Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Posted: 21 Jul 2014 10:40 PM PDT

ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன் பேரில் புதிய லோக்பால் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. லோக்பால் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவர கணக்கை தெரிவிப்பது தொடர்பாக நேற்று புதிய விதிமுறைகள்

சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறை

Posted: 21 Jul 2014 10:34 PM PDT

இந்தியாவின் 67–வது சுதந்திர தினம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது பேப்பரில் தயாராகும் மூவர்ண தேசியக் கொடிகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறையின் பொதுப்பிரிவு இயக்குனர் சியாமளாமோகன் இது தொடர்பாக எல்லா மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ஆஸ்பத்திரியில் கைதி சுட்டுக்கொலை: டாக்டர் வேடத்தில் வந்தவர் வெறிச்செயல்

Posted: 21 Jul 2014 10:31 PM PDT

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.ஓய்.அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் 17–ம் எண் படுக்கையில் கொலை வழக்கில் தொடர்புடைய ஜிதேந்திரா என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் படுக்கையில் துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்தது. இதையடுத்து அந்த கைதி 12–ம் எண் படுக்கைக்கு மாற்றப்பட்டார். முதலில் அவர் படுத்திருந்த படுக்கையை 17–ம் எண் சுத்தம் செய்யப்பட்ட பிறகு அதில்

5 மாநிலங்களில் காங்கிரசுக்கு தலைவலி: ராகுலை எதிர்த்து விமர்சனம்

Posted: 21 Jul 2014 10:17 PM PDT

மராட்டியம், அசாம், மேற்கு வங்காளம், அரியானா, காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ராஜினாமாவாலும், போர்க்கொடியாலும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் முதல்–மந்திரி பிருதிவிராஜ் சவானை எதிர்த்து தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பதவியை ராஜினாமா செய்தார். 2005–ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவர் ''காங்கிரஸ் கட்சி மோசமான நிர்வாகத்தை கொடுத்துள்ளது. எனவே சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வியே கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.

அமர்நாத் யாத்ரீகர்கள் முகாமில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

Posted: 21 Jul 2014 10:03 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். கடந்த 24 தினங்களாக கரடு

நவீன வசதிகளுடன் திருப்பதியை பெருநகரமாக்கும் பணி தொடங்கியது

Posted: 21 Jul 2014 09:50 PM PDT

திருப்பதி ஆன்மிக தலமாக உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் முதன்மையாக விளங்கும் திருப்பதியை அனைத்து வசதிகளுடன் கூடிய பெரு நகரமாக்க (மெகாசிட்டி) ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்படி திருப்பதி நகரில் வளையம் போல் வட்ட வடிவ சாலைகள் அமைக்கப்படுகிறது. மேலும் மேம்பாலம், பறக்கும் சாலைகள், சுரங்க

தொகுதி பக்கம் வராத எம்.பி. ஹேமமாலினி: மதுரா மக்கள் ஆத்திரம்

Posted: 21 Jul 2014 09:46 PM PDT

நடிகை ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்த்து எடுக்கப்பட்டார். ஹேமமாலினி மும்பையில் வசிக்கிறார். எம்.பி. என்ற முறையில் டெல்லியில் அவருக்கு அரசு வீடு உள்ளது. தேர்தல் வெற்றிக்கு பிறகு ஹேமமாலினி தொகுதியை கண்டு கொள்ளவில்லை என்று மதுரா மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜூன் மாதம் 2–வது வாரத்தில் அவர் மதுரா வந்ததுடன் சரி, அதுவும் ஒரு நாள் மட்டுமே மக்களை சந்தித்தார். அதன் பிறகு அவரை பார்க்க முடியவில்லை என்று தொகுதி மக்கள் புகார் கூறினார்கள்.

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும்: கனிமொழி

Posted: 21 Jul 2014 09:43 PM PDT

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து டெல்லி மேல்– சபையில் நடந்த விவாதத்தின்போது போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:– பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. கடந்த வாரமே இதுபற்றிய விவாதம்

இரண்டரை வயது மழலையை பாலியல் பலாத்காரம் செய்த மிருகம் கைது

Posted: 21 Jul 2014 09:28 PM PDT

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபுவா மாவட்டத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். மாநில தலைநகர் இந்தூரில் இருந்து சுமார் 175 கிலோ மீட்ட தூரத்தில் உள்ள லம்பேலா கிராமத்தை சேர்ந்தவன், தனு புரியா(30). அந்த கிராமத்தில்

மு.க.ஸ்டாலின், உதயநிதி மீதான நில அபகரிப்பு வழக்கு: 31-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 21 Jul 2014 08:08 PM PDT

'சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வேணுகோபால் ரெட்டி என்கிற தங்களின் பினாமியின் பெயருக்கு மிரட்டி வாங்கியதாக' சென்னை ஐகோர்ட்டில் சேஷாத்ரி என்பவர் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் மனுதாரர் சேஷாத்ரி தரப்பில் பரஸ்பரம் சமரசம் செய்து கொண்டதாக இருவரும் ஐகோர்ட்டில்

மேற்கு வங்கத்தில் மூளை வீக்க நோயால் 60 பேர் பலி

Posted: 21 Jul 2014 05:21 PM PDT

வட மேற்கு வங்கத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மூளை வீக்க நோயால் 60 பேர் வரை இறந்திருப்பதாக அம்மாநில சுகாதாத்துறை தலைமை இயக்குனரான பிஸ்வரஞ்சன் சத்பதி கூறியுள்ளார். இப்பகுதி முழுவதும் இந்நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளளதாக கூறியுள்ள அவர், நிலைமை அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார். நேற்று வடமேற்கு வங்கத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் கடந்த ஜூலை 7ந் தேதி முதல் ஜூலை 20ந் தேதி வரை இந்த 60 பேரும் இறந்ததாக தெரிவித்தார். இது வரை 344 பேர் இந்நோயால்

பெங்களூரில் சிறுமியை கற்பழிப்பு விவகாரம்: போலீஸ் கமிஷனர் இடமாற்றம்

Posted: 21 Jul 2014 04:34 PM PDT

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத நபர் 6 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தினர். நான்காவது நாளான நேற்று போராட்டம் நடத்தி பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். இந்நிலையில் நேற்று மாலை பெங்களூர் நகர காவல் ஆணையாளரான ராகவேந்திர ஆராட்கரை இடமாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. புதிய ஆணையாளராக எம்.என்.ரெட்டி நியமிக்கப்பட்டார். உடனடியாக ரெட்டி காவல் ஆணையர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின் அவர் கூறியதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை

காவிரியில் கூடுதல் தண்ணீர்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு

Posted: 21 Jul 2014 01:45 PM PDT

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. கர்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நடுவர் மன்றம் ஆண்டுதோறும் ஜூன் முதல் மே மாதம் வரை மாதந்தோறும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் நடுவர் மன்றத்தில் முறையிட்டன. இந்த பிரச்சினை தொடர்பாக மூன்று மாநில அரசுகளும் தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுக்கள்

ஈராக்கில் சிக்கி தவித்த 180 பேர் இந்தியா வந்தனர்

Posted: 21 Jul 2014 12:43 PM PDT

ஈராக் நாட்டில் உள் நாட்டு போர் மூண்டதால் அங்குள்ள பல நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் அந்நகரங்களில் பணியாற்றி வந்த இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. எனவே அந்நாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு படிப்படியாக மீட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தனி விமானம் மூலம் மேலும் 180 இந்தியர்கள் தாயகம் வந்து சேர்ந்தனர். இவர்களை அனைவரையும் சேர்த்து இதுவரை அந்நாட்டிலிருந்து சுமார் 3500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஏற்கனவே 2500 விமான டிக்கெட்டுகளை வழங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் வேலை செய்த நிறுவனங்களும் 1000 விமான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிபதியின் பதவி நீட்டிப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது: முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் ஒப்புதல்

Posted: 21 Jul 2014 11:18 AM PDT

நீதிபதிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியிருந்தார். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு குறிப்பிட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தபோதும், அப்போதைய மாநில அரசின் தலையீட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டது என்று கட்ஜு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து இன்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். கட்ஜுவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க உறுப்பினர்கள வலியுறுத்தினர்.

ஆந்திராவில் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி

Posted: 21 Jul 2014 09:10 AM PDT

ஆந்திராவில் ரூ.1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

டெல்லி சட்டசபையை உடனே கலைக்க ஆம் ஆத்மி வலியுறுத்தல்

Posted: 21 Jul 2014 06:56 AM PDT

டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வரும் நிலையில், சட்டசபையை உடனே கலைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 24 பேரும் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை

பார்வையற்ற மாணவர்களை கொடூரமாக அடித்த ஆசிரியர்: ஆந்திராவில் பரபரப்பு

Posted: 21 Jul 2014 06:16 AM PDT

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வைற்ற 3 மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் கொடூரமாக அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா திம்மபுரத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் இரண்டு நாட்களுக்குப் பிறகு உள்ளூர்

மோடி அரசுக்கு எதிராக பிரச்சாரம்: மம்தா அழைப்பு

Posted: 21 Jul 2014 05:41 AM PDT

விலைவாசி உயர்வை மையப்படுத்தி மோடி அரசுக்கு எதிராக பிரச்சாரம் தொடங்க உள்ளதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது:- ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் ரெயில்

ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்

Posted: 21 Jul 2014 05:19 AM PDT

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஆளுநர் அஜிஸ் குரேஷி, கடவுளால்கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். சமீபத்தில் லக்னோவின் மோகன்லால்கங் பகுதியில் 35 வயது பெண்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™