ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா?
- என் காதுல சம்சாரம்னு விழுந்திருச்சுங்க..!
- எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு
- கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
- லஞ்சம் பெறும் உரிமை சட்டம் வேண்டும்
- இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
- ஐஏஎஸ் தேர்வு - கிளம்பும் எதிர்ப்பு
- கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
- இதயம் போகும் ஒரு பயணம்..!
- பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது
- இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. நுழைந்த சீன ராணுவம்
- மகா பெரியவா சொன்ன கதைகள்!
- குழந்தைகளை விட்டுவிடுங்கள்!
- பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்!
- தங்களில் யார் புத்திசாலி
- அரிதாரம் பூசா நன்றி
- ராதையாய் நான்…
- ஆவணி மாத ராசி பலன்கள் !
- உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர்
- சருமத்திற்கு வரமாகும் தேன் !
- சரும பராமரிப்பிற்கு உதவும் இயற்கை பொருட்கள் !
- ரசிக்கவைக்கும் ராக்ஷத குகை !
- வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு
- ரசித்தவை!
- பெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவது 132% அதிகரிப்பு!
- தரையிலே படுத்திருக்கும் போது...--
- உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
- சுபாஷ் சந்திர போஸின் போராட்ட வியூகங்கள்
- உலகச் செய்திகள்!
- போராட்டக் கும்பலிடம் சிக்கிக் கொண்ட அசாம் முதல்-மந்திரியை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீட்டனர்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்....
- மனதில் உறுதி வேண்டும்
- உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?
- வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
- கண் தானம் ...!
- மறந்து ...!
- ஹிஷாலியின் ஹைக்கூ
- என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!
| விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா? Posted: 18 Aug 2014 03:08 PM PDT எப்படி இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள், எதனால் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைக் குறித்து நீங்கள் பார்த்தால், இந்தக் கண்டுபிடிப்புகள் எங்கே தொடங்குகின்றன? மைக்ராஸ்கோப்பில் தொடங்குகின்றனவா? பரிசோதனைக்கூடத்தில் தொடங்குகின்றனவா என்று கெவின் டேன்பர் என்பவர் கண்டுபிடிப்புகளைக் குறித்து ஆய்வு செய்து, அதைப்பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். அந்தப் புத்தகத்தில் அவர் சொல்லுகிறார், 'இவை என்றுமே தொலைநோக்கியில் உருவாகவில்லை. பரிசோதனைக் கூடத்தில் உருவாகவில்லை. இவை அனைத்துமே ஒரு கருத்தரங்க மேடையில்தான் உருவாகிறது. ... |
| என் காதுல சம்சாரம்னு விழுந்திருச்சுங்க..! Posted: 18 Aug 2014 12:14 PM PDT - மின்சாரம் வந்துச்சுன்னு சொன்னதும் ஏன் பயப்படறீங்க? - என் காதுல சம்சாரம்னு விழுந்திருச்சுங்க..! - ----------------------------------------------- -- --தொடரும் |
| எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Posted: 18 Aug 2014 12:11 PM PDT எக்ஸ்-ரே எடுக்கும் அறைகளில் ஆண் ஊழியர்களே அதிகம் பணியாற்றுவதால், பெண் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண், சென்னையில் ஒரு மருத்துவமனையில் அலறி யடித்து ஓடிவந்த சம்பவம் இப்பிரச் சினையின் தீவிரத்தை படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. சென்னை ராஜா அண்ணா மலைபுரம், எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிகிச்சைக் காக வந்தார். அங்கு இருந்த ஆண் ஊழியர் எக்ஸ்-ரே எடுப்பதற்காக ஆடைகளைக் கழற்றச் சொல்லியிருக்கிறார். ... |
| கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Posted: 18 Aug 2014 11:42 AM PDT உலகம் அழிந்துவிடும் என வதந்திகள் பரவி பின்னர் ஒன்றுமில்லாமல் போகும் சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து தற்போது புதுவிதமான தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 2880 ஆண்டில் அதாவது இன்னும் 866 ஆண்டுகளில் உலகம் முற்றிலும் அழிந்து விடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்து அரூடம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. ... |
