Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


முன்னாள் எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் 75 சதவீதமாக அதிகரிக்க முடிவு

Posted: 27 Jul 2014 11:02 PM PDT

பாராளுமன்றத்தில் எம்.பியாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்தார். அப்போது மாதம் ஒன்றுக்கு, முன்னாள் எம்.பிக்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்திராகாந்தி இந்த திட்டத்தை கொண்டு வந்த போது, 5 ஆண்டுகள் எம்.பியாக இருந்தவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று

சகரான்பூரில் மக்கள் வசதிக்காக 4 மணி நேர ஊரடங்கு உத்தரவு தளர்வு

Posted: 27 Jul 2014 10:39 PM PDT

உத்தர பிரதேசத்தில் உள்ள சகரான்பூரில் நிலப்பிரச்சினை தொடர்பாக இரண்டு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் ஊரங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடக்கும் பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருடகள் வாங்குவதற்காக

ஓடும் ரெயிலில் விமான நிலைய பெண் ஊழியரை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது

Posted: 27 Jul 2014 10:17 PM PDT

கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆதிக் (வயது 38). இவர் அந்த பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவியின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாவக்காடு ஆகும். இவரது மனைவி பிரசவத்திற்காக சாவக்காடுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்ததையொட்டி ஆதிக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளா சென்று மனைவி, குழந்தையை பார்த்தார். பின்னர் நேற்று எர்ணாகுளம்– திருவனந்தபுரம் ரெயிலில் திருச்சூரில் ஏறினார். அப்போது ஆதிக் மது போதையில் இருந்தார்.

ரெயில் பெண் பயணியிடம் ஆடையை களைந்து சோதனை: பரிசோதகர்கள் 2 பேர் சஸ்பெண்டு

Posted: 27 Jul 2014 10:13 PM PDT

மும்பை அந்தேரி ரெயில் நிலையத்தில் இருந்து 65 வயது பெண் ஒருவர் மின்சார ரெயிலின் முதல்–வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். அப்போது, பெண் பரிசோதகர்கள் 2 பேர் அந்த பெட்டியில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட்களை வாங்கி சோதனை செய்தனர். இதில் அந்த 65 வயது பெண் 2–வது வகுப்பு டிக்கெட் வைத்திருந்தது தெரிய வந்தது.

இடுக்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது

Posted: 27 Jul 2014 10:03 PM PDT

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இந்த ஆலயத்தின் சார்பில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏழை பெண்கள் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தனர்.

பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய நிலவறைகளை நவீனபடுத்தி நகைகளை வைக்க ஏற்பாடு

Posted: 27 Jul 2014 09:42 PM PDT

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ரகசிய நிலவறைகளில் பல கோடி மதிப்புள்ள வைர, தங்க நகைகள் புதையல் கண்டு பிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக வந்த இந்த தங்க நகைகள் கோவிலில் உள்ள 2 நிலவறைகளில் வைக்கப்பட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த நகைகளை

வாடியாவை பிரீத்தி ஜிந்தா கடுமையாக திட்டினார்: தொழில் அதிபர் வாக்குமூலம்

Posted: 27 Jul 2014 08:50 PM PDT

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது கடந்த ஜூன் மாதம் பரபரப்பு மானபங்க புகார் செய்தார். மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே 30-ந் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது, பலரது

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் 8 இந்திய பறவைகள்

Posted: 27 Jul 2014 08:41 PM PDT

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் மற்றும் சர்வதேச பறவைகள் வாழ்வு அமைப்புகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் நியமனம்: சட்ட நிபுணர்களிடம் மத்திய அரசு இன்று கருத்து கேட்கிறது

Posted: 27 Jul 2014 08:15 PM PDT

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனம், தற்போது 'காலேஜியம்' என்னும் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக இதில் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன், காலேஜியத்தில் இடம் பெற்றிருந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதிகள் 3 பே

வரைபடம் வெளியிட்ட விவகாரம்: கூகுள் நிறுவனத்திடம் சி.பி.ஐ. விசாரணை

Posted: 27 Jul 2014 05:21 PM PDT

இணையதள உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் 'மேபதோன் 2013' என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை இணைத்து அந்த நிறுவனம் வரைபடம் வெளியிட்டது.

மோசமான வானிலையால் கேதர்நாத் யாத்திரை ஒத்திவைப்பு

Posted: 27 Jul 2014 04:53 PM PDT

இமய மலையில் உள்ள திருத்தலங்களில் பத்திரிநாத், கேதார்நாத் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை ஆகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் இவை அமைந்துள்ளன. கடந்த ஆண்டு யாத்திரை காலத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல்

Posted: 27 Jul 2014 04:33 PM PDT

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஏற்கனவே சில முறை ஊடுருவிய சீன ராணுவத்தினர், இந்திய அரசின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பின்னர் பின்வாங்கி தங்கள் எல்லைப்பகுதிக்குள் சென்றனர். இந்த நிலையில், சர்வதேச எல்லையை தாண்டி, லடாக் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் டெம்சோக் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் கடந்த

உத்தரபிரதேச கலவரம் குறித்து நரேந்திர மோடியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Posted: 27 Jul 2014 04:29 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் நகரில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே நேற்று முன்தினம் நடந்த பயங்கர மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 38 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிட நேரம்

ஆளில்லாத ரெயில்வே கேட்டில் விபத்துகளை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை: சதானந்த கவுடா

Posted: 27 Jul 2014 02:47 PM PDT

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா மங்களூரில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆளில்லாத ரெயில் கேட்டில் நிகழும் விபத்துகளை தடுக்க ரெயில்வே துறை பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

பீகாரில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட மூவர் பலி

Posted: 27 Jul 2014 01:23 PM PDT

பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பாகல்பூர் மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய தொடர்மழை பெய்தது. அங்குள்ள சுவரூப்சக் கிராமத்தில் மழைக்கு இடையிலும் சிலர் வயல்களில் நெற்பயிர்களை நடவு செய்துக் கொண்டிருந்தனர்.

உத்தரகாண்டில் தொடர்மழை: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

Posted: 27 Jul 2014 01:02 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை நீர் வெள்ளமாக பெருகி பள்ளத்தாக்கான பகுதிகளை நோக்கி பாய்ந்து வருவதால், சில மாவட்டங்களில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் குழந்தைகளை காப்பாற்ற போலியோ விளம்பர தூதராக தயார்: அமிதாப் பச்சன்

Posted: 27 Jul 2014 12:56 PM PDT

போலியோ நோயை எதிர்த்து போராடி, அந்நோய்க்கு எதிரான பிரச்சாரங்களின் வாயிலாகவும், சொட்டு மருந்து போன்ற தடுப்பு முறைகளின் மூலமாகவும் போலியோவை வெற்றி கொண்டு இந்நோயை முற்றிலுமாக ஒழித்த நாடாக இந்தியாவை கடந்த மார்ச் மாதம் உலக சுகாதார கழகம் அறிவித்தது.

இந்திய கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு: மத்திய அரசு முடிவு

Posted: 27 Jul 2014 12:15 PM PDT

அகஸ்டா நிறுவனத்துடன் தொடர்புடைய ஐரோப்பிய நிறுவனத்திடம் இருந்து, இந்திய கடற்படைக்கு 16 பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்தை மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது. பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் வகையில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க, ஆங்கிலோ-இத்தாலி

நேபாள பயணம் வெற்றிகரமாக அமைந்தது: மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேட்டி

Posted: 27 Jul 2014 12:01 PM PDT

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் 3 நாள் பயணமாக நேபாளம் சென்றார். அங்கு ஜனாதிபதி அதிபர் ராம் பரான் யாதவ், பிரதமர் சுஷில் கொய்ராலா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாண்டா ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு வகைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

கட்ஜுவின் குற்றச்சாட்டு வெட்டிப் பேச்சு: மவுனம் கலைக்கிறார், மன்மோகன் சிங்

Posted: 27 Jul 2014 11:07 AM PDT

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு சமீபத்தில் முன்னாள் காங்கிரஸ் அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார். கட்ஜு கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™