Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சூர்யாவுக்கு வில்லனாக 'மைக்' மோகன்?

Posted: 14 Jun 2014 12:44 AM PDT

mike-mohan

mike-mohanமைக் மோகனை இன்றைய இளைர்களுக்கு எந்த அளவு நினைவிருக்குமோ தெரியவில்லை. ஆனால் முப்பதுகளைத் தாண்டிய அத்தனைப் பேருக்கும் அவரை ஒரு வெள்ளி விழா நாயகனாகத் தெரியும்! அவர் நடிப்பு எப்படி இருந்தாலும், தன் வசம் பல சாதனைகளை வைத்திருப்பவர் மோகன். இவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் படு பிரபலம். பெரும்பாலும் பாடகராகவே பல படங்களில் நடித்ததால் அவருக்கு மைக் மோகன் என்று ஒரு பட்டப்பெயர். தொன்னூறுகளில் காணாமல் போன மோகன், சில ஆண்டுகளுக்கு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கினார். பின்னர் சுட்ட பழம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு பல கேரக்டர் ரோல்கள் கிடைத்த போதும், ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் தற்போது மோகன் நடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதையறிந்த வெங்கட் பிரபு, தன் படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளார். சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் பிரதான வில்லனாக நடிக்க மோகனிடம் பேசியுள்ளார் வெங்கட்பிரபு. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலியல் தொந்தரவு நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார்!

Posted: 14 Jun 2014 12:40 AM PDT

preity-zinta-ness-wadia

preity-zinta-ness-wadiaதனது முன்னாள் காதலனும் நெஸ் வாடியா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான நெஸ் வாடியா தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா போலீசில் புகார் கூறியுள்ளார். கடந்த மே 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்த போது, ஸ்டேடியத்தின் கார்வார் பெவிலியனில் வைத்து தன்னை பலர் முன்னிலையில் அசிங்கமாகப் பேசியதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் நெஸ் வாடியா மீது புகார் கொடுத்துள்ளார் ப்ரீத்தி. எழுத்துப் பூர்வமாக ப்ரீத்தி கொடுத்த புகாரின்பேரில், நெஸ் வாடியா மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 506 மற்றும் 509-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ப்ரீத்தியிடம் முதல் தகவலறிக்கையும் தரப்பட்டுள்ளது. யார் நெஸ் வாடியா? ப்ரீத்தியும் நெஸ் வாடியாவும் முன்பு இணைந்து வாழ்ந்தனர். 5 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உதயநிதியை 'ஒருதலையாய் காதலிக்கும்' ஷெரீன்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு

Posted: 14 Jun 2014 12:35 AM PDT

sherin

sherinதுள்ளுவதோ இளமை ஷெரீனை நினைவிருக்கிறதா... பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர், மேனேஜருடன் காதல், அம்மாவுடன் மோதல் என ஏகப்பட்ட வில்லங்கங்களில் சிக்கி வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம் 'பூவா தலையா'. அதன் பின்னர் நான்கைந்து ஆண்டுகள் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஒரு விபத்தில் கூட சிக்கினார். இடையில் சில தெலுங்குப் படங்களில் நடித்தார். இப்போது புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி, நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கும் 'நண்பேன்டா' படத்தில் நடிகை ஷெரீன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரது மறுபிரவேசத்தை இயக்குநர் ஜெகதீஷ் உறுதி செய்துள்ளார். உதயநிதி மீது ஒருதலைக் காதல் கொண்ட பெண்ணாக இதில் தோன்றுகிறாராம் ஷெரீன். ஷெரீன் -உதயநிதி தோன்றும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. ஷெரீன் நடிப்பது குறித்து இயக்குநர் ஜெகதீஷ் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் இந்தத் தமிழ்ப் படத்தில் நடித்து வருகின்றார். மிகவும் திறமை வாய்ந்த அவர் எங்களது குழுவில் இணைந்துள்ளது படத்துக்கு ஸ்பெஷலாகும்," என்றார். நண்பேன்டா படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றுயுள்ள இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஹீரோயின் நயன்தாரா கும்பகோணத்திலேயே கடந்த சில வாரங்களாக முகாமிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் ஃபோர்ப்ஸ் விளையாட்டு வீரர்கள் பட்டியல்: டோனிக்கு 22வது இடம்

Posted: 14 Jun 2014 12:29 AM PDT

dhoni

dhoniஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி ரூ.178 கோடிகளுடன் 22வது இடத்தில் உள்ளார். அமெரிக்க வணிக பத்திரிகையான 'ஃபோர்ப்ஸ்' உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் முதல் 2014-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வென்ற பரிசுத்தொகைகள், போனஸ், போட்டி கட்டணம் மற்றும் விளம்பர வருவாய் போன்றவை குறித்து கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் பட்டியல் ஒன்றைத் தயாரித்துள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை. முதலிடத்தில் அந்த டாப்-100 பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் புளோய்ட் மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். 46 வயதான் மேவெதர் கடந்த ஓராண்டில் சம்பாதித்த தொகை ரூ 623 கோடியாகும். 72 நிமிட உழைப்பு இந்தத் தொகையை சம்பாரிக்க தொழில்முறை குத்துச்சண்டையில் 46 ஆட்டங்கள் விளையாடியுள்ள மேவெதர், அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் குத்துச்சண்டை களத்தில் செலவிட்ட நேரத்தை கணக்கிட்டால், அவை வெறும் 72 நிமிடங்கள் தான் என தெரிய வந்துள்ளது. 2வது இடத்தில் ரொனால்டோ மேவெதரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். போர்ச்சுகல் அணி மட்டுமின்றி ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் கிளப்புக்காகவும் விளையாடி வரும் இவர் கடந்த 12 மாதங்களில் ஈட்டிய தொகை ரூ.475 கோடியாகும். இதில் விளம்பர வருவாய் ரூ.166 கோடியும் சேரும். 4வது இடத்தில் மெஸ்சி... இந்த வரிசையில் மற்ற பிரபல கால்பந்து வீரர்களான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி 4-வது இடத்திலும் (ரூ.383 கோடி), பிரேசிலின் நெய்மர் 16-வது இடத்திலும் (ரூ.199 கோடி) உள்ளனர். பின் தங்கிய டைகர் வுட்ஸ்... வழக்கமாக இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்க கோல்ப் பந்தய வீரர் டைகர் வுட்ஸ் இம்முறை ரூ.362 கோடியுடன் 6-வது இடத்தில் பின்தங்கி விட்டார். ரோஜர் பெடரருக்கு 7வது இடம்... கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதையும் வெல்லாத டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இந்தப் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்தாண்டில் விளம்பரம் மூலமே இவர் சம்பாதித்தது ரூ 308 கோடியாகும். மொத்த ஆண்டு வருமானம் ரூ. 333 கோடி. ஒரே இந்திய வீரர்... இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே வீரர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோனி மட்டுமே. ரூ.179 கோடியுடன் டோனி 22-வது இடத்தை பிடித்துள்ளார். விளம்பரங்கள் மூலமாக... டோனிக்கு சம்பளம், பரிசுத்தொகையை விட விளம்பரம் மூலம் தான் அதிக வருவாய் கிடைத்துள்ளதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. அதாவது மொத்த ஆண்டு வருமானத்தில் விளம்பரங்கள் வாயிலாக டோனி பெற்ற பணம் ரூ.154 கோடி ஆகும். முதல் கேப்டன்... மேலும், இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கும் டோனி, ஒரு நாள் போட்டி உலககோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சிறப்புக்குரியவர் என ஃபோர்ப்ஸ் புகழ்கிறது. வீராங்கனைகள்... சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா ரூ.145 கோடியுடன் 34-வது இடத்திலும், மற்றொரு டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரூ.130 கோடியுடன் 55-வது இடத்திலும் உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதல் முறையாக பாரக் ஒபாமாவின் செல்வாக்கில் லேசான சரிவு! முந்தினார் புஷ்

Posted: 14 Jun 2014 12:22 AM PDT

george-bush-obama

george-bush-obamaஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் செல்வாக்கில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளதாக சிஎன்என் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் செல்வாக்கு சற்று கூடியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு குறித்து சமீபத்தில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. சர்வதேச நிறுவனம் கருத்து வாக்கெடுப்பு நடத்தின. முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் தற்போதைய அதிபர் ஒபாமா இடையே செல்வாக்கு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதில், அதிபர் ஒபாமாவின் செல்வாக்கில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக 47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். ஆனால் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சுக்கு ஆதரவாக 51 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். இது கடந்த 2009-ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் கிடைத்ததைவிட விட கூடுதலாகும். அப்போது, இவருக்கு 46 சதவீதம் மட்டுமே ஆதரவு இருந்தது. இப்போது 5 சதவீத ஆதரவு கூடியுள்ளது. அமெரிக்க மக்களிடையே ஒபாமாவின் செல்வாக்கு குறைந்து இருப்பதாக சி.என்.என். வாக்கெடுப்பு இயக்குனர் கீட்டிங்க ஹோலண்டு தெரிவித்தார். அடுத்த அதிபர் வேட்பாளர் என்று கூறப்படும் ஹிலரி க்ளிண்டன் செல்வாக்கும் சரிந்துள்ளது. 2013-ல் 67 சதவீதமாக இருந்த அவரது செல்வாக்கு, இப்போது 55 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் ஹிலரியின் கணவர், முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனுக்கு 68 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

1000 தடவை பார்த்தாலும் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டே இருப்பீங்க!

Posted: 14 Jun 2014 12:15 AM PDT

Pushing-a-friend-towards-a-cheetah-prank

Pushing-a-friend-towards-a-cheetah-prank

This posting includes an audio/video/photo media file: Download Now

நம் வாழ்வில் செல்போன் ஏற்படுத்தும் விளைவை தெளிவாக எடுத்துரைக்கும் காட்சி!

Posted: 14 Jun 2014 12:07 AM PDT

Volkswagen---Eyes-on-the-road

Volkswagen---Eyes-on-the-road

This posting includes an audio/video/photo media file: Download Now

பெட்ரோல் நிலைய விபத்தில் ஓட்டுனரை காப்பாற்றியவர்!

Posted: 14 Jun 2014 12:04 AM PDT

Off-duty-policeman-saves-man-from-burning-car-at-petrol-station

Off-duty-policeman-saves-man-from-burning-car-at-petrol-station

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்த்துக்கிட்டே இருங்க இந்த தாத்தா திடீர்னு ஷாக் கொடுப்பாரு

Posted: 14 Jun 2014 12:00 AM PDT

old-man

old-man

This posting includes an audio/video/photo media file: Download Now

தீப்பிடித்து வெடித்து சிதறும் ஏரி எப்படினு குழப்பமா இருக்குதா!

Posted: 13 Jun 2014 11:54 PM PDT

Sodium-and-water

Sodium-and-water

This posting includes an audio/video/photo media file: Download Now

நெய்மர் அமர்க்களம்! பிரேசில் அட்டகாசம்

Posted: 13 Jun 2014 11:49 PM PDT

Neymor

Neymorஉலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு), பிரேசில் அணி 3,1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி புள்ளிக் கணக்கை தொடங்கியது. சா பாலோ இடாகுவரோ ஸ்டேடியத்தில் அமெரிக்க நட்சத்திரங்கள் ஜெனிபர் லோபஸ், பிட்புல், பிரேசில் பாடகி கிளாடியா மற்றும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமயமான தொடக்கவிழா நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரேசில் , குரோஷியா அணிகள் மோதிய முதல் லீக் ஆட்டம் தொடங்கியது. இரு அணி வீரர்களும் எடுத்த எடுப்பிலேயே ஆக்ரோஷமான தாக்குதலில் இறங்க, அனல் பறந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செலோ காலில் பட்ட பந்து கோல் கீப்பர் ஜூலியோ சீசரை ஏமாற்றி ஓன் கோல் ஆக அமைய, சொந்தக் காலில் சூனியம் வைத்துக் கொண்ட அதிர்ச்சியில் அரங்கில் இருந்த அரை லட்சம் பிரேசில் ரசிகர்களும் அப்படியே உறைந்து போயினர். முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர்களுக்கு ஆபத்பாந்தவனாய் கை கொடுத்தார் இளம் புயல் நெய்மர். 29வது நிமிடத்தில் சுமார் 75 அடி தூரத்தில் இருந்து அவர் அடித்த பந்து அமர்க்களமாக கோல் ஆக, பிரேசில் அணி 1,1 என சமநிலையை எட்டியது. அரங்கில் இருந்தவர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசமும் நெய்மர்... நெய்மர்... என்று ஆர்ப்பரித்ததில் நிலநடுக்கத்தை அளவிடும் ரிக்டர் அளவுகோல் கூட தாறுமாறாய் அசைந்தது என்றால் மிகையல்ல. முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை. இரண்டாவது பாதி ஆட்டமும் இழுபறியாக நீடித்த நிலையில், 71வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பை வழங்கினார் ஜப்பான் நடுவர் யுச்சி நிஷிமுரா. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெய்மர் தனது 2வது கோலை திணிக்க, பிரேசில் அணி 2,1 என முன்னிலை பெற்றது. பெரிய அளவில் தவறு எதுவும் நிகழாதபட்சத்தில், நடுவர் நிஷிமுரா வழங்கிய பெனால்டி கிக் முடிவு பெரிய சர்ச்சையை கிளப்பியது. எதிர்பாராத இந்த பின்னடைவால் குரோஷிய வீரர்கள் மனமுடைந்து போனார்கள். ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் ஆஸ்கர் அற்புதமான பீல்டு கோல் அடிக்க, பிரேசில் அணி 3,1 என்ற கணக்கில் வென்று முழுதாக 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. உலக கோப்பை போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்த போராட்டங்கள், மைதானங்களை தயார் செய்வதில் கால தாமதம் போன்ற பல்வேறு குறைபாடுகளையும், தொடக்க லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி பெற்ற இந்த வெற்றி நிவர்த்தி செய்துவிட்டது. பிரேசில் அணி முதல் வெற்றியை ருசித்தாலும், அந்த அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது என்று சொல்ல முடியாது. பந்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் சக வீரருக்கு துல்லியமாகப் பாஸ் செய்வதிலும் பிரேசில் வீரர்கள் தடுமாறியது கண்கூடாகத் தெரிந்தது. அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கோப்பை கனவை பிரேசில் தக்கவைக்க முடியும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனுமதி பெற்றா யுத்தம் செய்தீர்கள்? தலைவர்கள் கூட்டத்தில் சம்பந்தன் கடும் எதிர்ப்பு!

Posted: 13 Jun 2014 11:43 PM PDT

Sampanthan

Sampanthanபாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற்று நீங்கள் யுத்­தத்தை நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 3 தட­வைகள் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்தில் ஆலோ­சனை நடத்­த­வில்லை. இந்­த­நி­லையில் தற்­போது ஐ.நா.விசா­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வது பய­னற்றதாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைக்­குழு இலங்­கைக்கு எதி­ரான விசா­ர­ணை­யினை மேற்­கொள்ளக் கூடாது எனக் கோரி பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை மீதான விவாதம் குறித்து ஆராய்­வ­தற்­காக நேற்று சபா­நா­யகர் சமல் ராஜபக்ச தலை­மையில் கட்சித் தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இவ்­வாறு கூறி­யுள்ளார். சபா­நா­யகர் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் அர­சாங்­கத்தின் பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான தினேஷ் குணவர்­தன, அமைச்­சர்­க­ளான பஷில் ராஜபக்ச, டியூ குண­சே­கர, வாசு­தேவ நாண­யக்­கார, ஜே.வி.பி.யின் தலைவர் அநு­ர­கு­மார திச­நா­யக்க, எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வான ஜோன் .அம­ர­துங்க ஆகியோர் கலந்­து­ கொண்­டனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் பங்­கேற்­றனர். இந்­தக் ­கூட்­டத்தில் ஆளும்­ கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அசல ஜாகொ­டகே, மாலினி பொன்­சேகா, ஜானக பண்­டார, உதித் லொக்­கு­பண்­டார, ஏ.எச்.எம். அஸ்வர், சாந்த பண்­டார, ஜே.ஆர்.பி. சூரி­யப்­பெ­ரும, நிமல் விஜ­ய­சிங்க ஆகிய 9 எம்.பி.க்களினால் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­குழு இலங்­கைக்கு எதி­ரான விசா­ரணை மேற்­கொள்­ளக்­கூ­டாது என்று கோரி சமர்ப்­பித்­தி­ருந்த பிரே­ரணை குறித்து ஆரா­யப்­பட்­டது. இதன்­போது கருத்து தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், இந்தப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றது. இதற்கு நாம் ஆத­ரவு வழங்க மாட்டோம். இவ்­வா­றான ஒரு பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­டு­வ­தா­னது காலம் கடந்த விட­ய­மாகும். பாரா­ளு­மன்­றத்தைக் கேட்டு அர­சாங்கம் யுத்தம் நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக 3 தட­வைகள் பிரே­ரணை கொண்­டு ­வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. இதன்­ போ­து­ கூட பாரா­ளு­மன்­றத்தில் இவ்­வி­டயம் குறித்து ஆலோ­சிக்­கப்­ப­ட­வில்லை. சர்­வ­தேச விசா­ரணை தொடர்­பான பிரே­ரணை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நிறை­வேற்­றப்­பட்ட உட­னேயே இந்த விசா­ர­ணைக்­கு­ழுவை ஏற்­றுக்­கொள்­ளப்­ போவ­தில்லை என்றும், அதற்கு ஒரு­போதும் ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்றும் இலங்கைப் பிர­தி­நிதி தெட்டத்தெளி­வாக கூறி­விட்டார். இந்­த­நி­லையில் இந்த விசா­ரணை குறித்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­திப்­பதில் எந்­த­வித அர்த்­தமும் இல்லை. அர­சாங்கம் இந்த விட­யத்தில் எப்­போதோ தீர்­மானம் நிறை­வேற்­றி­ விட்­டது. இந்­த­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் விவா­திப்­பது அர்த்­த­மற்ற செயற்­பா­டாகும். இந்த பிரே­ர­ணைக்கு நாம் எதிர்ப்பு தெரி­விக்­கின்றோம். இதற்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது. தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் இந்தப் பிரே­ரணை விவா­திக்­கப்­ப­டு­வ­தனால் நாட்டில் சர்ச்­சையே ஏற்­படும். இத­னை­விட வேறொன்றும் இடம்­பெ­றப்­ போ­வ­தில்லை என்று தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து ஏனைய கட்சித் தலை­வர்­களும் கருத்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ நா மனிதவுரிமை குழுவில் சிரேஷ்ட இணைப்பாளராக சண்ட்ரா பெடஸ்!

Posted: 13 Jun 2014 11:37 PM PDT

Navaneetham-pillai

Navaneetham-pillaiஐ நா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் நியமிக்கப்பட விசாரணைக்குழுவில் சிரேஷ்ட இணைப்பாளராக சண்ட்ரா பெடஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையால் இவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிரண்டு பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

திருகோணமலையில் இருந்து 10 கிலோகிராம் வெடிபொருட்களை கடத்தியவர் கைது!

Posted: 13 Jun 2014 11:31 PM PDT

Arrest

Arrest10 கிலோகிராம் வெடிபொருட்களை கடத்திச்சென்ற லாரி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அநுராதபுரம் மணிக்கூட்டு கோபுரம் அருகில் வைத்து அவர் நேற்று 500 டெட்டினேட்டர்கள் மற்றும் 40 மீற்றர் பியூஸ்கோட் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சாரதியே வாகனத்தின் உரிமையாளர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வெடிபொருட்கள் திருகோணமலையில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளன. சாரதியின் இருக்கைக்கு கீழ் பாதுகாப்பாக பொதியிட்ட நிலையில் இந்த பொருட்கள் கடத்திவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வெடிப்பொருட்களை என்ன நோக்கத்துக்காக கடத்தி வந்தார் என்பது தொடர்பில் லாரி சாரதி இன்னும் காரணங்களை கூறவில்லை என போலிஸார் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™