Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சீன வெளியுறவு மந்திரி மோடியுடன் நாளை சந்திப்பு

Posted: 06 Jun 2014 11:04 PM PDT

சீன வெளியுறவு மந்திரி வாங் யீ நாளை டெல்லி வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து புதிய பிரதமர் மோடியுடன் நட்பு வைக்க உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மோடியை தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளன. முதலாவதாக சீன அரசாங்கம் தனது வெளியுறவு மந்திரி வாங் யீ தலைமையில் 7 பேர் கொண்ட தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. நாளை அவர்கள் டெல்லி வருகிறார்கள்.

காங்கிரசை தனிமைப்படுத்த பாராளுமன்றத்தில் ஜெயலலிதா புதிய கூட்டணி?

Posted: 06 Jun 2014 11:02 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் 335 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க. கூட்டணி பலமான நிலையில் ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததோடு எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்தையும் பெற முடியாத நிலையில் உள்ளது. பாராளு மன்ற சட்ட

பிரதமர் நரேந்திரமோடி 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

Posted: 06 Jun 2014 10:39 PM PDT

இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்றதும், அவரை தங்கள் நாட்டுக்கு வரும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார். இதுபோன்று பூட்டான், ஜப்பான், பிரேசில், நேபாளம், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளன. மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் இதுபற்றி கூறும்போது, ''மத்தியில் புதிய ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் மோடிக்கு

நஷ்டத்தை ஈடுகட்ட கேரள அரசு பஸ்களில் பார்சல்-கொரியர் சர்வீஸ்

Posted: 06 Jun 2014 10:33 PM PDT

கேரள அரசு போக்குவரத்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி. நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக அரசு பஸ்களில் பார்சல் மற்றும் கொரியர் சர்வீஸ் நடத்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனை கேரள மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சந்திரசேகரராவ் டெல்லி பயணம்: மோடியை சந்திக்கிறார்

Posted: 06 Jun 2014 10:23 PM PDT

தெலுங்கானா முதல்– மந்திரியாக சந்திரசேகர ராவ் கடந்த 2–ந்தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அல்லாமல் குறிப்பிட்ட ஆண்டுக்குள் கடன் பெற்றவர்களுக்கே இந்த சலுகை கிடைத்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். சந்திரசேகரராவுக்கு எதிராக அவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரராவ் கடன் தள்ளுபடிக்கான காலத்தை தளர்த்தினார். இருந்த போதிலும் விவசாயிகள் போராட்டம் ஓயவில்லை.

திருப்பதியில் தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

Posted: 06 Jun 2014 10:12 PM PDT

ஆந்திராவில் கோடை விடுமுறை முடியாததாலும், இன்றும், நாளையும் வார விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் திருப்பதியில் குவிந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை 33,556 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பின்னரும் தர்ம தரிசன வரிசையில் 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. இவர்களுக்கு தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆனது. ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி வழியாக கால்நடையாக வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய 12 மணி நேரம் பிடித்தது. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கு தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்து நின்றனர்.

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும்

Posted: 06 Jun 2014 09:29 PM PDT

கேரளாவில் கடந்த 1–ந்தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்க வேண்டும். ஆனால் 5 நாள் தாமதமாக நேற்று முதல் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. பருவமழை ஆரம்பித்ததுமே தென் கேரளாவில் கனமழை பெய்தது. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு

போலீஸ்காரார் வெறிச்செயல்: வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் பெண் பலி

Posted: 06 Jun 2014 08:19 PM PDT

ஒருதலை காதலில் ஏற்பட்ட விபரீத விளைவாக வீட்டுக்குள் புகுந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த இளம் பெண்ணின் தாயார் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பருன் மஜும்தர். கொல்கத்தா நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்து வரும் இவர், நாடியா மாவட்டத்தில் உள்ள பிபுல்பரியா பகுதியை சேர்ந்த

மோடியை புகழ்ந்தது ஏன்?: காங்கிரஸ் மேலிடத்துக்கு சசி தரூர் விளக்கம்

Posted: 06 Jun 2014 08:12 PM PDT

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், அமெரிக்க செய்தி இணைய தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் நரேந்திர மோடியை பலவாறு புகழ்ந்து இருக்கிறார். அதில் அவர், "தேர்தலுக்கு முன்பு வெறுக்கப்பட்ட நபராக திகழ்ந்தவர், இப்போது தன்னை நவீனமயத்தின், முன்னேற்றத்தின் சின்னமாக மாற்றி வருகிறார்" என கூறி உள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாமில் காவல் கண்காணிப்பாளர் கொலை: மந்திரி கிரண் ரிஜ்ஜு கர்பி அங்லாங்கிற்கு விரைகிறார்

Posted: 06 Jun 2014 04:59 PM PDT

அசாமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் காவல்துறை கண்காணிப்பாளரும், காவலர் ஒருவரும் உயிரிழந்ததை தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய இணை மந்திரி கிரண் ரிஜ்ஜு அங்கு விரைகிறார். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதலின் படி தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமுள்ள வடகிழக்கு மாநிலமான அங்கு

தமிழக பாதிரியார் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய துப்பு கிடைத்தது

Posted: 06 Jun 2014 04:38 PM PDT

தமிழகத்தைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம் குமார்(47) என்பவர் ஆப்கானில் உள்ள சேவை மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரத்தில் வைத்து அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர்: 17 போலீசார் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 06 Jun 2014 04:24 PM PDT

காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர்.

சஞ்சய் நிரூபம் தொடர்ந்த அவதூறு வழக்கு: மத்திய மந்திரி ஸ்மிரிதிக்கு சம்மன்

Posted: 06 Jun 2014 03:56 PM PDT

காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர்.

வறுமையின் கொடுமை: மேற்கு வங்கத்தில் பெற்ற குழந்தையை ரூ.13000க்கு விற்ற பெண்

Posted: 06 Jun 2014 03:32 PM PDT

வறுமை காரணமாக தனக்கு புதிதாக பிறந்த கைக்குழந்தையை கவனிக்க இயலாத சூழ்நிலையால் அக்குழந்தையை ரூபாய் பதிமூன்றாயிரத்திற்கு பெண் ஒருவர் விற்றுள்ளார். கவுரி தாஸ் என்ற அப்பெண்மணிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அவரது கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். கவுரியின் தாய் பிச்சை எடுத்து வரும் பணத்தை

போலி என்கவுண்ட்டர் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அமித் ஷாவுக்கு விலக்கு

Posted: 06 Jun 2014 03:09 PM PDT

கடந்த 2006 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற போலி எண்கவுண்டரில் சொராபுதின் ஷேக்கின் அடியாளான துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்டான். அவன் போலி எண்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சுமூக தீர்வுக்கு உடன்பட மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு பதிவு

Posted: 06 Jun 2014 12:55 PM PDT

கடந்த ஜனவரி 30-ந் தேதி, ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி, இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதி. அவருக்கு ஓட்டு போடுவது குறித்து வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்' என்று கூறினார்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு

Posted: 06 Jun 2014 12:40 PM PDT

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக பெங்களூரில் வருகிற 9-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக பெங்களூரில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிகரம் தொட்ட சிறுமி மலாவத் பூர்ணாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Posted: 06 Jun 2014 11:22 AM PDT

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த சிறுமி மலாவத் பூர்ணாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இன்று தன்னை சந்தித்த பூர்ணாவையும், இப்பயணத்தில் அவருடன் சென்ற அவரது நண்பரான சதனபள்ளி ஆனந்த் குமாரையும் மோடி பாராட்டினார். 52 நாட்களாக எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி தனது குழுவினருடன்

வி.ஐ.பி.க்களின் ஓட்டுனர்களுக்கு கோலாப்பூரில் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறை

Posted: 06 Jun 2014 10:47 AM PDT

கடந்த 3ஆம் தேதி மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து கோலாப்பூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வி.ஐ.பி.க்களின் ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் ஓட்டும் திறமைகளைக் கூர்மைப்படுத்தும் பயிற்சிப் பட்டறையை நாளை நடத்த உள்ளது. காலை 9 மணிக்கு வட்டாரப்

பிரகாஷ் ஜவடேகர்-நிர்மலா சீதாராமன் மேல்சபை எம்.பி. ஆகிறார்கள்

Posted: 06 Jun 2014 06:42 AM PDT

மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் பா.ஜனதா செய்தி தொடர்பாளர்களாக இருந்த பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கு பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகையால் பதவி ஏற்ற ஆறு மாதத்திற்குள் இவர்கள் எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட வேண்டும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™