| லஞ்சம் பெறும் உரிமை சட்டம் வேண்டும் Posted: 18 Aug 2014 11:36 AM PDT பாட்னா: லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டால், 'லஞ்சம் பெறும் உரிமை சட்டம்' கொண்டு வர வேண்டும் என பீகார் எம்.எல்.ஏ. ராஜீவ் ரஞ்சன் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நடக்கும் ஊழலில் பீகார் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், அம்மாநில ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., லஞ்சம் பெறும் உரிமை சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், ''பீகாரில், ஒவ்வொரு ... |
| இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Posted: 18 Aug 2014 11:16 AM PDT இன்றைய சிந்தனைத் துளிகள் பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன் துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும். இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல். நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும். கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள். |
| ஐஏஎஸ் தேர்வு - கிளம்பும் எதிர்ப்பு Posted: 18 Aug 2014 11:01 AM PDT சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் சிசாட் தேர்வு கிராமப்புற இந்தி பேசும் மாணவர்களுக்குப் பாதகமாக இருப்பதாகக் கூறி, இத்தேர்வு முறையை மாற்றி அமைக்கும்படி இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போதைய முதல்நிலைத் தேர்வு கிராமப்புற, கலைப்புலப் படிப்புகளைப் படித்த மாணவர்களுக்குப் பாதகமாக இருப்பதாக தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் கேள்வித்தாளை ஆங்கிலம் தவிர, இந்தியில் தரும்போது, பிராந்திய மொழிகளிலும் தந்தால் என்ன என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். மத்திய ... |
| கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம் Posted: 18 Aug 2014 11:00 AM PDT கதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருக்கிறது. கதையைத் தேடுவதையே ஒரு படமாக எடுத்து, கலைடாஸ்கோப்பை உருட்டி விளையாடியிருக்கிறார் பார்த்திபன். அதில் நறுக், சுருக், நக்கல், நையாண்டி என எல்லாவற்றையும் கலந்து கட்டி, பிலிம் ரோல்களாலேயே ஒரு தோரணம் கட்டியிருக்கிறார். உலகப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டுச் சலித்துவிட்டதாலோ என்னவோ, சினிமா எடுப்பவர்கள் தங்களின் சிக்கல்களையே படமாக எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியான ஜிகர்தண்டா, சினேகாவின் காதலர்கள், ... |
| Posted: 18 Aug 2014 10:59 AM PDT ஏமாற்றத்துக்கு உட்பட்ட இதயம் நம்பிக்கை இழக்கிறது நம்பிக்கை இழந்த இதயம் அமைதி இழக்கிறது அமைதி இழந்த இதயம் ஏக்கம் கொள்கிறது ஏக்கம் கொள்ளும் இதயம் தவிக்க தொடங்குகிறது தவிக்க தொடங்கும் இதயம் ஆறுதல் தேடுகிறது ஆறுதல் தேடும் இதயம் தன்னை இழக்கிறது தன்னை இழந்த இதயம் தீராத வலியை அனுபவித்து இறுதியில் இறைவனை சரண் அடைகிறது |
| பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது Posted: 18 Aug 2014 10:54 AM PDT பாகிஸ்தானுடனான வெளியுறவுச் செயலர் மட்ட பேச்சு வார்த்தைகள் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாத சக்திகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து பேச்சு வார்த்தைகளினால் எந்த வித பயனும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி, மத்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறுகையில், "வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், பாகிஸ்தான் இந்தியாவா, பிரிவினைவாதிகளா என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் ... |
| இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. நுழைந்த சீன ராணுவம் Posted: 18 Aug 2014 10:48 AM PDT இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. தூரத்திற்கு சீன ராணுவம் நுழைந்திருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் கடந்த ஆண்டு இந்திய பகுதிக்குள் நுழைந்த ராணுவம் கொட்டகை அமைத்து 3 வாரம் தங்கியிருந்தது. 4 முறை கொடி சந்திப்பு கூட்டங்கள் நடத்தியபின்னர் சீனப் படையினர் திரும்பிச் சென்றனர். தற்போது அதே பகுதியில் உள்ள பர்த்சே பகுதியில் 25 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை முன்னேறிய சீன ராணுவம் அங்கு முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்திய படையினர் நேற்று தங்கள் முகாமில் ... |
