Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Posted: 05 Jul 2014 11:28 AM PDT

--- பேசிட்டிருக்கும்போதே, உங்க மகள் கையை நீட்டிடறா, மாமா! - நீங்க எதுக்கு மாப்பிள்ளை கை நீட்டுற தூரத்தில் உட்கார்ந்து பேசறீங்க..? - >வி.ரேவதி - ——————————————– - உங்க கணவர் காணாமல் போய் ஒரு மாசமா ஆச்சுங்கறீங்க ஆனா இப்பத்தான் புகார் தர்றீங்க…அதுவரை என்னம்மா செஞ்சுகிட்டு இருந்தீங்க? - ஹோட்டல்லதான் வாங்கி சாப்பிட்டுகிட்டு இருந்தேன் இன்ஸ்பெக்டர்..! - >எல்.சிதம்பரம் - —————————————– - தலைவருக்கு வெளிநாட்டு மோகம் இருக்கலாம், அதுக்காக இப்படியா? - ஏன் என்ன பண்ணினார்? - எல்லோரும் ...

உங்கள் தோழியாக !!!

Posted: 05 Jul 2014 11:02 AM PDT

பெயர்:நித்யானந்தி
சொந்த ஊர்:ஈரோடு
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையத்தளம் மூலம்
பொழுதுபோக்கு:புத்தகங்கள் படிப்பது
தொழில்:கூட்டுறவு சங்க பணியாளர்
மேலும் என்னைப் பற்றி:உங்கள் தோழியாக என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 05 Jul 2014 10:00 AM PDT

மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 75 ramesh.vdm@gmail.com ***** நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன. வாசகன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின் மூன்றாவது நூல் இது. முதல் நூல் - அப்படியே இருந்திருக்கலாம். இரண்டாவது நூல் - நினைவுப் படுக்கைகள். சிங்கப்பூரின் ...

என்ன செய்ய வேண்டும் ?

Posted: 05 Jul 2014 09:05 AM PDT

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் . என் நண்பன் கதை எழுதினான் கதை போட்டிக்கு அனுப்புவதற்காக . அவன் எழுதிய கதையில் எனக்கு உடன்பாடு இல்லை . ஆனால் அவன் என் கருத்தை ஏற்க மறுக்கிறான் . அவன் எழுதிய கதையின் சாராம்சம் கீழே கொடுத்து இருக்கிறேன் . அன்பும் , கருணையும் , நேர்மையும் கொண்ட நல்லவன் ஒருவன் வாழ்கையின் அனைத்து நிலைகளிலும் ( கல்வி , வேலை , திருமணம் , ஆரோக்கியம் ) முழுவதுமாக தோற்றுவிட்டான் . எனவே அவன் தன்னை படைத்த கடவுளை வெறுத்து , தன் வாழ்க்கையையும் வெறுத்து ...

சிலேடையில் ஈகரை !

Posted: 05 Jul 2014 08:59 AM PDT

இருள்போக்கும் ஒளியுண்டு இனியதிரி உண்டு கருத்துப்பரி மாற்றமுண்டு கடவுள் அருகிலுண்டு இருந்திடவே இனியமடல் உண்டு உயிரான இருநிலத்தில் ஈகரையும் விளக்கும் ஒன்று. விளக்கு - இருள் அகற்றும் ஒளி தரும் ஈகரை - அறியாமை இருள் அகற்றும் விளக்கில் - திரி போட்டு ஏற்றுவார் ஈகரையில் - திரி பல போடுவார் விளக்கு - அணைத்தவுடன் திரி கருத்து மாற்றமடையும் ஈகரை - கருத்து பரிமாற்றம் உண்டு விளக்கு - கடவுள் அருகில் உள்ளது ஈகரை - தமிழ்க்கடவுள் அருகில் உள்ளது விளக்கை - அழகிய மடல் மற்றும் மாடத்தில் வைத்திடுவர் ஈகரையில் ...

ஈகரை ஆத்திச்சூடி

Posted: 05 Jul 2014 08:58 AM PDT

அருமையாய் பதிவுகள் ஆக்கத்தின் பகிர்வுகள் இடுவார் பின்னூட்டம் ஈகரை இனியது உண்மையை உணர்த்திடும் ஊக்கமது தந்திடும் என்றும் சிறந்தது ஏனென்றால் பதில்வரும் ஐயம் தீர்த்திடும் ஒவ்வொன்றும் புதியது ஓடிவரும் உறவுகள் ஒளவைபோல் கவிஞர்கள் இஃதே நம் ஈகரை

உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!

Posted: 05 Jul 2014 08:08 AM PDT

- அந்த பிச்சைக்காரனுக்கு பக்கத்து தெருவிலே, நிறைய பிச்சை கிடைக்குது, கொடுத்து வச்சவன், இந்த தெருவிலேயும் இருக்கிறாங்களே... - விடு மச்சான், இக்கரைக்கு அக்கரை பிச்சையாத்தான் தெரியும்..! - ---------------------------------------- - இந்த டாக்டர் வீடு எதுவும் கட்டுகிறாரா..? - எதுக்கு கேட்கிறே? - ஆபரேசனுக்கு என்ன செலவாகும்னு கேட்டா, 'என்ன ஒரு கிச்சன், இரண்டு பாத்ரூம் கட்டுற' செலவுதான் வரும்னு சொல்றாரே..! - ------------------------------------ - பக்கத்து வீட்டுப் பையனை அம்மா ...

பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள்

Posted: 05 Jul 2014 08:07 AM PDT

திருநெல்வேலியில் முதியவருக்குப் பேய் பிடித்ததாக நினைத்து, அவரது தலையில் உறவினர்கள் அடித்த 3 அங்குல ஆணியை மருத்துவர்கள் அகற்றினர். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர், 60 வயதுடைய தொழிலாளி சொக்கலிங்கம். அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உறவினர்கள் சொக்கலிங்கத்துக்குப் பேய் பிடித்து இருப்பதாகக் கருதினர். எனவே, கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று பேயை விரட்டுவதற்காக பூஜைகள் நடத்தினர். பின்னர் சொக்கலிங்கத்துக்குப் பிடித்துள்ள பேயை விரட்டுவதற்காக அவருடைய ...

புருசனை சமாளிக்க கட்டிப்பிடி வைத்தியம்...!

Posted: 05 Jul 2014 07:43 AM PDT

- கல்யாணப்பத்திரிகையிலாவது என் ஜோக் வரட்டும்'னு நினைச்சு பத்திரிகையின் பின்பக்கம் ஜோக் போட்டது தப்பாப் போச்சு..! - என்னாச்சு? - இப்படி 'கடி'க்கிறவரோட நான் எபட்டி வாழ முடியும்னு கல்யாணம் பொண்ணு ஓடிட்டா...! - >அமுதா கணேசன் - --------------------------------------------- - எங்க கடையில செருப்பு வாங்கினா 'காலைக் கடிக்காது!' இன்னும் என்ன யோசனை பண்றீங்க? - நீங்க சொல்ற விலை கையைக் கடிக்குதே...! - >பொன் பிரபாகரன் - ----------------------------------------- - சமைக்க மாட்டேன் ...

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Posted: 05 Jul 2014 07:38 AM PDT

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று தான் நம் ஈகரை, சிவாவின் மனதில் தமிழையும், தமிழர்களையும் இணைக்கும் இணைய தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் புள்ளியாக, வெளிப்பாடாக உருவெடுத்தது. நீண்ட நாட்கள் தனி முயற்சியில் துவங்கி, புலம்பி, போராடி தன்னந்தனியாக பதிவுகளை விடாமுயற்சியுடன் சிறப்புற பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்களை தாமாகவே விரும்பி வந்து இணையச் செய்து இன்று தமிழ் தளங்களின் வரிசையில், தனக்கென ஒரு நிலையான புகழை ...

எனக்கு தண்ணில கண்டம் இல்லை..!

Posted: 05 Jul 2014 07:34 AM PDT

- - தலைவர் என்ன, தேர்தல் கமிஷனும், ஃபைனான்ஸ் கம்பெனியும் ஒண்ணுதான்னு சொல்றாரே..? - தலைவருக்கு டெபாசிட் கிடைக்கலையாம்...அதான்! - >வி.சாரதிடேச்சு - -------------------------------------------- - நீங்க இதே மாதிரி குடிச்சிங்கன்னா சீக்கிரம் செத்து போயிடுவீங்க...! - எனக்கு தண்ணில கண்டம் இல்லைன்னு ஜோசியர் சொல்லியிருக்கிறார், டாக்டர்...! - >வி.சாரதிடேச்சு - ------------------------------------------ - எதிரி மன்னனுக்கு நல்லா பாடம் புகட்ட வேண்டும் மன்னா...! - சிபிஎஸ்சி சிலபஸிலா, ...

எப்போதும் வேண்டும் எனக்கு..!

Posted: 05 Jul 2014 07:20 AM PDT



---

இனிமையாய்பேசிப் பழகி இருந்தேன்!
இனிமை இரத்தத்தில் என்றார்! - இனிசுலின்
சப்பாத்தி, ராகி, சகல பிணி மாத்திரைகள்
எப்போதும் வேண்டும் எனக்கு!

-
--------------------------------------
>நெல்லை ஆ.கணபதி, (அமுதசுரபி)

செசெ வின் மீண்டும் மீண்டும்

Posted: 05 Jul 2014 07:18 AM PDT

மீண்டும் மீண்டும் தாளாது தயங்காது முன்னேறு தடை எல்லாம் துகளாகும் முன்னேறு வீர விளையாட்டு களமும் இதுதான் மதி நுட்ப விளையாட்டு களமும் இதுதான்[தாளாது...   பொழுதெல்லாம் உனக்காக முன்னேறு புறம் காட்ட எண்ணாதே முன்னேறு சோதனைகள் சோதித்து பார்க்க வேண்டும் சாதனையை மெய்யாக்கி காட்ட வேண்டும்[பொழுதெல்லாம்...   சோம்பல்களை  தாள்ளி வைத்து முன்னேறு எதிலும் சுருசுருப்பாய் நாட்டத்தோடு முன்னேறு கானல் செயல் உன்னை விட்டு விலகி போகும் கனவு கொண்ட காச்சி எல்லாம் நடந்தே தீரும்[சோம்பல்களை...   தலைகனத்தை ...

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி

Posted: 05 Jul 2014 06:07 AM PDT

வணக்கம் உறவுகளே............

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி அதில் முக்கியமாக கிழமை மற்றும் தமிழ் தேதி அவசியம் வரவேண்டும்...... தெரிந்தவர்கள் சற்று விரைந்து உதவுங்கள்..............

நன்றியுடன்
உங்கள் மாணிக்...................

விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது

Posted: 05 Jul 2014 05:55 AM PDT

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மலேசியாவில் மீண்டும் தொடங்க முயன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக 4 விடுதலைப்புலி தலைவர்களை மலேசிய போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஒருவர் சென்னையில் அமெரிக்க தூதரக தாக்குதல் சதியில் தொடர்புடையவர் ஆவார். 30 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்தது இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகளின் 30 ஆண்டு கால போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கை ...

சம்பூர்ண ராமாயணம் உதவி தேவை

Posted: 05 Jul 2014 05:55 AM PDT

நண்பர்களுக்கு, பல வருடங்களுக்கு முன் திருச்சி வானொலி ஒளிபரப்பிய, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய சம்பூர்ண ராமாயணம் என்ற இசை நாடகத்தை பெறும் வழியை தெரிவித்தால் மிக்க நன்றியுடையவனாவேன்.அதில் சீர்காழி கோவிந்தராஜன்,டி.எம்.சவுந்தரராஜன் போன்றோர் பங்குபெற்றிருப்பார்கள்.அல்லது யாரிடமாவது அந்த ஒலிநாடா இருந்தால் mp3 வடிவில் தந்து உதவவும்.நன்றி

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 05 Jul 2014 05:50 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Posted: 05 Jul 2014 05:43 AM PDT

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ...

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?

Posted: 05 Jul 2014 04:13 AM PDT

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள். ஒட்டக்கூத்தர் சொன்னார், "எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி" அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் ...

செப்டம்பர் மாதத்துடன் நிறுத்தப்படுகிறது கூகுளின் ஆர்குட்

Posted: 05 Jul 2014 03:16 AM PDT

கூகுள் நிறுவனத்தின் சமூக இணைய தளமான ஆர்குட்டை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சமூக இணைய தளமான ஆர்குட் கடந்த 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது நல்ல முன்னேற்றத்தையையே கண்டது. ஆனால் அதே ஆண்டு பேஸ்புக் இணைய தளமும் பயன்பாட்டுக்கு வந்ததால், ஆர்குட்டின் பயன்பாடு குறையத் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரேசிலிலும், இந்தியாவிலும் மட்டுமே இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துபவர்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த 2010 ...

கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்

Posted: 05 Jul 2014 03:15 AM PDT

கரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பவளப் பாறைகள் 20 ஆண்டுகளுக்குள் முற்றாக அழிந்துவிடக் கூடும் என இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (ஐயுசிஎன்) கூறியுள்ளது. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தகவல்களின்படி, 1970களில் இருந்ததைவிட 50 சதவீதம் இந்தக் பவளப் பாறைகள் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. அதிக அளவிலான மீன் பிடித்தலும் நோய்களுமே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், இந்த அழிவு தொடரும் என்றும் ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் ...

பழைய பஞ்சாங்கம் வேண்டும் (1987)

Posted: 05 Jul 2014 02:50 AM PDT

என் தோழருக்கு பழய பஞ்சாங்கம் வேண்டுமாம் (1987) . பஞ்சாங்கம்  பிரதி அல்லது கிடைக்கும் இடத்தை தெரிவிக்கவும் உரவுகளே !

என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார்

Posted: 05 Jul 2014 02:50 AM PDT

என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் - தமிழருவி மணியன் விஜயகாந்துக்கு சவால் தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிட தயார்; என்னை விட ஒரு வாக்கு விஜயகாந்த் கூடுதலாக வாங்கிவிட்டால் நான் அரசியலில் இருந்தே முழுமையாக ஒதுங்கிவிடுகிறேன் - இந்த சவாலை விஜயகாந்த் ஏற்க தயாரா என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ...

கவிதையில் யாப்பு

Posted: 04 Jul 2014 11:48 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 04 Jul 2014 10:51 PM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?

Posted: 04 Jul 2014 09:35 PM PDT

இரு காரணங்களால் இப்பிரச்னை வரலாம். முதல் காரணம், இரவில் நீங்கள் உறங்கும் போது சளி, மூச்சுக்குழாயின் பின்புறம் வழியாக நுரையீரலுக்குள் செல்வதால் இருக்கலாம். இண்டாவதாக, இரவில் லேட்டாக சாப்பிட்டு, உடனே படுத்து விடுவதால் இருக்கலாம். உணவு சரியாக ஜீரணம் அடையாமல், படுத்தவுடன் உணவுத்துகள் மூச்சுக்குழாய்க்குள் வருவதால் தொந்தரவு ஏற்படும். எனவே உடன் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக மாற்றிக் கொள்வதுதான். இரவு 7 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிட்டு ஒருமணி ...

குற்றங்களும் காரணமும்

Posted: 04 Jul 2014 09:32 PM PDT

பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்கின்ற மூன்று தீவிரமான சமூகப் பிரச்னைகள் அமெரிக்க ஊடகங்களில் அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், கல்வி நிறுவனங்களில் பெண்களை மானபங்கம் செய்தல், மரண தண்டனை விதிக்கப்பட்டவரைக் கொடூரமாகக் கொல்லுதல் ஆகியவை. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்று தோன்றலாம். ஆனால், இந்த மூன்றுக்கும் பொதுவானதொரு காரணம் உள்ளது. அண்மைக்காலங்களில் கொடூரமாக நடைபெற்ற சில கொலைச் சம்பங்களைப் பார்ப்போம். (1) 2013 செப்டம்பர் 16ஆம் தேதி வாஷிங்டனில் ...

எழுந்து நடந்தால் இமயமலையும் வழி கொடுக்கும்..!

Posted: 04 Jul 2014 09:30 PM PDT

உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும். - உன் நாவில் (பேச்சில்) இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும் - அன்னை தெரசா - ————————————- - பிறக்கும்போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனேயே பிறக்கிறார்கள். - உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய். - ————————————- - எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும் உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (255)

Posted: 04 Jul 2014 09:20 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பாமரர் தேவாரம்

Posted: 04 Jul 2014 09:03 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

ரமணியின் கவிதைகள்

Posted: 04 Jul 2014 08:44 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனே தேர்வு...!

Posted: 04 Jul 2014 04:59 PM PDT

தேர்தல் முடிந்த பின்னும் கருத்துக் கணிப்பு ஜுரம் பத்திரிகைகளிடம் இன்னும் முடியாமலே உள்ளது. ஆனால், இந்த கருத்துக் கணிப்புகள் அரசியலைப் பற்றியது அல்ல, அழகைப் பற்றியது. சமீபகாலமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் ஏதாவது ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. இப்போதுதான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து முடிந்தது. அடுத்து மனம் கவர்ந்த நடிகை யார் என்றார்கள்...இப்படி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதில் அடுத்ததாக உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனேவைத் ...

மோசமான வரவேற்பை பெற்றது இந்தியாவில் தான்: ஏர் ஏசியா

Posted: 04 Jul 2014 04:56 PM PDT

மலேசியாவின் குறைந்த கட்டண சேவை நிறுவனமான ஏர் ஏசியா கடந்த மாதம் இந்தியாவில் தனது விமான சேவையைத் தொடங்கியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கும், கோவாவிற்கும் இரண்டு விமான சேவைகள் இந்நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 13 ஆண்டுகளுக்குமுன் 2,00,000 பயணிகளுடன் இருந்த இந்த விமான நிறுவனத்தின் சேவை தற்போது 51 மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. தங்களது இந்திய செயல்பாடு குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டோனி பெர்னாண்டஸ் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் ...

மார்க்கோனி

Posted: 04 Jul 2014 03:13 PM PDT

காற்றலைகளில் இசையை, செய்தியை வீட்டுக்கு சுமந்துவருவதில் முன்னோடியாக விளங்குவது வானொலி. இதன் கண்டுபிடிப்புக் கதை சுவாரசியமானது. வானொலியைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி. இத்தாலியில் உள்ள போலோக்னோவில் 24-4-1874அன்று குக்லியெல்லோ என்னும் கிராமத்தில் பிறந்தார் மார்க்கோனி. சின்ன வயதில் எதையும் ஆராய்ச்சி மனப்பான்மையுடனே பார்ப்பார். பியானோ வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். ஒருநாள், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது மாணவர்கள் எழுப்பும் சத்தத்தின் எதிரொலியை கவனித்தார். இதைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™