Tamil Star |
- விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் 'கண்டுபிடி கண்டுபிடி'!
- ஹீரோ இல்லாமல், நாயகியை மட்டும் வைத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கும் முருகதாஸ்!
- உன் சமையலறையில் படத்தில் கிடைத்தது போல கண்ணியமான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்! சினேகா பேட்டி
- ஒரே நேரத்தில் இரண்டு பட ஷூட்டிங்குகளைச் சமாளிக்கும் நயன்தாரா!
- இலங்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு!
- இந்த ஆளை நல்லா பாருங்க….. திடீர்னு காணாமல் போயிடுவாரு!
- உங்கள் கவலைகளை நொடியில் மறக்க வைக்கும் இந்த தேவதைகளின் ரசனை!
- பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசும் தாய்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு பெண்ணா?
- நாம் பயன்படுத்தும் CD எப்படி தயாரிக்கிறாங்கனு தெரியுமா?
- சிறுத்தையா? உசைன் போல்ட்டா? வேகத்தில் முந்துவது யார்? உசைன் போல்ட்டை விட வேகமான அவுஸ்திரேலிய சிறுவன்?
- ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள இந்தியா ஏ அணி இன்று தேர்வு!
- உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி அரை இறுதியில் இங்கிலாந்து!
- கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்
- உக்ரைன் நாட்டில் உள்நாட்டு போர் பிரச்னையில் குழப்பம் தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள்!
- பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை: விசாரணை நடத்த பிரித்தானியா உத்தரவு!
- அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசாங்கம் எம்முடன் பேசத் தயாரா? தேசியக் கூட்டமைப்பு கேள்வி!
- சித்தாண்டி முருகன் கோவில் பூந்தோட்டத்திலிருந்து சடலம் மீட்பு!
- லண்டன் மாநாட்டில், இலங்கை பாலியல் வன்முறைகள் குறித்த விவாதம் இடம்பெறாதது ஏன்?
- ஒன்ராறியோ தேர்தல்: வாக்குரிமையைப் பயன்படுத்தி அரசியலில் தமிழ்சமூகம் பலம் பெறுவது அவசியம்!
- தொழிலாளர் சந்தை தேவைகளை நிரப்ப தகுதிவாய்ந்த குடிவரவாளர்களிற்கு எக்பிரஸ் நுழைவு!
| விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் 'கண்டுபிடி கண்டுபிடி'! Posted: 11 Jun 2014 02:13 AM PDT
என்னடா இது... இவங்க மூணு பேரும் எப்போ சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்கன்னு கேக்கறீங்களா... இவர்கள் புதுசு.. மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என நான்கு சிறுவர்கள் இணைந்து நடித்த படம்தான் இந்த கண்டுபிடி கண்டுபிடி. மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம்சுப்பாராமன் இயக்கியுள்ளார். படம் குறித்து ராம்சுப்பாராமன் கூறுகையில், "திரைப்படங்களில் திருமணம் என்பது படத்தின் கடைசியில் சில மணித்துளிகள் வரும் காட்சியாகவே இருக்கும். ஒரு முழு திரைப்படக் கதையும் திருமணச் சூழலில் நடக்கும் படியாக இருந்தால் எப்படியிருக்கும்... அப்படியொரு கலகலப்பான படம்தான் "கண்டுபிடி கண்டுபிடி". படத்தின் முன்பாதியில் திருமண மண்டபம், மொய், விருந்து, திருமண சடங்குகள் போன்றவற்றை நகைச்சுவையுடன் விலாவாரியாக சொல்லியிருப்பது விலா நோக சிரிக்க வைக்கும்படி இருக்கும். கலகலப்பாக போகும் கதையில் எதிர்பாராத ஒரு சம்பவமும் உண்டு. அது கதையின் போக்கை எப்படி மாற்றம் செய்வது என்பதே மீதி கதை," என்றார். தயாரிப்பாளரான கல்கி யுவாதான் படத்துக்கு இசையமைப்பாளரும். ஜூலையில் வெளியாகிறது கண்டுபிடி கண்டுபிடி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹீரோ இல்லாமல், நாயகியை மட்டும் வைத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கும் முருகதாஸ்! Posted: 11 Jun 2014 02:09 AM PDT
ஏ ஆர் முருகதாஸ் படங்கள் என்றாலே... ஹீரோக்களின் ஷோதான். தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என எல்லாமே ஹீரோக்களின் அதிரடி ஆக்ஷன் கதைகள்தான். ஆனால் முதல் முறையாக ஹீரோ இல்லாமல், நாயகியை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் இயக்கப் போகிறாராம். அந்த நாயகி சோனாக்ஷி சின்ஹா. கத்தி படம் முடிந்த கையோடு இந்தப் படத்தை இந்தியில் இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ். இதுபற்றி ட்விட்டரில் சோனாக்ஷி, "நான் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் ஹீரோயினை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படத்தில் நடிக்கிறேன். நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும்," என்று கூறியிருக்கிறார். ஹாலிடே திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பற்றி சோனாக்ஷி அதிக ஆர்வத்துடன் பேசிய போது முருகதாஸ் சோனாக்ஷியின் திறமைகளைப் பற்றி அறிந்து இந்த வாய்ப்பை அளித்துள்ளாராம். படத்தைத் தயாரிப்பது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷனும்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| உன் சமையலறையில் படத்தில் கிடைத்தது போல கண்ணியமான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்! சினேகா பேட்டி Posted: 11 Jun 2014 02:04 AM PDT