| Posted: 18 Aug 2014 10:45 AM PDT புராணங்களில் இருந்து நிறைய விஷயங்களை, நிறைய சந்தர்ப்பங்களில் மகா பெரியவா அருளியிருக்கிறார். எல்லோர்க்கும் புரியும்வண்ணம் எளிமையான மொழியில் பெரியவா சொன்ன அந்தக் கதைகள், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய வேதம்! இதை ஒரு தொடராகத் தொகுத்து எழுதுகிற விஷயத்தைச் சொல்லி, ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி வாங்கச் சென்றேன். கேட்டதும் முகம் மலர்ந்தவர், ''ரொம்பச் சந்தோஷம்! சத்காரியம். நன்னாப் பண்ணு! பெரியவா சொன்னது எல்லார்க்கும் போய்ச் சேரட்டும்'' என்று சொல்லி, ஆசீர்வதித்தார். புராதனம் ... |
| Posted: 18 Aug 2014 10:28 AM PDT பூங்கொத்தைப் போல ஏந்த வேண்டிய குழந்தையை, தலைசிதறிய பிணமாக ஏந்திக்கொண்டிருக்கிறார் ஒரு தந்தை குழந்தைகள் இந்த உலகத்துக்குத் தேவையற்றவர்கள் ஆகிவிட்டார்களா? கைவிடப்பட்ட காருக்குள் விளையாடப் போனபோது கதவு தாழிட்டுக்கொண்டதால் உள்ளுக்குள் சிக்கி, மூச்சுத் திணறி நான்கு குழந்தைகள் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மேற்கண்ட கேள்விதான் என்னுள் எழுந்தது. ஆழ்துளைக் கிணறு மரணங்கள், குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் சம்பவங்கள், பிள்ளைகளை விற்றுத் தகப்பன்கள் குடிப்பது, பெண் சிசுக்கள் கொல்லப்படுவது, ... |
| பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகர்! Posted: 18 Aug 2014 10:25 AM PDT 1947–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் ஆகும். மக்களால், மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி இந்தியாவில் நடைபெறுகிறது. ஜனநாயகத்துக்கு இந்தியாதான் உலகுக்கே வழிகாட்டுகிறது. அந்த வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தை நடத்தும் பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். இது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சம்பிரதாயம் ... |
| Posted: 18 Aug 2014 10:24 AM PDT ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார். குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் ... |
| Posted: 18 Aug 2014 10:21 AM PDT அரிதாரம் பூசா நன்றி முதன்மை பதிவாளர்களை மென்மையாய்போற்ற முகப்பை திறந்தால், அகப்பையில் வருகுது புடமிட்ட தங்கத்தை படமிட்டு அங்கமென . சத்தியமாய் சொல்வேன் , உன்னத உத்தியை உனதாக்கி கொண்டவனென்று ! மனதார வாழ்த்துவேன் , சிவா ! அரிதாரம் பூசாததென்று அறிவாய் நீயே ! ரமணியன் |
| Posted: 18 Aug 2014 10:19 AM PDT கண்ணனைக் கண்டிடவே நானும் கடுந்தவம் செய்துவந்தேன்! சொப்பனத்தில் வந்து நின்றான் கண்டு சொக்கித்தான் போனேனடி! சட்டெனவே தோன்றிடுவான் பார்த்தால் சடுதியிலே ஒளிந்திடுவான்! கைகூப்பி வேண்டிநின்றால் சற்றே திரைவிலக்கி வெளிவருவான்! சுட்டுவிரல் காட்டிநின்றேன் மனச் சுமைகளை இறக்கிவைத்தேன்! சிரிக்கின்ற அழகுகண்டு நானும் சித்திரமாய் நின்றேனடி! சந்தனமும் பூசிவிட்டேன் முகமும் சந்திரனாய் ஒளிர்ந்ததடி! சூரியனாய்ச் சுட்டெரிக்கும் என்விழிகள் அவனால் சுடர்விளக்காய் மாறுதடி! சங்கெடுத்து ... |
| Posted: 18 Aug 2014 09:59 AM PDT மேஷம்: எல்லோரும் எல்லாம் பெற வேண்டுமென்று நினைப்பவர்களே! சீர்த்திருத்த சிந்தனை அதிகமுள்ள நீங்கள், வீட்டு நலனை விட, நாட்டு நலனில் அதிக அக்கறை காட்டுபவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியும், பூர்வ புண்யாதிபதியுமான சூரியன் இந்த மாதம் முழுக்க தன் சொந்த வீடான 5ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைகளெல்லாம் விலகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் முடியும். மகனுக்கும் வேலை கிடைக்கும். 26ந் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் ... |
| உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Posted: 18 Aug 2014 09:53 AM PDT உத்தரபிரதேசம் கன்னூஜ்ஜில் பெண் ஒரு குமலபால் கற்பழிக்கபட்டு நிர்வாண நிலையில் மரத்தில் கட்டி வைக்கபட்டார், இந்த கொடூரமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- உத்தரபிரதேசம் கன்னூஜ் பாராளுமன்ற தொகுதியில் உள்ளது செங்கபூர்வா கிராமம். இந்த கிராமம் இண்டர்கார் போலீஸ் நிலைய கட்டுபாட்டில் வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் வயல் வேலைக்கு சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் சர்வேஷ் யாதவ் மற்றும் 2 பேர் சேர்ந்து அந்த பெண்னை கற்பழித்து உள்ளனர். பின்னர் பெண்ணின் உடைகளை மரத்தின் ... |
