Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


“அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்!

Posted: 26 Jul 2014 03:45 AM PDT

actress-abirami

actress-abiramiஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர் அபிராமி. ஹோம்லியான் முகத்துடன் வலம் வந்தவர். கமலுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த விருமாண்டி படம் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பாக நடிப்புக்கு முழுக்கு போட்டார் அபிராமி. அமெரிக்காவில் வாழ்க்கை நடத்திய அபிராமி, நடிக்கும் ஆசையில் திரும்பி வந்த போது கிடைத்தென்னவோ ஒரே ஒரு டி.வி நிகழ்ச்சி மட்டும்தான். இதனால் ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பிச் சென்ற அபிராமியை மீண்டும் அழைத்து வந்துள்ளது கேரளா. அது அவருடைய பிறந்த மண் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி குட்டியம்மா. இவருடைய வாழ்க்கை வரலாறு "டிரைவர் ஆன் டியூட்டி" என்ற பெயரில் படமாகின்றது. மனோஜ் பெல்லவா இயக்கும் இத்திரைப்படத்தில் குட்டியம்மா வேடத்தில் அபிராமி நடிக்க இருக்கின்றார். சதாரண சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் துறைக்குள் நுழைந்து ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் துணிச்சலுடன் போராடி குட்டியம்மா எப்படி ஜெயித்தார் என்கிற கதை. இதற்காக அபிராமி இப்போது குட்டியம்மாவின் வாழ்க்கையை படித்து வருகிறார். அவரது மேனரிசம், நடை உடை பாவனைகளை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

Posted: 26 Jul 2014 03:40 AM PDT

velai-illa-pattathari

velai-illa-pattathariதனுஷ் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரி படம், முதல் வாரத்தில் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது. தனுஷ், அமலா பால் நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. படத்துக்கு ஆதரவாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்தன. அதையும் தாண்டி படத்துக்கு ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் பெரும் பலமாக அமைந்துவிட்டது. படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ 20 கோடியை இந்தப் படம் அள்ளிவிட்டது. இது தவிர, வெளிநாட்டு வசூல், தொலைக்காட்சி உரிமை, அண்டை மாநில வசூல் போன்றவை ரூ 15 கோடியைத் தாண்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு தமிழில் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படம் இதுவே.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடை பொருந்தாததால் யாமி கவுதமுக்கு பறிபோன பட வாய்ப்பு!

Posted: 26 Jul 2014 03:34 AM PDT

yami-gautam-bikini

yami-gautam-bikiniபிகினி உடை அணிந்து நடிக்க ஒத்துக் கொண்டாலும், அது பொருந்தாததால் படத்திலிருந்து விலக்கப்பட்டு சோகத்தில் ஆழ்ந்துள்ளார் நடிகை யாமி கவுதம்.

ராதாமோகனின் "கெளரவம்" படம் மூலம் தமிழில் கதாநாயகியானவர் யாமி கெளதம். தமிழ், தெலுங்கு, இந்திப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் யாமி தமிழில் நீண்ட நாட்களாக "தமிழ்ச்செல்வனும், தனியார் அஞ்சலும்" என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஒரு இந்தி பட வாய்ப்பை பெற்ற யாமி அந்தப் பட வாய்ப்பிற்காக ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு அழைக்கப்பட்டார்.

அப்படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அவரும் ஒப்புக் கொண்டு நீச்சல் உடையை கொடுத்தனர்.

ஆனால் அந்த உடை அவருக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்லி அந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்க மறுத்துவிட்டனர்.

பிகினி உடை அணிந்து நடிக்க சம்மதித்தும் யாமியை அப்படக்குழுவினர் நிராகரித்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

தன்னுடைய முதல் படமான "விக்கி டோனர்" மூலம் சிறந்த நடிகை என்று புகழ் பெற்றவர் யாமி. இந்நிலையில் யாமி நிராகரிக்கப்பட்ட அப்படத்தில் லிசா ஹைடன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெற்றிகளைக் குவித்த விஜய் சேதுபதி ஒன்றரைக் கோடி கடனாளியாம்!!

Posted: 26 Jul 2014 03:24 AM PDT

vijay-sethupathy

vijay-sethupathyஇரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து 5 வெற்றிப் படங்கள் தந்த விஜய் சேதுபதிக்கு ரூ 1.5 கோடி கடன் இருக்கிறதென்றால், அதுவும் சினிமா மூலம் ஏற்பட்ட கடன் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகணும்.. காரணம், இதைச் சொல்வது அவரேதான்! தமிழ் சினிமாவில் 2012, 2013 ஆகிய இரு ஆண்டுகள் விஜய் சேதுபதியுடையவையாக இருந்தன. பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வரிசையாக கமர்ஷியல் ஹிட்டடித்தன. ஆனால் அடுத்து வந்த இரு படங்கள் அவரைக் கவிழ்த்தன. அவை ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும். ''நான் ரொம்ப ஆசைப்பட்டு நடிக்க ஆரம்பிச்ச படம் 'சங்குதேவன்'. ஆனா, அதை கமிட் பண்ணியிருக்கக் கூடாது. மூணு மாசமா வீட்ல சும்மா உட்காந்திருந்தேன். இப்போ ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் கட்டிக்கிட்டு இருக்கேன்," அதையும் அவரே சொல்கிறார் இப்படி: "நண்பனாகப் பழகி மிக மோசமான துரோகியா மாறின சிலர்தான், இந்த வருத்தங்களைப் பரிசளிச்சிருக்காங்க. நிறைய வலியும் வேதனையும் கலந்த அந்தக் கவலைகள் ஒவ்வொண்ணும் ஓர் அனுபவம். அவை, என்னை இனி சரியான முடிவு எடுக்க வைக்கும்!'' இப்போது விஜய் சேதுபதி ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் முதலில் வெளிவரப் போவது மெல்லிசை. அடுத்தடுத்து, வன்மம்', 'ஆரஞ்சு மிட்டாய்', 'இடம் பொருள் ஏவல்', 'புறம்போக்கு' 'வசந்த குமாரன்' போன்ற படங்கள் வெளிவருமாம்! சூதானமா இருக்கணும்ஜி!

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒவ்வொரு ஆண் மகனும் கட்டாயம் காண வேண்டிய காட்சி!

Posted: 26 Jul 2014 03:05 AM PDT

Horrible-Car-Crash-Prank

Horrible-Car-Crash-Prank

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒவ்வொரு ஆண் மகனும் கட்டாயம் காண வேண்டிய காட்சி!

Posted: 26 Jul 2014 03:02 AM PDT

Womens-protection

Womens-protection

This posting includes an audio/video/photo media file: Download Now

வாய் பேசமுடியாத குழந்தை தெரியும்…. வாயே திறக்காத அதிசய குழந்தை தெரியுமா?

Posted: 26 Jul 2014 02:57 AM PDT

Nine-Month-Old-Baby-Cant-Open-His-Mouth

Nine-Month-Old-Baby-Cant-Open-His-Mouth

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களிடம் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் இந்தக் காட்சி!

Posted: 26 Jul 2014 02:48 AM PDT

This-Will-Change-The-Way-You-Think

This-Will-Change-The-Way-You-Think

This posting includes an audio/video/photo media file: Download Now

டேப் க்யூ டேப்லட் நிறுவனத்தின் வளைதளத்தில் பட்டியல்!

Posted: 26 Jul 2014 02:40 AM PDT

samsung-galaxy-tab-Q

samsung-galaxy-tab-Qசாம்சங் நிறுவனம் சீன சந்தையில் ஒரு புதிய குரல் அழைப்பு டேப்லட்டான, கேலக்ஸி டேப் க்யூ டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 7 இன்ச் டேப்லட்டை விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் இப்போது சீனா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வளைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் க்யூ குரல் அழைப்பை ஆதரிக்கிறது, மேலும் LTE நெட்வொர்க் இணைப்பு ஆதரிக்கிறது. இது 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் HD TFT டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகிறது. கேலக்ஸி நோட் 3 போன்று, கேலக்ஸி டேப் க்யூ டேப்லட்டில் பின்புறம் பாக்ஸ் லெதர் ஃபினிஷ் கொண்டுள்ளது. இதில் 1.2GHz ஒரு குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. டேப்லெட்டில் ரேம் மற்றும் உள்ளடங்கிய சேமிப்பு பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. கேலக்ஸி டேப் க்யூ டேப்லட்டில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. கேலக்ஸி டேப் க்யூ வில், microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கத்தக்க சேமிப்பு ஆதரிக்கிறது. இது 250 கிராம் எடையுடையது மற்றும் ஒரு ஒற்றை சிம் (மைக்ரோ சிம்) ஆதரிக்கிறது. டேப்லெட்டில் மெஷர்ஸ் 191.8x99.7x8.9mm மற்றும் ஒரு 3200mAh பேட்டரி ஆதரவு உள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் க்யூ தவிர, 4G LTE , ப்ளூடூத், Wi-Fi, NFC, மைக்ரோ-USB, மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் வருகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் க்யூ சிறப்பம்சம்: 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் HD TFT டிஸ்ப்ளே, 1.2GHz ஒரு குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்), 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கத்தக்க சேமிப்பு, ஒற்றை சிம், 4G LTE , ப்ளூடூத், Wi-Fi, NFC, மைக்ரோ-USB, 3G, ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன், 3200mAh பேட்டரி, 250 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!

Posted: 26 Jul 2014 02:00 AM PDT

vomit

vomitஇன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உலகமே மிக வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. அதனுடன் சேர்ந்து நாமும் வேகமாக பயணித்து கொண்டிருக்கிறோம். அதனால் உடலை சரிவர நாம் பராமரிப்பதில்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. இதன் விளைவாக நோய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி வளர்ந்து வரும் நோய்களில் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக விளங்குகிறது சிறுநீரக நோய்கள். சிறுநீரக நோய்கள் என்பது சத்தமில்லாமல் உங்களை கொல்லும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. நீண்ட நாட்களுக்கு அவை எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. மாறாக நிலைமை மோசமடைந்தவுடன் தான் அதன் அறிகுறிகள் தெரிய வரும். மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!! சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வது இயலாமல் போய்விடும். தீவிரமான சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க, ஒருசில அறிகுறிகள் தெரிந்தாலே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரமே கண்டுப்பிடித்தால் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்திடலாம். அதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிகுறிகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா... இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற வீதத்திலும் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அளவு கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதே போல் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை வீதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதுவும் முக்கியமாக இரவு நேரத்தில் தான் இந்த மாற்றங்களை உணரலாம்.அதில் சிறுநீரின் நிறமும் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும், ஆனால் எதுவுமே வராது. சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் உங்கள் இரத்தத்தில் கழிவுகள் குவியும். இதனால் சருமத்தில் தீவிரமான சொறிகளும், அரிப்புகளும் ஏற்படும். சிறுநீரக நோய் இருந்தால் சில நேரங்களில் வலி ஏற்படும். சிறுநீரக குழாயில் கல் இருந்தால், கீழ் முதுகில் ஆரம்பித்து கவட்டை வரை தீவிரமான வலி ஏற்படும். பாலிசிஸ்டிக் என்ற சிறுநீரக மரபு நோய் இருந்தாலும் கூட வலி ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் நீர் நிறைந்த பல கட்டிகள் உருவாகும். நீர்ப்பை சுவர்களில் திசு இடைநார் சிறுநீர்ப்பை அழற்சி என்ற தீவிரமான அழற்சி ஏற்படும் போது, தீவிரமான வலியும் சுகவீனமும் ஏற்படும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்டர்சனை திட்டிய குற்றச்சாட்டு: ஜடேஜாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Posted: 26 Jul 2014 01:43 AM PDT

ravindra-jadeja-james-ander

ravindra-jadeja-james-anderஇங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனை வசவு சொற்களால் திட்டியதாக ரவீந்திர ஜடேஜாவுக்கு டெஸ்ட் போட்டியின் பாதி சம்பளத்தை அபராதமாக விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனிடையே நாட்டிங்காம் நகரில் நடந்த, முதல் போட்டியின் 2வது நாளின் உணவு இடைவேளையின் போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா மற்றும் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆகியோர் மைதானத்தை விட்டு ஒன்றாக பெவிலியனை நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஜடேஜாவை, ஆண்டர்சன் திட்டியதாகவும் பிடித்து தள்ளி விட்டதாகவும் புகார் எழுந்தது. இந்திய அணி மேலேஜர் சுனில் தேவ் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்தார். ஐசிசி சட்டத்தின் 2.3.3 பிரிவின்கீழ் வரும் இந்த விதிமீறலுக்காக ஆண்டர்சனுக்கு இரு டெஸ்ட் அல்லது நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடியும். இதைத்தொடர்ந்து ஜடேஜா மீது இங்கிலாந்து அணி மேலாளர் பில் நியாலே, ஐசிசியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் "திடீரென ஆண்டர்சனை நோக்கி திரும்பிய ஜடேஜா, அவரை மிரட்டும் தோரணையில் ஆக்ரோஷமாக ஆண்டர்சனை நோக்கி நடந்து சென்றார், வசவு சொற்களால் திட்டினார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து இன்று விசாரணை நடத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட இரு வீரர்கள், அவர்களின் தரப்பு வக்கீல்கள், சாட்சியங்களிடம் சுமார் இரண்டரை மணி நேரம் ஐசிசிக்கான போட்டி நடுவர் டேவிட் பூன், விசாரணை நடத்தினார். மேலும், சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் போட்டு பார்த்தார். இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா மீதான குற்றச்சாட்டு, லெவல்-1 பிரிவின்கீழ், ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி முதல் டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தில் பாதியை அபராதமாக விதித்து டேவிட் பூன் உத்தரவிட்டுள்ளார். ஆண்டர்சன் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த புகார் மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு நடுவேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் 27ம்தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கி சுடுதலில் அபிநவ் தங்கம் வென்றார்- மலைக்காவுக்கு வெள்ளி!!

Posted: 26 Jul 2014 01:40 AM PDT

-sukhen-dey-and-bronze

-sukhen-dey-and-bronzeகாமன்வெல்த் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் மேலும் மூன்று பதக்கங்களை வென்றனர்.

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் நாளான நேற்று, ஆண்கள் பிரிவில் அபிநவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் மலைக்கா வெள்ளிப்பதக்கம் வென்றார். பளு தூக்கும் போட்டியில் சந்தோஷி மட்சா வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெண்கள் 10 மீட்டர் துப்பாக்கிசுடும் போட்டியில், இந்தியாவின் மலைக்கா கோயல், வெள்ளிப்பதக்கம் வென்று, இரண்டாம் நாளில் இந்தியாவின் பதக்கப்பட்டியலை உயர்த்தினார்.

இதன் பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா, 10 மீட்டர் ரைபிள் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் 205.3 புள்ளிகள் பெற்று, காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார்.

இது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் 3வது தங்கப்பதக்கம் ஆகும். காமன்வெல்த் போட்டியில், அபிநவ் பிந்தரா தனிப்பட்ட முறையில் பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

53 கிலோ பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்ற நைஜீரியாவை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி சிக்கா அமலஹா 196 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தையும், பப்புவா மற்றும் நியூ குனியா நாட்டை சேர்ந்த 2 குழந்தைக்கு தாயான டிக்கா டுவா 193 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தோஷி மட்சா(20) 188 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

முதல் நாளில் இந்தியா 2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களை பெற்றிருந்தது. இரண்டாம் நாளான நேற்று மேலும் மூன்று பதக்கங்கள் கிடைத்தன.

இதுவரை மொத்தம் 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மொத்தம் 10 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு மீட்பு!!

Posted: 26 Jul 2014 01:34 AM PDT

baby

babyகாஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 850க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சுக் குழந்தைகள். உயிரிழந்த கர்ப்பிணி உக்கிரமாக நடக்கும் இந்தப் போரில் நேற்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. உயிருடன் சிசு மீட்பு இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார். ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அந்த சிசுவை வெளியில் எடுத்தனர். கொந்தளிப்பு அந்த சிசு உயிர் வாழ்வதற்கு 50% சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இப்படியா அப்பாவிகளை பலியெடுப்பது என்ற கொந்தளிப்பும் பாலஸ்தீனர்களிடத்தில் இருக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

12 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!!

Posted: 26 Jul 2014 01:31 AM PDT

civilian-casualties-rise-as-isra

civilian-casualties-rise-as-israஇஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் இயக்கம் 12 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ந் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர். அந்த மாணவர்களைக் கொன்று சடலங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான மேற்கு கரை அருகே வீசி சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே யுத்தம் மூண்டது. ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனை ஏற்று இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் 12 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர யுத்த நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி முறைமை குறித்து விசேட பேச்சுவார்த்தை!

Posted: 26 Jul 2014 01:26 AM PDT

meeting-tna

meeting-tnaநிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து இடதுசாரி கட்சிகளுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒன்றை ஒதுக்கித் தருமாறு இடதுசாரி கட்சிகள் கோரியிருந்தன. அதன் அடிப்படையில் இந்த வாரத்தில் இடதுசாரி கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் ஊடாக மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் அரசாங்கத்திடம் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது. இந்த யோசனைத் திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை நாட்டம் காட்டவில்லை: ஜெயபால்

Posted: 26 Jul 2014 01:16 AM PDT

fishing-talk

fishing-talkமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட தமிழக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எனினும், இலங்கை அரசாங்க அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட போதிலும், இலங்கையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. தமிழக மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொள்ள கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கச்சத்தீவு குறித்த நிலைப்பாடு சரியானதே என ஜெயபால் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 10000 தமிழக மீனவர்கள் கால வரையில்லா பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காணிகளை கைப்பற்றிக் கொள்ள அனுமதியளிக்கக் கூடாது: ஜனாதிபதி மஹிந்த

Posted: 26 Jul 2014 01:12 AM PDT

mahinda_anuradhapura

mahinda_anuradhapuraபலவந்தமான முறையில் காணிகளை கைப்பற்றிக்கொள்ள எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். சில நபர்கள் தங்களது பலத்தைப் பயன்படுத்தி 20 முதல் 25 ஏக்கர் வரையிலான காணிகளை பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் அனுமதியளிகக்கக் கூடாது. காணிகள் பலவந்தமான முறையில் கைப்பற்றப்படுவதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்ய வேண்டும். அரசியல் பேதம் பாராட்டாது மக்களின் நலன்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண் ஐக்கிய நாடுகள் தூதரக வாயிலில் அமர்ந்து போராட்டம்!

Posted: 26 Jul 2014 01:08 AM PDT

Un-logo

Un-logoஆப்கானிஸ்தானிய பெண் ஒருவர் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரக பாதுகாப்பு வாயிலில் அமர்ந்து கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி வருகிறார். தமது கணவருக்கும் ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை இலங்கையில் அகதி அந்தஸ்தை வழங்கவேண்டு;ம் என்று அவர் கோரி வருகிறார். 2012ம் ஆண்டு இலங்கைக்கு வந்த ஆப்கானிஸ்தானிய ரேஹானாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் அந்தஸ்தை வழங்கியுள்ளது. எனினும் அவரது கணவரான அஹமட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அகதி அந்தஸ்தை வழங்கவில்லை. இதனையடுத்தே ரெஹானா போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். தமது கணவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டால் மாத்திரமே தாம் ஐக்கிய நாடுகள் வளவில் இருந்து வெளியேறப் போவதாக ரெஹானா குறிப்பிட்டுள்ளார். எனினும் ரெஹானாவின் கணவருக்கு அகதி அந்தஸ்தை வழங்குவதில் ஏன் தாமதம் என்ற விடயத்தை ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிடவில்லை. இதேவேளை ரெஹானா ஆப்கானிஸ்தானின கந்தகாரில் வசி;ப்பவர் என்றும்; தாய் தந்தையர் அற்றவர் என்றும் அவரை வளர்ப்பு தாய், ஏற்கனவே நான்கு பெண்களை திருமணம் செய்த போதைவஸ்து வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும் அதன் பின்னரே ரெஹானா, அஹமட்டை சந்தித்து திருமணம் புரிந்து காபூலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த போதைவஸ்து வர்த்தகர் மூலம் ரெஹானாவுக்கு ஆபத்து நேரலாம் என்ற அச்சத்திலேயே அவரும் கணவரும் இலங்கைக்கு வந்து ஐக்கிய நாடுகள் சபையில் அடைக்கலம் கோரியுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நுழைந்த கார் 6-வயது சிறுமிக்கு உயிராபத்தை ஏற்படுத்தியுள்ளது!

Posted: 26 Jul 2014 01:02 AM PDT

costa-car

costa-carகனடா- லண்டன், ஒன்ராறியோவில் Costco நிறுவனத்திற்குள் கார் பின் பக்கமாக மோதியதால் 6-வயது சிறுமி அவளது உயிருக்கு போராடிய நிலையிலும், அவளது 3-வயது சகோதரியும் கர்ப்பினியான தாயாரும் கடுமையாக தாக்கப்பட்டுமுள்ளனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 7-மாத கர்ப்பினியான பெண் அல்லது அவரது வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருக்கலாமென கருதி அவசர சிகிச்சை பிரிவில் அறுவைச்சிகிச்சை கொடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

சிவப்பு நிற பொன்ரியாக் கடையின் நுழைவாசலில் பின்புறமாக மோதியுள்ளது. சுறுசுறுப்பான வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடைக்குள் காணப்பட்டனர்.

கார் பின்புறமாக இரண்டு தூண்கள் போன்ற தடைகளிற்கிடையில் நுழைந்து சறுக்கும் கண்ணாடிக் கதவுகளை மோதியுள்ளது எவ்வாறு என தீர்மானிக்க பொலிசார் முயல்கின்றனர்.

கர்ப்பினித்தாயும் அவரது இரண்டு பிள்ளைகளுடன் வேறு இருவரும் கார் சாரதியும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன் கார் கதவுகளிற்கூடாக சென்றதாக அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்களும் கடை ஊழியர்களும் தெரிவித்தனர்.

இது ஒரு சூறாவளி போன்று காணப்பட்டதென ஒருவர் கூறியுள்ளார். பெயர் விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை ஆனால் சாரதி 40 அல்லது 50 வயதுடையவராக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த சிறுவர்களும் வயதானவர்களும் சிதறிய கண்ணாடித் துண்டுகளாலும் உடைந்த உலோகங்களினாலும் சூழப்பட்டிருந்தனரென பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

தரையில் அமர்ந்திருந்த சிறுமியின் வாய்க்குள் கண்ணாடி துண்டு ஒன்று இருந்தது போல் காணப்பட்டுள்ளது. மற்றய சிறுமி சுவாசிக்க அவதிப்பட்ட நிலையில் காணப்பட்டாள்.

சூழ இருந்த மக்கள் தாயையும் பிள்ளைகளையும் ஆதரித்த வண்ணம் அம்புலன்ஸ் வரும் வரையும் காத்திருந்தனர். 5-ஆம்புலன்ஸ்கள் காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் பொலிசார் சம்பவம் நடந்த இடத்தில் தங்கள் விசாரனையை ஆரம்பித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விமானத்தையும் பயணிகளையும் பயமுறுத்திய பயணி!

Posted: 26 Jul 2014 12:56 AM PDT

swing airlines

swing airlinesகனடா- ரொறொன்ரோவிலிருந்து பனாமா நோக்கி புறப்பட்ட Sunwing விமானத்தில் பயணம் செய்த 25-வயதுடைய பயணி விமானத்தில் இருந்த பயணிகளையும் விமானத்தையும் பயமுறுத்தியுள்ளார். இதன் காரணமாக ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 7-மணியளவில் பனாமா நோக்கிப் புறப்படட் விமானம் இவரின் அச்சுறுத்தல் கிளர்ச்சி காரணமாக சுற்றி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட 183-பயணிகள் மற்றும் 6-குழவினரும் இருந்துள்ளனர். 25-வயதுடைய அலி சாகி என்பவரை பொலிசார் கைது செய்தனர். இவர்மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இவரது தந்தை தனது மகன் நல்லவன் ஆனால் இவருக்கு மனக் கோளாறு உள்ளதென தெரிவித்துள்ளார். ஆழ்ந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பூட்டிய அறைக்குள்ளேயே அடைந்து இருப்பான் என்றும் கூறியுள்ளார். அத்துடன் சூதாட்ட பிரச்சனையும் உள்ளது. அலி விடுமுறைக்காக வெள்ளிக்கிழமை அவரது காதலியுடன் பனாமாவிற்கு பயணமாகியுள்ளார். விமானம் புறப்பட்டு 45-நிமிடங்களில் திரும்பிவிட்டது. மிகவும் ஆக்ரோசத்துடன் கத்தியதாக சக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். விமானத்திற்கு அல்லது பயணிகளிற்கு என்ன நடந்தாலும் தனக்கு கவலை இல்லை என கூறியதாகவும் அதுமட்டுமின்றி தனக்கு கனடாவை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். விமானம் தரையிறங்கியதும் பீல் பிராந்திய ஸ்வாட் அணியினர் விமானத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™