Tamil News | Online Tamil News |
- பெரியாறு அணைக்கு மின்சாரம்: வனத்தில் கேபிள் பதிக்க அனுமதி: 14 ஆண்டு கால இருளுக்கு விடிவு
- காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற தகுதியில்லை: அட்டர்னி ஜெனரல் கருத்து
- அணைகளில் உயரும் நீர்மட்டம்: கனமழையால் வால்பாறையில் மண் சரிவு : நிறைந்துள்ளது குந்தா அணை; தடையில்லாமல் மின் உற்பத்தி
- விவசாயிகள் வெறுப்பை தேட வேண்டாம்!மத்திய அரசுக்கு கருணாநிதி யோசனை
- ரூ.2,325 கோடியில் சாலை மேம்பாடு, பாலங்கள் முதல்வர் ஜெ., அறிவிப்பு
- நான் என்றும் இந்திய பிரஜையே சானியா கண்ணீர் பேட்டி
- ஆதார் திட்டத்தை பா.ஜ., ஆதரிப்பது ஏன்?
- காங்., அருகே அமர மறுக்கும் கட்சிகள்: சபாநாயகர் சுமித்ராவுக்கு நெருக்கடி
- சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம் செய்ய மத்திய அரசு உறுதி: பார்லிமென்டில் அனைத்து கட்சியினரும் காரசார பேச்சு
- அனல் மின் நிலையங்களில் கோளாறு அதிகரிப்பு: காற்றாலை கைகொடுப்பதால் சமாளிப்பு
| பெரியாறு அணைக்கு மின்சாரம்: வனத்தில் கேபிள் பதிக்க அனுமதி: 14 ஆண்டு கால இருளுக்கு விடிவு Posted: கூடலூர்:பெரியாறு அணைக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கு வனப்பகுதிக்குள் மின் கேபிள் பதிக்க அனுமதி கிடைத்துள்ளது. 14 ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த பெரியாறு அணை இதன்மூலம் பிரகாசம் அடையும்.பெரியாறு அணை கட்டப்பட்டதில் இருந்து, அங்கு மின்சார வசதி இருந்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த பெரியாறு அணைக்கு 5 கி.மீ., தூரத்தில் உள்ள வல்லக்கடவில் இருந்து வனப்பகுதி வழியாக மின் கம்பிகள் அமைத்து மின் சப்ளை செய்யப்பட்டு வந்தது. மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, ஆய்வாளர் குடியிருப்பு உள்ளிட்டவைகளுக்கு மின்சார வசதி அவசியமாக இருந்தது. மேலும், அணையை ... |
| காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற தகுதியில்லை: அட்டர்னி ஜெனரல் கருத்து Posted: புதுடில்லி:லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற, காங்கிரசுக்கு தகுதியில்லை' என, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகி தெரிவித்துள்ளார்.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற வேண்டும் எனில், ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம், 10 சதவீத எம்.பி.,க்கள், அதாவது, 55 எம்.பி.,க்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய லோக்சபாவில், காங்கிரசுக்கு, 44 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும், தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என, காங்கிரஸ் கோரி வந்தது. அதனால், இது தொடர்பாக, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகியின் கருத்தை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டிருந்தார். ... |
| Posted: வால்பாறை:வால்பாறையில் விடிய, விடிய பெய்த கன மழையினால், வெள்ளமலை எஸ்டேட் செல்லும் ரோட்டில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக, தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கன மழையினால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடிய, விடிய பெய்த கனமழையினால், வால்பாறை காஞ்சமலை அடுத்துள்ள வெள்ளமலை எஸ்டேட் செல்லும் ரோட்டில், ... |
| விவசாயிகள் வெறுப்பை தேட வேண்டாம்!மத்திய அரசுக்கு கருணாநிதி யோசனை Posted: சென்னை: விவசாயிகளின் வெறுப்பை, மத்திய அரசு தேடிக் கொள்ள வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நெல் கொள்முதலுக்கு, மாநில அரசுகள் நீண்ட காலமாக, வழங்கி வரும் ஊக்கத் தொகையை, இனிமேல் வழங்க கூடாதென்றும், அப்படி ஊக்கத் தொகை வழங்கி, கொள்முதல் செய்தால், மானியம் வழங்கப்படாது என்றும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, அந்த உத்தரவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தி போராட்டத்தை துவக்கியுள்ளனர்.இந்த பிரச்னையில், மாநில அரசின் ... |
| ரூ.2,325 கோடியில் சாலை மேம்பாடு, பாலங்கள் முதல்வர் ஜெ., அறிவிப்பு Posted: சென்னை:''சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளின், தொழில், வேளாண்மை, விரைவான பயணம், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இதற்காக, 2,325 கோடி ரூபாய் செலவிடப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:*மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல் கப்பலூர் வரை, 27 கி.மீ., நீள மதுரை வட்ட சாலை, 200 கோடி ரூபாயில், நான்கு வழி சாலையாக அகலப்படுத்தப்படும்.*சேலம் மாநகர், ஐந்து சாலைகள் சந்திப்பில், 275 கோடி ரூபாயில், உயர்மட்ட பாலம் ... |
| நான் என்றும் இந்திய பிரஜையே சானியா கண்ணீர் பேட்டி Posted: புதுடில்லி:தெலுங்கானா மாநில விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கண்ணீர் மல்க பேசி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.சானியா, தெலுங்கானா மாநில விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., லட்சுமண், அவரை, 'பாகிஸ்தானின் மருமகள்' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், தன் மீது வெளிநாட்டவர் என்ற சாயம் பூசப்பட்டதற்கு, சானியா பதில் அளித்துள்ளார்.நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சானியா, உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் ... |
| ஆதார் திட்டத்தை பா.ஜ., ஆதரிப்பது ஏன்? Posted: பெங்களூரு: மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஆதார் திட்டத்தை ரத்து செய்வதாக, கொக்கரித்த பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஆதார் மந்திரத்தை ஜெபித்து வருகிறது. இதற்கு காரணம், நந்தன் நிலேகனி என, தகவல்கள் கூறுகின்றன.தன் தலைமையில் உதயமான ஆதார் திட்டம், உயிரிழக்கப் போவதை கவனித்த நந்தன் நிலேகனி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, ஆதார் திட்டத்தின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.அனுகூலம்:கடந்த 2009ல், ஆதார் திட்ட வாரிய தலைவர் பதவியை அலங்கரித்த, நந்தன் நிலேகனிக்கு, அப்போதைய ஐ.மு., கூட்டணி ... |
| காங்., அருகே அமர மறுக்கும் கட்சிகள்: சபாநாயகர் சுமித்ராவுக்கு நெருக்கடி Posted: புதுடில்லி:லோக்சபாவில், எதிர்க்கட்சி வரிசையில், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சேர்ந்த அமர, முக்கிய அரசியல் கட்சிகள் மறுப்பதால், இருக்கைகள் ஒதுக்குவதில், சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட கோர முடியாத நிலையில், அந்த கட்சி உள்ளது. லோக்சபாவின் மொத்த உறுப்பினர்களில், 10 சதவீதம் அளவுக்காவது, உறுப்பினர்களை வைத்துள்ள கட்சியால் மட்டுமே, எதிர்க்கட்சி அந்தஸ்தை கோர முடியும்.இதனால், ... |
| Posted: 'சிவில் சர்வீசஸ் தகுதி தேர்வு முறையை மாற்ற வேண்டும்; தேர்வுக்கான தேதியை வெளியிட்டு, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்' எனக் கோரி, காங்கிரஸ் உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளும், ராஜ்யசபாவில் நேற்று கடும் அமளியில் இறங்கின. இதனால், ராஜ்யசபா இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.இந்திய ஆட்சிப்பணிகள் என அழைக்கப்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நிறுவனம் நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 24ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வை கடந்த ஆண்டு எழுதிய ... |
| அனல் மின் நிலையங்களில் கோளாறு அதிகரிப்பு: காற்றாலை கைகொடுப்பதால் சமாளிப்பு Posted: தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமான, மின் நிலையங்கள் மற்றும் மத்திய அரசின் மின் நிலையங்களில், பழுது மற்றும் நிலக்கரி பற்றாக்குறை கோளாறு ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காற்றாலைகளில் இருந்து, அதிகளவு மின்சாரம் கிடைப்பதால், தமிழக அரசு, மின்பற்றாக்குறை பிரச்னையை சமாளித்து வருகிறது.தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னையில், 4,060 மெகாவாட், உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையங்கள் உள்ளன. ஒதுக்கீடு:மத்திய அரசுக்கு, தமிழகம் - என்.எல்.சி., கல்பாக்கம், வல்லூர்; ஆந்திரா - ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 26,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |