Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வடமாகாண தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக மோடிக்கு கடிதம்

Posted: 18 Jun 2014 12:36 AM PDT

modi

modiவடமாகாண தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தித் தரும் படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முற்போக்கு தமிழ்க் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் கடிதமொன்றை இன்று புதன்கிழமை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இலங்கையின் வடமாகாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் செலயாளர் நாயகம் மற்றும் உறுப்பினர்கள் என்ற ரீதியில் முதற்கண் எமது வாழ்த்துக்களை இந்திய நாட்டின் பிரதமராகிய தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

வரலாற்று ரீதியாக இந்தியாவும் இலங்கையும் நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பின்னரும் இந்தியாவின் நல்லாட்சி இலங்கை தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு பல வழிகளிலும் பக்க துணையாக இருந்து வருகின்றது.

இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழ் மீனவ மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் சட்ட விரோதமான மீன்பிடிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் 30 வருடங்களிற்கு மேற்பட்ட முரண்பட்ட சூழ்நிலைக்குப் பின்னர் எமது தமிழ் மீனவர்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

அவ்வேளையில் இவ்வாறான இந்திய சகோதரர்களின் அத்துமீறிய சட்ட விரோத மீன்பிடியானது நொந்துபோன எமது தமிழ் மக்களிற்கு மேலும் வலியை ஏற்படுத்துகின்றது.

கடந்த இரண்டு வருட காலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 132 மீனவப்படகுகளும் 588 இற்கும் மேலான மீனவர்களும் இலங்கை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு 15 தடவைக்கு மேலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்கள் வரலாற்றுச்சிறப்பு மிக்க எமது மீனவர்களிற்கும் தென் இந்திய மீனவர்களிற்குமான நட்புக்கு பாதகமான ஓர் நிலையினை தோற்றுவித்துள்ளது.

ஆகவே மாண்புமிகு பிரதம மந்திரிக்கு எமது கட்சியினூடாக இலங்கை தமிழ்; மக்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இலங்கை - இந்திய கடலோர எல்லைப் பாதுகாப்பினை பலப்படுத்தி இவ்வாறான சட்ட விரோத மீன்பிடிப்பினை நிறுத்தி எம் வட பகுதி மீனவர்களின் வாழ்க்கையை செழிப்படைய செய்யுங்கள்.

மேலும் கடந்த 2009 ஆண்டு நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது ஸ்திரமற்ற சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசினால் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் 50,000 வீடுகள் கட்டித்தருவதாக உறுதியளித்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த வகையில் மேலும் 10,000 வீடுகளை யுத்தத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு அமைத்து தருமாறு மாண்புமிகு பிரதமமந்திரியிடம் வேண்டிக்கொள்கின்றோம்.

கடந்த பல ஆண்டுகளாக ஈழத்தமிழருக்கான அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால் இன்றுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணயப் பிரச்சனை தீராப்பிரச்சனையாகவே காணப்படுகிறது.

எமது கட்சியின் நிலைப்பாடானது 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இலங்கை வாழ் தமிழருக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் திருப்தியின்மை காணப்பட்டாலும் குறைந்த பட்சமேனும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை மக்களினதும் சுயநிர்ணய உரிமைக்கு வித்திடும் என்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாண்புமிகு பிரதமமந்திரி இலங்கை அரசிற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுத்து இச்சட்டத்தை அமுல்படுத்த ஆவண செய்யுமாறு நாங்கள் தங்களை வேண்டி நிற்கின்றோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேற்படி மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்து முற்போக்குக் கட்சியினரால் யாழ்.கைலாசப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணியொன்று ஆரம்பமாகி யாழ்.

இந்தியத் துணைத்தூதரகத்தினைச் சென்றடைந்து. அங்கு மேற்படி விடயங்கள் தொடர்பான மகஜரும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நாவின் அரசியல் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ நாளை இலங்கை வருகிறார்!

Posted: 18 Jun 2014 12:30 AM PDT

oscar-fernandoz

oscar-fernandozஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகிறது. இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதெனத் தெரியவருகிறது. எனினும், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக வரும் இவர், அளுத்கம, பேருவளை வன்முறைகள் தொடர்பாக கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளிப்பதா என்று இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முதல் நடந்து வரும் விவாதத்தின் முடிவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்தப் பின்னணியில், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா ஈரானுடன் இணைந்து ஈராக்கில் பணியாற்றுமா?

Posted: 18 Jun 2014 12:25 AM PDT

us

usஈராக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதட்ட நிலமையானது ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் படிப்படியாகத் திருப்பி அழைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதற்கு நேர் மாறாகவுள்ளது அமெரிக்காவானது குறிப்பிட்டளவு துருப்புக்களையும் ஈராக் வேண்டியதற்கு இணங்க அங்கு அனுப்பியும் உள்ளது. ஆனால் திங்கட்கிழமை அமெரிக்காவானது ஈரானுடன் இணைந்து ஈராக்மேல் நடவடிக்கையெடுக்கவுள்ளது என அமெரிக்க இராஜாங்க அமைச்சரான ஜோன் கெறி அவர்கள் வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதைப் பென்ரகன் பேச்சாளர் மறுத்திருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கெறி அவர்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யமுடியும் என்பதற்கான வரையறை எதையும் வெளியிடவில்லை. ஆனால் கெறி இவ்வாறான கருத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளுமா ஏற்றுக்கொள்ளாதா என்பது பற்றி அறிந்து கொள்ளவேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார். அண்மையில் ஈராக்கின் வடபகுதியில் அதிகமான நகரங்கள் ஈராக் அரசின் கைகளை விட்டு நழுவியிருக்கின்றன எனத் தெரிகிறது. ஆனால் இரு அமெரிக்க முத்த அதிகாரிகள் ஒபாமா நிர்வாகமானது ஈராக்கின் நிலமையைக் கையாள்வது பற்றி ஈரானுடன் நேரடியாகப் பேசுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதாகத் தெரிவித்திருக்கின்றார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்அந்த அதிகாரிகள் ஒபாமா நிர்வாகமானது குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக முடிவெதையும் எடுக்கவில்லையெனவும் தெரிவித்திருக்கின்றார்கள். பின்பு திங்கட்கிழமை பென்ரகனின் பேச்சாளரான Rear Adm. John Kirby பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கையில் ஈரானுடன் இணைந்து ஈராக்கில் பணியாற்றுவதற்கான திட்டமெதையும் பாதுகாப்புத் திணைக்களம் கொண்டிருக்கவில்லையெனத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் ஈராக்கில் எவ்வாறான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதுபற்றி ஈரானுடன் ஆலோசிப்பதற்கான திட்டம் தம்மிடம் இல்லையெனவும் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமல்ல ஈரானுடன் இணைந்து இராணுவ நடவடிக்கைளை மேற்கொள்வதற்கான திட்டங்களும் இல்லையெனப் பென்ரகன் அதிகாரி மறுப்புத் தெரிவித்திருக்கின்றார். ஆனால் ஈரான் தலைவரான Hassan Rouhani என்பர் அமெரிக்காவானது தம்மிடம் உதவி கேட்டால் தாம் உதவுவற்குத் தயாராகவிருப்பதாத் தெரிவித்திருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவை கிழித்தெறிந்த காட்டு புயல்!

Posted: 18 Jun 2014 12:19 AM PDT

canada

canadaசெவ்வாய்கிழமை ஒன்ராறியோவை கிழித்தெறிந்த காட்டு புயல் மிகவும் திகிலூட்டுவதாக இருந்தது. மிகவும் திகிலூட்டும் வண்ணம் தோன்றிய காட்சிகள் பல கோணங்களில் கமராக்களினால் பிடிக்கப்பட்டுள்ளன. ஹூரொன் ஏரிக்கரை பகுதியில் தோன்றிய காட்சிகள் பரபரப்பூட்டும் வண்ணம் இருந்தன. பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி மற்றும் கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குஸ் நகர், பே ஷோர் பகுதிகளில் 30-ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தும்  வீடுகளின் கூரைகள் கிழித்தெறியப்பட்டும் உள்ளன. செவ்வாய்கிழமை இரவு தீவிரமான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை ரொறொன்ரோ பகுதியில் ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மங்காத்தா 2 படத்தில் அஜீத்தும் விஜய்யும் முயற்சிக்கும் வெங்கட் பிரபு!

Posted: 17 Jun 2014 03:01 AM PDT

ajith-venkat-prabhu-vijay

ajith-venkat-prabhu-vijayமங்காத்தா 2 படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என சில தினங்களாக கற்பனைகள் செய்திகளாக வலம் வரும் நிலையில், இப்படி ஒரு முயற்சியில் சீரியஸாகவே இறங்கியிருக்கிறாராம் இயக்குநர் வெங்கட் பிரபு. மங்காத்தா படமே ஒரு மல்டி ஸ்டாரர்தான். முதல் முறையாக அதில் அஜீத்தும் அர்ஜூனும் இணைந்து நடித்தனர். அடுத்த நிலை நடிகர்களாக இருந்த பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின், த்ரிஷா, லட்சுமி ராய், ஆன்ட்ரியா, அஞ்சலி என பெரிய நட்சத்திரக் கூட்டம் அந்தப் படத்தில். அந்தப் பட ஷூட்டிங்கின்போது, ஒரு முறை வெங்கட் பிரபு அளித்த பேட்டியில், "அஜீத்தையும் விஜய்யையும் இணைத்து ஒரு மல்டி ஸ்டாரர் படம் பண்ணும் திட்டமிருக்கிறது," என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய், அஜீத் சேர்ந்து நடிப்பதாக இருந்தால் அந்தப் படத்தை தான் தயாரிப்பதாக திமுக பிரமுகர் அன்பழகன் கூறியிருந்தார். மங்காத்தாவின் 2-ம் பாகத்தை எடுபு்பதில் உறுதியாக இருக்கும் வெங்கட் பிரபு அதற்காக இரு ஹீரோக்களிடமும் பேசி வருவதாகத் தெரிகிறது. கவுதம் மேனன் படத்துக்குப் பிறகு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில்தான் அஜீத் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அது மங்காத்தா 2-ஆகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில், "விஜய், அஜீத் இருவரையும் சேர்த்து படம் இயக்க நான் தயாராக இருக்கிறேன். பல முறை இதுபற்றி நானே கூறியுள்ளேன். விரைவில் அஜீத், விஜய்யிடம் பேசப்போகிறேன்," என்றார். அஜீத், விஜய் இருவரிடமும் நல்ல தொடர்பில் இருப்பவர் வெங்கட் பிரபு. மங்காத்தா படம் ஷூட்டிங்கின் போது, விஜய்யே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து, அனைவருடனும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றி உன் சமையலறையில் பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி!

Posted: 17 Jun 2014 02:55 AM PDT

prakashraj

prakashrajபிரகாஷ் ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்த மும்மொழிப் படமான உன் சமையலறையில் தமிழ், தெலுங்கில் சுமாராகப் போனாலும், கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பிரகாஷ் ராஜுக்கு இது பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. மலையாளத்தில் சால் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளியான படத்தின் உரிமையைப் பெற்ற பிரகாஷ் ராஜ், அதனை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டார். மூன்று மொழிகளிலும் இளையராஜா இசையமைத்திருந்தார். தெலுங்கில் இந்தப் படத்துக்கு உலவுச்சாறு பிரியாணி என்று பெயரிட்டிருந்தார். கன்னடத்தில் ஒக்கரானே என்ற தலைப்பில் வெளியானது. தமிழிலும் தெலுங்கிலும் படத்துக்கு சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. படம் ஆபாசமின்றி சிறப்பாகவே இருந்தாலும், படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவாக இருந்ததை விமர்சனங்கள் சுட்டிக் காட்டின. தெலுங்கிலும் இதே நிலைதான். ஆனால் கன்னடத்தில் இந்தப் படத்துக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில், மல்டிப்ளெக்ஸ்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "ஆமாம்... இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சுமாராகத்தான் போகிறது. இந்த வாரம் பிக்கப் ஆகும் என நம்புகிறேன். ஆனால் கன்னடத்தில் பிரமாதமான வெற்றி கிடைத்துள்ளது. குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். இத்தனைக்கும் படம் வெளியாகும்போது பெரிய பப்ளிசிட்டி கூட இல்லை..," என்றார். கன்னடத்தில் இந்தப் படத்தை நடிகர் தர்ஷனின் சகோதரர் தினகர் வெளியிட்டிருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பன்முகத் தன்மை கொண்ட கலைஞன் மணிவண்ணன்! சத்யராஜ் புகழாரம்

Posted: 17 Jun 2014 02:51 AM PDT

manivannan-sathyaraj

manivannan-sathyarajமறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகத் திகழ்ந்தவர் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான "மணித் துளிகள்' என்ற நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியது: பெரியார், மார்க்ஸ் ஆகியோர் சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சியாளர்கள். அவர்களது சிந்தனை வழியில் வாழ்ந்து மறைந்தவர் இயக்குநர் மணிவண்ணன். தனிமனித லட்சியங்களைத் தவிர்த்து சமுதாய மாற்றத்திற்கான லட்சியங்களுடன் வாழ்ந்த அவர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை, வசனகர்த்தா, நகைச்சுவையாளர் என பன்முக சிந்தனையாளராகத் திகழ்ந்தவர். இயக்குநர் மணிவண்ணன் வாழ்ந்த வரை அவர் கவிஞர் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. திரைப்பட நடிகராக என்னை உருவாக்கியதில் இயக்குநர் மணிவண்ணனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. ஒருவர் சமுதாயத்தில் கொண்டுள்ள சிந்தனையை குடும்பத்தில் செயல்படுத்துவது கடினமானது. ஆனால் குடும்ப வாழ்க்கையிலும் அதனைச் செயல்படுத்தியவர் மணிவண்ணன்,"என்றார். எழுத்தாளர் பாமரன் பேசுகையில், "இயக்குநர் மணிவண்ணன் மாற்றுக் கொள்கை கொண்டவர்களையும் மதிக்கக் கூடியவராகத் திகழ்ந்தவர். தனது கொள்கையில் இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாதவராக அவர் இருந்தார்," என்றார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

முதல்வர் வேடத்தில் ரஜினி! 10 ஆண்டுகள் கழித்து முகநூல் பக்கத்தில் வெளியாகும் தகவல்!

Posted: 17 Jun 2014 02:42 AM PDT

rajini-saraboji

rajini-sarabojiசூப்பர் ஸ்டார் ரஜினி முதல்வன் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க இருந்து, கடைசி நேரத்தில் அரசியல் காரணங்களால் நடிக்காமல் விலகியது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொரு படத்தின் கதையைக் கேட்டு, பின்னர் ரஜினி நடிக்காமல் விட்ட கதையை மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான தேவராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். தமிழில் ஜீவா நடித்த 'பொறி', இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமான 'யோகி', தனுஷ் நடித்த 'சீடன்' ஆகிய படங்களை இயக்கியவர் சுப்ரமணிய சிவா. இப்போது அவர் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள 'உலோகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. 'திருடா திருடி' ரிலீசாகி, 'மன்மத ராசா...' பாடல் பட்டிதொட்டி முழுக்க தேசிய கீதம் போல் ஒலித்த காலம் அது. அப்போது எங்கேயோ இப்படத்தைப் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இதன் இயக்குனர் சுப்ரமணியசிவாவை நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் என்று விரும்பினார். அப்போது அவரது விருப்பத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் சொல்லி, பி.ஆர்.ஓ நிகில் முருகன் நிறைவேற்றினார். போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் ரஜினியும், சுப்ரமணிய சிவாவும் நேரில் சந்தித்துப் பேசினர். முதலில் 'திருடா திருடி' படத்தைப் பற்றி பெரிதும் பாராட்டிய ரஜினி, பிறகு சுப்ரமணியசிவா தனக்காக எழுதியிருந்த கதையை சுவாரஸ்யமாக கேட்கத் தொடங்கினார். முழுக் கதையையும் கேட்டு முடித்த ரஜினி சார், 'எல்லாம் ஓ.கே. ஆனா, கிளைமாக்சை மட்டும் மாத்த முடியுமா?' என்று கேட்டார். 'இந்த படம் நிக்கிறதே அந்த கிளைமாக்ஸ்லதான் சார். அதை எப்படி மாத்தறது?' என்று தயங்கினார் சுப்ரமணியசிவா. பிறகு ரஜினி சார், 'சரி. முதல்ல இந்த கதையை எடிட்டர் மோகன் கிட்டேயும், பிறகு நாகராஜன்ராஜா கிட்டேயும் சொல்லுங்க' என்றார். அதன்படி அவர்கள் இருவரிடமும் சுப்ரமணியசிவா கதை சொன்னார். முதல் பாதி நன்றாக இருப்பதாக எடிட்டர் மோகனும், இரண்டாம் பாதி நன்றாக இருப்பதாக நாகராஜன்ராஜாவும் சொன்னார்கள். 'சார், இதை அப்படியே ரஜினி சார் கிட்டே சொல்லிடுங்க' என்றார் சுப்ரமணிய சிவா. அவர்கள் சொன்னார்களா, இல்லையா என்று இதுவரை தெரியாத நிலையில், ஏனோ ரஜினி சாரை இயக்கும் அற்புதமான வாய்ப்பு இன்றுவரை சுப்ரமணியசிவாவுக்கு கிடைக்கவே இல்லை. சரி, ரஜினியிடம் சுப்ரமணிய சிவா சொன்ன கதை என்ன? இந்த நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். அந்த கிராமங்களின் முதுகெலும்பு விவசாயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உழவன் சேற்றில் கால் வைக்காமல் விட்டால், நாம் யாரும் சோற்றில் கை வைக்க முடியாது. இது நூற்றுக்கு நூறு உண்மை. விவசாயம் என்பது தொழில் அல்ல, அது ஒரு சேவை. இக்கருத்தை பலமாக வலியுறுத்தும் கதை இது. படத்துக்கு 'சரபோஜி' என்று பெயரிடப்பட்டது. அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட சவுராஷ்டிர மன்னன் சரபோஜி என்பது வரலாறு. அப் பெயரையே படத்துக்கு தலைப்பாகச் சூட்டிய சுப்ரமணியசிவா, முழு படப்பிடிப்பையும் தஞ்சையில் நடத்த முடிவு செய்திருந்தார். ரஜினியுடன் படம் முழுக்க வரும் கேரக்டருக்கு வடிவேலுவை நினைத்திருந்தார். ஹீரோயினின் கேரக்டர் பெயர், செல்வி என்றும் வைத்திருந்தார். ரஜினிக்கு நிலம் விற்பவர் கேரக்டரில் டெல்லி கணேசை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். கிராமத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால், பஞ்சம் பிழைப்பதற்காக நகரத்தைத் தேடி மக்கள் வருகிறார்கள். அனைவருக்கும் வேலை கிடைக்கிறதா? வயிறார சாப்பாடு கிடைக்கிறதா? தங்குவதற்கு வசதியான இடம் கிடைக்கிறதா? உடுத்திக்கொள்ள நல்ல உடைகள் கிடைக்கிறதா என்பதெல்லாம் கேள்விக்குறி. ஆனால், 'சரபோஜி' படத்தின் கதைப்படி, நகரத்தில் இருக்கும் ரஜினி சார், தஞ்சையை நோக்கி வருவார். 'என்ன இது... எல்லாரும் கிராமத்துல இருந்து டவுனுக்கு போய் பிழைப்பு நடத்துவாங்க. நீங்க என்னன்னா, டவுன்ல இருந்து கிராமத்துக்கு வந்து விவசாயம் பார்க்க நினைக்கிறீங்க!' என்று, தன்னிடம் விளைநிலங்களை விலைக்குக் கேட்ட ரஜினி சாரிடம் அந்த நிலத்தின் உரிமையாளரான டெல்லி கணேஷ் கேட்பார். அதற்கு சரபோஜி கேரக்டரில் நடிக்கும் ரஜினி சார் சொல்வார், 'விவசாயம் என்பது தொழில் இல்ல சார், அது மக்களுக்கு செய்யற மகத்தான சேவை' என்று. பிறகு நிலத்தை உழுது பயிரிடுவார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். சரி, கிளைமாக்சை மாற்றுங்கள் என்று ரஜினி சார் சுப்ரமணியசிவாவிடம் சொன்னாரே. அது என்ன கிளைமாக்ஸ்? தலைப்பிலேயே இருக்கிறது அதற்கான விடை! அன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல, எப்போதுமே அரசியல் என்றால் விலகி நிற்கவே விரும்புவார் ரஜினி. தேர்தலில் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாக கியூவில் நின்று வாக்களித்து தன் கடமையை நிறைவேற்றுவாரே தவிர, அரசியலுக்கு வரவேண்டும், அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக அவர் வைத்துக் கொண்டதில்லை. 'சரபோஜி' படத்தின் கிளைமாக்சில் அவர் முதலமைச்சராக மாறுவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதைத்தான் மாற்றும்படி சுப்ரமணியசிவாவிடம் சொன்னாராம். கதையின் முதுகெலும்பே இதுதான் என்று சொன்ன சுப்ரமணியசிவா, கடைசிவரை தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவே இல்லை. இது அவர் தன் படைப்பின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை. இந்த சம்பவத்துக்குப் பிறகு ரஜினியை சுப்ரமணியசிவா சந்திக்கவும் இல்லை. 'சரபோஜி' படத்தைப் பற்றிப் பேசவும் இல்லை. 10 வருடங்கள் கழித்து இப்போதுதான் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது. தகவலை வெளியிட்டுள்ள தேவராஜ், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் யோகி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈராக் விரைந்தது அமெரிக்கபடை: ஐநா ஊழியர்கள் வெளியேற்றம்

Posted: 17 Jun 2014 02:29 AM PDT

iraq

iraqஈராக் தலைநகர் பாக்தாத்தை சதாம் ஆதரவு படைகள் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, ஐநா மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் பாக்தாத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள். அமெரிக்கா தனது நாட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க படைவீரர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. 'ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய நாடு (ஐஎஸ்ஐஎஸ்)' என்ற பெயரிலான சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு, ஈராக்கில் திடீர் எழுச்சி பெற்று முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துகொண்டுள்ளது. தலைநகர் பாக்தாத் விரைவில் வீழும் சூழ்நிலை எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஐநா சபையில் இருந்து ஈராக்கில் பணியாள்ளி வந்த, 60 அதிகாரிகள் உடனடியாக அண்டை நாடான ஜோர்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல அமெரிக்காவும், பாக்தாத்திலுள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாக அந்த நாட்டின் எர்பில், பாஸ்ரா அல்லது ஜோர்டான் தலைநகர் அம்மான் ஆகியவற்றில் எங்காவது தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டு அதிகாரிகளை பாதுகாக்க 250 பாதுகாப்பு வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம்தான் உலகிலேயே மிகப்பெரிய தூதரகமாகும். இங்கு 5ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். சதாம் ஆதரவு படைகளுடன் சண்டையிட அமெரிக்கா தனது படைகளை அனுப்ப போவதில்லை என்று அந்த நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதே நேரம் வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜப்பானில் உலாவரும் சூப்பர் கலாச்சாரம்!

Posted: 17 Jun 2014 02:22 AM PDT

'Drunk'-Asian-Businessman-Tries-To-Navigate-Tube-Escalator

'Drunk'-Asian-Businessman-Tries-To-Navigate-Tube-Escalator

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள் மத்தியில் கண்ணீர் வடித்த ஏஞ்சலினா ஜோலி

Posted: 17 Jun 2014 02:17 AM PDT

angelina_jolie

angelina_jolie

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த அற்புதமான குரல் திறமையை ஒருக்கா கேட்டுத்தான் பாருங்களேன்

Posted: 17 Jun 2014 02:14 AM PDT

Street-Performer-in-Strasbourg,-France,-has-amazing-vocal-talent

Street-Performer-in-Strasbourg,-France,-has-amazing-vocal-talent

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதன் மறுஜென்மம் எடுப்பதை நேரில் அவதானித்ததுண்டா?

Posted: 17 Jun 2014 02:10 AM PDT

Hit-by-a-car-and-ran-on

Hit-by-a-car-and-ran-on

This posting includes an audio/video/photo media file: Download Now

பிறந்தநாளில் பெண்களை வேட்டையாடும் காமக்கொடூரன்: 108 பெண்களை சீரழித்த கொடுமை

Posted: 17 Jun 2014 02:05 AM PDT

harbinder

harbinder

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தக் கார் உண்மையான கார் தானா?… கொஞ்சம் ஷாக் ஆகாமல் பார்த்து சொல்லுங்க

Posted: 17 Jun 2014 02:00 AM PDT

Viru-ralli-2014-Kehala-jump

Viru-ralli-2014-Kehala-jump

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம்!

Posted: 17 Jun 2014 01:57 AM PDT

smart-watch

smart-watchஉலகின் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாளராக வந்தது சாம்சங் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கின் தயாரிப்பில் எங்களது தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தது.

வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் சாம்சங் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அபராதத்தை செலுத்திவிட்டு தனது விற்பனையை தொடர்ந்து நடத்திவந்தது.

இதன் பின்னரும் அடிக்கடி இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையே தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நிலவியது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக சாம்சங்க்கும் செல்போன்களை தயாரித்தது.

கடைசியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்&5 எஸ் அறிமுகப்படுத்தியது. இதற்கு இணையாக சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்&5 அறிமுகப்படுத்தியது. இதனிடையே வழக்கம் போல இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளும் தொடர்ந்தது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் சாம்சங் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. இதனால் இருநிறுவனங்களுக்கும் இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது என அனைவரும் எண்ணினர்.

ஆனால் தற்போது வேறுவிதமாக போட்டி துவங்கியுள்ளது. அதாவது ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் சாம்சங் நிறுவனம் சாதனை படைத்துவருவதை பார்த்த ஆப்பிள் நிறுவனம், தானும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

சாம்சங்கின் ஸ்மார்ட் வாட்சை காட்டிலும் தங்களுடைய தயாரிப்பில் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

வழக்கமான ஸ்மார்ட் வாட்சில் இருப்பது போல உடலின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மட்டுமல்லாமல், வாய்ஸ் ரெககனேஷன் மூலம் எஸ்எம்எஸ் மற்றும் செல்போனுக்கு வரும் அழைப்புகளை கேட்கும் வசதி, புளூடூத் மற்றும் வைபை ஆகிய வசதிகளை இதில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை வரும் அக்டோபர் மாதம் வெளியிடவும் ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதே போல மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – வங்கதேசம் மோதல்!

Posted: 17 Jun 2014 01:51 AM PDT

India-Bangladesh

India-Bangladeshஇந்தியா - வங்கதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி, மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசம் சென்றுள்ள சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மிர்பூரில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்றது. அந்த போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. இந்தியா 16.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது, இந்திய அணி 26 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்தியா 24.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர்கள் உத்தப்பா 50, ரகானே 64 ரன் விளாசினர். ரகானே ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஆட்டம் நடைபெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுயநினைவு திரும்பிவிட்ட உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர்!

Posted: 17 Jun 2014 01:45 AM PDT

show-maker

show-makerபனிச்சறுக்கு விளையாட்டின்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பார்முலா 1 கார் பந்தய முன்னாள் உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் (45 வயது), கோமாவில் இருந்து மீண்டுள்ளார். கடந்த டிசம்பர் 29ம் தேதி ஏற்பட்ட இந்த மோசமான விபத்தை அடுத்து, பிரான்ஸ் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஷூமேக்கரை மருந்துகளின் உதவியுடன் கோமா நிலையில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு சுயநினைவு திரும்பிவிட்டதாகவும், இனி சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் ஷூமேக்கரின் மேலாளர் சேபைன் கெம் தெரிவித்துள்ளார். ஷூமேக்கர் 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி!

Posted: 17 Jun 2014 01:39 AM PDT

modi

modiவலிமையான இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு நன்மை கிடைக்கும் என பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார். இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் நேற்று பேசியதாவது: வலிமையான பூடா னால் இந்தியாவுக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும். அதேபோல் வலிமையான இந்தியா உருவாகும்போது, இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளும், குறிப்பாக சார்க் நாடுகள் பலன்பெறும். இந்தியா வலிமையான நாடாக மாற வேண்டி யது, அதன் மக்களுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாட்டு மக்களுக்கும் தேவையான ஒன்றாகும். அண்டை நாடுகளுடன் நட்புடன் இருக்கவே இந்தியா எப்போதும் விரும்புகிறது. அதனால்தான் எனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து சார்க் நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். அத் தலைவர்கள் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு தனிப்பெருமையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பூடான் பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் ஆட்சி மாறிவிட்டது. ஆனால் அதனால் நம்முடைய உறவில் எந்த மாற்றமும் இல்லை. இது ஆட்சிகளுக்கு இடையேயான உறவு அல்ல. நாடுகளுக்கு இடையேயான உறவாகும். முந்தைய அரசால் பூடானுக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றுவோம். மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு பூடான் மாறியது. தற்போது மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இமயமலை நம் நாட்டைப் பிரிக்கிறது என்று கூறுகிறார்கள். அது தவறு. இமயமலை நம்மை இணைக்கிறது. இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றிட வேண்டும். குறிப்பாக பாதுகாப்புத் துறையில். நாம் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சுற்றுலா துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இமயமலை நம் இரு நாட்டுக்கும் பொதுவானதாகும். இமாலயன் படிப்புகளுக்காக திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தை இந்தியாவில் திறக்க உள்ளோம். இரு நாடுகளும் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். அதே போல் பூடான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார். மோடியின் உற்சாக பேச்சுக்கு பூடான் எம்.பி.க்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். கூட்டறிக்கை: இந்தியா வும், பூடானும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரு தரப்பு பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு அளிப்பதில் இரு தரப்பும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தின. பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, ஒருங்கிணைந்து, ஒத்துழைப்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பு உறவுகள் குறித்தும், பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும், மண்டலத்தின் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி, பூடான் பிரதமர் துசேரிங் டோப்கே இடையேயான பேச்சின்போது, இரு தரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது. பால் பொருட்கள், கோதுமை, சமையல் எண்ணை, பருப்பு வகைகள், பாஸ்மதி அரிசி அல்லாத பிற அரிசிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய பூடானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இரு தரப்பு வர்த்தகம், முதலீட்டு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மோடியும், டோப்கேவும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர். பல்வேறு நீர்மின் திட்டங்களை கூட்டாக செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. நேரு-வாங்சுக் கல்வி உதவித் தொகையை ^2 கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. பூடானின் 20 மாவட்டங்களில் மின்னணு நூலகம் அமைக்க இந்தியா நிதியுதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. பூடானுடனான மின் திட்டங்கள்: 600 மெகாவாட் கோலோங்சு நீர்மின் திட்டத்துக்கான அடிக்கல்லை மோடி நேற்று திறந்து வைத்தார். இது இந்தியா-பூடான் கூட்டு முதலீட்டு திட்டமா கும். ஏற்கெனவே 1416 மெகா வாட் திறனுள்ள 3 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதைத் தவிர மேலும் மூன்று திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன. அவை புனட்சாங்சு (1200 மெகாவாட்), புனட்சாங்சு-2 (1020 மெகாவாட்), மாங்டேசு (720 மெகாவாட்). இவை 2017-18ல் செயல்பட துவங்கும். இதைத் தவிர இந்தாண்டு ஏப்ரலில் மொத்தம் 2120 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 4 திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. "பூடானுடனான நீர்மின் திட்டங்கள¢ இரு தரப்புக்கும் பலனளிக்கக் கூடியதாகும். மின்சார ஏற்றுமதி மூலம் பூடானுக்கு வருவாய் கிடைக்கும். இருதரப்பு உறவும் தொடரும். மேலும் இந்தியாவுக்கு மிகக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு திரும்பினார் மோடி: பூடானுக்கான தனது இருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை நாடு திரும்பினார். பாரோ விமான நிலையத்தில் பூடான் பிரதமர் டோப்கே மற்றும் அமைச்சர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். தலைநகர் திம்புவிலி ருந்து கார் மூலம் பாரோ வரும் வழியில், சாலையில் மக்கள் அவருக்கு கையசைத்து வாழ்த்து கூறினர். பயணம் வெற்றி: சுஷ்மா திருப்தி பூடான் பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: பூடான் பயணம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இரு தரப்புக்கும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்தது. எந்த திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக உள்ளார். அதனால் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றுவோம். குறுகிய கால பயணமாக இருந்தாலும், அதனால் இரு தரப்புக்கும் நீண்டகால நட்புறவு, பலனளிக்கக் கூடியதாக இப் பயணம் அமைந்தது. பூடான் மன்னர் மற்றும் பிரதமர் மற்றும் மக்கள் ஆகியோர் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இவ்வாறு சுஷ்மா கூறினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோரும் மோடியுடன் பயணம் செய்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

68 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய நபர் புலிகளின் முக்கிய உறுப்பினர்!

Posted: 17 Jun 2014 12:54 AM PDT

arrest

arrestபோலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 68 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபரான செல்லத்துரை சுரேந்திரராஜ் என்பவர் தலைமறைவாகி இருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் போர் நடைபெற்ற காலத்தில் கொழும்புக்கு தற்கொலை குண்டுத்தாரிகளை அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு கொழும்பில் தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொடுப்பது, தாக்குதல் நடத்தும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது என்பன இந்த சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பல வருடங்களாக இந்த நபரை தேடி வந்ததாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™