மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- படப்பிடிப்பில் விபத்து: நடிகர் பாலகிருஷ்ணா காயம்
- சட்டசபை தேர்தல் வருவதால் மராட்டிய கவர்னரை மாற்ற பா.ஜ.க. முடிவு
- சகோதரருக்கு ஆபரேஷன் நடந்ததால் மேல்சபை கூட்டத்தில் பங்கேற்க வில்லை: தெண்டுல்கர்
- மும்பை ஆஸ்பத்திரியில் டி.ஆர்.பாலுவுக்கு இன்று ஆபரேஷன்
- எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியா பதிலடி கொடுத்ததால் ஓட்டம்
- கேரளாவில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும்
- கோமா நிலையில் ஜஸ்வந்த் சிங்
- கேரளாவில் நாளை முதல் பால் விலை குறைவு
- இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை: சுகாதாரத்துறை மந்திரி தகவல்
- முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு
- முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது
- பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ராணுவ மந்திரி சந்திப்பு
- அரியானாவில் இந்திரா காந்தி கண் ஆஸ்பத்திரி: ராகுல் திறந்து வைத்தார்
- மோடியின் விமானப் பயணச் செலவை பா.ஜ.க. செலுத்துமா?: காங்கிரஸ் அதிரடி
- இன்று முதல் மகாராஷ்ட்டிராவில் 4 ஆயிரம் டாக்டர்கள் திடீர் வேலைநிறுத்தம்
- பிரதமர் மோடிக்கு ராக்கி அணிவித்து மகிழ்ந்த குஜராத் முதல் மந்திரி ஆனந்திபென்
- சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை கற்பழித்த டாக்டர் தலைமறைவு
- பஞ்சாப்: நிலத்தகராறில் இருவர் சுட்டுக் கொலை
- பிணத்தை மீட்க நிலத்தை தோண்டி நாசப்படுத்தாதீர்கள்: தாயின் போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்
- டெல்லி செங்கோட்டை சுதந்திர விழாவில் 10 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்க ஏற்பாடு
| படப்பிடிப்பில் விபத்து: நடிகர் பாலகிருஷ்ணா காயம் Posted: 08 Aug 2014 11:12 PM PDT என்.டி.ராமராவ் மகனும் தெலுங்கு முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா பெயர் சூட்டாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ருத்ரபாட்டி ரமணாராவ் தயாரிக்கிறார். சத்திய தேவ் டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. சண்டை காட்சி ஒன்றில் பாலகிருஷ்ணா நடித்துக் கொண்டு இருந்தார். இதில் ஒரு காரை கயிறு கட்டி மேலே தூக்குவது போன்ற காட்சி இடம் பெற்றது. அப்போது கயிறு அறுந்து கார் பாலகிருஷ்ணா |
| சட்டசபை தேர்தல் வருவதால் மராட்டிய கவர்னரை மாற்ற பா.ஜ.க. முடிவு Posted: 08 Aug 2014 11:05 PM PDT மராட்டிய மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடை பெற உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே மராட்டியத்தில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக மும்முரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழ்நிலை அங்கு நிலவுவதாக |
| சகோதரருக்கு ஆபரேஷன் நடந்ததால் மேல்சபை கூட்டத்தில் பங்கேற்க வில்லை: தெண்டுல்கர் Posted: 08 Aug 2014 10:59 PM PDT கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். டெல்லி மேல்சபையில் நடந்த கூட்டத் தொடரில் தெண்டுல்கள் இதுவரை 3 நாட்கள் மட்டுமே வந்துள்ளார். 40 நாட்கள் அவர் சபைக்கு வரவில்லை. கடைசியாக 2013–ம் ஆண்டு டிசம்பர் 13–ந்தேதி சபைக்கு வந்தார். டெல்லி மேல்–சபை கூட்டத்துக்கு தொடர்ந்து வராத தெண்டுகல்கரை |
| மும்பை ஆஸ்பத்திரியில் டி.ஆர்.பாலுவுக்கு இன்று ஆபரேஷன் Posted: 08 Aug 2014 10:35 PM PDT முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு உடல்நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவ சோதனை செய்த போது இதய நோயால் டி.ஆர்.பாலு பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் உடனடியாக இருதய ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள். இதையடுத்து, அவர் மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செ |
| எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியா பதிலடி கொடுத்ததால் ஓட்டம் Posted: 08 Aug 2014 10:19 PM PDT காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அத்து மீறலில் ஈடுபட்டது. பிம்பெர்காலி என்ற இடத்தில் உள்ள இந்திய படைகளை நோக்கி சிறிய ரக ஆயுதங்களாலும், தானியங்கி துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதல் நடத்தியது. உடனே இந்திய வீரர்களும் உஷாராகி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். |
| கேரளாவில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் Posted: 08 Aug 2014 10:09 PM PDT கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு தாமதமாக மழை தொடங்கியதாலும், ஆரம்பத்தில் போதிய மழை பெய்யாததாலும் கவலையில் ஆழ்ந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் மழை |
| Posted: 08 Aug 2014 10:09 PM PDT முன்னாள் ராணுவ மந்திரி ஜஸ்வந்த் சிங் டெல்லியில் உள்ள தனது வீட்டில் நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற போது மயங்கி கீழே விழுந்தார். இதில் தலையின் பின் பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு சுய நினைவு இழந்த நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் அவரது உடல்நிலை மோசம் அடைந்து கோமா நிலையை அடைந்தார். |
| கேரளாவில் நாளை முதல் பால் விலை குறைவு Posted: 08 Aug 2014 09:48 PM PDT கேரளாவில் 'மில்மா' என்ற நிறுவனம் மூலம் பால் விற்பனையை கேரள அரசு செய்து வருகிறது. பல தரப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் மில்மா மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மஞ்சள் நிற பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 50 பைசா குறைக்க மில்மா |
| இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை: சுகாதாரத்துறை மந்திரி தகவல் Posted: 08 Aug 2014 08:42 PM PDT இந்தியாவில் எபோலா நோய் தாக்கம் இதுவரை இல்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் நேற்று கூறுகையில், 'இந்தியாவில் 'எபோலா' நோய் இருப்பதற்கான தகவல் எதுவும் இந்த நிமிடம் வரையிலும் இல்லை. எனவே யாரும் பதற்றம் அடைய தேவையில்லை' என்றார். எனினும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்து வருவதாக கூறியுள்ள அவர், நோய் தாக்கப்பட்ட நாடுகளில் |
| முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு Posted: 08 Aug 2014 05:11 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தில் 62 பேர் பலியாகினர். சுமார் நூறு பேர் காயமடைந்தனர். கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. உயிருக்கு பயந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் அந்த மாவட்டத்தை விட்டு |
| முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது Posted: 08 Aug 2014 05:04 PM PDT ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அஷ்வாக் வானி என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தின் ஷமீர்பூர் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள அட்டாபூரில் மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். தனது இளம் வயது மனைவி, அவரது சகோதரியின் கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த அஷ்வாக், தற்போது குடியிருக்கும் |
| பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ராணுவ மந்திரி சந்திப்பு Posted: 08 Aug 2014 04:34 PM PDT அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல், இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்களை பொறுத்தவரை, தனது தலைமையிலான புதிய அரசுடன், அமெரிக்கா மேற்கொண்டு வரும் மேல்மட்ட உறவுக்கு மோடி வரவேற்பு தெரிவித்தார். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான |
| அரியானாவில் இந்திரா காந்தி கண் ஆஸ்பத்திரி: ராகுல் திறந்து வைத்தார் Posted: 08 Aug 2014 04:24 PM PDT ராகுல் காந்தி அறக்கட்டளை சார்பில் அரியானா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட 'இந்திரா காந்தி கண் மருத்துவமனை'யை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி திறந்து வைத்தார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ மற்றும் அமேதியில் ஏற்கனவே 2 இந்திரா காந்தி கண் ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் |
| மோடியின் விமானப் பயணச் செலவை பா.ஜ.க. செலுத்துமா?: காங்கிரஸ் அதிரடி Posted: 08 Aug 2014 03:44 PM PDT மிசோரம் கவர்னராக இருந்த கமலா பெனிவால் அதிரடியாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் அவர் நீக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. குஜராத் மாநில கவர்னராக இருக்கும்போது மோடி அரசின் முக்கிய மசோதாக்களுக்கு தாமதமாக கையெழுத்திட்டார். இதனால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று கமலா பெனிவால் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது |
| இன்று முதல் மகாராஷ்ட்டிராவில் 4 ஆயிரம் டாக்டர்கள் திடீர் வேலைநிறுத்தம் Posted: 08 Aug 2014 02:49 PM PDT பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, பணி நேர அட்டவனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக மகாராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளித்த மகாராஷ்ட்டிர மாநில உறைவிட டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சந்தோஷ் வாக்ச்சாவ்ரே |
| பிரதமர் மோடிக்கு ராக்கி அணிவித்து மகிழ்ந்த குஜராத் முதல் மந்திரி ஆனந்திபென் Posted: 08 Aug 2014 02:22 PM PDT குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பு வகித்து வந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு காலியாக இருந்த அம்மாநில முதல் மந்திரி பதவிக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளில் ஒருவரான ஆனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்டார். |
| சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை கற்பழித்த டாக்டர் தலைமறைவு Posted: 08 Aug 2014 02:14 PM PDT தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பாரிகி நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண் நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அப்பகுதியில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் நரேந்திரன் என்பவரிடம் சிகிச்சக்காக அழைத்துச் சென்ற போது, ஓரிரவு இங்கு தங்கி சிகிச்சை பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறிய டாக்டர், தனியாக |
| பஞ்சாப்: நிலத்தகராறில் இருவர் சுட்டுக் கொலை Posted: 08 Aug 2014 01:47 PM PDT பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாலா பகுதியை சேர்ந்த ஆத்மா சிங், பல்வீந்தர் சிங் குடும்பங்களை சேர்ந்த இரு பிரிவனருக்கு இடையில் நிலத்தகராறு தொடர்பாக நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், பம்போயி கிராமத்தில் வசிக்கும் ஆத்மா சிங்கின் வீட்டை பல்வீந்தர் சிங் குடும்பத்தை சேர்ந்த சிலர் நேற்று துப்பாக்கி முனையில் |
| பிணத்தை மீட்க நிலத்தை தோண்டி நாசப்படுத்தாதீர்கள்: தாயின் போராட்டத்தால் பணிகள் நிறுத்தம் Posted: 08 Aug 2014 12:53 PM PDT கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுகா சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தா கட்டி. இவரது 6 வயது மகன் திம்மண்ணா 1–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3–ந் தேதி மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பா மகனுடன் கரும்பு தோட்டத்திற்கு சென்ற சிறுவன் திம்மண்ணா, அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். |
| டெல்லி செங்கோட்டை சுதந்திர விழாவில் 10 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்க ஏற்பாடு Posted: 08 Aug 2014 12:17 PM PDT இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி ஆண்டுதோறும் தலைநகர் டெல்லியில் வண்ணமயமான முப்படைகளின் கண்கவர் அனிவகுப்பும், அதனைத் தொடர்ந்து செங்கோட்டையில் இந்தியக் கொடியினை ஏற்றி வைத்து பிரதமர் சுதந்திர தின சிறப்புரையாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |