Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


புனே நிலச்சரிவு: பஸ் டிரைவர் எச்சரிக்கையால் பலர் உயிர் பிழைத்தனர்

Posted: 31 Jul 2014 11:10 PM PDT

மாலின் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அன்று காலை 8 மணி அளவில் அந்த வழியாக மராட்டிய அரசு பஸ் சென்றது. மாலின் கிராமம் அருகே சென்றபோது ரோட்டில் பெரிய மரம் விழுந்து கிடந்தது. அதை அப்புறப்படுத்தியபோது பயங்கர சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டு மாலின் கிராமத்தை மூடியது. இதைப்பார்த்த பஸ் டிரைவர் பிரதாப் கலே அதிர்ச்சி அடைந்தார்

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளிகளில் 76 சதவீதம் பேர் மீண்டும் வேலையில் சேர்ந்தனர்

Posted: 31 Jul 2014 11:06 PM PDT

மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளிகளில் 76 சதவீதம் பேர் மீண்டும் பழையபடி வேலையில் சேர்ந்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமியரில் 1 கோடியே 10 லட்சம் பேர் பள்ளிகளுக்கு செல்லாமல் கடைகள், செங்கல்

மோடி சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருக்கிறார்: தேவேகவுடா பாராட்டு

Posted: 31 Jul 2014 10:49 PM PDT

முன்னாள் பிரதமரும் மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடா பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:– பிரதமர் மோடி சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் அசைக்க முடியாத பலத்தை பெற்று இருக்கிறார். தற்போது நாடு முழுவதும் ஏராளமான பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன. அதை தீர்க்க வேண்டிய நிலையில்

கடன் தள்ளுபடியில் குளறுபடி: சந்திரபாபுவை மக்கள் கல்லால் விரட்டியடிப்பார்கள்- ஜெகன்மோகன்

Posted: 31 Jul 2014 10:45 PM PDT

ஆந்திராவில் தேர்தல் தோல்வி குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். குண்டூரில் நடந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:– பொய்யான வாக்குறுதிகளை சொல்லி சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்து உள்ளார். தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்ல

எனது சாவுக்கு கல்லூரி துணை முதல்வரே காரணம்: பேஸ்புக்கில் தகவல் பரப்பி மாணவன் தற்கொலை

Posted: 31 Jul 2014 10:38 PM PDT

ஐதராபாத் மியாப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சந்திரசேகர். அங்குள்ள தனியார் ஐ.ஐ.டி. கல்லூரியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் சந்திரசேகர் மற்றும் ஒரு மாணவியிடம் இருந்த செல்போனை கல்லூரி துணை முதல்வர் ரவி பறிமுதல் செய்தார். செல்போனில் இருவரும் காதல் எஸ்.எம்.எஸ்.

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 237 யாத்ரீகர்களுடன் 36-வது குழு புறப்பட்டது

Posted: 31 Jul 2014 10:31 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கரடு முரடான மலைப்பாதை வழியாக பயணித்து,

திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல்

Posted: 31 Jul 2014 10:26 PM PDT

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிய நடைமுறையை அமுல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. அதன்படி 300 ரூபாய் கட்டண டிக்கெட் ஆன்லைனில் வருகிற 7–ந்தேதி முதல் விற்பனை

சத்தீஸ்கர் தொழிற்சாலை வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி

Posted: 31 Jul 2014 09:20 PM PDT

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உர்லா என்ற கிராமத்தில் மின்சார 'ஃபியூஸ்' தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நேற்றிரவு இங்கு வழக்கம் போல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி

ஆசிரியையிடம் ரூ.3 லட்சம் லஞ்சம்: தலைமையாசிரியர் கைது

Posted: 31 Jul 2014 08:51 PM PDT

ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ரெயில்வே பள்ளியில் கடந்த 35 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றி வந்த ஒருவர் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், பணியில் சேர்ந்தபோது அந்த ஆசிரியை அளித்திருந்த சாதிச் சான்றிதழில் பிரச்சனை உள்ளதாகவும், விஜிலென்ஸ் அதிகாரிகள் இதைக் கண்டுபிடித்து விட்டால், ஓய்வுக் காலப் பலன்களை அந்த ஆசிரியை பெற

புனே நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

Posted: 31 Jul 2014 08:04 PM PDT

மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது

தேசிய நெடுஞ்சாலைகளில் சட்ட விரோதமாக சுங்க கட்டணம் வசூல்: பாராளுமன்றத்தில் புகார்

Posted: 31 Jul 2014 05:47 PM PDT

தேசிய நெடுஞ்சாலைகளில் சட்ட விரோதமாக சுங்க கட்டணம் வசூல்: பாராளுமன்றத்தில் புகார்

மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 31 Jul 2014 01:31 PM PDT

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் டமெங்லோங் மாவட்டத்தில் நுங்கோ என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அசாம் ரைபிள் படையினர் நேற்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட

சிறுவர்கள் என்பதற்கான வயதை 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு

Posted: 31 Jul 2014 01:15 PM PDT

தற்சமயம் 18 வயது வரை உள்ளவர்கள் சிறுவர்கள் என சட்டம் சொல்கிறது. இதனால் 18 வயது வரை உள்ளவர்கள் கொடுங்குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர்கள் சிறையில் அடைக்கப்படுவது இல்லை. மாறாக சிறுவர் சீர்திருத்த இல்லங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அதேபோல அவர்கள் மீது வழக்கமான கோர்ட்டுகளில் விசாரணை நடைபெறாது. அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையும்

உத்தரபிரதேசத்தில் 92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்

Posted: 31 Jul 2014 12:33 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆக.10-ந் தேதி அன்று மன்ட்டு (வயது 26) என்ற இளைஞன் கற்பழித்தார். இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு மருத்துவ

ராணுவ வீரர் கொலையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது: விக்ரம் சிங்

Posted: 31 Jul 2014 12:33 PM PDT

இந்திய ராணுவ தளபதியாக கடந்த 26 மாதங்களாக பணியாற்றி வந்த விக்ரம் சிங், நேற்று பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் 26-வது தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லியில் ராணுவத்தின் தெற்கு பிளாக் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ராணுவ தளபதிக்கான பட்டையை ஓய்வு பெறும் தளபதி விக்ரம் சிங், புதிய தளபதி தல்பீர் சிங் சுஹாக்கிடம் வழங்கினார். 59 வயதான

அந்தமான், மியான்மர் கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

Posted: 31 Jul 2014 12:03 PM PDT

அந்தமான் கடலில் நேற்று இரவு 7.10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் போர்ட்பிளேரில் இருந்து 250 கிலோ மீட்டர் கிழக்கில் கடலுக்கடியில் 44 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் லட்சுமண்சிங் ரத்தோர் கூறினார்.

போலி விசாக்கள் மூலம் இங்கிலாந்தில் நுழையமுயன்ற 11 இந்தியர்கள் துருக்கியில் கைது

Posted: 31 Jul 2014 11:57 AM PDT

போலி விசாக்கள் மற்றும் சட்ட விரோத குடியேற்ற வழக்குகளில் சமீபகாலத்தில் ஒரே நேரத்தில் 11 இந்தியர்கள் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த தேவ் கபூர், சீமா கபூர், ஜெய் கபூர், சனயா கபூர், பூர்வி கபூர், குணால் கபூர் என்ற ஆறு பேர் கொண்ட குடும்பத்தினரும், தெற்கு டெல்லியின் நியு பிரெண்ட்ஸ் காலனியைச் சேர்ந்த ராஜ் சிங், ஹர்ஜீத் கவுர், சகத் சிங், கரன் சிங் மற்றும்

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் நுழைய முயன்றால் கைது: இலங்கை ராணுவம் எச்சரிக்கை

Posted: 31 Jul 2014 11:22 AM PDT

கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில், நாளை மறுதினம் கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூ-அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சந்திப்பு

Posted: 31 Jul 2014 11:12 AM PDT

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று மாலை சந்தித்து பேசினார். ஜான் கெர்ரியுடன் அமெரிக்க பொருளாதார செயலாளர் பென்னி பிரிட்ஸ்கர் புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜான் கெர்ரி பதில் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வு: அருண் ஜெட்லி நம்பிக்கை

Posted: 31 Jul 2014 08:04 AM PDT

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையினான ஆட்சி 49 நாளில் முடிவுக்கு வந்தது. அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜனதா, ஆட்சி அமைக்க முன்வராததால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நீண்ட காலம் ஜனாதிபதி ஆட்சி இருந்து வருகிறது. டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™