாலையி

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தலைமறைவான 60 வயது ஆசாமிக்கு போலீஸ் வலை

Posted: 17 Aug 2014 09:14 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த ஷேர் முஹம்மது என்பவர் வீட்டின் வாசலில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையிடம் வேடிக்கையாக பேசியபடி தனது வீட்டுக்குள் அழைத்து சென்ற 60 வயது முதியவரான ஷேர் முஹம்மது, சிறுமியை

அசாமில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Posted: 17 Aug 2014 08:50 PM PDT

அசாம் மாநிலத்தில் பேருந்து நிறுத்தத்தில் வன்முறை தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டதால் பல உயிர்கள் பலியாக இருந்த பெரும் அசம்பாவிதம் உரிய நேரத்தில் தவிர்க்கப்பட்டது. அசாமின் கம்ரப் மாவட்டத்தின் புறநகர் பகுதியான கெண்டுகோனாவில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பிளாஸ்டிக் பைக்குள் சுற்றப்பட்டு,

கிராமவாசியைக் கொன்ற புலியை சுட்டுக் கொல்ல வனத்துறையினர் முடிவு

Posted: 17 Aug 2014 08:29 PM PDT

மகாராஷ்ட்டிர மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள டோங்கர் ஹல்டி கிராமத்தை சேர்ந்த சிலர், மேய்ச்சலுக்கு சென்ற தங்களின் மாடுகளை தேடி நேற்று அதிகாலை சிச்பள்ளி சரக காட்டுப்பகுதிக்குள் சென்றனர். காட்டின் அடர்ந்த புதர் மறைவில் மறைந்திருந்த ஒரு புலி, டட்டு பாண்டுரங் தோலே(35) என்பவரின் மீது ஆவேசமாக பாய்ந்தது. அவரது கழுத்தை கவ்வி இழுத்துச் சென்ற புலி, ஆக்ரோஷமாக டட்டு பாண்டுரங் தோலேவின்

அசாம்-நாகாலாந்து எல்லையில் வன்முறைக்கு 9 பேர் பலி: பிரதமருக்கு தருண் கோகாய் கடிதம்

Posted: 17 Aug 2014 08:25 PM PDT

வடகிழக்கு மாநிலங்களான அசாம்-நாகாலாந்து எல்லை, சர்ச்சைக்குரிய பகுதியாக 6 செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு இரு மாநில போலீசாரும் நிறுத்தப்படுவது இல்லை. பாதுகாப்பு பணியை, துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீசார் ஏற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 12-ந் தேதி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களை நாகாலாந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இதைக்

தெலுங்கானா மாநிலத்தில் மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து நாளை கணக்கெடுப்பு

Posted: 17 Aug 2014 08:06 PM PDT

ஆந்திர மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே மாநிலமாக இருந்தபோது, சமூக, பொருளாதாரரீதியாக பின்தங்கிய என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் கோடி கல்வி கட்டணத்தை வழங்கி வந்தது. மாநில பிரிவினைக்கு பிறகு, இந்த கட்டணத்தை தெலுங்கானா அரசு வழங்க வேண்டி உள்ளது. ஆனால், ஐதராபாத் அடங்கிய தெலுங்கானா மாநிலத்தில், ஆந்திர மாநில மாணவர்களும் படித்து வருவதால், அம்மாணவர்களுக்கு

டெல்லியில் காந்தியவாதி சசிபெருமாள் காலவரையற்ற உண்ணாவிரதம்

Posted: 17 Aug 2014 07:57 PM PDT

தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் தலைமையில் இயங்கும் தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 30-ந் தேதி தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறது. நேற்று டெல்லியை சேர்ந்த தென்னிந்தியர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து சசிபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:- குஜராத் அரசைப் போல இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் அவர்களே மதுபானங்களை தயாரிக்கவும் அனுமதி அளிக்கின்றனர். அரசுகளே மதுபான கடைகளையும், மதுபார்களையும் நடத்தி அப்பாவி மக்களை குடிக்க ஊக்கப்படுத்துகின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும் இந்தியாவில் 18 லட்சம் பேரும், தமிழகத்தில் மட்டும் 2 லட்சம்

பேச்சு நடத்த வருமாறு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு

Posted: 17 Aug 2014 05:27 PM PDT

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது இருதரப்பு உறவுகள் மேம்பாடு குறித்து பேசப்பட்டது. அதன்படி இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 25–ந் தேதி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறும் பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எச்சரிக்கை

Posted: 17 Aug 2014 02:39 PM PDT

இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி போர் நடக்கும் சக்தியை பாகிஸ்தான் இழந்துவிட்டதால், மூன்றாம் தர நபர்கள் மூலமாக அந்நாடு இந்தியா மீது மறைமுக போர் நடத்தி வருவதாக குற்றம்

ஒரே நாளில் தாஜ்மகாலை பார்வையிட்ட 50 ஆயிரம் பேர்

Posted: 17 Aug 2014 02:05 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் திகழும் தாஜ்மகால் உள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள். சுதந்திரதினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர்விடுமுறையின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ராம்விலாஸ் பஸ்வான் ஒரு சந்தர்ப்பவாதி: லாலுபிரசாத் கடும் தாக்கு

Posted: 17 Aug 2014 12:59 PM PDT

பீகார் மாநிலம் சாப்ரா நகரில் நேற்று நடந்த சட்டசபை இடைத்தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் ராஷ்டீரிய ஜனதாதளத் தலைவர் லாலுபிரசாத் பேசினார். அப்போது அவர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள லோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறுகையில், "ராம்விலாஸ் பஸ்வான் ஒரு சந்தர்ப்பவாதி. தனது அரசியல் தேவைகளுக்காக அவர் எப்போது, எந்த திசையில் திரும்புவார்

உத்தரபிரதேசத்தில் கற்பை காப்பாற்றி கொள்ள விஷம் குடித்த சிறுமி பலி

Posted: 17 Aug 2014 12:49 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கன்கர்கேடா பகுதியில் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, 2 நபர்கள் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தனது கற்பை பாதுகாத்து கொள்ள அந்த சிறுமி விஷம் குடித்து இறந்தாள்.

கிருஷ்ண ஜெயந்தி விழா: பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 17 Aug 2014 12:43 PM PDT

கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகத்துடன், பக்திப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். நமது வாழ்க்கையில் அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவற்றை தந்து, கிருஷ்ண பகவான் அருள் பாலிக்கட்டும்" என கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச கலவரம்: விசாரணை அறிக்கை முதல்-மந்திரி அகிலேஷ் யாதவிடம் தாக்கல்

Posted: 17 Aug 2014 12:29 PM PDT

உத்தரபிரதேச மாநில சஹரன்பூரில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில மந்திரி சிவபால் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு தனது அறிக்கையை நேற்று மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், 'கலவரத்துக்கு காரணம் சில அதிகாரிகளின்

எபோலா எதிரொலி-ஆப்பிரிக்கர்களுடன் தொடர்பு கூடாது: கொல்கத்தா சிகப்பு விளக்கு பெண்களுக்கு அறிவுரை

Posted: 17 Aug 2014 11:59 AM PDT

மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய சிகப்பு விளக்கு பகுதியான சோனாகாச்சியில் உள்ள விபச்சாரிகளை ஆப்பிரிக்கர்களுடன் பாலியல் உறவு கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வருவதை ஆப்பிரிக்கர்கள் வழக்கமாக கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் உறவு கொள்ளவேண்டாம் என விபச்சார பெண்களுக்கு தர்பார் மகிளா சமான்வாயா கமிட்டி அறிவுரை வழங்கியுள்ளது. இந்த அமைப்பின்

நடிகை ஆசை காட்டி இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளி கொடுமை படுத்திய வாலிபர் கைது

Posted: 17 Aug 2014 11:19 AM PDT

நடிகை ஆசை காட்டி இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மைசூரில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தை சேர்ந்தவர் சுனில்(வயது 28). இவர் மைசூர் டவுன் விஜயபுரா பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடன் உடுப்பி மாவட்டம்

உ.பி.யில் வரலாறு காணாத வெள்ளம்-1000 கிராமங்களை முடக்கியது: 28 பேர் பலி

Posted: 17 Aug 2014 11:08 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தால் 1000 கிராமங்கள் நீரால் சூழப்பட்டு தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தால் இது வரை அம்மாநிலத்தில் 28 பேர் பலியானார்கள். அம்மாநிலத்தில் ஒன்பது மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. இம்மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக அப்பகுதிக்கு

ஹிட்லர் என அழைப்பது பற்றி கவலையில்லை- சந்திரசேகர ராவ் பேச்சு

Posted: 17 Aug 2014 09:58 AM PDT

ஆந்திரா– தெலுங்கானா மாநிலங்கள் இடையே பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு ஏற்படாமல் உள்ளது. இப்பிரச்சனைகளால் இருமாநில முதல்–மந்திரிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் அறிக்கை போர் நடத்தி வருகிறார்கள். இரு மாநிலங்களும் பிரிந்து 2½ மாதங்களுக்கு மேல் ஆன போதிலும் முடிவு எட்டப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த இரு முதல்வர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டத்துக்கு கவர்னர் நரசிம்மன் ஏற்பாடு செய்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™