Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசு கேபிள் டி.வி.க்கு தாமதமின்றி டிஜிட்டல் உரிமம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 05 Jul 2014 01:15 PM PDT

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மேலும் காலதாமதமின்றி டிஜிட்டல் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியில் பாஜக கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு: வைகோ

Posted: 05 Jul 2014 01:14 PM PDT

மத்தியில் பாஜக கொண்டு வரும் மக்கள் நல்லத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

வேளாண் பல்கலை. கலந்தாய்வு: இதுவரை 1293 பேருக்கு சேர்க்கை

Posted: 05 Jul 2014 01:12 PM PDT

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 6 நாள்களாக நடந்துவரும் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 1,293 பேர் பல பாடப் பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: மத்திய அமைச்சர்களிடம் முறையிட முடிவு

Posted: 05 Jul 2014 01:12 PM PDT

கூடங்குளத்தில் புதிதாக மூன்றாவது, நான்காவது அணு உலைகளை அமைப்பதற்கு எதிராக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து மனு அளிக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக 7 பேர் கொண்ட பெண்கள் குழு தில்லிக்குச் செல்ல உள்ளது.

வனத்துறைக்கான 100 கட்டடங்கள் திறப்பு

Posted: 05 Jul 2014 01:11 PM PDT

வனத்துறைக்கென கட்டப்பட்டுள்ள 100 கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்தல் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரும்: ராமதாஸ் தகவல்

Posted: 05 Jul 2014 01:08 PM PDT

தமிழக தேர்தல் முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தில் பாமக வழக்குத் தொடரவுள்ளது. திமுகவையும் இது தொடர்பாக வழக்குத் தொடர கேட்டுக் கொண்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோருகிறார் விஜயகாந்த்

Posted: 05 Jul 2014 01:06 PM PDT

மௌலிவாக்கத்தில் 61 பேர் பலியான கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அலிபிரி சோதனைச் சாவடியில் புதிய பாதுகாப்பு வளையம்

Posted: 05 Jul 2014 01:00 PM PDT

திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியில் திருமலைக்கு செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

Posted: 05 Jul 2014 01:00 PM PDT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் வெள்ளிக்கிழமை 24 மணிநேரம் காத்திருந்தனர். சனிக்கிழமை தர்ம தரிசனத்தில், பக்தர்கள் 24 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 12 மணிநேரமும் காத்திருந்தனர்.

ராசிபுரத்தில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை

Posted: 05 Jul 2014 12:59 PM PDT

ராசிபுரம் தனியார் பள்ளி மாணவர் பள்ளி விடுதியில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணையில் முதன்மை பொறியாளர் நேரில் ஆய்வு

Posted: 05 Jul 2014 12:59 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில் பொதுப்பணித்துறை சென்னை இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை பொறியாளர் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

ஒடிஸா சென்று திரும்பிய சடலத்தைப் பெற ஆளில்லை

Posted: 05 Jul 2014 12:58 PM PDT

சென்னை மெளலிவாக்கம் கட்டட விபத்தில் தவறாக அடையாளம் காணப்பட்டு ஒடிஸா சென்று திரும்பிய உடலை பெறுவதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மௌலிவாக்கம் கட்டட விபத்து: ரகசியத் தகவல்களை சேகரிக்கிறது உளவுத்துறை

Posted: 05 Jul 2014 12:57 PM PDT

சென்னை மௌலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமான விபத்துக்கு காரணமானவர்களையும், அவர்களுக்கு துணைபோனவர்களையும் கண்டறியும் வகையில் தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு போலீஸார் ரகசியத் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

மௌலிவாக்கம் கட்டட உரிமையாளர் உள்பட 3 பேரிடம் போலீஸ் விசாரணை

Posted: 05 Jul 2014 12:56 PM PDT

சென்னை மௌலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமான விபத்து குறித்து, அந்த கட்டடத்தின் உரிமையாளர் உள்பட 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அஸ்ஸாம் முதலிடம்

Posted: 05 Jul 2014 12:51 PM PDT

இந்தியாவில் உள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் 6-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும், அவற்றில் அஸ்ஸாம் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ம.பி: காருக்குள் மூச்சுத் திணறி இரண்டரை வயது சிறுவன் சாவு

Posted: 05 Jul 2014 12:50 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கார் கதவு தானாக பூட்டிக் கொண்டதால், அதனுள்ளே சிக்கிக் கொண்ட இரண்டரை வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உ.பி.: லஷ்கர்-இ-தொய்பா பெயரில் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்

Posted: 05 Jul 2014 12:49 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஒருவருக்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் விவகாரம்: திக்விஜய் சிங் 7 நாள் உண்ணாவிரதம்

Posted: 05 Jul 2014 12:49 PM PDT

மத்தியப் பிரதேசத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்காததைக் கண்டித்து 7ஆம் தேதி முதல் 7 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் அறிவித்துள்ளார்.

"நேபாளத்துக்கு கூடுதல் நிதி உதவி: மோடி பயணத்தின்போது அறிவிப்பு வெளியாகும்'

Posted: 05 Jul 2014 12:48 PM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அந்நாட்டுக்கு கூடுதல் நிதி உதவி அளிக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என நேபாள நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமர்நாத் 9ஆம் கட்ட யாத்திரை: 2,489 பக்தர்கள் பயணம்

Posted: 05 Jul 2014 12:40 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து, 9ஆம் கட்டமாக 2,489 பக்தர்கள் அமர்நாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மனநலம் பாதித்தவர்களுக்கு உதவ தேசியக் கொள்கை: மத்திய அமைச்சர் அனந்த்குமார்

Posted: 05 Jul 2014 12:25 PM PDT

மனநலம் பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் தேசியக் கொள்கை வகுக்கப்படும் என்று, மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.

அரசின் தலையீடு அதிகரிப்பு: வெனிசூலாவில் விற்கப்பட்ட பழமையான பத்திரிகை நிறுவனம்

Posted: 05 Jul 2014 12:25 PM PDT

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் அரசின் நெருக்கடி காரணமாக 104 ஆண்டுகள் பழமையான பத்திரிகை நிறுவனம் விற்பனை செய்யப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கும் 5% இடஒதுக்கீடு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 05 Jul 2014 12:24 PM PDT

மகாராஷ்டிரத்தில் கிறிஸ்தவர்களுக்கும் 5 சதவீத இடஒதுக்கீரடு அளிக்க உத்தரவிடுமாறு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிகாரில் பள்ளி மதிய உணவில் பாம்பு: 54 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு

Posted: 05 Jul 2014 12:24 PM PDT

பிகாரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பாம்பு விழுந்த மதிய உணவை உண்ட 54 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவுக்கான திட்டங்களை பெற அனைத்துக் கட்சி கூட்டம்

Posted: 05 Jul 2014 12:23 PM PDT

எதிர் வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கானாவுக்கான திட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாக அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்துக்கு உடனடியாக முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

தபஸ் பாலை கட்சியில் இருந்து நீக்குங்கள்: அமர் சிங்

Posted: 05 Jul 2014 12:23 PM PDT

"பெண்களை இழிவாகப் பேசியதற்காக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பால், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரீய லோக்மஞ்ச் கட்சித் தலைவர் அமர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted: 05 Jul 2014 12:21 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருக்கும், "ஜெய்ஷ்-இ-முகமது' இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிகாரில் 6 மாவோயிஸ்டுகள் கைது

Posted: 05 Jul 2014 12:21 PM PDT

பிகாரின் ஒளரங்காபாத் மாவட்டத்தில் 6 மாவோயிஸ்டுகளை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

சீன கடற்படைத் தளத்தை பார்வையிட்ட இந்திய ராணுவத் தளபதி விக்ரம் சிங்

Posted: 05 Jul 2014 12:20 PM PDT

சீனாவின் ஷாங்காய் கடற்படைத் தளத்தை இந்திய ராணுவத் தளபதி விக்ரம் சிங் சனிக்கிழமை பார்வையிட்டார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்

Posted: 05 Jul 2014 12:20 PM PDT

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முஃப்தி பஹாவுதீன் ஃபரூக்கி (90) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார்.

ரூ. 6 கோடி லஞ்சம்: கோவா முன்னாள் முதல்வர் ராணே மீது எஸ்ஐடி வழக்கு

Posted: 05 Jul 2014 12:19 PM PDT

நிலக்கரிச் சுரங்க குத்தகை பெற்றுத்தருவதாக கூறி ரூ.6 கோடி லஞ்சம் வாங்கியதாக கோவா முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ராணே, அவது மகனும், எம்எல்ஏவுமான விஸ்வஜித் ஆகியோர் மீது மாநில சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வழக்குப்பதிவு செய்துள்ளது.

இராக்கில் சிக்கியுள்ள பஞ்சாபிகளை மீட்க அமரீந்தர் சிங் வலியுறுத்தல்

Posted: 05 Jul 2014 12:18 PM PDT

இராக்கில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் இளைஞர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளியில் சுகாதாரக் கல்வி வழங்கும் நிகழ்ச்சி

Posted: 05 Jul 2014 12:12 PM PDT

திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில் கொசு ஒழிப்பு, ஒட்டுமொத்த தூய்மைப் பணி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கம் தேரடி விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா

Posted: 05 Jul 2014 12:12 PM PDT

செங்கம்-போளூர் சாலையில் தேரடி விநாயகர் கோயில்  கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

குடிநீர் கேட்டு இரண்டு இடங்களில் சாலை மறியல்

Posted: 05 Jul 2014 12:12 PM PDT

ஆரணி-செய்யாறு சாலையில் குடிநீர் கேட்டு இரண்டு இடங்களில் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பைக் மோதி விவசாயி சாவு

Posted: 05 Jul 2014 12:11 PM PDT

திருவண்ணாமலையில் பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த விவசாயி இறந்தார்.

அயர்லாந்து துணைப் பிரதமராக ஜோன் பர்ட்டன் தேர்வு

Posted: 05 Jul 2014 12:11 PM PDT

அயர்லாந்து நாட்டின் தொழிலாளர் கட்சித் தலைவராகவும், அந்நாட்டு துணை பிரதமராகவும் ஜோன் பர்ட்டன் (65) சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jul 2014 12:11 PM PDT

போளூர் தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிற்றுந்து மோதி தொழிலாளி சாவு

Posted: 05 Jul 2014 12:11 PM PDT

திருவண்ணாமலையில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி சிற்றுந்து மோதியதில் இறந்தார்.

தேர்தல் தோல்வி: செனகல் பிரதமர் பதவி நீக்கம்

Posted: 05 Jul 2014 12:11 PM PDT

செனகல் நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அந்நாட்டு பிரதமர் அமினாட்டா டூரேயின் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் பதவிநீக்கம் செய்யப் பட்டார்.

பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு தொடக்க விழா

Posted: 05 Jul 2014 12:10 PM PDT

போளூரை அடுத்த கே.கே.எஸ். மணி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளைஞரின் இறுதி ஊர்வலம்: இஸ்ரேல் போலீஸார் பாலஸ்தீனியர்கள் மோதல்

Posted: 05 Jul 2014 12:05 PM PDT

இஸ்ரேல் நாட்டில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன இளைஞரின் இறுதி ஊர்வலத்தில், அந்நாட்டு போலீஸாருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை மோதல் வெடித்தது.

அமெரிக்க சுதந்திர தினத்தில் 4 இந்தியர்கள் கெளரவிப்பு

Posted: 05 Jul 2014 12:04 PM PDT

அமெரிக்காவுக்கு தங்களது உழைப்பின் மூலம் பங்களிப்பு வழங்கிய இந்தியர்கள் 4 பேர், அமெரிக்க சுதந்திர தின விழாவின்போது கெளரவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் பாடத்தைப் புரிந்து படித்தால் தானாகவே கல்வி வரும்

Posted: 05 Jul 2014 12:04 PM PDT

மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்தால் கல்வி தானாகவே வரும் என தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புப் படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

ரயில் நிலையச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு

Posted: 05 Jul 2014 12:04 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திய ஓட்டுநர்கள் மீது ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட செஸ்: நாகர்கோவில் பள்ளி முதலிடம்

Posted: 05 Jul 2014 12:03 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்ற குமரி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பள்ளிகளுக்கான சிறப்பு முதல் பரிசை ஆதர்ஷ் வித்யா கேந்திரா பள்ளி பெற்றது.

உக்ரைனில் ராணுவம் கடும் தாக்குதல்: கிளர்ச்சியாளர்கள் ஓட்டம்

Posted: 05 Jul 2014 12:03 PM PDT

உக்ரைனில் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு தப்பி ஓடிவிட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஆர்சென் அவாகோவ் கூறியுள்ளார்.

குமரி மாவட்ட பள்ளிகளில் அதிக கட்டணம்

Posted: 05 Jul 2014 12:03 PM PDT

குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சனிக்கிழமை நாகர்கோவிலில் விசாரணை

அண்ணா பல்கலை.கல்விக் குழுஉறுப்பினராக கே.எஸ்.ஷாஜி நியமனம்

Posted: 05 Jul 2014 12:03 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினராக சுங்கான்கடை வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் கே.எஸ்.ஷாஜி  நியமிக்கப்பட்டுள்ளார்.

"இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை சரி பார்க்கலாம்

Posted: 05 Jul 2014 12:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்துப் பதிவுதாரர்கள் தங்கள் பதிவு விவரங்களை இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

நாகர்கோவிலில் நாளைகுறைதீர் நாள் கூட்டம்: நடைபெறும் இடம் மாற்றம்

Posted: 05 Jul 2014 12:02 PM PDT

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலக முதல் தளத்தில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளது.

துரிதமாக நடைபெறும் அணைக்கரை-அருவிக்கரை பாலப் பணிகள்

Posted: 05 Jul 2014 12:02 PM PDT

திருவட்டாறு அருகே அணைக்கரை-அருவிக்கரை இடையே பாலம் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஏழை மாணவர்களுக்குவிடுதி கோரி குமரி - சென்னைக்கு சமூக ஆர்வலர் நடைப்பயணம்

Posted: 05 Jul 2014 12:02 PM PDT

சென்னை, ஆவடியில் ஏழை மாணவர், மாணவிகளுக்கு பாதுகாப்பு விடுதி அமைக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சமூக ஆர்வலர் சனிக்கிழமை நடைப்பயணம் தொடங்கினார்.

அரசுக்கு எதிரான போராட்டம்: எகிப்து சகோதரத்துவ இயக்கத்தினர் 37 பேருக்கு ஆயுள்

Posted: 05 Jul 2014 12:02 PM PDT

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி தலைமையிலான ஆட்சி கடந்த ஆண்டு அகற்றப்பட்ட பிறகு, அந்நாட்டில் அபாயகரமான போராட்டங்களில் ஈடுபட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத் தலைவர் உள்ளிட்ட 37 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு அளித்தது.

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம்:வருவாய் கிராம ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 05 Jul 2014 12:01 PM PDT

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

களக்காடு- சேரன்மகாதேவி சாலையில் மிளாக்கள் நடமாட்டம்

Posted: 05 Jul 2014 12:01 PM PDT

களக்காட்டிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் பிரதானச் சாலையில், கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மிளாக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இராக்: பள்ளிவாசல், புனிதத் தலங்களை தரைமட்டமாக்கிய தீவிரவாதிகள்

Posted: 05 Jul 2014 12:01 PM PDT

இராக்கில் பள்ளிவாசல்கள், பழமை வாய்ந்த புனிதத் தலங்கள் மற்றும் ஏராளமான வீடுகளை தீவிரவாதிகள் கடந்த மாதம் தரைமட்டமாக்கியுள்ள காட்சிகள் சமூக வலைதள ஊடகங்களில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

நாகர்கோவில் பள்ளியில் கையுந்து பந்து போட்டி

Posted: 05 Jul 2014 12:01 PM PDT

நாகர்கோவில் ஆதர்ஷ் வித்யா கேந்திரா பள்ளியில் கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.

ஆப்கன்: 400க்கும் மேற்பட்ட எண்ணெய் லாரிகளுக்கு தலிபான்கள் தீ வைப்பு

Posted: 05 Jul 2014 12:01 PM PDT

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில், 400க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் லாரிகள் எரிந்து நாசம் அடைந்தன.

திருவட்டாறுஇ.எஸ்.ஐ. மருத்துவமனையை தொடங்கக் கோரி 21 இல் தர்னா

Posted: 05 Jul 2014 12:01 PM PDT

திருவட்டாறு இ.எஸ்.ஐ. மருத்துவமனையை விரைவில் தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு முந்திரி பருப்புத் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜூலை 21 ஆம் தேதி தர்னா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிப்பர் லாரி உரிமையாளர், போக்குவரத்து எஸ்.ஐ. மோதல்

Posted: 05 Jul 2014 12:00 PM PDT

கோவில்பட்டியில் சனிக்கிழமை டிப்பர் லாரி உரிமையாளருக்கும், போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து,  எட்டயபுரம் சாலையில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளைநிலங்களுக்குச் செல்ல வழி தேடும் எட்டயபுரம் விவசாயிகள்

Posted: 05 Jul 2014 12:00 PM PDT

எட்டயபுரத்தில் சொந்த விளை நிலங்களுக்குச் செல்ல முடியாமல் வழி தேடும் பரிதாபமான நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் சாலை ஆக்கிரமிப்பு: நீதிமன்ற ஆணையர் ஆய்வு

Posted: 05 Jul 2014 12:00 PM PDT

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக

உழவர் பாதுகாப்புத் திட்ட நலத் திட்ட உதவிகள்

Posted: 05 Jul 2014 11:59 AM PDT

எட்டயபுரத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சபாபதி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 05 Jul 2014 11:59 AM PDT

திருச்செந்தூர் ஸ்ரீ சபாபதி விநாயகர் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

அன்னியச் செலாவணி கையிருப்பு 315.77 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு

Posted: 05 Jul 2014 11:59 AM PDT

கடந்த ஜூன் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 856.6 மில்லியன் டாலர்கள் அதிகரித்து, 315.77 பில்லியன் (1 பில்லியன் டாலர்=100 கோடி டாலர்) டாலர்களாக இருந்தது.

திருச்செந்தூரில் அன்னதானம்

Posted: 05 Jul 2014 11:59 AM PDT

திருச்செந்தூரில் சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல்ஸ் நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நயினாபுரம் கோயிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

Posted: 05 Jul 2014 11:58 AM PDT

உடன்குடி அருகே நயினாபுரம் அருள்மிகு ஸ்ரீசக்தி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை தொடங்கியது. இதனையொட்டி காலை எட்டு மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை ந

எட்டயபுரத்தில் சீரான குடிநீர் வழங்கி வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை

Posted: 05 Jul 2014 11:58 AM PDT

எட்டயபுரத்தில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன் காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

காயல்பட்டினத்தில் தீ விபத்து: குடிசை வீடு சேதம்

Posted: 05 Jul 2014 11:58 AM PDT

காயல்பட்டினத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலாகியது.          காயல்பட்டினம் புதுக்கடைத் தெரு காட்டு தைக்கா தெரு குறுக்குச் சாலையில் வசிப்பவர் முஹம்மத்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்:  கல்லூரி மாணவர் உள்பட 7 பேர் கைது

Posted: 05 Jul 2014 11:58 AM PDT

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் உள்பட 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வியாபாரி தற்கொலை

Posted: 05 Jul 2014 11:57 AM PDT

கோவில்பட்டியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி நடராஜபுரம் 8 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் செண்பகராஜ்(47),

வருஷாபிஷேகம்

Posted: 05 Jul 2014 11:57 AM PDT

பள்ளிபத்து அருகிலுள்ள குடியிருப்பிளை அருள்மிகு ஸ்ரீஉடையார் சுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

ஸ்பைஸ்ஜெட்: மும்பை, மதுரையில் இருந்து துபைக்கு மீண்டும் விமான சேவை

Posted: 05 Jul 2014 11:57 AM PDT

மும்பை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து துபை நகரத்துக்கு வரும் 21ஆம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் விமான சேவையைத் தொடங்கவுள்ளது.

விளாத்திகுளத்தில் போக்குவரத்துக் கழகஊழியர்கள் மோதல் :3 பேர் காயம்

Posted: 05 Jul 2014 11:57 AM PDT

விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சனிக்கிழமை பணியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

போலீஸ்காரரை தாக்கிய லாரி ஓட்டுநர் மீது வழக்கு

Posted: 05 Jul 2014 11:57 AM PDT

கோவில்பட்டி அருகே போலீஸ்காரரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

ஜூலை 7 மின் தடை

Posted: 05 Jul 2014 11:56 AM PDT

திருச்செந்தூர் பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படுகிறது.

தொழிலாளி வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

Posted: 05 Jul 2014 11:56 AM PDT

சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் 6 பவுன்  தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

"அணையை தூர்வாரும்போது கிடைக்கும் மணலை அரசே விற்பனை செய்ய வேண்டும்

Posted: 05 Jul 2014 11:56 AM PDT

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும்போது கிடைக்கும் மணலை அரசே குவாரி அமைத்து விற்பனை செய்ய வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 2 புதிய மாடல்கள் அறிமுகம்: டாடா மோட்டார்ஸ் திட்டம்

Posted: 05 Jul 2014 11:56 AM PDT

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இரண்டு மாடல் கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் யாதவ் கூறினார்.

ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

Posted: 05 Jul 2014 11:55 AM PDT

தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க கோவில்பட்டி கிளை பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்க கோரிக்கை

Posted: 05 Jul 2014 11:55 AM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகையை கூடுதலாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக அத்துறை அமைச்சர் தாவர்சந்த் கேலாட் கூறியுள்ளார்.

நாகர்கோவில்

Posted: 05 Jul 2014 11:55 AM PDT

ஏமாற்றும் தென்மேற்கு பருவ மழை: விவசாயிகள் கவலை

Posted: 05 Jul 2014 11:50 AM PDT

நத்தம் பகுதியானது மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும். தென்மேற்குப் பருவ மழை ஜூன் 1-இல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் சில நாள்கள் மட்டும் லேசாக

கொடைக்கானலில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வனத்துறையில் பதிவு செய்ய உத்தரவு

Posted: 05 Jul 2014 11:49 AM PDT

கொடைக்கானலில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வனத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம்

Posted: 05 Jul 2014 11:49 AM PDT

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

போடியில் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

Posted: 05 Jul 2014 11:49 AM PDT

போடியில் காவல்துறையை கண்டித்து வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவரின் இருசக்கர வாகனம் திருடுபோனது. அதை

ஆம்னி பேருந்தில் ரூ.3.50 லட்சம் திருட்டு

Posted: 05 Jul 2014 11:48 AM PDT

கம்பத்திலிருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்தில் ஓய்வுபெற்ற எஸ்.பி. மகளிடம் ரூ. 3.50 லட்சம் 3-ந்தேதி இரவு திருடப்பட்டது. இது தொடர்பாக சனிக்கிழமை கம்பம் தெற்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காவலரை தாக்கியதாக இருவர் கைது

Posted: 05 Jul 2014 11:48 AM PDT

கம்பம் அருகே வியாழக்கிழமை பள்ளி மாணவிகளை கேலி செய்தவர்களை கண்டித்த காவலரை தாக்கியதாக 2 பேரை ராயப்பன்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

மனைவியை தீ வைத்து கொன்ற கணவர் கைது

Posted: 05 Jul 2014 11:48 AM PDT

ஒட்டன்சத்திரம் அருகே மனைவியை தீ வைத்து கொன்றதாக கணவரை போலீஸார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கே.அத்திக்கோம்பையைச் சேர்ந்தவர் பெரியசாமி(58). இவருடைய

"பட்டாசு ஆலைகளில் விபத்தை தவிர்க்க விதிமுறைகளை கடைபிடியுங்கள்

Posted: 05 Jul 2014 11:48 AM PDT

தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி பட்டாசு ஆலைகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஊரக தொழில் மற்றும்

பெண்கள் விழிப்புணர்வு பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி

Posted: 05 Jul 2014 11:47 AM PDT

: வளரிளம் பெண்களின் தொடர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீட்ஸ் நிறுவனம், பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்புட

இயந்திரத்தில் கை சிக்கி பெண் காயம்

Posted: 05 Jul 2014 11:47 AM PDT

திருத்தங்கலில் சனிக்கிழமை இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது. திருத்தங்கல் சத்யா நகரில் தீக்குச்சி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஜெயலட்சுமி (53)

வீட்டுக்குள் புகுந்து 9 பவுன் நகை திருட்டு

Posted: 05 Jul 2014 11:47 AM PDT

அருப்புக்கோட்டை அன்பு நகரில் வசிப்பவர் வேலாயுத பாண்டியராஜ்(30). இவரது மனைவி சக்தி லட்சுமி (22). வேலாயுத பாண்டியராஜ் கட்டட வேலைக்கு சனிக்கிழமை காலையில் சென்று விட்டாராம்.

திருத்தங்கல் ஆலையில் தீவிபத்து

Posted: 05 Jul 2014 11:47 AM PDT

திருத்தங்கலில் காகித குழாய் தயாரிக்கும் ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டில் பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

Posted: 05 Jul 2014 11:46 AM PDT

சிவகாசியில் சனிக்கிழமை சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆழ்குழாய் அமைத்ததில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் :ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்

Posted: 05 Jul 2014 11:46 AM PDT

ஆழ்குழாய் அமைத்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு மனித உரிமைகள் கழகம் மற்றும் ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்க கூட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவர் வருகை: என்.ஐ.டி-யில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 05 Jul 2014 11:46 AM PDT

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்துக்கு(என்.ஐ.டி) குடியரசுத் தலைவர் வருகை தருவதையொட்டி அதற்கான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் என்.ஐ.டியில் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

பயணிகளிடம் மணிபர்ஸ் திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது

Posted: 05 Jul 2014 11:45 AM PDT

திருச்சி சிங்காரத்தோப்பு அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் இருவரிடம் மணி பர்ûஸ திருடிய பெண் உள்பட 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மீன் பண்ணை அதிபர் தற்கொலை

Posted: 05 Jul 2014 11:45 AM PDT

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே மீன் பண்ணை அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™