மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- லஷ்கர் முக்கிய தளபதியை காஷ்மீர் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
- உளவு பார்த்த விவகாரம்: மோடிக்கு எதிரான விசாரணையை கைவிட முடிவு
- இந்த ஆண்டு இறுதிக்குள் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிக்கும்
- பாராளுமன்றம் ஜூலை 7-ந் தேதி கூடுகிறது
- குஜராத்தி உணவை மெனுவில் சேர்த்துள்ள விமான நிறுவனங்கள்
- ஐதராபாத்தில் அதிகாரியை கத்தியால் குத்திய சிறுவன்
- அசாமில் கடத்தப்பட்ட என்ஜினியரை பாதுகாப்பாக விடுவிக்க ஆந்திர அரசு கோரிக்கை
- டீசல் விலை குறைந்தால் ரெயில் கட்டணம் குறைக்கப்படும்: ரெயில்வே
- உ.பி.யில் இடியுடன் கூடிய கனமழை: ஒருவர் பலி-12 பேர் காயம்
- ஆற்றில் மூழ்கிய ஆந்திர மாணவர்களில் மூன்று பேரின் சடலம் கிடைத்தது
- கர்நாடக அரசுக்கு பா.ஜ.க பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சரமாரி கேள்வி
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
- மும்பையில் மூன்று நாள் போராட்டத்திற்குப் பின் நீதிமன்ற உத்தரவுக்குப் பணிந்த கேம்பகோலா குடியிருப்புவாசிகள்
- அசாம் மாநிலத்தில் ஆந்திராவை சேர்ந்த என்ஜினியர் போடோ தீவிரவாதிகளால் கடத்தல்
- சுஷ்மா சுவராஜ் 25-ந் தேதி வங்கதேசம் செல்கிறார்
- பேஸ்புக்கில் மோடியின் தாயாருக்கு மிரட்டல்: உளவு பிரிவு தீவிர கண்காணிப்பு
- பாலியல் தொழில் செய்யும் தாய்களின் வாழ்க்கையை குறும்படமாக்கும் சிறுமிகள்
- அமெரிக்காவில் இருந்து நடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை திரும்பினார்
- உ.பி.யில் கேள்வித்தாள் அவுட்: மருத்துவ நுழைவு தேர்வு ரத்து
| லஷ்கர் முக்கிய தளபதியை காஷ்மீர் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் Posted: 22 Jun 2014 10:10 PM PDT தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த முக்கிய தளபதி ஒருவனை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இந்திய ராணுவத்தின் 'ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்' படையினர், சிறப்பு அதிரடிப் |
| கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் Posted: 22 Jun 2014 09:56 PM PDT கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. முதலில் மழை மாநிலம் முழுவதும் பரவலாக தீவிரமாக பெய்தது. பிறகு சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவ்வப்போது மழை பெய்து வருகிறது |
| உளவு பார்த்த விவகாரம்: மோடிக்கு எதிரான விசாரணையை கைவிட முடிவு Posted: 22 Jun 2014 08:20 PM PDT கடந்த 2009-ம் ஆண்டு இளம்பெண்ணை உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக, அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த நரேந்திரமோடி மீது விசாரணை கமிஷன் அமைக்க, மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி அல்லது ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பதற்கான முடிவு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி நடந்த மத்திய |
| இந்த ஆண்டு இறுதிக்குள் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிக்கும் Posted: 22 Jun 2014 07:54 PM PDT இந்தியாவில், பேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீதம் அதிகரித்து 10.89 கோடியை எட்டும் என ஆய்வு நிறுவனமான இ-மார்க்கெட்டர் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில்தான் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளனர். நம் நாட்டில் 2015-ஆம் ஆண்டிற்குள் பேஸ்புக் உறுப்பினர்கள் 13.63 கோடியாகவும், 2018-ஆம் ஆண்டிற்குள் 21.12 கோடியாகவும் அதிகரிப்பார்கள். சென்ற ஆண்டில் 7.80 கோடி பேர் பேஸ்புக்கை |
| பாராளுமன்றம் ஜூலை 7-ந் தேதி கூடுகிறது Posted: 22 Jun 2014 07:54 PM PDT தேர்தலுக்கு பிறகு அமைந்த புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். கடந்த அரசின் இடைக்கால பட்ஜெட் ஜூலை 31-ந் தேதியுடன் காலாவதி ஆகிறது. எனவே, அதற்குள் புதிய, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை 7-ந் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. 9-ந் தேதி ரெயில்வே பட்ஜெட்டும், மறுநாள், |
| குஜராத்தி உணவை மெனுவில் சேர்த்துள்ள விமான நிறுவனங்கள் Posted: 22 Jun 2014 07:48 PM PDT குஜராத் மக்கள் எங்கு சென்றாலும் தங்கள் மாநில உணவின் மீது அபார விருப்பத்தை வெளிப்படுத்துவர். இம்மாநில மக்களில் தற்போது விமானப் பயணத்தை மேற்கொள்ளுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு அகமதாபாத்திலிருந்து தங்களின் பயணத்தினைத் தொடங்கும் வெளி நாட்டு விமான நிறுவனங்கள் தங்களின் உணவு அட்டவணையில் குஜராத் மெனுவை புதிதாக இணைத்துள்ளன. அகமதாபாத்திலிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் வரை பறக்கும் துபாய் நாட்டின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுரைக்காய், பச்சைப் பட்டா |
| ஐதராபாத்தில் அதிகாரியை கத்தியால் குத்திய சிறுவன் Posted: 22 Jun 2014 04:06 PM PDT ஒடிசா மாநிலம் கோராபூட்டில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் மண்டல இயக்குனராக இருப்பவர் ஆர்.கே.சத்பதி. ஐதராபாத்திற்கு வந்த சத்பதி, அங்குள்ள சார்மினார் பகுதியில் உள்ள கடைக்கு நேற்று சென்றார். அப்போது ஜேப்படி செய்யும் சிறுவன் ஒருவன், அங்கிருந்தவர்களிடம் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடினான். |
| அசாமில் கடத்தப்பட்ட என்ஜினியரை பாதுகாப்பாக விடுவிக்க ஆந்திர அரசு கோரிக்கை Posted: 22 Jun 2014 03:59 PM PDT ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாக மல்லேஸ்வர ராவ். அவர் அசாமில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரை அங்குள்ள கப்லாங் அருகே போடோ தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். அவரை விடுவிக்க பணயத்தொகையாக ரூ.6 லட்சத்தை தீவிரவாதிகள் கேட்டுள்ளனர். |
| டீசல் விலை குறைந்தால் ரெயில் கட்டணம் குறைக்கப்படும்: ரெயில்வே Posted: 22 Jun 2014 02:39 PM PDT பயணிகள் ரெயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இது வருகிற 25-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து ரெயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், 'ரெயில்வே துறையில் |
| உ.பி.யில் இடியுடன் கூடிய கனமழை: ஒருவர் பலி-12 பேர் காயம் Posted: 22 Jun 2014 01:55 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக பதோஹி மாவட்டத்தில் 13 வயதான மைனர் பெண் பலியானார். மேலும் அம்மாவட்டத்திற்குட்பட்ட புலாய்பூர் கிராமத்தை சேர்ந்த 12 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்திற்குட்பட்ட ஹாண்டியாவில் 5 செ.மீ, கர்ச்சனா 4 செ.மீ, அலகாபாத், சுனார், சலோன், குண்டா, புர்வா |
| ஆற்றில் மூழ்கிய ஆந்திர மாணவர்களில் மூன்று பேரின் சடலம் கிடைத்தது Posted: 22 Jun 2014 12:55 PM PDT இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானார்கள். அப்பகுதிக்கு சுற்றுலா வந்த அம்மாணவர்கள் அந்த ஆற்றில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் பாயும் |
| கர்நாடக அரசுக்கு பா.ஜ.க பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சரமாரி கேள்வி Posted: 22 Jun 2014 12:26 PM PDT கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சரமாரியாக கேள்வியெழுப்ப புத்துணர்ச்சி பெற்றுள்ள பா.ஜ.க முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, அதிகரித்து வரும் குப்பைகள், கரும்பு விவசாயிகள் பிரச்சனை, காவல்துறையில் நிலவும் பூசல்கள் மற்றும் காவிரி |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது Posted: 22 Jun 2014 10:49 AM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி ஒரு கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆனது. பிரத்யேக பிரவேச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு காலை 7 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டது. |
| Posted: 22 Jun 2014 08:43 AM PDT மும்பை வோர்லி பகுதியில் உள்ள கேம்பகோலா வளாகக் குடியிருப்பில் ஐந்து மாடிகள் வரை கட்டுவதற்கு அனுமதி வாங்கிய கட்டுமான நிறுவனம் மேலும் பல மாடிகளையும் கட்டி விற்றிருந்தனர். நிலைமை வெளியில் தெரியவந்தபோது மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்புகளை இடித்துத் தள்ளுமாறு உத்தரவிட்டது. கடந்த 2005ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் |
| அசாம் மாநிலத்தில் ஆந்திராவை சேர்ந்த என்ஜினியர் போடோ தீவிரவாதிகளால் கடத்தல் Posted: 22 Jun 2014 06:34 AM PDT காப்லாங் அருகே என்ஜினியர் நாகமல்லேஷ்வர ராவ் கடத்தப்பட்டுள்ளார். நாகமல்லேஷ்வர ராவ் ஆந்திரா மாநிலம் பிரகாஷம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரை தீவிரவாதிகள் கடந்த 16ம் தேதி கடத்தியுள்ளனர். அவரை கடத்திய போடோ தீவிரவாதிகள் அவரை விடுவிக்க ரூ.6 லட்சம் பணயத்தொகை கேட்டுள்ளனர். |
| சுஷ்மா சுவராஜ் 25-ந் தேதி வங்கதேசம் செல்கிறார் Posted: 22 Jun 2014 05:14 AM PDT மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்ல உள்ளார். வரும் 25-ம் தேதி வங்க தேசம் செல்லும் அவர் 27-ந் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் இருதரப்பு உறவுகள் சர்வதேச பிரச்சனைகள் குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சருடன் பேச்சு நடத்துவார் என தகவல்கள் கூறுகின்றன. |
| பேஸ்புக்கில் மோடியின் தாயாருக்கு மிரட்டல்: உளவு பிரிவு தீவிர கண்காணிப்பு Posted: 22 Jun 2014 04:42 AM PDT பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து உளவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில், மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், அவர் நாங்கள் கூறும் எதனையும் செய்வார் என |
| பாலியல் தொழில் செய்யும் தாய்களின் வாழ்க்கையை குறும்படமாக்கும் சிறுமிகள் Posted: 22 Jun 2014 02:05 AM PDT இந்தியாவின் விபசார தலைநகரம் என்றழைக்கப்படும் கொல்கத்தாவின் சோனாகச்சி மற்றும் முன்ஷிகஞ்ச் பகுதியில் பாலியல் தொழில் செய்து பிழைத்து வரும் பெண்களின் பரிதாப வாழ்க்கையை சிறுமிகளாக இருக்கும் அவர்களின் மகள்கள் வீடியோவில் குறும்படமாக உருவாக்கி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தை கடத்தல் கும்பலுக்கு எதிரான ஒரு தொண்டுசாரா அமைப்பு செய்துள்ளது. விருது பெற்ற சினிமா இயக்குனரான அசீம் ஆஷா என்பவர் இதற்கான 4 நாள் பயிற்சிப் பட்டறையை நடத்தி சிறுமிகளுக்கு பயிற்சி அளித்தார். |
| அமெரிக்காவில் இருந்து நடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை திரும்பினார் Posted: 21 Jun 2014 11:53 PM PDT ஐ.பி.எல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பங்கு தாரர்களான நடிகை பிரீத்தி ஜிந்தாவும், தொழில் அதிபர் நெய் வாடியாவும் காதலர்களாக வாழ்ந்து பிரித்து விட்டனர். நெஸ் வாடியாக பிரபல தொழில் அதிபரும், பாம்பே டையிங் ஜவுளி அதிபருமான நுஸ்லி வாடியாவின் மகன் ஆவார். நெஸ் வாடியாயாவும், பிரீத்தி ஜிந்தாவும் பிரிந்த பின்பும் பஞ்சாப் அணியின் பங்குதாரர்களாக |
| உ.பி.யில் கேள்வித்தாள் அவுட்: மருத்துவ நுழைவு தேர்வு ரத்து Posted: 21 Jun 2014 11:21 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மாணவ, மாணவிகள் தயாராகி வந்தனர். காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு சற்று முன்பு காசியாபாத்தில் நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட் ஆனது. இது மாநிலம் முழுவதும் பரவியது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |