Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கல்யாணப்பத்திரிகையில் மணப்பெண்ணுக்கு தெரிந்தவர்கள் லிஸ்ட்...!

Posted: 29 Jul 2014 01:01 PM PDT

இந்திய பொருளாதாரமோ எந்தன் வளமாதாரமோ

Posted: 29 Jul 2014 11:31 AM PDT



இந்திய பொருளாதாரமோ எந்தன் வளமாதாரமோ ?

பெருகி வரும் மழை
குறுகிப் போகும் சாலை
பெருகி வரும் செலவையும்
குறுகி வரும் வருவாயை
கூறாமல் கூறுகிறதோ ?
ஆம் ஆம் என்கிறதோ ,
மரக்கிளைகள் .

ரமணியன்

ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 29 Jul 2014 11:29 AM PDT

*
கொஞ்சம் சிரி… சிரியேன்…!!
*
நேற்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்?
இன்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
நாளை எங்கே
போவேனென்று
கேட்கமாட்டாய்.
எதையும்
கேட்காமலிருக்கும்
உன் மௌனம்
என்னை இம்சிக்கிறது.
எங்கே, கொஞ்சம்
கோபமாகவோ,
சிரிச்சோ தான்
பேசேன்…கேளேன்…?.
*

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 29 Jul 2014 11:28 AM PDT

மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 29 Jul 2014 10:09 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பறவைகளில் சிறியது பரவசம் தருவது குருவி ! சிலப்பதிகாரம் நற்றிணை குறுந்தொகை இலக்கியங்களில் இடம் பிடித்த குருவி ! தன்னுயிருக்கு மேலாக தன் குஞ்சுகள் உயிர் காக்கும் குருவி ! இரை ஊட்டி காக்கும் இனிய குஞ்சுகளை குருவி ! மிக இனிமை எழுப்பும் ஒலி குருவி ! கூடு கட்டி வாழும் கூடி வாழும் குருவி ! சிட்டுகளை நினைவூட்டும் குருவி ! குழந்தைகள் பார்த்தால் குதூகலம் பெறும் குருவி ! பறப்பது அழகு நடப்பது அழகு குருவி ! மெல்லிய ...

தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தம்பதியின் புதிய இயக்கம்

Posted: 29 Jul 2014 10:04 AM PDT

- இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத் தில் தெரு நாய்களின் தொல்லை கடந்த சில காலமாகவே பெருந் தொல்லையாக இருந்தது. நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி தெரு நாய் ஆபத் தைக் குறைக்க அந்த மாநிலத்தில் தன்பாத் நகரில் எல்சி ரோடு என்ற பிரபல பகுதியில் வசிக்கும் அனுதோஷ், ஷிப்ரா தம்பதியர், புதிய வழி ஒன்றைக் கண்டு அதை அமலாக்கி வருகிறார்கள். - தெருவில் திரியும் நாய்களுக்கு உணவு அளிப்பதைப்போல் சாப் பாட்டுடன் சேர்த்து கருத்தடை மருந்தையும் அவர்கள் நாய் களுக்குக் கொடுக்கிறார்கள். அந்தப் பிராணிகள் அவற் றைத் தின்கின்றன. - இதனால் ...

இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர்…(பொது அறிவு தகவல்)

Posted: 29 Jul 2014 10:02 AM PDT

- * தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா. * தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா. * தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது. - தொகுத்தவர்: தி.தமிழரசன், கலவை. (சிறுவர் மணி) ——————————————- பால் மனிதர்! - * இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர் அமுல் நிறுவனத் தலைவர் குரியன். நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்க இவர் நடவடிக்கை எடுத்தார். - ———————————————————— - * ...

பெண் பேய் கற்பழிப்பதாக பேராசிரியர் புகார்

Posted: 29 Jul 2014 09:53 AM PDT

ஒரு பெண் பேய், இரவு நேரத்தில் தம்மை விரட்டி விரட்டி கற்பழிப்பதாக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள புகார் குறித்து இந்திய மாநிலம் ஒன்றின் போலிஸ் தலைமையகம் விசாரணை தொடங்கி இருக்கிறது. - சந்திர பிரகாஷ் திரிவேதி, 66, என்ற பேராசிரியர் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் இந்தூர் நகரில் வசிக்கிறார். அவர் வேத அறிவியல் பற்றி 10 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். - "இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். காற்று அழுத்த காந்த அலை பயிற்சி சிகிச்சை செய்வதைப் போல் அந்தப் பெண் பேய் இரவில் வந்து ...

‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர்

Posted: 29 Jul 2014 09:42 AM PDT

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய கணினி நிறுவனமான 'ஆப்பிள்' நிறுவனத்தில் மொத்தம் 12,000 பொறியியலாளர்கள், வடி வமைப்பு நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், விற்பனையாளர் கள் பணிபுரிகின்றனர். - இந்நிலையில் அங்கு பணிபுரியும் பொறியியலாளர்களில் மூவரில் ஒருவர் இந்தியர் ஆவார். இந்தத் தகவலை 'எச்எஃப்எஸ்' என்ற ஆய்வு நிறுவனம் வெளி யிட்டுள்ளது. கடந்த 2001–2010 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் 1,750 'எச்–1பி' விசா மூலம் வெளிநாட்டு பொறியியலாளர்களை பணியில் அமர்த்தி இருந்தது. 2011–2013ஆம் ஆண்டுகளில் அது ...

நாட்டு நடப்பு - கார்ட்டூன்

Posted: 29 Jul 2014 09:35 AM PDT


-

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 29 Jul 2014 09:18 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம்

Posted: 29 Jul 2014 09:02 AM PDT

உணவுப் பொருளைப் பாது காத்து வைக்க பெரும்பாலோர் குளிர்சாதனப் பெட்டி அல்லது ஐஸ் பெட்டி ஆகி யவற்றை நாடுவது வழக்கம். ஆனால், மின்சாரத்தின் உதவி இன்றி இயங்கக் கூடிய உணவுப் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உயர்நிலை 3ல் பயிலும் ஐந்து மாணவர் கள் அடங்கிய குழு ஒன்று தயாரித்துள்ளது. சோலார் ட்ரையர் என்னும் இச்சாதனத்தை 'ஸ்டைரோஃ போம்' பெட்டி உதவியுடன் அவர்கள் வடிவமைத்துள் ளனர். கடந்த மாதம் நடந்த அறிவியல் முகாமில் மாண வர்களால் உருவாக்கப்பட்ட பத்துப் பொருட்களில் இது வும் ஒன்று. 'த ஷெல் சிங்கப்பூர் இளையர் அறிவியல் திரு ...

வள்ளல் ..

Posted: 29 Jul 2014 08:58 AM PDT


-

ஊர் முழுவதற்குமாக
ஓடிய ஆறு
வற்றி வறண்ட போதும்
இரவும் பகலும் லாரி லாரியாக
மணல் சுரண்ட
இடம் தருகிறது
கர்ண பரம்பரை!
-
---------------
>நா.கிருஷ்ணமூர்த்தி (குங்குமம்)

ஆகையால் ஆண்மக்களே .........

Posted: 29 Jul 2014 08:30 AM PDT

- புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்.  அவர்  தனது 16 வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன்.  பிறகு அவர் தனது 29வது வயதில் மனைவி மக்களைப் பிரிந்து துறவறம் பூண்டார்   என்பது அனைவரும் அறிந்ததே. - ஆனால் நிறையப் பேருக்குத் தெரியாத விஷயம் ஒ ன்று உள்ளது.  சித்தார்த்தர் புத்தர் ஆனா பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியையும் மகனையும் சந்தித்தார்.  அப்போது அவர் மனைவி யசோதரை புத்தரைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டாள் : - 1. ...

கரைதல்...

Posted: 29 Jul 2014 08:26 AM PDT


-

-
வண்ணங்களாய்
வழிந்தோடுகிறது
தெரு ஓவியனின் பசி,
எதிர்பாராது
பெய்த மழையில்!

-

-------------------
>கீர்த்தி (குங்குமம்)

குப்பைத் தொட்டி..

Posted: 29 Jul 2014 07:56 AM PDT

- - எல்லாம் கிடக்கும் நேற்று பூத்த மலர்கள் துருவிய தேங்காய் மூடி ஒற்றைச் செருப்பு கிழிந்த உடைகள் எரிந்து போன டயர் எரியாது போன டியூப் லைட் சில சமயம் செத்த எலி ஒரு சமயம் ஒரு சிசு எல்லாம் பார்த்தும் பதறாத மனசு... நூல் அஞ்சலில் வந்த அவளின் திருமணப் பத்திரிகை கிழிபட்டுக் கிடக்கையில் மாத்திரம் தூசி விழுந்த கண்ணாய் கலங்கி வழிய விடுகிறது கண்ணீரை! - ------------------------ ஸ்ரீநிவாஸ் பிரபு (குங்குமம்) -

உயிர்ப்பு..

Posted: 29 Jul 2014 07:54 AM PDT


-

செல்போன் கோபுரம்
துரித உணவகம்
ஷாப்பிங் மால்
கார் விற்பனையகம்...
நகரத்தின் இத்தனை
குறியீடுகளின் நடுவே
இன்னும் உயிர்ப்புடன்தான்
இருக்கிறது
கிராமத்துக்கான அடையாளம்
சும்மாடு கட்டிய தலையில்
விறகு சுமந்து செல்லும்
அந்த மூதாட்டியால்...!
-
------------------
>பாலு விஜயன் (குங்குமம்)

இன்டர்வியூ - 1 - சிறுகதை

Posted: 29 Jul 2014 07:44 AM PDT


-
நன்றி: குங்குமம்

எது கவிதை ! நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Posted: 29 Jul 2014 03:35 AM PDT

எது கவிதை ! நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வெளியீடு : மதுரைத் தென்றல், 10ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-3. அலைபேசி : 98421 81462 நூலாசிரியர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர், மதுரைத் தென்றல் என்ற இதழின் ஆசிரியர், மதுரையில் தொடர்ந்து கவியரங்கம் நடத்தி வருபவர். திரைப்படப் பாடல் ஆசிரியர். நெல்லை ஜெயந்தா அவர்கள், இவர் தலைமையில் மதுரையில் கவிதை பாடி இருக்கிறார். ...

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

Posted: 29 Jul 2014 03:34 AM PDT

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150. அருமை நண்பர் இரா. இரவியின் புத்தகம் போற்றுதும் நூல், வாசிப்பவர்க்கு ஒரு இனிய அனுபவமாகும். புத்தகம் போற்றுதும் என்பதும், கடவுளை வணங்குங்கள் என்று சொல்வதும் என்வரையில் ஒன்றுக்கொன்று இணையானதாகும். கடவுளுக்கு நிகரான புத்தகங்களைப் ...

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை

Posted: 29 Jul 2014 03:34 AM PDT

'புத்தகம் போற்றுதும்' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை. செல்.: 98424 36640 தொடர்பு முகவரி : எஸ்2, வரதாடீலக், 'வசுதாரா', ஆண்டாள்புரம், மதுரை-3. வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150. அன்பு நிறைந்த கவிஞர்க்கு, நல்ல நூல்களை விரும்பிப் பயில்வதோடு நிற்காமல், அவற்றை நாடறியச் செய்யும் தங்களின் நன்முயற்சிக்கு என் வணக்கம். 'புத்தகம் ...

வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Posted: 29 Jul 2014 03:33 AM PDT

வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வெளியீடு : புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-26. அலைபேசி : 98410 42949, விலை : ரூ. 150. பக்கம் : 208 வரலாறு படைத்த வைர மங்கையர் தொகுதி 1 என்ற நூலின் மூலம் வரலாறு படைத்த வைர மங்கை பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களின் தொகுதி 2 என்ற இந்த நூலும் பெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாக வந்துள்ளது. கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் மனைவிக்கு ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 29 Jul 2014 03:32 AM PDT

27.7.2014 அன்று சென்னையில் நடந்த மின்மினி இதழ் 5 ஆம் ஆண்டு விழாவில்  கவிப்பேரரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பறவைகள் பற்றி இயற்கை பற்றி ஹைக்கூ வடியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள் .அதன் விளைவு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி ! வண்ணம் கருப்பு எண்ணம் இனிப்பு காகம் !   அழகு கருப்பு அனைவரின் விருப்பு காகம் !   கூர்மை அலகு கூர்ந்து பார்த்தால் அழகு காகம் !   . கரைந்து உண்ணும் இரக்க உள்ளம் காகம் !   கூடி வாழும் கோடி இனம் காகம் !   ஒன்றுக்கு இடர் எனில் அனைத்தும் கூடி ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (276)

Posted: 29 Jul 2014 03:24 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

காபிரியேல் கார்ஸியா மார்க்வெஸ்

Posted: 29 Jul 2014 02:34 AM PDT

'நூறாண்டு காலத் தனிமை' நாவலின் மூலம் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக வலம்வரத் தொடங்கிய காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் மெக்ஸிகோ சிட்டியில் உள்ள தனது இல்லத்தில் வியாழன் அன்று காலமானார். அவருக்கு வயது 87. 1982-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மார்க்வெஸின் எழுத்துகள் அவரது கற்பனையில் உருவாகிய லத்தீன் அமெரிக்க நிலப்பரப்பை விவரித்தாலும் உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டவை அவை. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. டிக்கன்ஸ், டால்ஸ்டாய் ...

மோடியுடன் இணைந்து பணியாற்ற ஒபாமா ஆர்வம்'

Posted: 29 Jul 2014 02:26 AM PDT

[size=12]பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வத்துடன் இருப்பதாக அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் மாளிகைக்கு வருமாறு அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மோடியுடன் இணைந்து பணியாற்ற ஒபாமா மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான ...

தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 29 Jul 2014 02:20 AM PDT

[size=13]காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழர் சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று  தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அவர் சதீஸ்க்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.[/size] வேலூரைச் சேர்ந்த சதீஷ் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Posted: 29 Jul 2014 02:07 AM PDT

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள் 1. அருண்மொழித் தேவ வளநாடு 2. உய்யக்கொண்டான் வளநாடு 3. இராசராச வளநாடு 4. நித்திவிநோத வளநாடு 5. இராசேந்திர சிங்க வளநாடு 6. இராசாசிரய வளநாடு 7. கேரளாந்தக வளநாடு 8. சத்திரிய சிகாமணி வளநாடு 9. பாண்டிகுலாசனி வளநாடு உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு: இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் ...

அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம்: வட கொரியா எச்சரிக்கை

Posted: 29 Jul 2014 02:00 AM PDT

"கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் அமெரிக்கா மீது அணுகுண்டுத் தாக்குதல் தொடுப்போம்' என வட கொரிய ராணுவத்தின் அரசியல் பிரிவு இயக்குனர் ஹவாங் பியோங்-சோ எச்சரித்துள்ளார். வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவப் பேரணியில் அவர் பேசுகையில், ""தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய போர் ஒத்திகை நிகழ்ச்சிகள், இப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வட கொரியாவின்  இறையாண்மைக்கு அமெரிக்கா அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், வெள்ளை மாளிகை மீதும், அந்நாட்டின் ...

நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்

Posted: 29 Jul 2014 01:34 AM PDT

இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் நிலம், காடு, கடல் ஆகியவையாகும். இதில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையரைக்குள் இருந்து அடுத்தவற்றுக்குள் நுழையாமல் இருப்பதே நல்ல பாதுகாப்பாகும். கடல் நாட்டுக்குள் வருவது ஆபத்து. அதைத்தான் சுனாமி பாதிப்பு உலகுக்கு காட்டியது. இதுபோல, மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும். எப்படி நாடு மனிதர்களின் வாழ்விடமோ, அதுபோல காடுகள்தான் வன விலங்குகளின் வாழ்விடமாகும். 33 சதவீதம் வனப்பரப்பு இருந்தால்தான், நாட்டில் மழை வளம் போதுமான அளவில் இருக்கும் என்பதோடு, வனவிலங்குகளும் ...

ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு ! முனைவர். பா. சிங்காரவேலன்

Posted: 29 Jul 2014 12:02 AM PDT

ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு ! முனைவர். பா. சிங்காரவேலன் தமிழ் உதவிப் பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி, மேலூர். 98650 55421 ஜென் குருக்கள் தமது ஆன்மீகத்தின் கணநேர அனுபவங்களைச் சிக்கெனப் பதிவு செய்ய வடித்துக் கொண்ட வடிவமே ஹைக்கூ. கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவமே ஹைக்கூ என்று பாரதியார் குறிப்பிடுகிறார். மின்னல் கவிதைகள், மின்மினிக் கவிதைகள், நறுக்குகள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஹைக்கூ கவிதையைக் கவிஞர் இரவி, அளவு சிறியது ...

தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Posted: 28 Jul 2014 11:59 PM PDT

தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை 17. விலை : ரூ.200, பக்கம் 304, தொலைபேசி : 044 2432810. ஒரு எழுத்தாளர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த எளிமையின் சின்னம், நல்லதை போற்றிய அன்னம் இலக்கிய ஞானி தி.க.சி. என்ற மாமனிதர் பற்றிய ஆவணமாக நூல் வந்துள்ளது. நூலாசிரியர்களான தமிழ்த்தேனீ இரா. மோகன், புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை மு. தருமராசன் ...

'கயா' யாத்திரை !

Posted: 28 Jul 2014 09:49 PM PDT

'கயா' யாத்திரை ! தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்      வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ ...

கவிதையில் யாப்பு

Posted: 28 Jul 2014 08:56 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

பாமரர் தேவாரம்

Posted: 28 Jul 2014 08:43 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 28 Jul 2014 08:25 PM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே ...

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Posted: 28 Jul 2014 08:22 PM PDT

- விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்கள் - பெங்காலி வருடப்பிறப்பு நிகழ்ச்சியில்... ------------------------------------------------------------------------------- தாகூரால் நிறுவப்பட்ட விஸ்வ பாரதி கல்விக்கூடம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்விப் பிரிவு - பாலபவனம்; உயர் கல்விப் பிரிவு - சிக் ஷா பவனம்; பண்டைய இந்திய மொழிகளை ஆராயும் பிரிவு - வித்யா பவனம்; கைத் தொழில், ஓவியம், சிற்பம் போன்றவை கற்பிக்கும் பிரிவு - கலா பவனம்; இசையும், நாட்டியமும் கற்பிக்கும் பிரிவு - சங்கீத ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™