Tamil News | Online Tamil News |
- 'எனது அரசு' என்ற புதிய இணையதளம் துவக்கம்: திட்டங்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்:புது முயற்சியில் இறங்கினார் பிரதமர் மோடி
- அட்டர்னி ஜெனரல் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்: எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தில் மோதல்
- பார்லிமென்டில் மத்திய அரசு அளித்த விளக்கத்தால் குழப்பம்: நான்கு அணைகள் யாருக்கு சொந்தம் என்பதில் சர்ச்சை
- வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி தர முயற்சி?
- 'மோடி விசா மறுப்பு முடிந்து போன கதை'
- மரபணு மாற்றப்பட்ட பயிரை அனுமதிக்க கூடாது மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
- ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம்: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்
- சட்டமன்றத்தில் பேச முடியாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்: ஸ்டாலின்
- சட்டசபைக்கு வராவிட்டாலும் விமர்சனத்துக்கு தப்பாத விஜயகாந்த்
| Posted: புதுடில்லி:அரசு நிர்வாகத்தில், பொதுமக்கள் பங்கு கொள்ளவும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான ஆலோசனைகளை அவர்களே நேரடியாக வழங்கவும், 'மைகவ்' (எனது அரசு) என்ற இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று, நேற்றுடன், 60 நாட்கள் முடிவடைந்தது. இதையொட்டி, அரசு நிர்வாகத்தில், பொதுமக்கள் பங்கேற்கவும், பல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், பொதுமக்களும் தங்களின் கருத்தை தெரிவிக்கவும், 'மைகவ்' என்ற, இணையதளம் நேற்று துவக்கப்பட்டது.வலை தளத்தை துவக்கி வைத்து, ... |
| அட்டர்னி ஜெனரல் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்: எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தில் மோதல் Posted: புதுடில்லி:'லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற, காங்கிரசுக்கு தகுதியில்லை' என, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கிதெரிவித்துள்ள கருத்துக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'தன் அரசியல் எஜமானர்களை திருப்திபடுத்தும் வகையில், அட்டர்னி ஜெனரல் செயல்படுகிறார்' என, காங்., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கான அந்தஸ்து, அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை.ஆனாலும், எப்படியாவது எதிர்க்கட்சித் தலைவர் ... |
| Posted: முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும், தமிழகத்துக்கு சொந்தமா அல்லது கேரளாவுக்கு சொந்தமா என்ற சர்ச்சை, பெரிய அளவில் எழுந்து, அடங்கியிருந்த சூழ்நிலையில், இது குறித்து பார்லிமென்டில், மத்திய அரசு அளித்துள்ள அதிகாரப்பூர்வமான விளக்கம், இந்த விவகாரத்தில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.கடும் எதிர்ப்பு:கடந்த மாதம், கேரள சட்டசபையில் பேசிய, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, "2009ம் ஆண்டு வரை, இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், ... |
| வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி தர முயற்சி? Posted: புதுடில்லி: 'ஏழை மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை, வர்த்தகத்தை எளிமைப்படுத்தும், டி.எப்.ஏ., ஒப்பந்தத்தை ஏற்கப் போவது இல்லை' என, இந்தியா அறிவித்துள்ளது, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாடுகள், இந்த விவகாரத்தில் இந்தியாவை தனிமைப்படுத்தவும் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சர்வதேச நாடுகளிடையே, விவசாய பொருள் தொடர்பான வர்த்தகத்தை எளிமையாக்குவது, விரைவுபடுத்துவது, வெளிப்படையாக்குவது போன்ற விஷயங்களுக்காக, வர்த்தக எளிமைப்படுத்துதல் ... |
| 'மோடி விசா மறுப்பு முடிந்து போன கதை' Posted: புதுடில்லி:''நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம், முடிந்து போன கதை. கடந்த கால விஷயங்களை, இப்போது கிளற வேண்டிய அவசியமில்லை,'' என, அமெரிக்க வெளியுறவு உதவி அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறினார்.தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான, அமெரிக்க வெளியுறவு உதவி அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:குஜராத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அது முடிந்து போன கதை. கடந்த காலத்தை பற்றி, தற்போது கிளற வேண்டிய அவசியமில்லை.தனி நபருக்கு விசா வழங்கும்போது, அவர் தொடர்பான விஷயங்கள், வழக்குகள் ஆகியவை ... |
| மரபணு மாற்றப்பட்ட பயிரை அனுமதிக்க கூடாது மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை Posted: சென்னை: 'மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சோதனை சாகுபடிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.சோதனை முறையில்: இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, சோதனை முறையில் பயிரிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் மரபணு பொறியியலுக்கான, அங்கீகாரக் குழுவின் பட்டியலில், அரிசி, கடுகு, கொண்டைக் கடலை உள்ளிட்ட, 15 பயிர்களின் பரிசோதனை இடம் பெற்றுள்ளது.மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தொடர்ந்து உட்கொண்டால், பல நோய்கள்ஏற்படும் என, விஞ்ஞானிகள் ஏற்கனவே ... |
| ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம்: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் Posted: சென்னை:தமிழகத்தில் இருந்து, அதிகம் பேர், ஹஜ் புனித பயணம் செல்ல, இட ஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, தமிழக ஹஜ் கமிட்டிக்கு, இந்த ஆண்டு, 13,159 விண்ணப்பங்கள் வந்துள்ளன.ஆனால், மும்பையில் உள்ள, இந்திய ஹஜ் கமிட்டி, முஸ்லிம் மக்கள் தொகை அடிப்படையில், தமிழகத்திற்கு, 2,672 இடங்களை மட்டும் ஒதுக்கியுள்ளது.இந்த ஆண்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒதுக்கப்பட்ட 2,672 இடங்களில் இருந்து, சிறப்பு பிரிவிற்கு, 1,180 இடங்கள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு ... |
| சட்டமன்றத்தில் பேச முடியாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்: ஸ்டாலின் Posted: சென்னை:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் நேற்று, 2,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினருக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு ஏற்பாட்டின்படி, முஸ்லிம் குடும்பத்தினருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புரசைவாக்கத்தில், நேற்று நடந்தது.விழாவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்று, அழகு கலை பயிற்சி முடித்த, 10 பேருக்கு, சான்றிதழுடன் உதவிப் பொருட்கள்; தையல் பயிற்சி முடித்த, எட்டு பேருக்கு சான்றிதழுடன் தையல் இயந்திரம்; ... |
| சட்டசபைக்கு வராவிட்டாலும் விமர்சனத்துக்கு தப்பாத விஜயகாந்த் Posted: தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த், சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் இடையே, கூட்டணி தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.சஸ்பெண்ட்:அப்போது, எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்த கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதாக புகார் எழுந்தது. சபையில் அநாகரிகமாக நடந்துக்கொண்டதாக கூறி, 10 நாட்களுக்கு, விஜயகாந்த், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இப்பிரச்னைக்கு பின், அ.தி.மு.க., -- தே.மு.தி.க., இடையே மோதல் நடந்து வருகிறது.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் எட்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 27,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |