ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்
- உதவியா உபத்திரவமா
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.
- பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
- பிச்சைக்காரன்
- ஒரு ஊரில் , ஒரு ராஜா !
- காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ஒரு கர்ப்பிணியின் கவிதை
- அஞ்சான் - விமர்சனம்
- ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் கேசரி
- 30 வகை வாழை சமையல்
- மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
- தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: ராமதாஸ்
- சிநேகாவின் காதலர்கள் - திரை விமர்சனம்
- அந்நிய முதலீடு எனும் அரக்கன் !!
- கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)
- திபெத்தியர்களின் வலிமைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மரபணு மாற்றமே காரணம்
- கிரிக்கெட் செய்திகள்
- பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் விடுதலையான நாள்- 19-8-1919
- திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி எடிட் செய்ய முடியுமா?
- இந்தியா இந்து தேசமே: மோகன் பகவத் கருத்தை ஆதரிக்கும் உத்தவ் தாக்கரே
- மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்!
- தாண்டிச் செல் தடைகளை!
- காசநோயை குணப்படுத்தும் நாவல் பழம்!
- புதியவர் அறிமுகம்
- வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!!
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -
- கலாசார கொந்தளிப்பு
- கோடிப்பூக்கள் உனக்காக ...
- டூப்பா நடிக்கிறவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…”
- கமலுக்கு மேக்கப் போட்ட தாய்லாந்து - கொரியா கலைஞர்கள்!
- தினசரி செய்திகள்
- சிங்கள குரல் 'புலிப்பார்வை'; இனத்துரோகம் 'கத்தி': 65 இயக்க தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை!
- தெலங்கானா இந்தியாவைச் சேர்ந்ததுதானே?
- இன்று 175வது ஆண்டு புகைப்பட தினம்
- ஆசை ஊஞ்சல் -இந்திரா சௌந்தரராஜன்(2 Part-Mediafire Link)
- இன்றைய தமாஷ்
| மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம் Posted: 19 Aug 2014 02:11 PM PDT டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கர்நாடக சங்கீத பாடல்களில் ஒன்று இது, நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும். https://www.dropbox.com/s/6742hz9nfwz0576/nathahare%20jekan.mp3 |
| Posted: 19 Aug 2014 01:51 PM PDT உதவியா உபத்திரவமா ? தாயின் முகத்தையும் கன்றின் முகத்தையும் பார்த்தால் உதவி போல் தெரிகிறது . கோனாரின் சந்தோஷம் எதை குறிக்கிறதோ ? இருப்பினும் , கன்றை சிறிது சித்திரவதை செய்வது போல் உணர்கிறேன் . ரமணியன் |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 19 Aug 2014 01:35 PM PDT ![]() |
| Posted: 19 Aug 2014 01:30 PM PDT தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும். 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ... |
| பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! Posted: 19 Aug 2014 12:12 PM PDT பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ... |
| Posted: 19 Aug 2014 12:10 PM PDT பிச்சைக்காரன் மானங்கெட்ட பொழப்புத் தாங்க, ஈனப் பிறவி ஜனங்க நாங்க - காசு கேட்டு நடக்கும் நடைக்கு - நாண்டுகிட்டு சாகலாங்க ! யாறு தந்த சாபந்தானோ - என் அப்பன் ஆத்தா போட்ட பாதை! சாமி வந்து திருத்தி தந்தா - இந்த பிறவி வாழ்க்கை மாறுமாங்க! அரசு போட்ட ஐந்து பைசா எங்களுக்கேன்னு செய்ததாங்க! அஞ்சோ பத்தோ சேர்றதுக்குள்ள - என் வெற்று உடம்பு தோலுக்கெல்லாம் _ புண்ணு புண்ணு.. புண்ணு தாங்க! முள்ளு மேல விழுந்த வாழ்க்கை மீண்டு வர யோசிக்கையில - மீண்டும் பசியெடுத்தா - அடுத்தப் பாட்டு ... |
| Posted: 19 Aug 2014 11:46 AM PDT ஒரு ஊரில் , ஒரு ராஜா ! ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் ... |
| காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: 19 Aug 2014 11:44 AM PDT மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு அக்கட்சி குறைந்தது 55 எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தகுதியை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சி என்ற வகையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 60 இருப்பதாலும் காங்கிரசுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த ... |
| Posted: 19 Aug 2014 11:33 AM PDT உன்னை கருவறையில் சுமந்து கவிதை எழுதுகையில்... உன் முதல் கவிதையை நீயும் கொடுக்கிறாய்... சின்னதாய் உதைத்து....... |
| Posted: 19 Aug 2014 10:54 AM PDT இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் 'சிங்கம்' சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ''அஞ்சான்''. இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...! கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு ... |
| Posted: 19 Aug 2014 10:51 AM PDT தேவையானவை: - ஓட்ஸ் - ஒரு கப் சீனி - முக்கால் கப் நெய் - அரை கப் ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி காய்ச்சிய பால் - ஒரு கப் கேசரி கலர் - தேவைக்கேற்ப விரும்பிய நட்ஸ் - சிறி செய்முறை : - கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ... |
| Posted: 19 Aug 2014 10:44 AM PDT பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை… திருமணம் தொடங்கி நம்முடைய அத்தனை மங்களகரமான நிகழ்வுகளிலும் ஓர் அங்கமாகவே வந்து கொண்டிருப்பதில் வாழைக்கு நிகர் வாழைதான். அதுமட்டுமல்ல… பல்வேறு நோய் தீர்க்கும் மூலிகையாகவும் அது செயல்படுவது, அதன் சிறப்புத் தகுதியாகும். அதனால்தான், 'கற்பக விருட்சம்' என்று மிக உயரிய இடத்தில் வைத்து வாழையைப் போற்றுகிறார்கள். வாழையின் இந்தப் பாகம்தான் என்றில்லாமல்… இலை, தண்டு, பூ, காய், பழம் என அத்தனை பாகங்களும் முழுமையாக சமையலுக்குப் பயன்-படுவது… சிறப்போ ... |
| மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Posted: 19 Aug 2014 10:35 AM PDT இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி மீனவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தருகிறது. சிறையில் இருந்த 94 தமிழக மீனவர்களும் சுதந்திரத்தினத்தையொட்டி விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துவிட்டது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்கள் விடுதலைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ... |
| தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: ராமதாஸ் Posted: 19 Aug 2014 10:28 AM PDT சென்னை தேனாம்பேட்டையில் பாமகவின் தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 19.08.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்த ஆட்சியில் மின்சாரத்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தைப் போல அரசே தண்ணீரை விற்கும் அவலம் வேறு எங்கும் இல்லை. 2023ல் ஒளிமயமான எதிர்காலம் என தமிழக மக்களை அதிமுக ஏமாற்றி வருகிறது. அரசின் விளம்பரத்தை கருவியாக பயன்படுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அதிமுக அரசு பறித்து வருகிறது. பத்திரிக்கை ... |
| சிநேகாவின் காதலர்கள் - திரை விமர்சனம் Posted: 19 Aug 2014 10:19 AM PDT தலைப்பிலேயே கதையைச் சொல்லும் படங்களின் வரிசையில், சிநேகா என்ற பெண்ணின் காதல் அத்தியாயங்களை ஒவ்வொன்றாக விவரிக்கிறது இந்தப் படம். முதல் காதல், வழக்கம் போல் கல்லூரியில் தொடங்குகிறது. காதலனுக்குச் சுமார் மூஞ்சி குமாராகச் சில நண்பர்கள், அவர்களின் அச்சுபிச்சு ஜோக்குகள், கல்லூரிப் பேராசிரியரின் ஒருதலைக் காதல்... என எல்லாமே வழக்கம் போல்தான். கல்லூரிக் காதலன் தன் காதலைச் சொன்னதும் சிநேகா உடனே ஏற்றுக்கொள்கிறாள். ஏனென்றால், இருவருக்கும் ஒரே ரத்த வகை, சுமாராகப் படிக்கிறான், கொஞ்சம் கண் ஜாடை காட்டினால் ... |
| அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Posted: 19 Aug 2014 10:09 AM PDT http://kurinjinet.blogspot.in/2014/08/blog-post.html அந்நிய முதலீடு என்பதே இந்தியர்களை மோசடி செய்யும் திட்டம், நீண்டகால அளவில் அது இந்தியர்களுக்கு பயனேதும் அளிக்காது என்பதே குறிஞ்சியின் திட்டவட்டமான எண்ணமாகும். வேண்டுமாயின் இந்தியர்களால் இன்றளவில் சாத்தியப்படாத துறைகளில் அந்நிய முதலீட்டினை அனுமதிக்கலாம் அதுவும் இந்தியர்களின் பங்களிப்போடுதான். அதைவிட்டு டீக்கடைக்கும், பெட்டிக்கடைக்கும் அந்நிய முதலீடு என்பது அநியாயமாகப்படவில்லை. காங்கிரசின் திட்டங்களினால் பாதிப்படைந்த மக்களின் நம்பிக்கை ... |
| கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) Posted: 19 Aug 2014 09:52 AM PDT ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; ... |
| திபெத்தியர்களின் வலிமைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மரபணு மாற்றமே காரணம் Posted: 19 Aug 2014 09:33 AM PDT வாஷிங்டன் : திபெத் நாடானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் உயரமான இடத்தில் இது அமைந்துள்ளதால், அதற்கு 'உலகின் கூரை' என்ற பெயரும் உண்டு. வடதுருவம், தென்துருவம் தவிர்த்து உலகின் மூன்றாவது துருவம் என்றும் திபெத் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பதால், திபெத்தில் கடுமையான குளிர் நிலவும். அதேபோன்று, சுவாசிப்பதற்கு போதுமான அளவில் ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால், வெளிநாட்டவர்¢ திபெத்துக்கு செல்லும்பட்சத்தில் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி போன்ற ... |
| Posted: 19 Aug 2014 09:19 AM PDT முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை வாட்டி வதைத்த நியூசிலாந்து கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. 2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர். வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் ... |
| பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் விடுதலையான நாள்- 19-8-1919 Posted: 19 Aug 2014 08:58 AM PDT ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். மேற்கே ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாகச் செல்கிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டில ... |
| திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி எடிட் செய்ய முடியுமா? Posted: 19 Aug 2014 08:37 AM PDT திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்க வி ல் சி பிளேயர் அதுபோல் திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி எடிட் செய்ய முடியுமா? |
| இந்தியா இந்து தேசமே: மோகன் பகவத் கருத்தை ஆதரிக்கும் உத்தவ் தாக்கரே Posted: 19 Aug 2014 08:30 AM PDT இந்த நாட்டை இந்து தேசம் என்று அழைக்க யாரும் வெட்கப்படக்கூடாது என்று சிவசேனாக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் "இந்துஸ்தானம் என்பது இந்து தேசமே... இந்தியாவின் அடையாளம் இந்துத்துவா, இதற்கு பிற அடையாளங்களை விழுங்கும் திறன் உள்ளது" என்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே கூறும்போது, "மோகன் பகவத் கூறிய கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். இந்தியாவை இந்துக்களின் நாடு என்று அழைத்தால் அதில் ... |
| மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்! Posted: 19 Aug 2014 07:19 AM PDT மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்! ஒரு சமயம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பால்வளத்துறை மானியம் குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குமரி அனந்தன் தன்னுடைய இலக்கியப் பாணியில் பேச்சைத் தொடங்கினார். "மாலை மயங்கும் நேரம். கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான். மாடுகள் வீடு திரும்புகின்றன" என்று வர்ணனைகளுடன் பேசத் தொடங்கினார். அப்போது மாலைக் கூட்டம் முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பேரவைத் தலைவராக இருந்த இராஜாராம் அவர்கள் குறுக்கிட்டு, "இப்போது ... |
| Posted: 19 Aug 2014 07:17 AM PDT ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான். அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.குழப்பத்துடன் சீடன், "ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!" என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான். கண் விழித்த குரு சீடனைக் கண்டார்."சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!" என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.சீடனுக்கு மனம் கேட்கவில்லை. குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த ... |
| காசநோயை குணப்படுத்தும் நாவல் பழம்! Posted: 19 Aug 2014 07:15 AM PDT நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய ... |
| Posted: 19 Aug 2014 07:14 AM PDT பெயர்:செல்வி.தி.சிவசக்தி சொந்த ஊர்:போளூர் 606803 ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:வலை தளத்தில் தமிழ் களஞ்சியம் பார்த்த போது..... பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது தொழில்:இல்லை மேலும் என்னைப் பற்றி: |
| வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Posted: 19 Aug 2014 06:46 AM PDT - கிண்டிய அல்வா வாயில் கோந்து ஆன கதைகள் நிறைய கேட்டதுண்டு வாய் விட்டு சிரித்ததுண்டு ஆனால் நானே என் கையால் முதன் முறையாய் சிரமப்பட்டு செய்த பீட் ரூட் அல்வாவை வாயில் வைத்த போது என்னால் சிரிக்க முடியவில்லை ஏனெனில் வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 19 Aug 2014 06:33 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? - Posted: 19 Aug 2014 06:32 AM PDT - வேலைக்காரியிடம் எஜமானி: - எங்களுக்கு குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? - வேலைக்காரி: நான் இப்ப முழுகாம இருக்கேன்..! - ------------------------------------- - கபாலி, கொலையை நீ நேரில் பார்த்தியா..? - இல்ல சார், ஒரு ஓரமா நின்னுதான் பார்த்தேன்...! - ------------------------------------- - இது பீச்ல லவ் பண்ணி, மேரேஜ் பணற ஜோடின்னு எப்படி சொல்றே? - அட்சதை அரிசிக்குப் பதிலா சுண்டல் தர்றாங்க...! - ----------------------------------- - ஒரு பட்டினிக் ... |
| Posted: 19 Aug 2014 06:13 AM PDT கலாசார கொந்தளிப்பு இன்று படித்த செய்திகளின் ,சிறு துளிகள் 1. சென்னை பள்ளியில் மாணவி பலாத்காரம் செய்து கொலை... பெற்றோர்கள் கொந்தளிப்பு 2. ஆண்மை சோதனை வழக்கு: ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர் 3.குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் – தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு உயிர்விட்ட மகன் 4.முக்கோணக் காதல்: மலையிலிருந்து நண்பரை தள்ளி கொலை செய்த இளைஞர் கைது 5.மதுரை பெண் திருமணம் நிச்சயமானவுடன் மாயம் – ஊர்க்காவல் படை வீரர் மீது சந்தேகம் 6.காதல் திருமணம் செய்த மகளை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற ... |
| Posted: 19 Aug 2014 06:09 AM PDT கண்ணே ! அழகுப் பெண்ணே ! கோடிப் பூக்களுடன் தெருக்கோடியில் நான் ! நாடி வரும்போதேல்லாம் ஓடி ஒளிகிறாய் பேடி போல ! தேடி வரும் போதெல்லாம் , நாடி நரம்புகள் அதில் ஓடும் உதிர அரும்புகள் உறைவதுபோல் சாடி சபிக்கிறாய் ! வாட்டி வதைக்கிறாய் ! சேவிக்க வேண்டியவர்களை கோபிக்கிறாய் ! கோபிக்க வேண்டியவர்களை சேவிக்கிறாய் ! என்மனக் கண்ணாடியை உடைக்கிறாய் , பின்னர் கண்ணாடி முன் உடைக்கிறாய் ! அது ஏன் கண்ணாட்டியே ! தாயே ! உன்தாயே சொன்னாலும் ஒருமுறை கேள் மனசாட்சியை ! பாசம் கண் மறைப்பதால் ... |
| டூப்பா நடிக்கிறவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…” Posted: 19 Aug 2014 05:55 AM PDT "அந்த சீனியர் கதாநாயக நடிகரின் சிரிப்பு ரொம்ப கவர்ச்சிகரமா இருந்திச்சின்னு சொன்னது ரொம்ப தப்பா போச்சு". - "ஏன்… ஏதேனும் எசகுபிசகா நடந்துக்கிட்டாரா…?" - "இல்லே. அவரு பல்செட்டை கழட்டிக் கொடுத்துட்டாரு…" - --------------------------------------- - " எனக்கு டூப்பா நடிக்கிறவனை என் கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…" - "ஏன்… என்ன செஞ்சான்?" - "மணவறையில வந்து உக்காந்து நான்தான் தாலி கட்டுவேன்றான்". - >கி.ராஜகோபாலன், சென்னை. - ----------------------------------------- - • ... |
| கமலுக்கு மேக்கப் போட்ட தாய்லாந்து - கொரியா கலைஞர்கள்! Posted: 19 Aug 2014 05:39 AM PDT அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்புவாக நடிக்கத் தொடங்கிய கமல் அதையடுத்து பல படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் தயாரானார். அதோடு, அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்ற படங்களில் பல கெட்டப்புகளில் நடிக்க மேக்கப் போடுவதற்கே ஒவ்வொரு நாளும் 5 மணி நேரத்துக்கு மேலாக செலவிட்டு நடித்தார். அதேபோல், தற்போது நடித்து முடித்துள்ள உத்தமவில்லன் படத்திலும் இரண்டு வேடங்களில நடிக்கும் கமல், தேயம் என்றொரு கேரளத்து கூத்துக் கலைஞன கெட்டப்பில் நடிக்கிறார். இதற்காக ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் மேக்கப் போடுவதற்கு செலவானதாம். ... |
| Posted: 19 Aug 2014 04:00 AM PDT திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் விளாப்பாக்கம் கிராமத்தில் இறந்தவருக்கு 2 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை வங்கியில் கடந்த மாதம்வரை செலுத்தப்பட்டுள்ள.. அதிசயம்..அதே அலுவலகம் அவரின் இறப்பு சான்றையும் வழங்கியுள்ளது, !!!!!!!!!!!!!!!!!!!! |
| சிங்கள குரல் 'புலிப்பார்வை'; இனத்துரோகம் 'கத்தி': 65 இயக்க தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை! Posted: 19 Aug 2014 03:17 AM PDT சென்னை: சர்ச்சைக்குரிய கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான கூட்டு விளக்க அறிக்கையை 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர். சென்னையில் இன்று தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவில் "கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்?" என்ற தலைப்பில் ... |
| தெலங்கானா இந்தியாவைச் சேர்ந்ததுதானே? Posted: 19 Aug 2014 03:10 AM PDT தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் தங்கள் மாநிலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று தெலங்கானா அரசு எடுக்கும் மகா கணக்கெடுப்பின்போது, தங்களுடைய வசிப்பிடத்தில் இல்லா விட்டால் தெலங்கானாவில் தங்களுக்குரிய உரிமைகளும் சலுகைகளும் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் பீதியும்தான் இதற்குக் காரணம். மாநில அரசு வழங்கும் இலவசங்களையும் மானிய உதவிகளையும் தகுதியற்ற பலர் அனுபவித்துவருவதாலும், போலி குடும்ப அட்டை உலவுவதாலும் புதிய கணக்கெடுப்பு எடுப்பதென்று முடிவு செய்திருப்பதாக ... |
| இன்று 175வது ஆண்டு புகைப்பட தினம் Posted: 19 Aug 2014 03:07 AM PDT புகைப்படம் எடுப்பதற்காக நிற்கும் குழந்தை அசையாமல் இருப்பதற்காக அதன் கழுத்து பின்பகுதியில் கம்பி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது 1890-ல் எடுக்கப்பட்ட படம் புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அதிலும், இன்று 175-வது ஆண்டு புகைப்பட தினமாகும். புகைப்பட கருவியை உருவாக்கு வதற்கான முயற்சி 13-வது நூற்றாண்டிலேயே தீவிரமடைந்து விட்டது. அப்போது கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ... |
| ஆசை ஊஞ்சல் -இந்திரா சௌந்தரராஜன்(2 Part-Mediafire Link) Posted: 19 Aug 2014 02:46 AM PDT ஆசை ஊஞ்சல் -இந்திரா சௌந்தரராஜன்(2 Part-Mediafire Link) http://www.mediafire.com/download/ucjtyj83tkgus8c/AASAIOONJAL1-IS%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://www.mediafire.com/download/l27azvgp0i9altj/AASAIOONJAL2-IS%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 19 Aug 2014 02:17 AM PDT இன்றைய தமாஷ் ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்2016 தேர்தல் - அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாமக முடிவு -------------------------------------------------------------------------------------------------------- ரமணியன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