| Posted: 18 Aug 2014 07:33 AM PDT தேன் எல்லோர் வீட்டிலும் இருக்கும். தேனை கொண்டு பெண்கள் தங்களது முகத்தை அழகாக்க சில வழிகள். சருமம் மிருதுவாக: ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சந்தனம், சின்ன ஸ்பூன் கடலைமாவு, பால் ஆடை ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பன்னீர், இவை அனைத்தையும் கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும். வெயிலால் ஏற்பட்ட கருப்பு நிறம் மாற: அரை ஸ்பூன் பால் பொடி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் பாதாம் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ... |
| சரும பராமரிப்பிற்கு உதவும் இயற்கை பொருட்கள் ! Posted: 18 Aug 2014 07:27 AM PDT பெண்கள் எப்போதுமே தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இயற்கை பொருட்களை கொண்டு, நம் சருமத்தை பாதுகாக்க முடியும். அதற்காக நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர். இயற்கை பொருட்களை கொண்டு, பெண்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் சருமத்தை பாதுகாக்கலாம். நெல்லிக்காய்: வைட்டமின் சி சத்து உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். பொடுகு மற்றும் இதர முடி சம்பந்தமான பிரச்னைகளை நீக்க முடியும். வைட்டமின் �சி� உள்ள எண்ணெயை வாங்கி பயன்படுத்தும் போது தலைமுடிகளில், ... |
| Posted: 18 Aug 2014 07:13 AM PDT உலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா? வியட்நாமில் உள்ள 'சான் டூங்' (Son Doong Cave) குகைதான் அது. சுமார் 8 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்தக் குகையின் உள்ளே ஒரு காடும், ஆறும் உள்ளன. இதன் உள்ளே ஒரு 40 மாடி கட்டிடத்தை வைத்து விடலாம் என்றால் இதன் பிரம்மாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 1991 வரை இந்தக் குகை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் வாயிலில் இருந்த 'மெகா' பள்ளத்தைக் கண்டு யாரும் உள்ளே நுழையத் துணியவில்லை. 2009ல் தான் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் ... |
| வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Posted: 18 Aug 2014 06:58 AM PDT - வலைக்கு வழி! - சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது. சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக் கொசு வலை கொடுத்திருந்தார்கள். - அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால், வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை என்று சிறை அதிகாரி தெரிவித்தார். - "வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார். - அதற்கு ... |
| Posted: 18 Aug 2014 06:24 AM PDT ![]() |
| பெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவது 132% அதிகரிப்பு! Posted: 18 Aug 2014 06:23 AM PDT புதுடெல்லி: பெண்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 132 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013ஆம் ஆண்டு பெண்கள் மீதான தாக்குதலில் இளம் வயதினர் ஈடுபடுவது அதிக அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 132.3 சதவீதம் அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு ஈவ் டீசிங் மூலம் அவமானம் விளைவிக்கபட்ட வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 70.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் பாலியல் பலாத்காரம் ... |
| தரையிலே படுத்திருக்கும் போது...-- Posted: 18 Aug 2014 06:14 AM PDT - நிற்கும்போது தலைமுடி தரையைத் தொடும்னு பெருமையோடு சொன்னாள் ஒருத்தி...! - மற்றவள் சொன்னாள்: - எனக்கும் கூடத்தான்..தரையிலே படுத்திருக்கும் போது..!! - ======================== |
| உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Posted: 18 Aug 2014 06:13 AM PDT டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர் மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 30 ஐ தாண்டியுள்ளது. ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது போல் அசாம் மற்றும் உ . பி., மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மலை பகுதியில் 900 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பதாக தெரிய வந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்டிர மாநிலம் புனேயில் ஏற்பட்ட ... |
