Tamil Star |
- வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை தயாரிக்கிறது சுவிஸ்!
- பேருவளையில் வீடு ஒன்றை சேதப்படுத்திய நான்கு சந்தேக நபர்கள் கைது!
- கல்கந்த தோட்டத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை!
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்!
- மக்களுக்கு பல்வேறு வழிகளில் துரோகம் இழைக்கும் அரசாங்கம் நீண்ட காலம் நீடித்திருக்காது: ஹரின் கருத்து!
- ஹிபர் பக்ட்டுன்க்வா பகுதியில் இலங்கையர் உட்பட்ட 118 சட்டவிரோதிகள் கைது!
- கனடா- ஒன்றாரியோ பிரைன் இன்ஸ்டியூட் பொதுமக்களுக்கு அறிவுரை! உடற்பயிற்சி Alzheimer’s வியாதியைத் தடுக்கும்
| வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை தயாரிக்கிறது சுவிஸ்! Posted: 22 Jun 2014 11:12 PM PDT
தனது நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரித்து வருகிறது. இந்த தகவல்களை இந்திய அரசுடன் பரிமாறிக் கொள்வதோடு, மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் இந்தியர்களின் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந் தது. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கடந்த 2009ம் ஆண்டு மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2011 ஜூலை 4ம் தேதி உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால், முந்தைய அரசு இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பு பணம் வெளிக்கொண்டு வரப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். தனி நபர் வருமானமும் உயர்ந்திருக்கும். வருமானவரி விகிதமும் குறைந்திருக்கும். அந்த எண்ணத்தில்தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கருப்பு பண விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த மே 26ம் தேதி நடைபெற்றது. இதில், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் படி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த குழுவுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைவராக நியமிக்கப்பட்டார். நிதி, வருவாய் மற்றும் பொருளாதார நிர்வாக துறை சார்ந்த நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் முதல் கூட்டத்தில் குழுவின் துணை தலைவர் அரிஜித் பசயாத் மற்றும் உறுப்பினர்களான நிதி, வருவாய், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், புலனாய்வு, அமலாக்க பிரிவு, சிபிஐ இயக்குனர்கள் உட்பட 11 துறை சார்ந்த உயரதிகாரிகள், கருப்பு பணம் குறித்து தாங்கள் ஏற்கெனவே விசாரணை நடத்திய அறிக்கையை எம்.பி.ஷா முன்பு சமர்ப்பித்தனர். இதற்கு முன்பே, வெளிநாடுகளில் கருப்பு பணம் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்த கருப்பு பணம் எவ்வளவு என்பது குறித்து ஆராய கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பு குழு அமைத்தது. 18 மாதங்களில் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகளாகியும் இதுவரை அறிக்கை தயாரிக்கப்படவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள மொத்த கருப்பு பணத்தின் மதிப்பு குறித்தும், எந்தந்த வழிகளில் கருப்புப்பணம் உருவாக்கப்படுகிறது என்பது குறித்தும் இக்குழு ஆராய வேண்டியுள்ளது, தகவல் அறியும் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் பதுக்கல் ஏன்? பெரும்பாலான கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில்தான் டெபாசிட் செய்யப்படுகின்றன. ஏனெனில், வாடிக்கையாளர் பற்றிய ரகசியங்கள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம் கொண்ட 283 வங்கிகள் சுவிட்சர்லாந்தில் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ், கிரெடிட் சுசீ ஆகியவை மிகப்பெரிய வங்கிகள். சுவிஸ் தேசிய வங்கியின் மத்திய குழு, வங்கி டெபாசிட் விவரம் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013ல் இந்தியர்கள் 2.03 பில்லியன் சுவிஸ் பிராங்சுக்கு அதிகமாக டெபாசிட் செய்துள்ளதாக கூறியுள்ளது. இது 2012ல் டெபாசிட் செய்யப்பட்டதை விட 40 சதவீதம் அதிகம். ஏனெனில், 2012ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் தொகை வரலாறு காணாத அளவுக்கு மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது. மேலும், இந்தியர்களின் டெபா சிட் 40 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், உலக அளவில் வாடிக்கையாளர்கள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த ஒட்டுமொத்த தொகை மாறாக சுவிஸ் வங்கியில் மற்ற நாட்டுக்காரர்கள் வைத்திருக்கும் தொகை இதே காலக் கட்டத்தில் சுமார் 90 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. சுவிஸ் வங்கியின் பொறுப்புகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை என்று குறிப்பிட்டுள்ள இந்தத் தொகையில் கறுப்புப் பணம் கணக்கில் வராது என்று தெரிகிறது. கருப்பு பணம் குறித்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுமா? எந்தெந்த வங்கியில் யார் எவ்வளவு பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சுவிஸ் அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் அல்லது நிறுவனங்கள் சார்பில் யார் எவ்வளவு பணம் டெபாசிட் செய்துள்ளனர். உண்மையில் யார் மூலமாக இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என கண்காணித்து வருகிறோம். இந்தியர்கள் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளை, வெளிநாட்டில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட அமைப்புகள் மூலம் பினாமிகள் பெயரில் வரி ஏய்ப்பு செய்து முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து தகவல்களை சேகரித்துள் ளோம். உண்மையான பயனாளிகள் யார் என்பதை ஆராய்ந்து வருகிறோம். தற்போது இரு தரப்பு தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்த்தில் ரகசிய தகவல் பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றி ருப்பதால், முதலீடு செய்துள்ள தனிப்பட்டவர்கள் விவரங்களை உடனடியாக வெளியிடுவதற்கு வழியில்லை. அதேநேரத்தில், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு உட்பட்டு, கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் ரூ.14,000 கோடி டெபாசிட் செய்துள்ளதாக வும், முந்தைய ஆண்டை விட இது 40 சதவீதம் அதிகரிப்பு என்று சுவிஸ் தேசிய வங்கி சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புள்ளி விவரங்கள் பற்றி கேட்டபோது, அவை இந்தியர்கள் டெபாசிட் செய்ததாகத்தான் அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம் என்று கூற முடியாது' என்றார். நடவடிக்கை எப்போது? கருப்பு பண விவகாரம் பல ஆண்டுகளாக தீராத பிரச்னையாக உள்ள நிலையில், சுவிஸ் வங்கி மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள முன்வந்திருப்பது, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றமாகும். இது குறித்து கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் நீதிபதி எம்.பி.ஷா கூறுகையில், 'சுவிஸ் அரசு வழங்கும் பட்டியலில் உள்ளவர்களை கண்காணித்து, அதில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்திய பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேருவளையில் வீடு ஒன்றை சேதப்படுத்திய நான்கு சந்தேக நபர்கள் கைது! Posted: 22 Jun 2014 11:02 PM PDT
இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டை கடந்த 15ம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது சேதப்படுத்திய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவின் காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டை தாக்கி சேதப்படுத்தியதாகவும் தீயிட்டு கொளுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வீட்டை சேதப்படுத்தியதனால் சுமார் 50 லட்ச ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் போலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்கந்த தோட்டத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை! Posted: 22 Jun 2014 10:57 PM PDT
பொகவந்தலாவ – கல்கந்த தோட்டத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை 22.06.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ போலிஸார் தெரிவித்தனர். 66 வயதான முனியாண்டி என்பரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சனிக்கிழமை இரவு பிறந்த தின நிகழ்வு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிய நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட நபருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் இதில் ஒரு மனைவி தொழில் நிமித்தம் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் போலிஸார் தெரிவித்தனர். எனவே தற்கொலை செய்து கொண்டவரின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றையும் போலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கபட்டுள்ளதோடு 23.06.2014 அன்று திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்! Posted: 22 Jun 2014 10:48 PM PDT
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை நடத்தியுள்ளனர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைககு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மக்களுக்கு பல்வேறு வழிகளில் துரோகம் இழைக்கும் அரசாங்கம் நீண்ட காலம் நீடித்திருக்காது: ஹரின் கருத்து! Posted: 22 Jun 2014 10:40 PM PDT
மக்களுக்கு பல்வேறு வழிகளில் துரோகம் இழைத்து வரும் அரசாங்கம் நீண்ட காலம் நீடித்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்குள்ளே பிரச்சினைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என சிலர் கருதுகின்றனர். இந்தக் கனவு உலகத்தை வெடித்துச் சிதறச் செய்யக் கூடிய காலம் கூடியுள்ளது. பெரும்பான்மையான மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கவிழ்க்க முடியாது என கருதினர். எனினும், ஆளும் கட்சிக்குள் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒன்பது அமைச்சர்கள் இருப்பதாக பொதுபல சேனா இயக்கம் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது. போதைப் பொருள் பிரச்சினை பாரியளவில் உருவாகியுள்ளது. அபிவிருத்தி குறித்து அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்ற போதிலும் மக்களுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹிபர் பக்ட்டுன்க்வா பகுதியில் இலங்கையர் உட்பட்ட 118 சட்டவிரோதிகள் கைது! Posted: 22 Jun 2014 10:30 PM PDT
பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய பிரதேசங்களாக கருதப்படும் ஹிபர் பக்ட்டுன்க்வா ((Mhyber Pakhtunkhwa) பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இலங்கையர் ஒருவர் உட்பட்ட 118 சட்டவிரோத குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர். பாகிஸ்தான் ஊடகம் ஒன்றை கோடிட்டு இந்திய செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பெண் பொலிஸார் உட்பட்ட சுமார் 700 பொலிஸார் நேற்று அதிகாலை கையாடாபாத் பகுதியில் இந்த சோதனையை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 118 பேரும் தாம் தங்கியிருந்தமைக்கான தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று பாகிஸ்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 22 Jun 2014 10:22 PM PDT
ஓன்றாரியோ குறிப்பிட்ட விடையம் பற்றி மேற்கொண்ட ஆய்வின்பிரகாரம் உடற்பயிற்சியைத் ஒழுங்காக மேற்கொள்வதன் மூலமாக குறிப்பிட்ட வியாதி நம்மை அணுகவிடாது தடுத்துவிடலாம் எனத் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக ஒன்றாரியோ Brain Institute ஹமில்ரன் பல்கலைக்கழகமான McMasterம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆய்வினை மேற்கொண்ட குழுவின் அங்கத்தவரான Jennifer Heisz, an assistant professor at McMaster அனேகமான முதியவர்கள் போதுமானளவிற்கு உடற்பயிற்சி செய்வதில்லையெனக் கூறியிருக்கின்றார். உடற்பயிற்சியானது உடலையும் மனதையும் செயலிழக்காமல் வைத்திருக்க உதவி புரிகின்றது எனத் தெரிவித்திருக்கின்றார். ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி செய்பவர்கள் தமது முதிர்ச்சியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடிகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்து கொள்வதன் மூலமாக குறிப்பிட்ட நோயிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் சுலபமான சில உடற்பயிற்சிகளையும் விளக்கியிருக்கின்றார்கள். 1. மூச்சை உள்இழுத்தபடி கைகளைத் தலைக்கு மேல் உயர்த்துதல். 2. படிகளை உபயோகித்தல். 3. சிறந்த முறைகளில் பொழுதைப் போக்குதல், பறவைகளைப் பார்த்தல், மீன்பிடித்தல், தோட்டம் செய்தல் 4. நடனங்களில் ஈடுபாடு கொள்ளுதல் 5. இலகுவான வீட்டு வேலைகளில் ஈடுபடுதல் 6. பேரப் பிள்ளைகளுடன் மகிழ்வாக விளையாடுதல் 7. மோல்களில் நடத்தல் 8. இலகுவான உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் 9. நடத்தல் 10. மகிழ்வாக இருக்கத்தக்க வகையிலான செயல்களைத் தெரிவு செய்து அதில் ஈடுபடுதல். 11 யோகாசனம் உடலுக்கு மட்டுமல்ல மனதினையும் சாந்தப்படுத்த வல்லது. 12. தியானம் போன்றவைகளும் மூளையின் செயற்பாட்டினை அதிகரிக்க வல்லது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






