Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஊரையே வேடிக்கை பார்க்க வைத்த பெண் சாரதியின் செயல்!

Posted: 31 Jul 2014 11:22 PM PDT

Woman-Mistakenly-Drives-Her-Car-off-Bridge

Woman-Mistakenly-Drives-Her-Car-off-Bridge

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத்துல இப்படியொரு பாசக்காரங்களா?…. சான்ஸ்சே இல்லை!

Posted: 31 Jul 2014 11:10 PM PDT

BestFriendsForever-Girl-Feeds-English-Bull-Terrier

BestFriendsForever-Girl-Feeds-English-Bull-Terrier

This posting includes an audio/video/photo media file: Download Now

வாட்டர்மெலன் பிரியரா நீங்கள்…. அப்போ இது உங்களுக்குத்தான்!

Posted: 31 Jul 2014 11:04 PM PDT

Cut-a-Watermelon-Step-3-Version

Cut-a-Watermelon-Step-3-Version

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு புகைப்படம் எடுத்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

Posted: 31 Jul 2014 10:59 PM PDT

Beware-the-Trumpeter-Selfie

Beware-the-Trumpeter-Selfie

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் 5-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

Posted: 31 Jul 2014 10:52 PM PDT

yogeshwar-dutt-gold-medal

yogeshwar-dutt-gold-medalகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இங்கிலாந்து அணி பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

இந்நிலைய்ல் நேற்று ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றதால், 6வது இடத்திலிருந்த இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், 44 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலம் என 123 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்து அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தலா 36 தங்கம் மற்றும் வெள்ளி, 41 வெண்கலம் என 113 பதக்கங்களை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி பதக்கப் பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.

8-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என ஆறு பதக்கங்களை கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, பதக்கப்பட்டியலில் 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலம் என 47 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு சவாலாக இருந்த நியூசிலாந்து அணி, 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

266 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோத்துப் போச்சுப்பா!

Posted: 31 Jul 2014 10:49 PM PDT

james-anderson-ajinkya-rahane

james-anderson-ajinkya-rahane3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 266 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை 1--1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் டிராவிலும், 2வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வந்தது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளைப் போல இல்லாமல், இப்போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. குறிப்பாக அதன் பேட்டிங் மேம்பட்டிருந்தது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இங்கிலாந்தின் கை ஓங்கியே இருந்தது. இதனால் எழுந்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்தியா.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 569 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களைச் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குக்குத் தள்ளப்பட்டது.

இன்று ஆட்டத்தின் கடைசி நாள். இன்று இந்தியா தனது விக்கெட்களை வேகமாக பறி கொடுத்தது. இங்கிலாந்துப் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் வீழ்ந்தனர். இன்று முக்கியமான விக்கெட்டாக டோணியை 6 ரன்களுக்கு இழந்தது இந்தியா.

முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களைச் சாய்த்து கவனம் ஈர்த்த சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி இன்று இந்தியாவுக்கு எமனாக வந்து சேர்ந்தார். அபாரமாக பந்து வீசிய அவர் 6 விக்கெட்களைச் சாய்த்து அசத்தி விட்டார்.

அதேபோல ஆண்டர்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். மொயீன் அலியின் சுழலைச் சந்திக்க முடியாமல் சுருண்ட இந்தியா, 178 ரன்களில் ஆட்டமிழந்தது.

இன்றைய ஆட்டத்தின் ஒரே ஆறுதல் அஜிங்கியா ரஹானே போட்ட அரை சதம்தான். அவர் 52 ரன்களை எடுத்தார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.

இன்னும் 2 போட்டிகள் உள்ளன. அதை இரண்டையும் இந்தியா கைப்பற்றினால் மட்டுமே டெஸ்ட் தொடரை வெல்ல முடியும். அதே நிலைதான் இங்கிலாந்துக்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து!

Posted: 31 Jul 2014 10:46 PM PDT

jayalalitha-new

jayalalitha-newஇலங்கைப் பாதுகாப்புத் துறை இணையதளத்தின் பொதுப்பக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வெளியாகியுள்ள கருத்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தமிழக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார் ஜெயலலிதா. இந்நிலையில், ஜெயலலிதா மோடிக்கு எழுதும் கடிதங்கள் குறித்து இலங்கையின் பாதுகாப்புத் துறை இணையப் பக்கத்தில் விமர்சனம் செய்யப் பட்டுள்ளது. பொதுக்கருத்துக்களை வெளியிடும் பகுதியில் ஷெனாலி டி வகிடு என்பவர் எழுதியுள்ள இக்கருத்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று காலை முதல் 72 மணி நேர போர் நிறுத்தம்!

Posted: 31 Jul 2014 10:43 PM PDT

gaza

gazaகாஸா பகுதியில் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

காஸா முனை மீது கடந்த மாதம் 8ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர்.

காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் ஒரே சேர நடத்தியது.

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலகளாவிய அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை ஏற்காதவிதத்தில் காஸாமுனை மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவது என்று இஸ்ரேல் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

காஸாமுனையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,432 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள்தான். இஸ்ரேல் வீரர்களில் 56 பேரும், பொதுமக்களில் 3 பேரும் இறந்துள்ளனர்.

காஸா பகுதியில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்துவருகிறது.

காஸா பகுதியில் அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதும் மிகுந்த வேதனை அளிப்பதால் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்தது.

காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே நிரந்தரமாக சண்டை நிறுத்தம் சாத்தியம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

இந்நிலையில், காஸாவில் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் போரை நிறுத்திக் கொள்ள இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளன. இருதரப்பினரும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த கெய்ரோ செல்கின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய செயலாளர் பான் கி மூன் இணையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் பரிந்துரையை ஏற்று போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அலுவலகம் தெரிவித்துள்ளது.

"மனிதாபிமான அடிப்படையில் யுத்தநிறுத்தம் தொடங்கும் வரையில் இருதரப்பினரும் அமைதியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். போர் நிறுத்த வேலையில் இரு தரப்பினரும் தமது வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டும்.

நீண்ட வன்முறைக்கு இடையே, பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களுக்கு இடை ஓய்வு மிகவும் அவசியமானது. இந்த போர் நிறுத்தம் அப்பாவி பொதுமக்களுக்காக கொண்டுவரப்படுகிறது" என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் கூட்டாக தெரிவித்துள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

Posted: 31 Jul 2014 10:38 PM PDT

narendra-modi

narendra-modiஅமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவது என்பது வெளிநாட்டு தலைவர்களுக்கு அமெரிக்கா அளிக்கும் மிக உயரிய கவுரமாக கருதப்படுகிறது. குஜராத் கலவரம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்த அமெரிக்கா, தற்போது அவர் பிரதமராக பதவியேற்றதும் நாட்டின் உயரிய கவுரவத்தை அளிக்க முன்வந்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்தை நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் செனட் சபை உறுப்பினர்கள் மார்க் வார்னர், ஜான் கார்யென், டிம் கைனே, ஜிம் ரிஷ் ஆகியோர் கொண்டுவந்தனர். அப்போது, 'இரு நாடுகளுக்கு இடையில் ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கூட்டுக் கூட்டத்தில் மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், இதன் மூலம் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த முடியும் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர். மோடி பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர் முதன்முறையாக, இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தற்போது இந்தியா வந்துள்ளார். இன்று மோடியைச் சந்தித்து அவர் பேசவுள்ளார். அப்போது அமெரிக்கா வருமாறு மோடியை அவர் அழைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி குறித்த இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசியலுக்கு வருமாறு கோத்தபாயவிற்கு, விமல் அழைப்பு!

Posted: 31 Jul 2014 10:33 PM PDT

kottabaya-wimal

kottabaya-wimalஅரசியலுக்கு வருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

தாய் நாட்டை நேசிக்கும் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களின் சேவை தேவைப்படுகின்றது. இவ்வாறானவர்களின் பங்களிப்பின் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

எனவே, பாதுகாப்புச் செயலாளரை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்திற்காக நாம் கோத்தபாயவை நேசிக்கவில்லை. அவரது செயற்திறன் மிக்க சேவையையே நேசிக்கின்றோம்.

தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாகக் கொண்டு கோத்தபாய சிறந்த சேவையாற்றி வருகின்றார். இவ்வாறானவர்களின் பங்களிப்பு நாட்டின் அரசியலுக்கு மிகவும் அவசியமாகின்றது.

போரில் ஈடுபட்ட படையினர் சிவில் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

ஊரிலிருந்து கொழும்பு வருபவர்கள் காலி முகத்திடலை மட்டுமே பார்வையிடக் கூடிய காலமிருந்தது.

தற்போது பொழும்பில் பல இடங்களை பார்வையிடக் கூடிய வகையில் நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நடைபெற்ற அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமை!

Posted: 31 Jul 2014 10:28 PM PDT

kehaliya

kehaliyaஅரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செயலமர்வுக்காக கொழும்பு நோக்கி வந்த யாழ். ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இன, மதச் சமூக அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. எவ்வாறு வாக்களிப்பது யாருக்கு வாக்களிப்பது என்பது வரையில் மக்களுக்கு அறிவுரை வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. போர் இடம்பெற்ற காலத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட சில ஆயுதங்கள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டாம் என சில தூதுவர்கள் அந்தக் காலத்தில் கோரியிருந்தனர். இதன் காரணமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகக் கண்ணுடன் நோக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் தீர்மானங்களினால் எதேனும் ஓர் தரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அமெரிக்க அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுகின்றது எனவே அதன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விபத்தில் கொல்லப்பட்ட 6-வயது பெண்ணின் உடலுறுப்புக்கள். சோகத்திலும் ஒரு சுகம்!

Posted: 31 Jul 2014 10:23 PM PDT

or

orகனடா- லண்டன்,ஒன்ராறியோவில் அடிசன் ஹால் என்ற 6-வயது பெண் கடந்த வாரஇறுதியில் கார் ஒன்று Costco விற்குள் நுழைந்து மோதிய விபத்தில் கொல்லப்பட்டாள். இப்பெண் உயிர்களை காப்பாற்ற உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்பட்ட நால்வருக்கு உதவியுள்ளாள். ஒவ்வொருவரும் துயரத்தில் சுழன்று கொண்டிருந்த போதும் நான்கு குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளனர் என குடும்ப நண்பரும் முன்னாள் மேயருமான Anne Marie DeCicco-Best தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு தென்மேற்கு ஒன்ராறியோவில் அமைந்துள்ள நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஹால்ஸ் குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு ஒரு மெழுகுவர்த்தி கண்விழிப்பு ஊர்வலம் நடாத்தினர். விபத்தில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 3-வயது மியா வைத்தியசாலையில் குணமடைந்து வருகின்றாள் அத்துடன் தாயாரும் குணமடைந்து வருவதாகவும் கூறப் பட்டுள்ளது. அவசர அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட குழந்தை பிறந்ததிலிருந்து இன்னமும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோழி பிசினஸ் தொடங்கிய நடிகை மதுமிதா!

Posted: 31 Jul 2014 03:59 AM PDT

actress-madhumitha

actress-madhumithaசினிமா நடிகையாக அறிமுகமாகி, சின்னத்திரையில் மன்னன் மகளாக நுழைந்துள்ள மதுமிதா, தனது கணவருடன் இணைந்து ஈமு கோழி பிசினஸ் தொடங்கியுள்ளார். குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் பிரியாணி படத்தில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் தொடரில் விஷாலி, தாயம்மா என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் மதுமிதா. மன்னன் மகள் தொடருக்காக தீவிரமாக வாள் சண்டை கற்று வருகிறார். இந்த பிசியான ஷெட்யூலிலும் ஈமுகோழி பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். மன்னன் மகள் சீரியலில் இரண்டு வேடத்தில் நடிப்பதால் அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால் வேறு சீரியல்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார் மதுமிதா. விரைவில் என் கணவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு படம் ஒன்றை இருவரும் சேர்ந்து தயாரிக்க இருக்கிறோம். எங்கள் வீடு ஹைதராபாத்திலும், மாமியார் வீடு சென்னையிலும் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கியிருந்து நடிக்கிறேன். நானும் என் கணவர் சிவபாலாஜியும் இணைந்து ஷியானா என்ற பெயரில் ஹைதராபாத்தில் ஒரு நிறுவனம் தொடங்கியுள்ளோம். இது ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் அல்ல. ஈமு கோழியில் இருந்து சில பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இது சக்சஸ் ஆனால் சென்னையில் தொடங்குவோம் என்கிறார் மதுமிதா.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஞ்சான்… எந்த வெட்டுமில்லாமல் யு சான்று!

Posted: 31 Jul 2014 03:52 AM PDT

anjaan

anjaanசூர்யாவின் அடுத்த படமான அஞ்சான் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. எந்தக் காட்சிக்கும் ஆட்சேபணை சொல்லாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என யு சான்று அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர். சூர்யா, சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். சூர்யா படத்தை லிங்குசாமி இயக்குவது இதுதான் முதல்முறை. பெரும் பொருட்செலவில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிக அரங்குகளில் வெளியாகிறது. வழக்கமாக ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்புதான் தணிக்கை குழுவுக்கு அனுப்புவார்கள். ஆனால் சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால், ரிலீசுக்கு 15 நாட்களுக்கு முன்பே படம் தயாராகிவிட்டது. தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது. படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த காட்சியையும் நீக்கச் சொல்லவில்லை. அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்பதைக் குறிக்கும் யு சான்று வழங்கியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு ஜாலியான மெகா ஹீரோவை நான் பார்த்ததே இல்லை: சமந்தா

Posted: 31 Jul 2014 03:49 AM PDT

samantha

samanthaவிஜய் ரொம்பவும் ஜாலியான ஆள் அவர் ஒன்றும் மூடி டைப் எல்லாம் கிடையாது என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா விஜய்யுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் கத்தி தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதையொட்டி பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஹீரோ விஜய் பற்றி சமந்தா கூறுகையில், நான் பல பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். ஆனால் விஜய் போன்று அவ்வளவு எளிமையான நடிகரை நான் இதுவரை பார்த்தது இல்லை. விஜய் மூடி டைப் யாருடனும் பேச மாட்டார் என்று சிலர் கூறினார்கள். அதனால் கத்தி படப்பிடிப்பின் முதல் நாள் அன்று நான் விஜய் பக்கமே செல்லவில்லை. விஜயக்கு தனியாக கேரவன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரோ கேரவனுக்குள் செல்லாமல் சக நடிகர், நடிகைகளுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டுடன் கூட அன்பாகப் பேசுபவர் விஜய். மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஜோக் அடித்துக் கொண்டே இருப்பார். விஜய் மூடி டைப் என்று பிறர் கூறியதை கேட்டு நம்பிவிட்டேன். தற்போது தான் அவர் எவ்வளவு ஜாலியானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் சமந்தா.

This posting includes an audio/video/photo media file: Download Now

டொரண்டோ வார்டு கவுன்சிலர் சைக்கிள் மீது கார் மோதல்: டிரைவர் கைது

Posted: 31 Jul 2014 03:41 AM PDT

MARY

MARYகடந்த ஞாயிறு அன்று டொரண்டோவில் உள்ள Beaches-East York ward என்ற பகுதியின் 32வது வார்டு கவுன்சிலர் Mary-Margaret McMahon அவர்கள் காலை 11 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கவனக்குறைவாக கார் ஓட்டி வந்த ஒருவர் கவுன்சிலரின் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் கவுன்சிலர் Mary-Margaret McMahon அவர்களுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் டொரண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .கவுன்சிலர் மீது கார் மோதிய விபத்தில் கவனக்குறைவாக கார் ஓட்டியதாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். விபத்து நடந்த அன்று கவுன்சிலர் McMahon அவர்கள் Woodbine Avenue and Gerrard St. E என்ற பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சிக்னலுக்காக ஒரு இடத்தில் காத்திருந்ததாகவும், சிக்னல் பச்சை நிறம் காண்பித்தவுடன் அவர் கிளம்பியபோது பின்னால் வந்த கார் அவருடைய சைக்கிளில் மோதியதாகவும் கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

Posted: 31 Jul 2014 03:35 AM PDT

exercise

exerciseவாய் என்பது இரண்டு உதடுகளோடு முடிந்து விடுகிற சமாச்சாரமில்லை. கன்னம், நாக்கு, பற்கள், ஈறுகள், சுவை நரம்புகள், தொண்டை என்று வாயின் பகுதிகள் நீள்கின்றன. இந்தப் பாகங்களில் எதை புற்றுநோய் தாக்கினாலும் அதற்கு வாய் புற்றுநோய் என்று தான் பெயர். வாயில் புற்றுநோய்த் தாக்கத்தின் சிறு அறிகுறி இருந்தாலும் போதும், அது வாயின் இந்த எல்லாப் பகுதிகளையும் மளமளவென்று தாக்கி அழிக்கும் அபாயம் உள்ளது. வயது கூடக் கூட இந்த வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். வாயில் புற்றுநோய் ஏற்பட மேலும் பல காரணங்கள் உள்ளன. அவற்றைத் தவிர்த்தால், நாமும் வாய்ப்புற்று நோயிலிருந்து தப்பிப் பிழைக்கலாம். அவை குறித்து பார்க்கலாம். வாய்ப் புற்றுநோய்க்கு மிக முக்கியமான காரணம் புகையிலை உபயோகிப்பது தான். சிகரெட், பீடி மூலம் புகைப்பதால் மட்டுமல்ல, புகையிலையை நேரடியாக மென்று தின்றாலும் இந்த நோய் தாக்கும். எனவே இந்தப் புகையிலையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஒருவருடைய உடலில் சூரிய ஒளி அதிகம் படுவதால் அவருக்கு தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அது மேலும் வளர்ந்து, வாய்ப் புற்றாகவும் மாறக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. எனவே, சூரிய ஒளி உடலில் படுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது உதடுகளில் சன்ஸ்க்ரீன் க்ரீமைத் தடவ வேண்டும். தினமும் நன்றாக உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்வதன் மூலமும் புற்றுநோய் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதால் நோயெதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகமாகும். புற்றுநோய்களைத் தவிர்க்க பச்சைக் காய்கறிகள், தக்காளி, பீன்ஸ், க்ரீன் டீ உள்ளிட்ட பல உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.  

This posting includes an audio/video/photo media file: Download Now

அடக்கடவுளே இந்த அதிர்ச்சிக் காட்சி எப்படி சாத்தியமாகும்?

Posted: 31 Jul 2014 03:29 AM PDT

flight

flight

This posting includes an audio/video/photo media file: Download Now

சைக்கிள் கேப்ல என்னமா கடா திருடுறாங்க!

Posted: 31 Jul 2014 03:23 AM PDT

imagem

imagem

This posting includes an audio/video/photo media file: Download Now

வீட்டிலேயே செய்யலாம் வாட்டர் பில்டர்!

Posted: 31 Jul 2014 03:18 AM PDT

Build-your-own-water-filter

Build-your-own-water-filter

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™