Tamil News | Online Tamil News |
- ஊடகங்களை தவிர்க்கும் பா.ஜ., தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்
- இமாச்சல பிரதேசத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலத்தில் உஷார் நிலை
- மின் கட்டணம், வீட்டு கடன் தவணை தொகையை கட்ட சொல்லும் அதிகாரிகள்: ரேஷன் கடைகளில் ஆய்வின் போது பல வழிகளில் பணம் வசூல்
- தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம்
- உ.பி.,யில் பலாத்காரம் சர்வ சாதாரணம்: முலாயம் சிங் 'கமென்ட்'டால் சர்ச்சை
- சட்டசபைக்குள் மட்டும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
- பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு
- 'பொறியியல் கல்லூரி ஆசிரியர் நியமன வயதை 35 ஆக நிர்ணயிப்பது ஏன்?'
- அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரும் சீனா
- பிரதமர் நிவாரண நிதி திட்டத்தில் அதிரடி மாற்றங்கள்: மோடி
- பெங்களூரு நகரில் பெற்றோர், பொதுமக்கள் குவிந்தனர்: 6 வயது மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு கண்டனம்:பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி பேரணி
| ஊடகங்களை தவிர்க்கும் பா.ஜ., தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் Posted: ஊடகங்களுக்கு பேட்டியளிப் பதையோ, அடிக்கடி செய்திகளில் அடிபடுவதையோ, மத்திய அமைச்சர்கள் உட்பட பா.ஜ., தலைவர்கள் தவிர்க்க துவங்கிஉள்ளனர்.கடந்த, 10 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியாக பா.ஜ., செயல்பட்டு வந்தது. இந்த சமயங்களில் எல்லாம், இந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும், ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்தபின், பா.ஜ.,விடம் தலைகீழ் மாற்றம் தென்படுகிறது. இந்த இரண்டு மாதங்களில், சில நாட்கள் மட்டுமே பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.ஊடகங்களிடம் வைத்திருந்த நெருக்கத்தை, பா.ஜ., குறைத்துக் கொண்டது குறித்து, டில்லி ... |
| இமாச்சல பிரதேசத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலத்தில் உஷார் நிலை Posted: உணா: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், ராவி நதியைக் கடந்து, இமாச்சல பிரதேசத்திற்குள், நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐ.ஜி., இமாச்சல பிரதேச போலீசாரை எச்சரித்துள்ளார்.இமாச்சல பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, வீர்பத்ர சிங் தலைமையிலான அரசு உள்ளது. அருகருகில் உள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநிலமும், இமாச்சல பிரதேசமும், 220 கி.மீ., எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டுள்ளன. 'இந்த மாநிலங்களில், பயங்கரவாதிகள் ஊடுருவக் கூடும்' என்று உளவு துறை சமீபத்தில் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கடுவாவில் ... |
| Posted: ரேஷன் கடைகளில், ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், தங்கள் வீட்டு மின் கட்டணம், வீட்டு கடன் தவணை தொகையை கட்ட சொல்லுதல் உள்ளிட்ட பல வகைகளில், கடை ஊழியர்களிடம் பணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 33,973 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றை, கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிப கழகம், மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தி வருகின்றன.மொத்த கடைகளில், 90 சதவீதம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படுகின்றன.பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில், பருப்பு வகைகள் குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன.ரசீது ... |
| தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம் Posted: தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தேசிய கல்வி திட்டமிடல் மேலாண்மை பல்கலைக்கழகம் (நியூபா), 2012 - 13ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் ... |
| உ.பி.,யில் பலாத்காரம் சர்வ சாதாரணம்: முலாயம் சிங் 'கமென்ட்'டால் சர்ச்சை Posted: புதுடில்லி: ''உ.பி., போன்ற, 21 கோடி மக்கள் வசிக்கும் மாநிலங்களில், பாலியல் பலாத்காரங்கள் நடப்பதெல்லாம், சர்வ சாதாரணம்,'' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபகாலமாக, பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களும், வன்முறைகளும் அதிகம் நடக்கின்றன. இது குறித்து, பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. இதனால், அதிருப்தி அடைந்த முதல்வர் அகிலேஷ் யாதவும், அவரின் தந்தையும், சமாஜ்வாதி தலைவருமான முலாயம் சிங் யாதவும், 'எல்லா ... |
| சட்டசபைக்குள் மட்டும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் Posted: சட்டசபைக்குள் மட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. தனித்து நிற்பதால், ஆளும் கட்சிக்கு கடும் எதிர்ப்பை உருவாக்க முடியவில்லை என்பதால், பிரச்னைகள் அடிப்படையில், ஒன்றிணைந்து செயல்படும் நோக்கில், இந்த கூட்டணி செயல்படுவதாக, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.ஆளும் கட்சிக்கு எதிராக, தே.மு.தி.க., - கம்யூனிஸ்டுகள் தற்போது வெளிப்படையாக செயல்படுவதால், சட்டசபை நடவடிக்கைகளில், அக்கட்சிகளை இணைத்து செயல்பட, தி.மு.க., முன் முயற்சிகளை எடுத்துள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் துவங்கி, 11 நாள்களில் மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்த ... |
| பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு Posted: சென்னை:பள்ளிகளில், சமஸ்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'அதற்கு பதில், அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பாரம்பரியம் அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்' என, ஆலோசனை தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர், ஆகஸ்ட், 7ம் தேதி முதல், 13ம் தேதி வரை, சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளதை அறிந்தேன்.அந்த கடிதத்தில், அனைத்து ... |
| 'பொறியியல் கல்லூரி ஆசிரியர் நியமன வயதை 35 ஆக நிர்ணயிப்பது ஏன்?' Posted: சென்னை: ''கலை கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 57 வயது என இருக்கும்போது, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும், 35 வயது என, நிர்ணயிப்பது ஏன்?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் வெளியிடும் அறிவிப்புகள் மீது, விவாதம் நடத்தக் கூடாது என, சொல்கின்றனர். அதே நேரத்தில், 110வது விதியின் கீழ், வெளியாகும் அறிவிப்புகளில், யார் மீதும் குற்றம் குறையும் சொல்லக் கூடாது என்றும் விதியில் உள்ளது. தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என, முதல்வர் சொல்கிறார். ... |
| அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரும் சீனா Posted: புதுடில்லி: சீனா, தன் ராணுவ வீரர்களுக்கு புதிதாக வழங்கியுள்ள வரைபடங்களில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தங்களுக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நம் நாட்டின், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை, சீனா, தங்களுக்கு சொந்தமானது என, அவ்வப்போது உரிமை கொண்டாடி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில், அருணாச்சல பிரதேசத்துக்குள், சீன விமானங்கள், ராணுவ வீரர்கள், அத்துமீறி நுழைவதும் உண்டு. இந்திய அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பர். இந்நிலையில், எல்லை ... |
| பிரதமர் நிவாரண நிதி திட்டத்தில் அதிரடி மாற்றங்கள்: மோடி Posted: புதுடில்லி: பிரதமர் நிவாரண நிதி திட்டத்தின் செயல்பாடுகளில் அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.இந்தியா - பாக்., பிரிவினையின்போது, பாகிஸ்தானிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்களின் நிவாரணத்துக்காக, பிரதமர் நிவாரண நிதி ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்டோர், மிகப் பெரிய விபத்துகளில் உயிரிழப்போர், காயம் அடைந்தோர், புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் அல்லது அவர்களின் குடும்பத்தினரின் ... |
| Posted: பெங்களூரு:பெங்களூரில் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. ஏராளமான பெற்றோர் வீதிகளில் திரண்டும், போலீஸ் நிலையம் முன் குவிந்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, போராட்டம் நடத்தியதால், பெங்களூரு நகரமே குலுங்கியது.பெங்களூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்த, 6 வயது சிறுமி, வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்ததால், வகுப்பு ஆசிரியை, அந்த மாணவிக்கு தண்டனை வழங்கினார். வகுப்பறையை விட்டு வெளியே சென்று, உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருக்கும்படி, அந்த மாணவியிடம், ஆசிரியை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 20,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |