Tamil News | Online Tamil News |
- அசோக் சவானுக்கு 20 நாள் கெடு: தேர்தல் கமிஷன் அதிரடி முடிவு
- உலககோப்பை கால்பந்து: ஜெர்மனி சாம்பியன்
- ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18 பேர்
- இலங்கை மீனவர்களுக்கு அபராதம்: அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
- காவல் துறையை நவீனப்படுத்த ரூ.10,000 கோடி தேவை: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்குமா மோடி அரசு
- கட்சி நிர்வாகத்தில் மாற்றம்: விரைவில் விஜயகாந்த் அதிரடி
- அமைச்சரின் 'ஓடுகாலி' விமர்சனம்: விளக்கம் தருகிறார் கருணாநிதி
- 43 நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தொடர்வதில் சிக்கல்
- சாதாரண மக்களுக்கு சுமை ஏற்படுத்த மாட்டோம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி
- காங்., தோல்விக்கான காரணத்தில் ராகுல் பெயர் தவிர்ப்பு: அந்தோணி குழு அறிக்கையில் பல பரிந்துரைகள்
- சீன அதிபருடன் நாளை மோடி பேச்சுவார்த்தை: இரு நாட்டு எல்லை பிரச்னைக்கு தீர்வு வருமா?
| அசோக் சவானுக்கு 20 நாள் கெடு: தேர்தல் கமிஷன் அதிரடி முடிவு Posted: புதுடில்லி : 'தேர்தல் செலவு கணக்கு காட்டத் தவறிய உங்களை, ஏன் எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கூடாது? இதுகுறித்து, 20 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிரித்விராஜ் சவான், முதல்வராக பதவி வகிக்கிறார். இவருக்கு முன், அசோக் சவான், முதல்வராக பதவி வகித்தார்.கடந்த, 2009ல், இவர், மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில், பொகார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அந்த ... |
| உலககோப்பை கால்பந்து: ஜெர்மனி சாம்பியன் Posted: ரியோ டி-ஜெனிரோ:பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலில் இன்று அர்ஜென்டினா அணியும் ஜெர்மனி அணியும் மோதியது.லத்தீன் அமெரிக்க மண்ணில் நடக்கும் இறுதி போட்டியில் விளையாடிய முதல் அணியாக ஐரோப்பா கண்டத்தின் அணியாக ஜெர்மனி விளங்கியது. அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மாரியா அணியில் இடம் பெறவில்லை.21வது நிமிடத்தில் அர்ஜென்டினாஅணியின் ஹூகாய்ன் கோல் அடித்தார். அது நடுவரால் வைடு என அறிவிக்கப்பட்டதால் வாய்ப்பு வீணானது. அடுத்தவாய்ப்பு 32 வது நிமிடத்தில் மீண்டும் ஹீகாய்ன் அடித்த பந்து கோல்கம்பம் அருகே பட்டு வெளியில் சென்று ... |
| ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18 பேர் Posted: புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் அரசுகளுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்தி வரும் சண்டையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருக்கும், பஷார் அல் - அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதில், அல் - குவைதா ஆதரவு பயங்கரவாதிகளும் சேர்ந்து கொண்டுள்ளதை அடுத்து, அங்கு பயங்கர ரத்தக்களறி நடைபெற்று வருகிறது.அது போல், ஈராக்கிலும், பிரதமர் அல் - மாலிகி ... |
| இலங்கை மீனவர்களுக்கு அபராதம்: அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள் Posted: ராமேஸ்வரம்: ஆந்திர மாநில சிறையில் இருந்த, இலங்கை மீனவர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, காக்கிநாடா கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மீன்வளம்: கடந்த மே 9ல், இலங்கை மாத்திரை, திரிகோணமலை கடற்கரையில் இருந்து, எட்டு படகுகளில், 41 சிங்கள மீனவர்கள், வங்க கடலில் மீன்பிடித்தனர். இவர்கள், மீன்வளம் நிறைந்த இந்திய எல்லையில் (ஆந்திரா மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில்) மீன்பிடித்தனர்.அங்கு ரோந்து சென்ற, இந்திய கடலோர காவல் படையினர், சிங்கள மீனவர்களை கைது செய்து, ஆந்திரா காக்கிநாடா சிறையில் ... |
| காவல் துறையை நவீனப்படுத்த ரூ.10,000 கோடி தேவை: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்குமா மோடி அரசு Posted: 'தமிழக காவல் துறையை நவீனப்படுத்த, அடுத்த சில ஆண்டுகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவை' என, மத்திய அரசிடம், முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே, கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை, முந்தைய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.காவல் துறையை நவீனப்படுத்த மத்திய பட்ஜெட்டில், 3,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள மோடி அரசு, தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்குமா என்பது, விரைவில் தெரிய வரும்.சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குதல் உள்ளிட்ட, மக்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறை, கால மாற்றம் மற்றும் தேவைக்கும் ஏற்ப, நவீனப்படுத்தப் பட ... |
| கட்சி நிர்வாகத்தில் மாற்றம்: விரைவில் விஜயகாந்த் அதிரடி Posted: தே.மு.தி.க., கட்சியின் நிர்வாக அமைப்புகளை மாற்றி அமைக்க, அதன் தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனாலும், இந்த மாற்றல் நடவடிக்கைகளை, தற்போதே செய்வதா அல்லது வெளிநாடு சென்று திரும்பிய பின் செய்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. ஆனாலும், தொண்டர்களிடம் உற்சாகம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக, தொண்டர் தரிசன நிகழ்ச்சிக்கு, விஜயகாந்த் ஏற்பாடு செய்தார். அதற்கு, 'உங்களுடன் நான்' என, பெயரிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தொண்டர்களுடன் ஆலோசனை ... |
| அமைச்சரின் 'ஓடுகாலி' விமர்சனம்: விளக்கம் தருகிறார் கருணாநிதி Posted: சென்னை: 'சி.எம்.டி.ஏ.,வுக்கு பொறுப்புள்ள அமைச்சர், அங்கு தவறு நடந்தது என, எப்படி ஒப்புக் கொள்வார். தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினர் 'ஓடுகாலிகளாக' இருந்ததால் தான், தற்போது மற்றவர்களை அவ்வாறு கூறுகின்றனர்' என, கருணாநிதி தெரிவித்துள்ளார்.எடுத்துச் சொல்லாதது ஏன்?இது தொடர்பாக, கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: மவுலிவாக்கம் கட்டட விபத்து பற்றி, ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ள நிலையில், சட்டசபையில் அதுபற்றி விவாதிக்க அனுமதியில்லை எனில், அமைச்சர் மட்டும் பேசலாம் என, விதி இருக்கிறதா?'சி.எம்.டி.ஏ., மீது எவ்வித தவறும் இல்லை' என, அமைச்சர், சபையில் ... |
| 43 நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தொடர்வதில் சிக்கல் Posted: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் துவக்கப்பட்ட, 'ஜவஹர்லால் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட'த்துக்கு (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,) மாற்றாக புதிய திட்டம் உருவாக்கப்பட உள்ளது. அதனால், தமிழகத்தில், மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும், 43 நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.நாட்டின் அனைத்து பெருநகரங்களிலும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., என்ற திட்டம், 2005ல், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் துவக்கப்பட்டது.நாடு முழுவதும், 67 நகரங்களில், 550 திட்டங்களுக்காக, 31 ஆயிரம் கோடி ... |
| சாதாரண மக்களுக்கு சுமை ஏற்படுத்த மாட்டோம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி Posted: புதுடில்லி: ''தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், ஒரு துவக்கம் தான். ஆனால், சாதாரண மக்களின் தலைகளில் சுமையை ஏற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஒருபோதும் ஈடுபடாது,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதே, பா.ஜ., அரசின் முதல் நோக்கம். அதன் துவக்கம் தான், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்; இது, முடிவு அல்ல.ஆனால், இதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென நினைத்தேனோ, அந்த அனைத்து மாற்றங்களையும் செய்து முடித்து ... |
| காங்., தோல்விக்கான காரணத்தில் ராகுல் பெயர் தவிர்ப்பு: அந்தோணி குழு அறிக்கையில் பல பரிந்துரைகள் Posted: புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சந்தித்த படுதோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் அந்தோணி தலைமையிலான குழு, அறிக்கை தயாரித்துள்ளதாகவும், அதில், கட்சியின் துணைத் தலைவர், ராகுல் தவிர்த்து, பிற காரணங்களை அக்குழு தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த, மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்து, பதவி விலகியது.மொத்தமுள்ள, 543 இடங்களில், தனித்து, 282 இடங்களிலும், கூட்டணியாக, 335 இடங்களிலும் வெற்றி ... |
| சீன அதிபருடன் நாளை மோடி பேச்சுவார்த்தை: இரு நாட்டு எல்லை பிரச்னைக்கு தீர்வு வருமா? Posted: புதுடில்லி: பிரேசில் நாட்டில் நாளை துவங்கும், இரண்டு நாள், 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி நேற்று புறப்பட்டு சென்றார். இந்த ஐந்து நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு மத்தியில், சீனா அதிபர், ஜி ஜின்பிங்கையும் அவர் சந்திக்க உள்ளார். இதன் மூலம், சீனாவுடன் நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளும், 2006ல், நியூயார்க் நகரில் கூடி, தங்களுக்கு என, தனியாக ஒரு அமைப்பு வேண்டும் என, முடிவு செய்தன. இந்த நான்கு நாடுகளின் முதல் ஆங்கில எழுத்தைச் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |