Tamil News | Online Tamil News |
- விரைவில் இந்தியா மீது போர்: அபுபக்கர் அறிவிப்பு
- 'இனி சென்னைக்கு வேலைக்கு வர மாட்டோம்': உறவுகளை இழந்த ஆந்திர தொழிலாளர்கள் விரக்தி
- ராஜ்யசபாவில் அரசுக்கு ஆதரவு: அமைச்சரிடம் கனிமொழி உறுதி
- இன்று போய் நாளை வாங்க...!மலிவு விலை 'அம்மா மருந்தகம்' நிலை இதுதான்
- கச்சத்தீவு விவகாரம்: மோடிக்கு ஜெ., கடிதம்
- பார்லியில் மோடி உரையாற்ற அமெரிக்கா விருப்பம்
- சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை திட்டம்?
- வேளாண் தொழில் மேம்பட பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள்: மோடி அரசிடம் தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு
- பி.இ., சேர்க்கைக்கு கலந்தாய்வு 7ம் தேதி துவங்குகிறது : 1.68 லட்சம் பேருக்கும் தகவல் தெரிவிப்பு
- முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு அமைப்பு
| விரைவில் இந்தியா மீது போர்: அபுபக்கர் அறிவிப்பு Posted: பாக்தாத்:இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிரான போர் பிரகடனத்தை, தனி இஸ்லாமிய நாட்டின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார். இதனால், ஈராக்கில் சிக்கியுள்ள நுாற்றுக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 2002ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்களும், உள்நாட்டு கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த, சதாம் உசேனின் ஆதரவாளர்களான, 'இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா - ஐ.எஸ்.ஐ.எஸ்.,' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் ... |
| 'இனி சென்னைக்கு வேலைக்கு வர மாட்டோம்': உறவுகளை இழந்த ஆந்திர தொழிலாளர்கள் விரக்தி Posted: சென்னை : 'எங்கள் ஊரில் கிடைக்கும் குறைந்த கூலியே போதும்; எப்படியோ பிழைத்துக் கொள்கிறோம். இனிமேல், சென்னைக்கு வேலைக்கு வரமாட்டோம்' என, உறவுகளை இழந்த ஆந்திர தொழிலாளர்கள் விரக்தியுடன் பேசினர்.சென்னை, போரூர், மவுலிவாக்கத்தில், அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து நடந்தது. இதில், 47 பேர் வரை இறந்து, உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி, ஐந்தாவது நாளாக, நேற்றும் நீடித்தது.இறந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள், சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு வந்த வண்ணம் இருந்தன. உடல்களை அடையாளம் காண வந்த, ... |
| ராஜ்யசபாவில் அரசுக்கு ஆதரவு: அமைச்சரிடம் கனிமொழி உறுதி Posted: ''தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படாமல், நாட்டின் நலனுக்கான விஷயங்களில், தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து, தலைவர் கருணாநிதியிடம் சொல்லி, நல்ல முடிவெடுக்கப்படும்,'' என, ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம், தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பிரச்னையை தீர்க்க...:'மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் ஒதுக்கப்பட்டிருக்கும் சிறப்பு பெட்டியில், பொது பெட்டியைப் போல மற்றவர்களை பயணிக்க அனுமதிக்கின்றனர். அதனால், நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம்' ... |
| இன்று போய் நாளை வாங்க...!மலிவு விலை 'அம்மா மருந்தகம்' நிலை இதுதான் Posted: தமிழகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட, 'அம்மா மருந்தகங்களுக்கு' ஆர்வமுடன் செல்லும் மக்களுக்கு, தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை. 'மருந்தை வாங்கித் தருகிறோம்; இன்று போய் நாளை வாருங்கள்' என, ஊழியர்கள் சமாளித்து அனுப்புகின்றனர்.'மலிவு விலையில் மருந்து, மாத்திரைகள் வழங்கும் வகையில், தமிழகத்தில், 100 இடங்களில், அம்மா மருந்தகம் திறக்கப்படும்' என, அரசு அறிவித்தது.பல மாதங்களுக்குப் பின், கடந்த வாரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம், சென்னையை அடுத்த நீலாங்கரை (காஞ்சிபுரம் மாவட்டம்), கடலுார், ஈரோடு, மதுரை பேரையூர் கே.கே., நகர், சேலம், தாரமங்கலம், காரைக்குடி, விருதுநகர் ... |
| கச்சத்தீவு விவகாரம்: மோடிக்கு ஜெ., கடிதம் Posted: சென்னை: கச்சத்தீவு தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசை, முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதி யில் மீன் பிடிப்பதற்கு உரிமையில்லை என, இந்திய - இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை என்றுகோருவது ... |
| பார்லியில் மோடி உரையாற்ற அமெரிக்கா விருப்பம் Posted: வாஷிங்டன் : 'அமெரிக்கா வரும் இந்திய பிரதமர், நரேந்திர மோடியை, அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றச் செய்ய வேண்டும்' என, அமெரிக்க மூத்த எம்.பி.,க்கள் மூவர், அந்நாட்டின் பார்லிமென்ட் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.எம்.பி.,க்கள், பிராட் ஜெர்மான், டெட் போ, எனி ஆகியோர், 'இந்திய பிரதமர் மோடி, செப்டம்பரில் அமெரிக்க வர உள்ளார். அப்போது அவரை, அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.கடந்த வாரம், குடியரசு கட்சியின் மூத்த எம்.பி., ஜான் மக்கெய்ன் என்பவரும், இது போன்ற கோரிக்கையை ... |
| சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை திட்டம்? Posted: புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் உள்ளிட்ட, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துகளை வாங்க, கட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, காங்., தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக, பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்ரமணியசாமி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் பரிமாற்றம் செய்தபோது, வருமான வரி ... |
| வேளாண் தொழில் மேம்பட பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள்: மோடி அரசிடம் தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு Posted: வேளாண் துறையை மேம்படுத்த, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட்டில், சிறப்பு திட்டங்களை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.முந்தைய மத்திய அரசின் தவறான உரக்கொள்கை மற்றும் எரிபொருள் கொள்கையால், விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, புதிய அரசின் முதல் பட்ஜெட்டில், புதிய திட்டங்களை வெளியிட வேண்டும் என, விவசாயிகள் விரும்புகின்றனர்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் துறை மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு, கோரிக்கை மனுக்களை, தமிழக விவசாயிகளும், விவசாய சங்கங்களின் ... |
| பி.இ., சேர்க்கைக்கு கலந்தாய்வு 7ம் தேதி துவங்குகிறது : 1.68 லட்சம் பேருக்கும் தகவல் தெரிவிப்பு Posted: சென்னை: பத்து நாள் இடைவெளிக்குப் பின், வரும், 7ம் தேதி முதல், பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. இது குறித்த தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம், 1.68 லட்சம் மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, சிறப்பு பிரிவு கலந்தாய்வுக்குப் பின், பொதுப்பிரிவு கலந்தாய்வு, ஜூன், 27ம் தேதி துவங்க இருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு காரணமாக, கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது.தள்ளிவைப்பு: தமிழகத்தைச் சேர்ந்த, நான்கு புதிய கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிப்பது; ஏழு கல்லுாரிகளுக்கு, பல்வேறு ... |
| முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு அமைப்பு Posted: புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனாலும், நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு, கேரள அரசு, தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று பேர் அடங்கிய மேற்பார்வை குழுவை, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய நீர்வளத் துறை ஆணைய தலைமை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன், இந்த குழுவின் தலைவராக இருப்பார். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 03,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |