Tamil News | Online Tamil News |
- பா.ஜ., எம்.பி.,க்களின் செயல்பாடு கண்காணிப்பு: 'ரிப்போர்ட் கார்டு' தயாரிக்க முடிவு
- மரபணு மாற்று பயிர் ஆய்வுக்கு அஞ்சும் அமெரிக்கா, ஐரோப்பா: ஆபத்தை உணராமல் அவசரம் காட்டும் இந்தியா
- நீல புரட்சியை உருவாக்க வேண்டும்: மோடி
- மீனவர்களை விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதா
- நதிகள் இணைப்பு திட்டத்திற்கு சிறப்பு முன்னுரிமை: கருணாநிதி
- லிபியா நாட்டில் இந்திய நர்ஸ்கள் 800 பேர் தவிப்பு: மீட்டு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு
- பிரதமர் மோடியின் கொள்கை பாராட்டுக்குரியது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி பாராட்டு
- எட்டு மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிப்பு அபாயம்: கண்டுகொள்ளாத வேளாண் அதிகாரிகள்
- விவசாயிகளை கவர 'அம்மா விதைகள்': அரசின் அடுத்த திட்டத்திற்கு ஏற்பாடு
| பா.ஜ., எம்.பி.,க்களின் செயல்பாடு கண்காணிப்பு: 'ரிப்போர்ட் கார்டு' தயாரிக்க முடிவு Posted: புதுடில்லி: பா.ஜ., எம்.பி.,க்களின் செயல்பாடு பார்லிமென்ட்டில் எப்படி உள்ளது என்பதை கண்காணித்து, 'ரிப்போர்ட் கார்டு' தயாரிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சிறப்பாக செயல்படும் எம்.பி.,க்களுக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வழங்க கட்சி திட்டமிட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில், 'காமன்வெல்த்' விளையாட்டு போட்டி ஏற்பாடுகள், '2ஜி' ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடுகளில், 'மெகா' ஊழல்கள் நடந்தன. இந்த ஊழல்களே, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக ... |
| மரபணு மாற்று பயிர் ஆய்வுக்கு அஞ்சும் அமெரிக்கா, ஐரோப்பா: ஆபத்தை உணராமல் அவசரம் காட்டும் இந்தியா Posted: சென்னை: மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்துவதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், 'அடக்கி' வாசிக்கும் நிலையில், இந்தியாவில் அதற்கு அவசரம் காட்டுவது ஏன்?' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:கடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில், மரபணு மாற்று கோதுமை கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அதை, ஜப்பான் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவில் இருந்து அதிகளவில், கோதுமை இறக்குமதி செய்யும் ஜப்பான், அதற்கான தன் ஒப்பந்தத்தையும் ரத்து ... |
| நீல புரட்சியை உருவாக்க வேண்டும்: மோடி Posted: புதுடில்லி: ''விவசாயத் துறையை மேம்படுத்த, ஆராய்ச்சியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், விவசாயிகள் தங்களின் வருமானத்தை பெருக்குவதோடு, நாட்டிற்கும், உலகிற்கும் உணவு அளிக்க முடியும். அத்துடன் நீலப்புரட்சியையும் ஏற்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலான - ஐ.சி.ஏ.ஆர்.,யின், 86வது நிறுவன தின விழா, டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இயற்கை வளம் குறைந்து வருவது, காலநிலை மாற்றம் என, தற்போது, பல சவால்கள் உருவாகி உள்ளன. இந்த ... |
| மீனவர்களை விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதா Posted: சென்னை:'இலங்கை மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள, 93 மீனவர்களையும், 62 படகுகளையும், உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, ஐந்து இயந்திரப் படகு மற்றும் இரண்டு வல்லத்தில், மீன் பிடிக்க சென்ற, 50 மீனவர்களை, நேற்று, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து, காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஏற்கனவே, உங்களுக்கு, கடந்த, 22ம் தேதி எழுதிய கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட, 43 மீனவர்களையும், ஒன்பது ... |
| நதிகள் இணைப்பு திட்டத்திற்கு சிறப்பு முன்னுரிமை: கருணாநிதி Posted: சென்னை:''கேரள அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், இந்தியாவின் நன்மை கருதி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு சிறப்பு முன்னுரிமை கொடுத்து, விரைவில் நிறைவேற்ற வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான, அவரது அறிக்கை:ஐ.மு., கூட்டணி ஆட்சிக்கு முன், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.நதிகளை இணைக்க, மத்திய அரசு ஆர்வம் காட்டினாலும், கேரளா போன்ற சில மாநில அரசுகள், இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அவற்றைப் பொருட்படுத்தாமல், இந்தியா ... |
| லிபியா நாட்டில் இந்திய நர்ஸ்கள் 800 பேர் தவிப்பு: மீட்டு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு Posted: புதுடில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்த, ஈராக் நகரங்களில் சிக்கித் தவித்த இந்திய நர்ஸ்கள், சில நாட்களுக்கு முன், பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலும், நூற்றுக்கணக்கான இந்திய நர்ஸ்கள் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்க, இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆப்ரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் உள்ளது, லிபியா நாடு. இதன் அதிபராக, 40 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த கடாபி, 2011ல், இங்கு நிகழ்ந்த உள்நாட்டு கலவரத்தில் கொல்லப்பட்டார். அதன் பிறகு, அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, ... |
| பிரதமர் மோடியின் கொள்கை பாராட்டுக்குரியது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி பாராட்டு Posted: வாஷிங்டன்:''இந்திய பிரதமர், நரேந்திர மோடியின், 'அனைவரையும் இணைத்துச் சென்று, அனைவருக்கும் முன்னேற்றத்தை வழங்குவது' என்ற கொள்கை பாராட்டுதற்குரியது; அது போல், அவரின் பதவியேற்பு விழாவுக்கு, பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்தது மிகச் சிறந்த அணுகுமுறை,'' என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜான் கெர்ரி கூறினார்.ஒபாமாவுடன் சந்திப்பு:வரும் செப்டம்பரில், அமெரிக்கா செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தையின் குறிப்புகளை ... |
| எட்டு மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிப்பு அபாயம்: கண்டுகொள்ளாத வேளாண் அதிகாரிகள் Posted: தமிழகத்தில், எட்டு மாவட்டங்களில், பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குறுவை நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இது குறித்து, அதிகாரிகளிடம் புகார் செய்ய அனுமதி கிடைக்காததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, ஒரு லட்சம் ஏக்கரில், குறுவை சாகுபடி நடக்கிறது. இதற்காக, 33 கோடி ரூபாய் செலவில், குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை, அரசு செயல்படுத்தியுள்ளது. ஆனால், திருவள்ளூர், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, திருநெல்வேலி, ... |
| விவசாயிகளை கவர 'அம்மா விதைகள்': அரசின் அடுத்த திட்டத்திற்கு ஏற்பாடு Posted: தமிழக விவசாயிகளை கவர, 'அம்மா விதைகள்' என்ற திட்டத்தை தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்த, தீவிர ஏற்பாடு நடந்து வருகிறது.அரசு விதை பண்ணைகள் மூலம் தயாரிக்கப்படும், விதைகள், தோட்டக்கலைத் துறை மூலம், விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மட்டுமின்றி, 100 சதவீத மானியத்திலும், இத்திட்டம் செயல்படுத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.இத்திட்டம், விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றால், வேளாண் துறைக்கும் விரிவுப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.நாளை, சட்டசபையில், வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. அப்போது, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 30,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |