Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிபிஐ கூடுதல் இயக்குநர் நியமன விவகாரம்: தனக்கு பதவி தேவையில்லை என போலீஸ் அதிகாரி மனு தாக்கல்
- காலசக்ரா-2014: தலாய் லாமாவுக்கு ஒமர் அழைப்பு
- அமெரிக்காவில் மர்ம நபர் சுட்டதில் 3 பேர் சாவு
- உக்ரைன் குண்டு வீச்சில் ரஷியர் சாவு
- "சிதம்பரம் கோயிலில் புதிய மண்டபம்: நடைமுறைகளை பின்பற்றி கட்டுமானப் பணி'
- குடியரசுத் தலைவரான தொழிலாளர் தோழர்
- மோசமான சூழலில் சிறப்பான பட்ஜெட்!
- விசாரணையும், எதிர்பார்ப்பும்...
- ஆதரவற்ற குழந்தைகளுக்காக "வளர்ப்பு பெற்றோர்' திட்டம்: மேனகா காந்தி அறிவிப்பு
- சட்ட விரோத கட்டடங்கள்: புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்: வெங்கய்ய நாயுடு
- முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசைத் தூண்டிவிடவில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
- சென்னை கிளப்பில் வேட்டிக்குத் தடை: கருணாநிதி, ஞானதேசிகன் கண்டனம்
- கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு
- பொறியியல் கலந்தாய்வு: இதுவரை 24 ஆயிரம் பேருக்கு பி.இ. சேர்க்கை கடிதம்
- இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை: சென்னையில் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
- ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரம் இடங்கள் காலி
- சட்டப் பேரவையில் இன்று...
- காமராஜர் பிறந்தநாளைசிறப்பாகக் கொண்டாட வேண்டுகோள்
- கள்ளச்சாராய வியாபாரிகுண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
- விவசாய குழுவுக்கு நடவு இயந்திரம் வழங்க வேண்டும்
- போலாவரம் அணைத் திட்டத்தை கண்டித்து பிஜேடி இன்று பந்த்
- வேட்டிக்கு தடைவிதித்த கிளப்புக்கு தடை
- பேரணியை புறக்கணிக்க அண்ணா தொழிற்சங்கம் வேண்டுகோள்
- அசோக் சவாணுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- தில்லையம்பூர், ஆதனூரில் "அம்மா' திட்ட முகாம்
- அதிக சப்தத்தில் ஒலித்த தேவாலய ஒலிபெருக்கி: மக்கள் சாலை மறியல்
- ஒரத்தநாடு லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- குடந்தையில் முப்பெரும் விழா
- எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மக்களவைத் தலைவர் முடிவே இறுதியானது
- மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
- சமுதாய வளைகாப்பு விழா
- அஸ்ஸாமின் முன்னாள் தலைமைச் செயலர் ரயிலிலிருந்து விழுந்து சாவு
- பாரம்பரிய உணவால் நோயின்றி வாழலாம்
- சாலைத் தடுப்புச்சுவர் மீது டேங்கர் லாரி மோதி விபத்து
- பஞ்சு ஏற்றிவந்த வாகனம் தீக்கிரை
- பயணிகள் விமானத்தின் குழப்ப சமிக்ஞையால் பரபரப்பு: எல்லையை நோக்கி விரைந்த இந்திய போர் விமானங்கள்
- நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு
- ஆண்டெனா, வயர்கள் திருட்டு: 2 பேர் கைது
- பெரம்பலூரில் கார் ஏறி முதியவர் சாவு
- பெரம்பலூர் அருகே ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
- காவல் உதவி ஆய்வாளரைக் கொல்ல முயன்றதாக ஒருவர் கைது
- இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி பெறும்
- அம்மா உணவகத்துக்கு பூமிபூஜை
- "அறிவியல் முடிவுறும் இடத்தில்தான் ஆன்மிகம் தோன்றும்'
- கோடைகால பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம்
- அஸ்ஸாம்: கடத்தப்பட்டவர்களில் மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு
- விராலிமலையில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தீவிரம்
- விவசாயிகளுக்கு சம்பங்கிப்பூ சாகுபடி பயிற்சி
- மக்காச்சோளப் பயிரில்தண்டு துளைப்பான்: கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை
- வாகன பராமரிப்பு தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்
- அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு
- பேராவூரணி வர்த்தகர் கழக நிர்வாகிகள் பதவியேற்பு
- மாணவர்களுக்கு சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி
- ஆஞ்சனேயர் கோயிலில் ருத்ர ஜெபம்
- ஜூலை 16-ல் ஊர்க்காவல் படைக்கானஆட்கள் தேர்வு
- தமிழர் வரலாற்றை முழுமையாக எழுத குழு அமைக்க வேண்டும்
- இளைஞர் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்
- பாமக நிர்வாகி வீட்டின் முன்பு 2 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி
- காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்
- சாலை விதிமீறல் வழக்குகள்: சட்டப் பட்டதாரிகளிடம் ஒப்படைக்க நூதன யோசனை
- கலந்துரையாடல் கூட்டம்
- "அம்மா' திட்ட முகாம்
- மயிலாடுதுறை அருகே முதியவருக்கு கத்திக் குத்து: 9 பேர் கைது
- ஹரியாணாவில் 50,000 ஏழைகளுக்கு புதிய வங்கிக் கணக்கு: அரசு முடிவு
- ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் முகாம்
- விவசாயிகள் பிரச்னை: 7 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் திக்விஜய் சிங்
- பக்தரிடம் ரூ. 65 ஆயிரம் திருட்டு
- தஞ்சாவூர்
- கைக்குறிச்சி
- ஹெலிகாப்டர் பேர ஊழல்: வாஜ்பாய் ஆட்சியின்போது நடைபெற்ற கூட்டங்கள் குறித்து ஆராய சிபிஐ திட்டம்
- மும்பை: செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்த ஆஸ்திரேலியர் கைது
- மேற்கு வங்கத்தில் 2 நிதி நிறுவனங்களில் செபி சோதனை
- சாரதா நிதி நிறுவன மோசடி: நடிகர் மிதுன் சக்ரவர்த்தியிடம் சிபிஐ விசாரணை?
- வரிகளைக் கணக்கிடும் இலவச மென்பொருள்
- மின்னல் தாக்கி 5 பேர் பலி
- ஹைதராபாதுக்கு கூட்டு போலீஸ் படை: மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்தது தெலங்கானா
- ஜம்மு காஷ்மீரில் "பந்த்': இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்: விண்ணப்பித்துப் பயன்பெற ஆட்சியர் அழைப்பு
- கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- முன்னாள் படைவீரர்களின் கவனத்துக்கு...
- பஸ் கவிழ்ந்து விபத்து: 7 பக்தர்கள் பலி
- படவேட்டில் ரூ.2 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி
- மேற்கு வங்க மருத்துவமனையில் மேலும் 5 குழந்தைகள் சாவு
- கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா
- திருவண்ணாமலை காகாஸ்ரமத்தில் குரு பௌர்ணமி சிறப்பு ஹோமம்
- பாகிஸ்தானில் இருந்து கடத்தல்: ரூ. 35 கோடி ஹெராயின் பறிமுதல்
- பீமலிங்கேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி பூஜை
- வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- ஆரணியில் நாட்டிய நிகழ்ச்சி
- காணாமல் போன இளைஞர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு
- அமர்நாத் யாத்திரை: மேலும் 3 பேர் சாவு
- ஹரியாணா: பெண்களுக்காக உருவாகும் நூலகம்
- "விரைவாக நீதி வழங்கினால் குற்றங்கள் குறையும்'
- நாகர்கோவிலில் அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்
- பேரூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் கைது
- கூலித் தொழிலாளி தற்கொலை
- தோவாளை சந்தையில் பூக்கள் விலை சரிவு
- இலக்கியச் சங்கமம்
- மதுபாட்டில்கள் பதுக்கிய இளைஞர் கைது
| சிபிஐ கூடுதல் இயக்குநர் நியமன விவகாரம்: தனக்கு பதவி தேவையில்லை என போலீஸ் அதிகாரி மனு தாக்கல் Posted: 13 Jul 2014 02:16 PM PDT சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவிக்கு மத்திய கண்காணிப்பு ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ஆர்.கே.பச்நந்தா அப்பதவிக்கு தம் பெயரை பரிசீலனை செய்ய வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| காலசக்ரா-2014: தலாய் லாமாவுக்கு ஒமர் அழைப்பு Posted: 13 Jul 2014 02:16 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடைபெறும் காலசக்ரா-2014 நிகழ்ச்சியின் நிறைவு விழாவுக்கு வருகை தருமாறு திபெத்திய புத்த மத குருவான தலாய் லாமாவுக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். |
| அமெரிக்காவில் மர்ம நபர் சுட்டதில் 3 பேர் சாவு Posted: 13 Jul 2014 02:12 PM PDT அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். |
| உக்ரைன் குண்டு வீச்சில் ரஷியர் சாவு Posted: 13 Jul 2014 02:11 PM PDT ரஷியாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோனெட்ஸ்க் நகருக்குள் உக்ரைனால் வீசப்பட்ட குண்டு விழுந்ததில், ரஷியர் ஒருவர் உயிரிழந்தார். |
| "சிதம்பரம் கோயிலில் புதிய மண்டபம்: நடைமுறைகளை பின்பற்றி கட்டுமானப் பணி' Posted: 13 Jul 2014 02:09 PM PDT சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரம் அருகே கோயிலின் பழமைக்கு களங்கம் ஏற்படாத வண்ணம், சட்ட திட்ட நடைமுறைகளைப் பிற்பற்றியே புதிய மண்டபம் கட்டப்படும் என பொது தீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதர் தெரிவித்தார். |
| குடியரசுத் தலைவரான தொழிலாளர் தோழர் Posted: 13 Jul 2014 01:56 PM PDT வராஹகிரி வேங்கடகிரி என்கிற வி.வி. கிரி, அன்றைய ஒரிசாவில் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூரில், 10.8.1894இல், நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டுத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். |
| மோசமான சூழலில் சிறப்பான பட்ஜெட்! Posted: 13 Jul 2014 01:56 PM PDT நடப்பு நிதியாண்டின் (2014-15) மீதியுள்ள காலகட்டத்துக்கு பட்ஜெட் தயாரிக்கும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சந்தித்த மிகப் பெரிய சவால், பிரதமர் நரேந்திர மோடி பற்றி மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்புதான். |
| விசாரணையும், எதிர்பார்ப்பும்... Posted: 13 Jul 2014 01:55 PM PDT சென்னை மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் 61 பேர் இறந்ததும் சோழவரத்தில் சுவர் இடிந்து 11 பேர் இறந்ததும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்று அரசியலாக்கப்படும் நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் அவலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. |
| ஆதரவற்ற குழந்தைகளுக்காக "வளர்ப்பு பெற்றோர்' திட்டம்: மேனகா காந்தி அறிவிப்பு Posted: 13 Jul 2014 12:56 PM PDT ஆதரவற்ற குழந்தைகளை சிறந்த குடிமகன்களாக உருவாக்க "வளர்ப்பு பெற்றோர் திட்டம்' எனும் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார். |
| சட்ட விரோத கட்டடங்கள்: புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்: வெங்கய்ய நாயுடு Posted: 13 Jul 2014 12:55 PM PDT சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று, மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசைத் தூண்டிவிடவில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Posted: 13 Jul 2014 12:54 PM PDT முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசைத் தான் தூண்டிவிடவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். |
| சென்னை கிளப்பில் வேட்டிக்குத் தடை: கருணாநிதி, ஞானதேசிகன் கண்டனம் Posted: 13 Jul 2014 12:50 PM PDT சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டிக் கட்டிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு Posted: 13 Jul 2014 12:48 PM PDT மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது. |
| பொறியியல் கலந்தாய்வு: இதுவரை 24 ஆயிரம் பேருக்கு பி.இ. சேர்க்கை கடிதம் Posted: 13 Jul 2014 12:45 PM PDT பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வில் இதுவரை 24 ஆயிரம் பேர் பல்வேறு துறைகளைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கை கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். |
| இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை: சென்னையில் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் Posted: 13 Jul 2014 12:44 PM PDT போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை மீதான விசாரணையை சென்னையில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரம் இடங்கள் காலி Posted: 13 Jul 2014 12:43 PM PDT தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. |
| Posted: 13 Jul 2014 12:36 PM PDT இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், திங்கள்கிழமை (ஜூலை 14) மீண்டும் கூடும் தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| காமராஜர் பிறந்தநாளைசிறப்பாகக் கொண்டாட வேண்டுகோள் Posted: 13 Jul 2014 12:34 PM PDT மறைந்த தமிழக முதல்வர் காமராஜரின் 112-வது பிறந்தநாளை தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என மாவட்டத் தலைவர் எம். ராம்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். |
| கள்ளச்சாராய வியாபாரிகுண்டர் தடுப்பு சட்டத்தில் கைது Posted: 13 Jul 2014 12:33 PM PDT கள்ளச்சாராய வியாபாரியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவிட்டார். |
| விவசாய குழுவுக்கு நடவு இயந்திரம் வழங்க வேண்டும் Posted: 13 Jul 2014 12:33 PM PDT விவசாயிகள் அடங்கிய குழுவுக்கே நடவு இயந்திரங்களை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. |
| போலாவரம் அணைத் திட்டத்தை கண்டித்து பிஜேடி இன்று பந்த் Posted: 13 Jul 2014 12:33 PM PDT ஆந்திர மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் போலாவரம் அணைத் திட்டத்தைக் கண்டித்து ஆளுங்கட்சியான பிஜு ஜனதாதளம் ஒன்றுபட்ட கோராபுட் மாவட்டத்தில் திங்கள்கிழமை 12 மணி நேர பந்த் நடத்தவிருக்கிறது. |
| வேட்டிக்கு தடைவிதித்த கிளப்புக்கு தடை Posted: 13 Jul 2014 12:33 PM PDT வேட்டி கட்டியவரை உள்ளே அனுமதிக்க மறுத்த கிளப்புக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத். |
| பேரணியை புறக்கணிக்க அண்ணா தொழிற்சங்கம் வேண்டுகோள் Posted: 13 Jul 2014 12:32 PM PDT பரிசீலனையில் இருக்கும் கோரிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதால், சில தொழிற்சங்கங்கள் தஞ்சையில் திங்கள்கிழமை நடத்தவுள்ள பேரணியில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்காமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எ |
| அசோக் சவாணுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Posted: 13 Jul 2014 12:32 PM PDT கையூட்டுச் செய்தி வழக்கில், தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யத் தவறியதாகக் கூறி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| தில்லையம்பூர், ஆதனூரில் "அம்மா' திட்ட முகாம் Posted: 13 Jul 2014 12:32 PM PDT கும்பகோணம் வட்டம், தில்லையம்பூர், பேராவூரணி பேரூராட்சி ஆதனூரில் அம்மா திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| அதிக சப்தத்தில் ஒலித்த தேவாலய ஒலிபெருக்கி: மக்கள் சாலை மறியல் Posted: 13 Jul 2014 12:32 PM PDT தேவாலயத்தின் ஒலிபெருக்கி சப்தம் அதிகமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூரில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஒரத்தநாடு லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 13 Jul 2014 12:31 PM PDT ஒரத்தநாட்டில் லயன்ஸ் சங்கப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். புதிய தலைவராக இந்திரஜித், |
| Posted: 13 Jul 2014 12:31 PM PDT விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில், குடந்தையில் அண்மையில் முப்பெரும் விழா நடைபெற்றது. |
| எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மக்களவைத் தலைவர் முடிவே இறுதியானது Posted: 13 Jul 2014 12:31 PM PDT மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அவைத் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை Posted: 13 Jul 2014 12:31 PM PDT கும்பகோணத்தில் 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Jul 2014 12:30 PM PDT குத்தாலம் ஒன்றியத்தைச் சேர்ந்த 150 கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மாதிரிமங்கலத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| அஸ்ஸாமின் முன்னாள் தலைமைச் செயலர் ரயிலிலிருந்து விழுந்து சாவு Posted: 13 Jul 2014 12:30 PM PDT அஸ்ஸாம் மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலர் திலீப் குமார் சேத்தியா, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார். |
| பாரம்பரிய உணவால் நோயின்றி வாழலாம் Posted: 13 Jul 2014 12:30 PM PDT பாரம்பரிய உணவை உண்டால் நோயற்று வாழலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| சாலைத் தடுப்புச்சுவர் மீது டேங்கர் லாரி மோதி விபத்து Posted: 13 Jul 2014 12:30 PM PDT கரூரில் சாலைத் தடுப்புச்சுவர் மீது டேங்கர் லாரி மோதி டீசல் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து கரூருக்கு இரும்புப் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சனிக்கிழமை நள்ளிரவு கரூர் காந்திகிராமம் அருகே கரூர்-திருச்சி சாலையில் வந்தபோது சாலையின் குறுக்கே வந்த இருசக்கர |
| பஞ்சு ஏற்றிவந்த வாகனம் தீக்கிரை Posted: 13 Jul 2014 12:29 PM PDT அரவக்குறிச்சி அருகே பஞ்சு லோடு ஏற்றிச் சென்ற மினி வேன் தீக்கிரையானது. |
| பயணிகள் விமானத்தின் குழப்ப சமிக்ஞையால் பரபரப்பு: எல்லையை நோக்கி விரைந்த இந்திய போர் விமானங்கள் Posted: 13 Jul 2014 12:29 PM PDT துருக்கியிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்த பயணிகள் விமானம் குழப்பமேற்படுத்தும் சமிக்ஞையை அளித்ததையடுத்து, அந்த விமானத்தை நோக்கி இந்திய போர் விமானங்கள் விரைந்த பரபரப்பான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. |
| நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 13 Jul 2014 12:29 PM PDT கரூர் அருகே சனிக்கிழமை இரவு பைனான்ஸ் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆண்டெனா, வயர்கள் திருட்டு: 2 பேர் கைது Posted: 13 Jul 2014 12:29 PM PDT பெரம்பலூரில் ரூ. 85 ஆயிரத்திலான ஆண்டெனா மற்றும் வயர்களைத் திருடிய 2 பேரை பெரம்பலூர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| பெரம்பலூரில் கார் ஏறி முதியவர் சாவு Posted: 13 Jul 2014 12:28 PM PDT பெரம்பலூரில் சனிக்கிழமை மாலை வீட்டின் எதிரே படுத்திருந்த முதியவர் காரி ஏறி உயிரிழந்தார். பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் அ. சின்னதம்பி (60), இவரது மனைவி |
| பெரம்பலூர் அருகே ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை Posted: 13 Jul 2014 12:28 PM PDT பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. |
| காவல் உதவி ஆய்வாளரைக் கொல்ல முயன்றதாக ஒருவர் கைது Posted: 13 Jul 2014 12:28 PM PDT அரியலூர் மாவட்டம், கீழகோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). இவர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு புதுப்பாளையத்துக்கு வந்து |
| இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி பெறும் Posted: 13 Jul 2014 12:28 PM PDT இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Jul 2014 12:28 PM PDT அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| "அறிவியல் முடிவுறும் இடத்தில்தான் ஆன்மிகம் தோன்றும்' Posted: 13 Jul 2014 12:27 PM PDT அறிவியல் முடிவுறும் இடத்தில்தான் மெய்யறிவு எனும் ஆன்மிகம் தோன்றும் என்றார் கோவை மாவட்ட அரசு தணிக்கை அலுவலர் சீ. ரேவதிதேவி. |
| கோடைகால பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம் Posted: 13 Jul 2014 12:27 PM PDT கந்தர்வகோட்டையில் வட்டார வோளாண் விரிவாக்க மையம் சார்பில் கோடைகால பயிர் சாகுபடி குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
| அஸ்ஸாம்: கடத்தப்பட்டவர்களில் மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு Posted: 13 Jul 2014 12:27 PM PDT அஸ்ஸாம் மாநிலம் பக்ஸா மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களில் மேலும் 3 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. |
| விராலிமலையில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தீவிரம் Posted: 13 Jul 2014 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ரூ. 2.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். |
| விவசாயிகளுக்கு சம்பங்கிப்பூ சாகுபடி பயிற்சி Posted: 13 Jul 2014 12:27 PM PDT புதுக்கோட்டை ஆவுடையாபட்டி அருகே சண்முகநாதபுரத்தில் விவசாயிகளுக்கு சம்பங்கிப்பூ சாகுபடி குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| மக்காச்சோளப் பயிரில்தண்டு துளைப்பான்: கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை Posted: 13 Jul 2014 12:26 PM PDT மக்காச்சோளப் பயிர்களில் தண்டு துளைப்பானின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது. |
| வாகன பராமரிப்பு தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் Posted: 13 Jul 2014 12:26 PM PDT வாகன பராமரிப்புத் தொகையை ஆண்டுதோறும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு Posted: 13 Jul 2014 12:26 PM PDT கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) முதல்வராக அந்தக் கல்லூரியில் தேர்வு நெறியாளராகப் பதவி வகித்த முனைவர் அ. ஜான்மெரினா அண்மையில் பொறுப்பேற்றார். |
| பேராவூரணி வர்த்தகர் கழக நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 13 Jul 2014 12:25 PM PDT பேராவூரணி நகர வர்த்தகர் கழக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வர்த்தகர் சங்க புதிய கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி Posted: 13 Jul 2014 12:25 PM PDT கும்பகோணம் அருகே அம்மாச்சத்திரத்தில் உள்ள ஸ்டார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆஞ்சனேயர் கோயிலில் ருத்ர ஜெபம் Posted: 13 Jul 2014 12:25 PM PDT நீடாமங்கலம் - கும்பகோணம் சாலையில் உள்ள திருவோணமங்கலத்தில் 32 அடி உயர ஆஞ்சனேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. |
| ஜூலை 16-ல் ஊர்க்காவல் படைக்கானஆட்கள் தேர்வு Posted: 13 Jul 2014 12:25 PM PDT நாகை மாவட்ட ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. |
| தமிழர் வரலாற்றை முழுமையாக எழுத குழு அமைக்க வேண்டும் Posted: 13 Jul 2014 12:24 PM PDT தமிழர்களின் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்றும், அதை முழுமையாக எழுத குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டார். |
| இளைஞர் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல் Posted: 13 Jul 2014 12:24 PM PDT நாகை மாவட்டம், சீர்காழியில் சனிக்கிழமை கரும்பு வயல்காட்டில் மர்மமான முறையில் இளைஞர் இறந்த கிடந்தார். அவர் கொல்லப்பட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனர். |
| பாமக நிர்வாகி வீட்டின் முன்பு 2 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி Posted: 13 Jul 2014 12:24 PM PDT நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை பாமக மாநிலத் துணைத் தலைவர் வீட்டு வாசலின் முன்பு கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஒரு கத்தியை போலீஸார் மீட்டு விசார |
| காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் Posted: 13 Jul 2014 12:24 PM PDT |
| சாலை விதிமீறல் வழக்குகள்: சட்டப் பட்டதாரிகளிடம் ஒப்படைக்க நூதன யோசனை Posted: 13 Jul 2014 12:23 PM PDT நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சாலை விதிமீறல் வழக்குகளை பைசல் செய்ய புதிதாக சட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் தலைமையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற புதுமையான யோசனையை சட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. |
| Posted: 13 Jul 2014 12:23 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நாகை மாவட்ட அளவிலான கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Jul 2014 12:23 PM PDT குத்தாலம் வட்டம், நல்லாவூர் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மயிலாடுதுறை அருகே முதியவருக்கு கத்திக் குத்து: 9 பேர் கைது Posted: 13 Jul 2014 12:23 PM PDT நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்துள்ள அருவாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (60). இவரது மகள் நிர்மலாவுக்கும் நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், ஆச்சாள்புரம் அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்த சபாபதி மகன் ராஜ்குமார் (26) என்பவருக் |
| ஹரியாணாவில் 50,000 ஏழைகளுக்கு புதிய வங்கிக் கணக்கு: அரசு முடிவு Posted: 13 Jul 2014 12:23 PM PDT ஹரியாணா மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் 50,000 ஏழைகளுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
| ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 13 Jul 2014 12:23 PM PDT நாகை மாவட்டம், பொறையாறு ரோட்டரி சங்கத்தின் 2014-15-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பொறுப்பேற்றனர். |
| குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் முகாம் Posted: 13 Jul 2014 12:22 PM PDT குத்தாலம் வட்டம், மாந்தை கிராமத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| விவசாயிகள் பிரச்னை: 7 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் திக்விஜய் சிங் Posted: 13 Jul 2014 12:22 PM PDT விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேசத்தில் கடந்த 7 நாள்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஞாயிற்றுக்கிழமை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். |
| பக்தரிடம் ரூ. 65 ஆயிரம் திருட்டு Posted: 13 Jul 2014 12:22 PM PDT திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வந்த சென்னை பக்தரிடம் ரூ. 65 ஆயிரத்தை பணப்பையுடன் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 13 Jul 2014 12:21 PM PDT |
| Posted: 13 Jul 2014 12:21 PM PDT |
| ஹெலிகாப்டர் பேர ஊழல்: வாஜ்பாய் ஆட்சியின்போது நடைபெற்ற கூட்டங்கள் குறித்து ஆராய சிபிஐ திட்டம் Posted: 13 Jul 2014 12:18 PM PDT விவிஐபிக்கள் பயணிப்பதற்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், 2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின்போது இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. |
| மும்பை: செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்த ஆஸ்திரேலியர் கைது Posted: 13 Jul 2014 12:17 PM PDT மும்பை விமான நிலையத்துக்கு செயற்கைக்கோள் தொலைபேசியுடன் (சாட்டிலைட் ஃபோன்) வந்த ஆஸ்திரேலிய நபர், சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| மேற்கு வங்கத்தில் 2 நிதி நிறுவனங்களில் செபி சோதனை Posted: 13 Jul 2014 12:16 PM PDT மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக பல நூறு கோடி ரூபாய் நிதி திரட்டிய இரு நிறுவனங்களில் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்துள்ளது. |
| சாரதா நிதி நிறுவன மோசடி: நடிகர் மிதுன் சக்ரவர்த்தியிடம் சிபிஐ விசாரணை? Posted: 13 Jul 2014 12:13 PM PDT முதலீட்டாளர்களிடம் ரூ.10,000 கோடி அளவில் மோசடி செய்ததாக சாரதா நிதி நிறுவனம் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக பாலிவுட் நடிகரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான மிதுன் சக்ரவர்த்தியை சாட்சியாக விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. |
| வரிகளைக் கணக்கிடும் இலவச மென்பொருள் Posted: 13 Jul 2014 12:13 PM PDT ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய வருமான வரியைக் கணக்கிடும் இலவச மென்பொருளை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| Posted: 13 Jul 2014 12:12 PM PDT மேற்குவங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் 3 கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். |
| ஹைதராபாதுக்கு கூட்டு போலீஸ் படை: மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்தது தெலங்கானா Posted: 13 Jul 2014 12:11 PM PDT ஹைதராபாதில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த சீமாந்திரம் மற்றும் தெலங்கானா மாநில போலீஸாரை உள்ளடக்கிய கூட்டு போலீஸ் படையை உருவாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தெலங்கானா மாநில அரசு நிராகரித்துள்ளது. |
| ஜம்மு காஷ்மீரில் "பந்த்': இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 13 Jul 2014 12:10 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மாவட்டங்களில் பிரிவினைவாதக் குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த "பந்த்' போராட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்: விண்ணப்பித்துப் பயன்பெற ஆட்சியர் அழைப்பு Posted: 13 Jul 2014 12:08 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் தாட்கோ மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 13 Jul 2014 12:08 PM PDT தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| முன்னாள் படைவீரர்களின் கவனத்துக்கு... Posted: 13 Jul 2014 12:08 PM PDT பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தங்கள் மதிப்பெண் விவரத்தைப் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார். |
| பஸ் கவிழ்ந்து விபத்து: 7 பக்தர்கள் பலி Posted: 13 Jul 2014 12:08 PM PDT உத்தரப்பிரதேசத்தில் பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். |
| படவேட்டில் ரூ.2 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி Posted: 13 Jul 2014 12:08 PM PDT படவேட்டில் ரூ.2 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சுற்றுலா வளாகம், பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். |
| மேற்கு வங்க மருத்துவமனையில் மேலும் 5 குழந்தைகள் சாவு Posted: 13 Jul 2014 12:07 PM PDT மேற்கு வங்க மாநிலம், மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மேலும் 5 குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். |
| கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா Posted: 13 Jul 2014 12:07 PM PDT திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. |
| திருவண்ணாமலை காகாஸ்ரமத்தில் குரு பௌர்ணமி சிறப்பு ஹோமம் Posted: 13 Jul 2014 12:07 PM PDT திருவண்ணாமலை காகாஸ்ரமத்தில் குரு பௌர்ணமியையொட்டி, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. திருவண்ணாமலை-காஞ்சி சாலை, பெரியகுளத்தில் உள்ள காகாஸ்ரமத்தில் நடைபெற்ற சிறப்பு |
| பாகிஸ்தானில் இருந்து கடத்தல்: ரூ. 35 கோடி ஹெராயின் பறிமுதல் Posted: 13 Jul 2014 12:07 PM PDT பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பஞ்சாப் மாநில போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: |
| பீமலிங்கேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி பூஜை Posted: 13 Jul 2014 12:07 PM PDT போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள பீமலிங்கúஸவரர் கோயிலில் பௌர்ணமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 13 Jul 2014 12:07 PM PDT போளூரை அடுத்த குண்ணத்தூர் கூட்டுசாலை முத்து மாரியம்மன் நகரில் வசிப்பவர் பரசுராமன் மகன் சிவசங்கரன் (34). பௌர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். சனிக்கிழமை மாலை வீடு திரும்பி உள்ளார். |
| Posted: 13 Jul 2014 12:06 PM PDT ஆரணி சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயிலில் சலங்கை பூஜையையொட்டி, நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| காணாமல் போன இளைஞர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு Posted: 13 Jul 2014 12:06 PM PDT வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே காணாமல் போன இளைஞர், 19 நாள்களுக்குப் பின் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கொலை |
| அமர்நாத் யாத்திரை: மேலும் 3 பேர் சாவு Posted: 13 Jul 2014 12:06 PM PDT அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. |
| ஹரியாணா: பெண்களுக்காக உருவாகும் நூலகம் Posted: 13 Jul 2014 12:06 PM PDT பெண்கள் தங்களுக்கான அதிகாரம் மற்றும் வளர்ச்சியை அடையும் வகையில், ஹரியாணா மாநிலத்தில் பெண்களுக்கான பிரத்யேக நூலகம் ஒன்று அமைக்கப்படுகிறது. |
| "விரைவாக நீதி வழங்கினால் குற்றங்கள் குறையும்' Posted: 13 Jul 2014 12:05 PM PDT "வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிப்பதன் மூலம், குற்றங்கள் நிகழ்வது மறைமுகமாகக் குறையும்' என்று நேபாள தலைமை நீதிபதி தாமோதர் பிரசாத் வர்மா கூறினார். |
| நாகர்கோவிலில் அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 13 Jul 2014 12:02 PM PDT நாகர்கோவிலில் அதிமுக இலக்கிய அணி சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. |
| பேரூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் கைது Posted: 13 Jul 2014 12:02 PM PDT சாயர்புரத்தில் பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த பேரூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 13 Jul 2014 12:01 PM PDT விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டியில் சிறுநீரக பாதிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| தோவாளை சந்தையில் பூக்கள் விலை சரிவு Posted: 13 Jul 2014 12:01 PM PDT தோவாளை பூச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பூக்களின் விலையில் சரிவு ஏற்பட்டது. |
| Posted: 13 Jul 2014 12:01 PM PDT சாகித்திய அகாதெமி மற்றும் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி இணைந்து நடத்தும் ஐசக் அருமைராசன் படைப்புகள்: |
| மதுபாட்டில்கள் பதுக்கிய இளைஞர் கைது Posted: 13 Jul 2014 12:01 PM PDT கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகப் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |