Tamil Star |
- ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் நியமனம்!
- மின்னல் நேரத்தில் கனடாவில் டிரக் ஒன்றை தாக்கிய மின்னல்!
- பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நகர சபை தொழிலாளர்களிற்கு உதவும் லேடிபக்ஸ்!
- ஆச்சி மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம்! தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
- முப்பது தியேட்டர்களில் நெடுஞ்சாலை கேரளாவில் நெடுஞ்சாலைக்கு கிடைத்த வெற்றி!
- கோர்ட்டுக்கு இழுக்காம விட மாட்டேன் அஞ்சலியை! அடங்காத களஞ்சியம் அதிரடி
- லுக்கும், மாஸும் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது: விஜய் அப்படியே தான் இருக்கிறார்! ஒளிப்பதிவாளர் மதி பேட்டி
- முட்டையை விழுங்கும் பாம்பின் மிக அரிய காட்சி!
- ஆழ்துளையில் விழுந்த குழந்தைகளை மீட்க ரோபோ வந்தாச்சு!
- இப்படி அசத்துற இவங்க வயசு என்னனு தெரியுமா?… வெறும் 2 வயசு தாங்க!
- உலகத்துல பயமில்லாத மனிதர் இவராகத்தான் இருப்பாரோ?…. முதலையுடன் ஆனந்த குளியல்
- 1 நிமிடத்திற்கு 30 புரோட்டாவா?
- விபத்தில் சிக்கி தீப்பற்றி வெடித்துச் சிதறும் மோட்டார் சைக்கிள்!
- இந்தியாவில் இருந்து மண்ணை இறக்குமதி செய்து பிட்ச் அமைக்கிறது! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
- நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் 300 பேர் பலி!
- நவீன உலகில் அதிவேகத்தில் செயல்படும் ஸ்டுரோன்டியம் நிட்ரோ பிளஸ்
- ஓபன் டென்னிஸ் இறுதிக்கு முன்னேறினார் ஷரபோவா!
- உலக கோப்பை ஹாக்கி இங்கிலாந்து அணி வெற்றி!
- மாங்டன் நகரில் துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் பலி பேஸ்புக்கில் மர்மநபர் சவால்
- இலங்கைக்கு முதலிடமில்லை! பூட்டானுக்கே முதல் வெளிநாட்டுப் பயணம்!!
| ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் நியமனம்! Posted: 06 Jun 2014 11:38 PM PDT
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் என்ற மனித உரிமை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த நியமனம் குறித்து நேற்றிரவு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இவரை ஐ.நா விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணைக் குழுவைத் தெரிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் அது இறுதிப்படுத்தப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்ததாகவும், தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசாரணைகள், இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைகள் பத்து மாதங்களில் நிறைவடையும் என்றும் ஐ.நா தகவல்கள் கூறுகின்றன. வரும் ஜூலைக்கும், நொவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், சிறிலங்காவில் இந்த விசாரணைக்குழு களப் பயணங்களை மேற்கொள்வதற்கு ஐ.நா திட்டமிட்டுள்ள போதிலும், சிறிலங்கா இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மின்னல் நேரத்தில் கனடாவில் டிரக் ஒன்றை தாக்கிய மின்னல்! Posted: 06 Jun 2014 11:33 PM PDT
அல்பேர்ட்டாவின் கிராமிய பகுதியினூடாக செல்லும் பெருந்தெருவில் திகிலூட்டும் திருப்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத்திருப்பம், வியத்தகு நேரத்தில் ஏற்பட்ட மின்னல் ஒரு வாகனத்தில் தாக்கியது. அந்த வாகனத்திற்குள் வயதான தம்பதியர் அகப்பட்டுக் கொண்டனர். அல் மற்றும் பெறி தம்பதிகள் பெருந்தெரு 14-ல் பயணம் செய்து கொண்டிருந்த போது அல்பேர்ட்டாவில் தீப்பிழம்பு ஒன்று அவர்களது சில்வர் செவி பிக்அப் டிரக்கை விழுங்கிவிட்டது. இது ஒரு ஒலிவிசை அதிரொலிபோன்ற பெரிய சத்தத்தை எழுப்பியதென அல் பெறி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். எங்கள் உயிர்கள் என் கண்கள் முன்னால் கடந்து சென்றது போல் இருந்ததென அவர் கூறியுள்ளார். மின்னல் தாக்கியதும் வாகனத்தின் காற்றுப்பைகள் திறந்து பாகங்களாக பரவியது. டிரக்கின் ஒரு பகுதி வெப்பத்தினால் முற்றாக உருகிவிட்டது. புகை பரவத்தொடங்கியுள்ளது. தங்களால் பார்க்க முடியவில்லை என்றும் காதுகளிற்குள் மணியடிப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். வாகனத்தின் கதவுகள் யன்னல்கள் மூடப்பட்டுவிட்டன. யன்னல்களை திறக்க முயன்றும் முடியவில்லை. தங்களால் டிரக்கிலிருந்து தப்பிக்க முடியாதென நினைத்துள்ளனர். இதேசமயம் அப்பகுதியால் சென்ற ஆர்சிஎம்பி அதிகாரி கண்டதால் இவர்களை தப்பிக்க வைத்துள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. சில நாட்களின் பின்னர் இவர்கள் தங்கள் 47-வது திருமண நாளை கொண்டாடினர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நகர சபை தொழிலாளர்களிற்கு உதவும் லேடிபக்ஸ்! Posted: 06 Jun 2014 11:17 PM PDT
இன்று காலை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் விக்டோரியா நகர சபை ஊழியர்களின் பூச்சிகளை அழிக்கும் முயற்சிக்கு உதவுவதற்காக 50,000 லேடிபக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150,000 லேடிபக்ஸ் விக்டோரியா தோட்டங்களை இந்த கோடைகாலத்தில் சேடிப்பேன்கள், வண்டு லார்வாக்கள், சிலந்தி பூச்சிகள் போன்ற பூச்சி வகைகளில் இருந்து காப்பாற்றி விடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லிகளை பாவிக்காது இயற்கையாக கட்டுப்படுத்த தாங்கள் முயல்வதாக விக்டோரியா சுற்றுச்சூழல் துறை தொழில்நுட்பவியலாளர் மைக்கல் வில்சன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தாங்கள் விடுவிப்பதாகவும் முழுத்தொகை லேடிபக்ஸ் ஐயம் விடுவிக்க 2-3 வாரங்கள் வரையில் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார். விடுவிக்கப்பட்ட லேடிபக்ஸ் அடுத்த சில வாரங்களில் ஒன்று சேர்ந்து முட்டைகளை இடும். முதிர்ந்த லேடிபக்ஸ் நாளொன்றிற்கு 5-10 செடிப்பேன்களை சாப்பிடும் போது அவைகளின் குட்டிகள் 50 செடிப்பேன்கள் வரை சாப்பிடும் என கூறப்படுகின்றது. விக்டோரியா மக்கள் தங்கள் கொல்லைப்புறங்களில் குடை-வடிவிலான பூக்கன்றுகளை நடுவதன் மூலம் லேடிபக்ஸ் ஐ அவர்களது கொல்லைப்புறங்களை நோக்கி ஈர்க்க முடியும். குடைவடிவிலான பூக்களில் தேன் மற்றும் மகரந்தம் அதிக அளவில் காணப்படுவதே இதற்கு காரணமாகும். கிரநியம்ஸ், அகிலம், கொரியோப்சிஸ் போன்ற பூக்களும் கொத்தமல்லி, வெந்தயம், பெருஞ்சீரகம் போன்ற மூலிகைகளும் இவற்றுள் அடங்கும். உருளைக்கிழங்கு மற்றும் முட்டைக்கோஷ் போன்ற மரக்கறி வகைகளும்லேடிபக்ஸ் ஐ ஈர்க்க கூடியவை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆச்சி மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம்! தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் Posted: 06 Jun 2014 02:14 AM PDT
நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது. அடுத்த 28 மணி நேரத்துக்கு மனோரமா தீவிர சிகிச் சைக்குள்ளேயே வைக்கப்பட்டு இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மனோரமாவுக்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். மூட்டுவலிக்கு அறுவைசிகிச்சை செய்தார். குளியல் அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முப்பது தியேட்டர்களில் நெடுஞ்சாலை கேரளாவில் நெடுஞ்சாலைக்கு கிடைத்த வெற்றி! Posted: 06 Jun 2014 02:04 AM PDT
ஆரி, ஷிவதா நடித்து கிருஷ்ணா இயக்கத்தில் தமிழில் வெளியான படம் நெடுஞ்சாலை. படத்துக்கு நல்ல விமர்சனங்கள்க கிடைத்தன. இந்தப் படம் சமீபத்தில் கேரளாவில் ரிலீஸானது. ஆரம்பத்தில் பத்து தியேட்டர்களில் மட்டும்தான் திரையிட்டிருக்கிறார்கள். படம் நன்றாக இருப்பதாக செய்தி பரவ, சட்டென்று பிக்கப்பாகிவிட்டது படம். ரசிகர்களின் அமோக வரவேற்பால் இப்போது முப்பது தியேட்டர்களில் திரையிடவிருக்கிறார்களாம் நெடுஞ்சாலையை. இது குறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், "இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு அடுத்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்ற பாதையை போட்டுக்கு கொடுத்திருக்கிறது," என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோர்ட்டுக்கு இழுக்காம விட மாட்டேன் அஞ்சலியை! அடங்காத களஞ்சியம் அதிரடி Posted: 06 Jun 2014 01:31 AM PDT
என் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காவிட்டால், வேறு எந்த தமிழ்ப் படத்திலும் அஞ்சலியை நடிக்க விடமாட்டேன், என்று ஆவேசப்பட்டுள்ளார் இயக்குநர் மு களஞ்சியம். சமீபத்தில் களவு தொழிற்சாலை படத்தின் டப்பிங் பேச வந்திருந்த மு.களஞ்சியத்திடம் பேசினோம்... "நான் இயக்கிய பூமணி படத்தை மராத்தியில் அதுல் குல்கர்ணியை வைத்து இயக்க உள்ளேன்..அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருகிறது. இந்த களவு தொழிற்சாலை படத்தில் உளவுதுறை அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். கார்த்திகேயன் என்ற புதியவர் இயக்கும் கோடைமழை என்ற படத்தில் வெள்ளைத்துறை என்ற என்கவுண்டர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன் என்றார். அவரை இடைமறித்து அது சரி நீங்கள் ஹீரோவாக அஞ்சலி ஹீரோயினாக நடித்த 'ஊர் சுற்றி புராணம்' என்ன ஆச்சு? என்று கேட்டோம். இந்த பேர் வெச்சதாலோ என்னவோம் அஞ்சலியைத் தேடி ஊர் ஊராக சுத்திக் கிட்டுருகேன். போன வருஷம் மார்ச் மாதம் 12 நாட்கள் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடித்தார்.அதற்கு பிறகு அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டார். நானும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பிலிம்சேம்பர், கில்டு , பெப்சி, இயக்குனர் சங்கம் என்று புகார் கொடுத்தேன் விடிவுகாலம் வரவில்லை. தெலுங்கு, கன்னடம் என்று அஞ்சலி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் ஊர் சுற்றி புராணம் படத்தை மட்டும் தவிர்க்கிறார். இப்போது மீண்டு தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது அப்படி நடிப்பதாக இருந்தால் என் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்து விட்டு மற்ற படங்களில் நடிக்கலாம். இது பற்றி எல்லா சங்கங்களுக்கும் என் பிரச்சனைகளையும், பணம் முடங்கிக் கிடக்கிற விஷயங்களையும் விளக்கமாக எழுதி கொடுத்திருக்கிறேன். முடிவு தெரியவில்லை என்றால் அஞ்சலி நடிக்கிற எந்த படமும் எந்த மொழியிலும் வெளியாக முடியாதபடி நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க வேண்டியிருக்கும்... எனக்கு வேறு வழி தெரியவில்ல," என்றார். ஆக, அஞ்சலியை கோடம்பாக்கம் பக்கம் இப்போதைக்கு பார்க்க முடியாது போலிருக்கே!This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Jun 2014 01:26 AM PDT
இத்தனை ஆண்டுகளில் விஜய் அப்படியே தான் உள்ளார். ஆனால் அவரது லுக்கும், மாஸும் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது என்று ஒளிப்பதிவாளரான மதி தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 20 படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மிர்ச்சி, பாண்டியநாடு மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்கள் ஹிட்டாகின. முன்னதாக கேமராமேன் சரவணனிடம் அவர் வேலை பார்த்தார். அப்போது அவர் விஜய்யின் பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்களில் சரவணனுக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் விஜய் பற்றி கூறுகையில், நேரம் தவறாதவர் விஜய். அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது பற்றி நான் அசிஸ்டெண்டாக இருக்கையிலேயே கேள்விப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலாயுதம் படத்திற்காக டெஸ் ஷூட்டில் இருந்தேன். இத்தனை ஆண்டுகளில் விஜய் சற்றும் மாறாமல் அப்படியே தான் இருந்தார். அவருக்கு தலைக்கணம், பெரிய ஸ்டார் என்ற நினைப்பே இல்லை. அவர் கூலாக இருந்தார். ஆனால் அவரது லுக், மாஸ் ஆகியவை அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டன என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முட்டையை விழுங்கும் பாம்பின் மிக அரிய காட்சி! Posted: 06 Jun 2014 01:21 AM PDT |
| ஆழ்துளையில் விழுந்த குழந்தைகளை மீட்க ரோபோ வந்தாச்சு! Posted: 06 Jun 2014 01:17 AM PDT |
| இப்படி அசத்துற இவங்க வயசு என்னனு தெரியுமா?… வெறும் 2 வயசு தாங்க! Posted: 06 Jun 2014 01:13 AM PDT |
| உலகத்துல பயமில்லாத மனிதர் இவராகத்தான் இருப்பாரோ?…. முதலையுடன் ஆனந்த குளியல் Posted: 06 Jun 2014 01:10 AM PDT |
| 1 நிமிடத்திற்கு 30 புரோட்டாவா? Posted: 06 Jun 2014 01:07 AM PDT |
| விபத்தில் சிக்கி தீப்பற்றி வெடித்துச் சிதறும் மோட்டார் சைக்கிள்! Posted: 06 Jun 2014 12:59 AM PDT |
| Posted: 06 Jun 2014 12:55 AM PDT
ஆசிய நாடுகளின் ஆடுகளம் போலவே பிட்ச் தயாரித்து அதில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்துள்ள ஆஸ்திரேலியா, இதற்காக இந்தியாவில் இருந்து மண்ணை அள்ளிச் செல்ல உள்ளது. ஆசிய நாடுகளில் விளையாடும்போது, ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களால் சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடிவதில்லை என்பதால், இம்முடிவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டிகளில் ஆடியது முதல் இதுவரை ஆசியாவில் ஆஸ்திரேலியா 13 டெஸ்ட் பந்தையங்களில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம், ஆசிய நாடுகளின் பிட்சுகள் ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதுதான் என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 4க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததும் அந்த அணி நிர்வாகத்தை கடுமையான சிந்தனைக்குள்ளாக்கியுள்ளது. இந்தாண்டின் இறுதியில் ஐக்கிய அரசு எமிரேட்டில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டித்தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. அதற்கு முன்பாக, தங்கள் வீரர்களை ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் விளையாட செய்து, பயிற்சி அளிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் மையத்தில் ஸ்பின் பந்துக்கு சாதகமான பிட்ச் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் கூறுகையில், இந்தாண்டில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளோம். தாய்நாட்டுக்கு வெளியே சமீபகாலமாக பெரிய வெற்றியை ஆஸ்திரேலியா பெறவில்லை என்பதை கவனித்தில் வைத்து ஸ்பின் பிட்சில் ஆட பயிற்சி எடுக்க உள்ளோம் என்றார். கிளார்க் மேலும் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்டிலும் இந்தியா போன்றே பிட்சுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆசிய அணிகளில் சுமார் 3 ஸ்பின் பந்து வீச்சாளர்களாவது இருப்பதால் அவர்களை எதிர்கொள்ள சிரமமாக உள்ளது. சிறந்த டெஸ்ட் அணியாக ஆஸ்திரேலியாவை உருவாக்க ஸ்பின் பிட்சுகளில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். சில வீரர்கள் ஸ்பின் பந்துக்கு ஏற்றவாறு ஃபுட்வெர்க் சிறப்பாக செய்து ஆடுகிறார்கள், ஆனால் பெரும்பான்மையான பேட்ஸ்மேன்களால் அதை செய்ய முடிவதில்லை. எனவே ஆசிய வகை பிட்சுகளில் ஆடி பயிற்சி எடுப்பது ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல வருங்காலத்தை அளிக்கும் என்று மைக்கேல் கிளார்க் கூறினார். ஆசிய நாடுகளின் பிட்சுகளை போன்ற ஆடுகளங்களை உருவாக்குவதற்காக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், மணலை இறக்குமதி செய்ய உள்ளது. இந்திய மண் இலங்கை. பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளின் மண்ணுடன் ஒத்துப்போவதாக ஆஸ்திரேலியா கருதுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் 300 பேர் பலி! Posted: 06 Jun 2014 12:48 AM PDT
நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வட கிழக்கு நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில் நான்கு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானதாக கூறப்படுகிறது. அந்நாட்டு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக எவ்வளவு பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. கோஷே, அட்டகரா, அகபல்வா மற்றும் அகஞ்சாரா ஆகிய கிராமங்களை சேர்ந்த 300 பேர் வரை பலியாகியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. அப்பகுதி தீவிரவாதிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பலி எண்ணிக்கை எவ்வளவு என கண்டுபிடிக்க இயலவில்லை. அப்பகுதி முழுவதும் சடலங்கள் மிகுந்து கிடக்கின்றன. மக்கள் பலரும் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் பியே தெரிவித்தார். தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வடகிழக்கு பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 800 பேர் தங்கள் குடும்பங்களையும், மக்களையும் விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த வருடம் மட்டும் இங்கு தீவிரவாதிகளின் தாக்குதலில் 3000 பேர் பலியானதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவீன உலகில் அதிவேகத்தில் செயல்படும் ஸ்டுரோன்டியம் நிட்ரோ பிளஸ் Posted: 06 Jun 2014 12:41 AM PDT
நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களில் வளர்ச்சிகள் ஏற்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் செல்போன் மற்றும் கனிப்பொறி போன்றவை 90 சதவீத மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையான எலக்ட்ரானிக் பொருட்களில் நமது செயல்பாடுகள் மற்றும் தகவல்களை சேமித்துவைக்க பயன்படுவது ஹார்ட் டிஸ்க் மற்றும் மெமரி கார்டுகள். கணிப்பொறியை பொருத்த மட்டில் அதன் செயல்பாடுகளில் திறன்களை "ரேம்" கவனித்துக்கொள்கிறது. இதே போலதான் செல்போன்களின் இயக்கமும் உள்ளது. இருப்பினும் நமது தகவல்களை சேமித்து தேவையான இடத்திற்கு கொண்டு செல்லவும், பத்திரமாக சேமித்துவைக்கவும், ஹார்ட் டிஸ்க் மற்றும் மெமரி கார்டுகள் பெரிய அளவில் பயன்படுகின்றன. பல நிறுவனங்கள் இதை போட்டி போட்டு தயாரித்துவருகின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுக்கென தனி சிறப்பம்சத்துடன் கூடிய மெமரி சிப்(ஹார்ட் டிஸ்க் மற்றும் மெமரி கார்டு)களை தயாரித்து வருகின்றன. ஆனால் இவற்றை நாம் பயன்படுத்தும் போதுதான் அதன் செயல்பாடுகள் தெரியவரும். இதில் ஸ்டுரோனியம் நிறுவனம் மெமரி சிப் தயாரிப்புகளில் எப்போதுமே கூடுதல் கவனம் செலுத்தும். இந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக மைக்ரோ சிப் மெமரி கார்டு மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றில் பல சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக அதிகவேகமாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய வசதியாக பல தொழில்நுட்பங்களை இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் புகுத்திவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டுரோனியம் நிறுவனம் நிட்ரோ என்ற பெயரில் மெமரி சிப்களை அறிமுகம் செய்தது. இதில் பதிவேற்ற மற்றும் பதிவிறக்கத்தின் வேகம் 30 எம்பிக்கும் அதிகமாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மேலும் நவீனப்படுத்தி நிட்ரோ பிளஸ் வகை மெமரி கார்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த கார்டுகளில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதன் பதிவிறக்க விகிதம் வினாடிக்கு 80 எம்பி மற்றும் பதிவேற்ற விகிதம் 60 எம்பியாக உள்ளது. இது தவிர ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன்களில், ஸ்டுரோனியம் மெமரி கார்டுகளை பயன்படுத்துபவர்களின் வசதிக்காக அப்ளிகேஷன் பேக்கப்பிங் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனை பார்மெட் செய்யும் போது போனில் உள்ள அப்ளிகேஷன்களை இது தானாக பேக்கப் எடுத்து வைக்கும். பின்னர் இந்த அப்ளிகேஷன்களை மீண்டும் செல்போனில் பயன்படுத்தலாம். மேலும் ஸ்டுரோனியத்தின் மெமரி கார்டுகள் வாட்டர் புரூப் மற்றும் டஸ்ட் புரூப் கொண்டவை. இதனால் எதிர்பாராத விதமாக நீரில் நனைந்து விட்டாலோ அல்லது தூசி படிந்தாலோ, அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்துவதுபோல சாதாரணமாக சுத்தப்படுத்தி பயன்படுத்தலாம். இதனால் ஸ்டுரோனியம் நிறுவனம் அதிவேகமாக இயங்கும் மெமரிசிப் தயாரிப்பில் முதலிடத்தை நோக்கி தனது பயணத்தை துவக்கியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓபன் டென்னிஸ் இறுதிக்கு முன்னேறினார் ஷரபோவா! Posted: 06 Jun 2014 12:30 AM PDT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மரியா ஷரபோவா. கடுமையாக போராடிய பவுச்சர்ட் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டிகள் நேற்று நடந்தன. இதில், 7ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஷரபோவா, 18ம் இடத்தில் உள்ள இளம் வீராங்கனையான கனடாவின் பவுச்சர்ட் மோதினர். ஆரம்பத்தில் இருந்தே பவுச்சர்டின் கை ஓங்கியது. முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டிலும் பவுச்சர்ட் முன்னிலை பெற்றார். 5 கேம்களை கைப்பற்றி வெற்றியை நெருங்கினார். ஆனால் தனது அனுபவ ஆட்டத்தால் ஷரபோவா அசத்தினார். 2வது செட்டில் பின்தங்கியிருந்த அவர், படிப்படியாக முன்னேறி 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். கடைசி செட்டில் ஷரபோவா அமர்க்களப்படுத்த துவங்கினார். அபாரமாக ஆடிய ஷரபோவா 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இப்போட்டியில் ஷரபோவா 4-6, 7-5, 2-6 என்ற செட்களில் பவுச்சர்ட்டை வென்று இறுதிக்கு தகுதி பெற்றார். கடந்தாண்டு பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஷரபோவா, செரினாவில்லியம்சிடம் கோப்பையை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில், ஜெர்மனி வீராங்கனை குரோனேபெல்ட், நெதர்லாந்து வீரர் ரோஜர் ஜோடி, ஜெர்மனி வீராங்கனை ஜுலியா ஜார்ஜஸ், செர்பியா வீரர் நெனாத் சிமோன்ஜிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அன்னா ஜோடி முதல் சுற்றை 4-6 என கணக்கில் இழந்தது. தோற்றது. ஆனாலும், 2வது சுற்றில் அருமையாக விளையாடி, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றது.யாருக்கு பட்டம் என்பதை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் இரண்டு ஜோடிகளும் போட்டி போட்டு விளையாடியது. இதனால் 3வது சுற்று நீண்டு கொண்டு சென்றது. இறுதியில், அன்னா ஜோடி 10-7 என கைப்பற்றி, 4-6, 6-2, 10-7 என்ற செட்கணக்கில் ஜுலியா ஜோடியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சாதிப்பாரா முர்ரே: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டிகள் இன்று நடக்க உள்ளன. இதில் முதல் அரை இறுதியில் நம்பர்-1 வீரான ரபெல் நடாலும், இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேயும் விளையாடுகின்றனர். மற்றொரு அரை இறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், லாட்வியாவின் குல்பிஸ் சந்திக்கின்றனர். முன்னதாக கால்இறுதியில் நடால் 4-6, 6-4, 6-0, 6-1 என்ற செட்களில் ஸ்பெயினின் பெரரசை வீழ்த்தினார். முர்ரே 6-4, 6-1, 4-6, 1-6, 6-0 என்ற செட்களில் பிரான்சின் மோன்பிலிசை போராடி வென்றார். இன்றைய போட்டியில் முர்ரே வெற்றி பெறும் பட்சத்தில், 77 ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைக்கலாம். கடைசியாக 1937ல் இங்கிலாந்தின் பன்னி அஸ்டின் பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அதற்கு 2 ஆண்டுக்கு முன், இங்கிலாந்தின் பிரட் பெர்ரி சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து, எந்த இங்கிலாந்து வீரராலும் பிரெஞ்ச் ஓபனில் சாதிக்க முடியவில்லை. தற்போது முதல் முறையாக, ஆண்டி முர்ரே நம்பிக்கை அளிக்கும் விதமாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால், நடால்-முர்ரே இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.கடைசியாக 2011ல் பிரெஞ்ச் ஓபனில் நடாலும், முர்ரேயும் மோதினர். இதில் ஒரு செட்டையை வெல்ல முடியாமல் முர்ரே படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக கோப்பை ஹாக்கி இங்கிலாந்து அணி வெற்றி! Posted: 06 Jun 2014 12:24 AM PDT
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். துவக்கத்திலேயே இங்கிலாந்தின் மார்க் கிளேகோர்னே மலேசியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். 4வது நிமிடத்தில் இவர் அபார கோல் அடித்து இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்று தந்தார். இதையடுத்து தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்ட இங்கிலாந்து வீரர்களை மீறி மலேசியாவால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 67வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஆஸ்லே ஜாக்சன் அணியின் 2வது கோல் அடித்து அசத்தினார். முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 3 போட்டியில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. மலேசியா தொடர்ச்சியாக 3 தோல்விகளை பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாங்டன் நகரில் துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் பலி பேஸ்புக்கில் மர்மநபர் சவால் Posted: 06 Jun 2014 12:20 AM PDT
கனடா நாட்டின் மாங்டன் நகரில், ராணுவ உடையில் வந்த ஆசாமி ஒருவர், போலீஸ் வாகனத்தின் மீது நேற்று முன்தினம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பினார். இதில் 3 போலீசார் பலியாயினர், 2 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜஸ்டின் பார்க் என்ற ஆசாமி தனது பேஸ்புக்கில், 'ஹூக் இன் தி மவுத்' என்ற பிரபல பாடல் வரிகளுடன், 'எங்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம், என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமை உள்ளது'' என்ற தகவலை வெளியிட்டுள்ளான். மேலும் இரண்டு பேர், காட்டு பகுதியில் துப்பாக்கியுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளான். அரசுக்கும், போலீசுக்கும் எதிராக பல வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.இவன்தான் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என கனடா போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவன் தனது கூட்டாளிகள் இருவர் துப்பாக்கிகளுடன் இருக்கும் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளான் என போலீசார் கருதுகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு முதலிடமில்லை! பூட்டானுக்கே முதல் வெளிநாட்டுப் பயணம்!! Posted: 06 Jun 2014 12:09 AM PDT
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் வெளிநாட்டுப் பயணத்தில் இலங்கைக்கு முதலிடமில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொள்ளவுள்ளார். இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் தங்குமிட ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவொன்று இன்று பூட்டானுக்குப் பயணமாகவுள்ளது. தற்போது நடைபெறும் இந்திய நாடாளுமன்ற அமர்வுகள் முடிந்த பின்னர், பெரும்பாலும், இம்மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தப் பயணம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமது நாட்டுக்கு வருமாறு இலங்கை உட்பட சார்க்க நாடுகள் பதவியேற்பு விழாவின் போது அழைப்பு விடுத்திருந்தன. இந்த நிலையில், மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இலங்கையாக இருக்கலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது. எனினும், கடந்த சில நாட்களாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத் திட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில், இலங்கை, பாகிஸ்தானுக்கான பயணங்கள் குறித்து கலந்துரையாடப்படவேயில்லை என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டான், நேபாளம், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்வது குறித்தே, கலந்துரையாடப்பட்டுள்ளது. இறுதியில் முதல் பயணத்தை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான பூட்டானுக்கு மேற்கொள்வது என்று முடிவாகியுள்ளது. இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறேசிலில் அடுத்த மாத நடுப்பகுதியில் நடக்கவுள்ள பிறிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