| சுபாஷ் சந்திர போஸின் போராட்ட வியூகங்கள் Posted: 18 Aug 2014 04:47 AM PDT காங்கிரசின் ஒப்பற்ற தலைவராக இருந்த காந்திக்கு வங்காள காங்கிரஸ் இளைஞரணித் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பின்னாளில் தலைவலியாக மாறினார். போஸ் கல்கத்தா மேயராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸில் இருந்தாரே ஒழிய போஸைக் காந்தியம் கவரவில்லை. போஸ் அன்று ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இரு சித்தாந்தங்களால் கவரப்பட்டார். ஒன்று சோஷலிசம், இன்னொன்று பாசிசம். சுதந்திர இந்தியா "சர்வாதிகார சோஷலிச பாசிச" அரசாக அமையும் என 1930இல் போஸ் உரை ஆற்றினார். அவருக்கு சோஷலிசத்தின் சமத்துவமும் பாசிசத்தின் ... |
| Posted: 18 Aug 2014 04:21 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| போராட்டக் கும்பலிடம் சிக்கிக் கொண்ட அசாம் முதல்-மந்திரியை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீட்டனர் Posted: 18 Aug 2014 04:02 AM PDT அசாமில் நிவாரண முகாமிற்கு சென்ற முதல் மந்திரி தருண் கோகாய் போராட்டக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைந்து அவரை மீட்டனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம்–நாகாலாந்து எல்லை, சர்ச்சைக்குரிய பகுதியாக 6 செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு இரு மாநில போலீசாரும் நிறுத்தப்படுவது இல்லை. பாதுகாப்பு பணியை, துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீசார் ஏற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 12–ந் தேதி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களை நாகாலாந்து ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 18 Aug 2014 03:58 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Posted: 18 Aug 2014 03:35 AM PDT அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான். மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது. அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது. உடனே ... |
| Posted: 18 Aug 2014 02:59 AM PDT மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒருவன் கால்நடைப் பயணமாகப் ஒரு காட்டின் வழியே சென்றான். நீண்ட தூரம் நடந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது. மிகவும் பசியாக இருக்கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான். உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், ... |
| உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு? Posted: 18 Aug 2014 02:44 AM PDT உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு? தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் ஃபேன் சுற்றும், லைட் எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாகக் கேட்கிறோம். ஆனால் மின்னாற்றலைச் சேமிப்பது நமக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே நல்லது. தமிழகம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க திணறும் நேரத்தில் நாம் சேமிக்கும் சிறு துளி மின்சாரமும் பெரிய வெளிச்சத்தைத் தரும். நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தைச் ... |
| வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள். Posted: 18 Aug 2014 02:04 AM PDT 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. ... |
| Posted: 18 Aug 2014 02:02 AM PDT து இருளில் மறையும் நிலவைப் போல ... இருண்டவர் உலகம் விடியலைப் பெற கண் தானம் செய்வீர் ...! |
| Posted: 18 Aug 2014 02:00 AM PDT மறந்து ...! காற்றை அடைத்த சந்தோசத்தில் சிரிக்கிறது பலூன் தான் விழப்போவதை மறந்து ...! மது அருந்திய சந்தோசத்தில் பறக்கிறது மனது தான் அழியப்போவதை மறந்து ....! புயல் அடித்த சந்தோசத்தில் கரை புரண்டது அலை தந்தான் சுனாமி என்பதை மறந்து ...! மழை அடித்த சந்தோசத்தில் இளைப்பாறும் தொழிலாளி தான் மண்ணோடு மண்ணாகப் போவதை மறந்து ...! வெயில் அடித்த சந்தோசத்தில் தேன் கொடுக்கும் பூக்கள் தான் உதிர்ந்து போவதை மறந்து ...! |
| Posted: 18 Aug 2014 02:00 AM PDT பாட்டி அம்மாவசை படையலுடன் தாத்தாவின் கண்ணீர் ...! |
| என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Posted: 18 Aug 2014 01:59 AM PDT விதை இல்லா விழுதொன்று வேரூன்றியது மண்ணில் அதற்கு ... மழையெனப் பெயரிட்டேன் நன்றிக் கடனாக ... கிளையற்ற தாகம் மதமற்ற சேவை இனமற்ற பஞ்சம் மொழியற்ற பசி இவைகளை தாண்டி வாழும் காற்றையும் வளர்த்தது மனிதா ? கருணைக்கு இலக்கணமான நீ என்ன செய்தாய் இந்த பூமிக்கு ! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
