Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கேரளாவில் 2 நாட்கள் கனமழை பெய்யும்: வானிலை மையம்

Posted: 17 Jun 2014 10:06 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 5–ந்தேதி தொடங்கியது. சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மழை அளவு கடந்த 2 வாரத்தில் குறைவாகவே பதிவாகி இருந்தது. இந்த நிலையில் சில நாட்கள் ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. கேரள மாநிலம் வடக்கு, தெற்கு பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை இலாகா மையம் எச்சரித்துள்ளது.

ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை நாளை கூடுகிறது

Posted: 17 Jun 2014 10:05 PM PDT

ஆந்திர முதல்–மந்திரியாக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 8–ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்–மந்திரிகள் உள்பட 18 மந்திரிகளும் பதவி ஏற்றனர். புதிய அரசு பதவி ஏற்ற பிறகு மாநில சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

கேரளாவில் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம்

Posted: 17 Jun 2014 09:52 PM PDT

கேரளாவில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தாலும் கேரள காங்கிரசில் உள்ள கோஷ்டி பூசல் குறைந்தபாடில்லை. இது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. எனவே கோஷ்டி பூசலை குறைக்க கேரள காங்கிரஸ் மாநில

8 ஆண்டுகளுக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேவ பிரசன்னம்

Posted: 17 Jun 2014 09:27 PM PDT

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். இருமுடி கட்டி விரதம் இருந்து பதினெட்டாம்படி ஏறி சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

உ.பி.யில் காதலனோடு ஓடிய பெண்ணை சுட்டுக் கொன்று எரித்த அண்ணன்

Posted: 17 Jun 2014 05:00 PM PDT

நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் நடைபெறும் காட்டுமிராண்டித் தனத்துக்கு பெயர் போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது அண்ணன் சுட்டுக் கொன்று, பிணத்தையும்

பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: மாநில அரசுகளுக்கு நிதி மந்திரி வேண்டுகோள்

Posted: 17 Jun 2014 01:44 PM PDT

காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக 6.01 சதவீதமாக உயர்ந்தது. பருவமழை குறைவாக பெய்யும் என்ற கணிப்பாலும், ஈராக் போர் நிலவரத்தால்

இந்திய கடற்படையில் மேலும் ஒரு போர்க்கப்பல்

Posted: 17 Jun 2014 01:32 PM PDT

இந்திய கடற்படையில் சமீபத்தில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ள நிலையில், இந்திய கடற்படையின் வலிமை கூடி உள்ளது இந்த நிலையில், இந்திய கடற்படையில்

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு: மத்திய மந்திரிசபை விரைவில் முடிவு

Posted: 17 Jun 2014 01:15 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமிழக அரசுக்கு கடந்த மாதம் அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, அணையை பலப்படுத்தியபின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறியது

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

Posted: 17 Jun 2014 12:51 PM PDT

ஈராக் உள்நாட்டு போர் காரணமாக பாக்தாத் நகரில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக தீவிரவாதிகளின் பிடியில் உள்ள திர்கித் நகரில் 46 இந்திய நர்சுகளும்

காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடுகிறார்: சித்தராமையா பேட்டி

Posted: 17 Jun 2014 12:32 PM PDT

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நதிநீர் பிரச்சனையின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். தலைநகர் பெங்களூருவில் நடைபெற்ற அரசு அடிக்கல் நாட்டு விழாவின் போது நிருபர்களுக்கு பேட்டியளித்த

ரஷிய துணை பிரதமர் இன்று இந்தியா வருகிறார்

Posted: 17 Jun 2014 11:55 AM PDT

ரஷிய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகிறார். நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு, ரஷிய தலைவர் ஒருவர் வருவது இதுவே முதல்முறை ஆகும். டிமித்ரி ஓ ரோகோசின்

விலை உயர்வு எதிரொலி: வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

Posted: 17 Jun 2014 11:32 AM PDT

ஒவ்வொரு வீட்டிலும் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிற வெங்காயத்தின் விலை ஏறுமுகம் காணத் தொடங்கி உள்ளது. தலைநகர் டெல்லியில் 15 தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையில் விற்பனையானது

தேசிய மல்யுத்த வீராங்கனையை கற்பழித்து, படம் பிடித்த கும்பல் மீது புகார்

Posted: 17 Jun 2014 11:13 AM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரை சேர்ந்த தேசிய மல்யுத்த வீராங்கனையான 22 வயது பெண், தன்னை கற்பழித்து, அந்த காட்சிகளை படம் பிடித்து, மிரட்டி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீச்சில் புகார் அளித்துள்ளார்

கட்டண உயர்வு: பிரதமரின் அனுமதிக்காக காத்திருக்கும் ரெயில்வே துறை

Posted: 17 Jun 2014 10:16 AM PDT

பயணிகள் ரெயில் சேவையின் மூலம் மட்டும் தொடர்ந்து மாதந்தோறும் சுமார் 900 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும் ரெயில்வே துறையின் வருவாயை சீர்படுத்தும் விதமாக பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்திக்கொள்ள

மேற்கு வங்காள கவர்னருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

Posted: 17 Jun 2014 08:49 AM PDT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்த கவர்னர்களை நீக்கிவிட்டு, புதிய கவர்னர்களை நியமனம் செய்யும் பணியில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நியமித்த கவர்னர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக

டெல்லியில் கொல்லப்பட்ட போக்குவரத்து காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு: ஆளுநர்

Posted: 17 Jun 2014 07:08 AM PDT

டெல்லியில் மோதி நகர் சவுக் பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்தவர் மானா ராம். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் பணியிலிருந்த போது மூன்று பேர் காரில் வந்தனர். அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அந்த கார் டிரைவரிடம் மானாராம் கூறியுள்ளார்.

கேம்பகோலா குடியிருப்பு இடிப்பை வீடியோவில் பதிவு செய்ய திட்டம்

Posted: 17 Jun 2014 05:59 AM PDT

மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கேம்பகோலா குடியிருப்பை இடிக்கும் பணியை வீடியோவில் பதிவு செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. கேம்பகோலா வளாகத்தில் 6 அடுக்குமாடி கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு 20 மாடிகள் வரை வானளாவிய கட்டிடங்கள்

கவர்னர்கள் பதவி விவகாரம்: தலைவர்கள் கருத்து

Posted: 17 Jun 2014 05:45 AM PDT

காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மாநில கவர்னர்களை நீக்கிவிட்டு, புதிய கவர்னர்களை நியமனம் செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவரான உ.பி. கவர்னர் பி.எல்.ஜோஷி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் குஜராத், மராட்டியம், மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான், திரிபுரா மாநில கவர்னர்களும் பதவியை விட்டு

பஞ்சாபில் பாதல் ரகசிய ஆய்வு: 8 மந்திரிகள் அலுவலகத்திற்கு வராதது கண்டுபிடிப்பு

Posted: 17 Jun 2014 04:30 AM PDT

பஞ்சாப் முதலமைச்சரான பிரகாஷ் சிங் பாதல் இன்று காலை ஒன்பது மணி அளவில் அம்மாநில தலைமைச் செயலகத்தில் ரகசிய ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள மூன்று மற்றும் ஆறாவது மாடிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரது அமைச்சரவையை சேர்ந்த எட்டு அமைச்சர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வராமல் அவர்களது இருக்கைகள் காலியாக இருந்ததை அவர் கண்டார். தகவல் மற்றும் பொது

இமாச்சலில் 11 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து

Posted: 17 Jun 2014 04:21 AM PDT

இமாச்சல பிரதேசத்தில் மலை பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். தலைநகர் சிம்லாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள சிர்மாவூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தாக்கில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™