உன் சமையலறையில் படத்தில் கிடைத்தது போல கண்ணியமான வேடங்கள் தொடர்ந்து கிடைத்தால் நடிப்பேன், என்றார் சினேகா. சினேகா, பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்த 'உன் சமையலறையில்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தில் சினேகாவின் வேடம் பெரிதும் பாராட்டப்பட்டது. இதுகுறித்து சினேகா பேசுகையில், "உன் சமையலறையில்' படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்தது. படத்தை பார்த்து நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை பாராட்டிக் கொண்டுள்ளனர். எனக்கு இந்த கேரக்டரை கொடுத்த பிரகாஷ்ராஜுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. எனது கணவர் பிரசன்னா எல்லா விஷயங்களிலும் எனக்கு துணையாக இருக்கிறார். உற்சாகப்படுத்துகிறார். திருமணமாகி இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. சந்தோஷமாக இருக்கிறது எங்கள் குடும்ப வாழ்க்கை. எந்த விஷயத்துக்காகவும் என்னை நிர்ப்பந்தப்படுத்தியதில்லை பிரசன்னா. நண்பனாக ஆலோசனைகள் சொல்வதோடு சரி. நல்ல கதைகளில் தொடர்ந்து நடிப்பேன், எனது குடும்பத்தினர் திரையில் என்னை பார்க்கும்போது பெருமைப்படவேண்டும், முகம் சுழிக்கக் கூடாது. அதுமாதிரி கண்ணியமான வேடங்களில்தான் நடிப்பேன். நிச்சயம் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். வயதான வேடங்களில் நடிக்கவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. நல்ல கதையும், உன் சமையல் அறையில் படத்தில் அமைந்த மாதிரி கண்ணியமான பாத்திரமும் அமைந்தால் என் கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பேன்," என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒரே நேரத்தில் இரண்டு பட ஷூட்டிங்குகளைச் சமாளிக்கும் நயன்தாரா! Posted: 11 Jun 2014 01:57 AM PDT
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் நயன்தாரா உச்சத்திலிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம், அவரது நேரந்தவறாமையும், தொழில் நேர்த்தியும்தான் என்பார்கள் திரையுலகில். காதல் விவகாரங்கள், தனிப்பட்ட மனக்கசப்புகள் எதுவும் அவரது சினிமா பயணத்தை பாதித்ததில்லை. அப்படி பாதித்திருந்தால் அவரால் சிம்புவுடன் நடிக்கத்தான் முடியுமா! நயன்தாரா இப்போது முகாமிட்டிருப்பது கும்பகோணத்தில். தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு காலத்தில் கோபிச் செட்டிப்பாளையத்தை குட்டி கோடம்பாக்கமாக மாற்றியிருந்தார்கள். இப்போது அவர்கள் மோகம் கும்பகோணத்தில். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நண்பேன்டா, சிம்புவை வைத்து பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு ஆகிய இரு படங்களின் ஷூட்டிங்குகளும் கும்பகோணத்தில்தான் நடந்து வருகின்றன. இரண்டு படங்களுக்கும் வெவ்வேறு தேதிகள்தான் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால் இது நம்ம ஆளு படம் இடையில் தாமதமானதால், இப்போது இரண்டு படங்களும் ஒரே தேதியில் முட்டிக் கொண்டன. ஆனாலும் இரு படங்களுக்கும் ஷூட்டிங் ஸ்பாட் கும்பகோணம் என்பதால், இரண்டு படப்பிடிப்புகளையுமே சமாளிக்கும் முடிவோடு போனார் நயன்தாரா. காலையில் உதயநிதியின் நண்பேன்டா படத்தில் கலந்து கொண்டவர், மாலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல் காட்சியில் கலந்து கொண்டார். கடந்த ஆறேழு நாட்களாக இப்படித்தான் சமாளித்து வருகிறார், எந்த பிரச்சினையும் இல்லாமல்!This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு! Posted: 11 Jun 2014 01:46 AM PDT
இலங்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிக்கப்பட்ட புகைப்படங்களை அந்நாட்டு உயர் அதிகாரி லக்ருவன் வன்னியராச்சி என்பவர் வெளியிட்டுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே சேதிய அமைப்பின் சம்மேளனம் இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இந்நிலையில் அந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இலங்கை போலீஸ் உயர் அதிகாரி லக்ருவன் வன்னியராச்சி என்பவர் வெளியிட்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவுக்கு கொம்பு வைத்தது போன்ற புகைப்படம் அடங்கிய பலகையை ஏந்தி வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி என்ன சர்வாதிகாரியா அல்லது ஜனநாயகவாதியா என்று கேள்வி எழுப்பிய பலகையை போராட்டக்காரர்கள் ஏந்தி வந்தனர். போராட்டக்காரர்கள் ராஜபக்சேவின் புகைப்படம் அடங்கிய பலகையை வைத்திருந்தனர். அதில் இனி அடிபணியப் போவது இல்லை, சரணடையப் போவது இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதை கண்டிப்பதாக எழுதப்பட்டிருந்த பேனரை போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர். இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த ஆளை நல்லா பாருங்க….. திடீர்னு காணாமல் போயிடுவாரு! Posted: 11 Jun 2014 01:34 AM PDT |
| உங்கள் கவலைகளை நொடியில் மறக்க வைக்கும் இந்த தேவதைகளின் ரசனை! Posted: 11 Jun 2014 01:07 AM PDT |
| பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசும் தாய்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு பெண்ணா? Posted: 11 Jun 2014 01:04 AM PDT |
| நாம் பயன்படுத்தும் CD எப்படி தயாரிக்கிறாங்கனு தெரியுமா? Posted: 11 Jun 2014 01:01 AM PDT |
| Posted: 11 Jun 2014 12:58 AM PDT |
| ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள இந்தியா ஏ அணி இன்று தேர்வு! Posted: 11 Jun 2014 12:19 AM PDT
ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள இந்தியா ஏ அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தியா ஏ அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஏ அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் (4 நாள் ஆட்டம்) மற்றும் நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி வரையிலான இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க உள்ள இந்தியா ஏ அணி வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடக்கிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர் அணியை தேர்வு செய்கின்றனர். ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ், பர்வேஸ் ரசூல், அக்ஷர் பட்டேல், வினய் குமார், உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா மற்றும் அம்தி மிஷ்ரா ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இரண்டு 4 நாள் ஆட்டங்கள் பிரிஸ்பேன் மைதானத்தில் ஜூலை 6,17 தேதிகளிலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏ, இந்தியா ஏ, தென் ஆப்ரிக்கா ஏ மற்றும் ஆஸ்திரேலிய தேசிய செயல்பாட்டு அணி பங்கேற்கும் ஒருநாள் போட்டித் தொடரும் நடக்கிறது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு ஜேம்ஸ் பாக்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸி. அணி: ஜேம்ஸ் பாக்னர் (கேப்டன்), பென் கட்டிங், கேமரான் பாய்ஸ், அலெக்ஸ் தூலன், பீட்டர் பாரஸ்ட், ஜோஷ் ஹேசல்வுட், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், பிலிப் ஹியூஸ், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், கேன் ரிச்சர்ட்சன், சாட் சேயர்ஸ், சாம் ஒயிட்மேன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி அரை இறுதியில் இங்கிலாந்து! Posted: 11 Jun 2014 12:13 AM PDT
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை நேற்று முன்தினம் இரவு எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், பெல்ஜியம் வீரர் பிரையல்ஸ் 13வது நிமிடத்தில் கோல் அடித்து 1,0 என முன்னிலை ஏற்படுத்தினார். இங்கிலாந்து வீரர் காட்லின் 19வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடிக்க 1,1 என சமநிலை ஏற்பட்டது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜாக்சன் 39வது நிமிடத்திலும், அதைத் தொடர்ந்து பெல்ஜியம் வீரர் கோசின்ஸ் 63வது நிமிடத்திலும் கோல் அடிக்க 2,2 என சமநிலை தொடர்ந்தது. கடைசி கட்ட ஆட்டத்தில் அனல் பறந்த நிலையில், இங்கிலாந்து வீரர் லீவர்ஸ் 66வது நிமிடத்தில் மேற்கொண்டு ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 3,2 என்ற கோல் கணக்கில் போராடி வென்று 10 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்ததுடன், அரை இறுதிக்கும் முன்னேறி அசத்தியது. ஐந்து லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்ற பெல்ஜியம் அணி அரை இறுதி வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டது. பி பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா 5,1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவையும், ஜெர்மனி 6,1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவையும் வீழ்த்தின. ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. இன்று ஓய்வு நாளாகும். நாளை 11வது மற்றும் 12வது இடத்துக்காக மலேசியா , தென் ஆப்ரிக்கா மோதுகின்றன. 14ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் 9வது மற்றும் 10வது இடத்துக்கு இந்தியா , தென் கொரியா பலப்பரீட்சையில் இறங்குகின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் Posted: 11 Jun 2014 12:06 AM PDT
கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா விமான நிலையத்தில் கடந்த 8ம் தேதி இரவு 10 தீவிரவாதிகள் ராணுவ உடையில் உள்ளே நுழைந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி 10 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான தெஹ்ரிக் தலிபான் பொறுப்பேற்றது. இந்நிலையில், முதல் தாக்குதல் நடந்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில் நேற்று காலை தலிபான் தீவிரவாதிகள் 2வது முறையாக தாக்குதலை நடத்தினர். கராச்சி விமான நிலையத்தின் அருகே உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி முகாம் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி சுட்டனர். முதலில் 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாகவும் கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த விமான நிலைய பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தஹிர் அலி அளித்த பேட்டியில், '2 தீவிரவாதிகள் பைக்கில் வந்து துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை பயிற்சி மையத்தை தாண்டி, விமான நிலையத்தில் ஊடுருவும் திட்டத்துடன் அவர்கள் வந்தனர். ஆனால், பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்தனர். 2 தீவிரவாதிகளும் பெஹல்கன் கோத் பகுதி வழியாக தப்பி விட்டனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்' என்றார். கராச்சியில் நடந்திருக்கும் அடுத்தடுத்த தீவிரவாத தாக்குதலினால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கருகிய நிலையில் 7 சடலம் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கராச்சி விமான நிலையத்தில் பணிபுரியும் 7 பேரை காணவில்லை என அவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு கராச்சி விமான நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், விமான நிலைய நிர்வாகத்தினர் உடனடியாக 7 பேரையும் தேடினர். அப்போது, குளிரூட்டப்பட்ட அறையில் அவர்கள் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உக்ரைன் நாட்டில் உள்நாட்டு போர் பிரச்னையில் குழப்பம் தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள்! Posted: 11 Jun 2014 12:00 AM PDT
உக்ரைன் நாட்டில் உள்நாட்டு போர் பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 மருத்துவ மாணவர்கள் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவுடன் உக்ரைன் நாட்டை இணைக்க வேண்டும் எனவும், இதற்கு எதிர்ப்பாகவும் அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சிகள் தோன்றி உள்நாட்டு பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. உக்ரைன் நாட்டை ராணுவம் தன் கட்டுப்பாட் டில் கொண்டு வந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை கருதி அங்கிருக்கும் வெளிநாட்டினர் அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் 1040 பேரை பத்திரமாக மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில், லுகான்ஸ்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 8 தூத்துக்குடி மாணவர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பத்திரமாக தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து அவர்களில் சிலர் கூறுகையில், 'உக்ரைனில் உள்நாட்டு பிரச்னை காரணமாகவும், பாதுகாப்பு காரணமாகவும் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம். தற்போது பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில் விடுமுறை காலம் துவங்கும் நேரமாகும். இனி வரும் செப்டம்பர் மாதம் தான் தேர்வு நடக்கும். அதற்குள் நிலைமை சீரடைந்து நாங்கள் திரும்ப சென்று கல்வியை தொடரும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் எங்கள் கல்வி பாதிக்கப்படாது' என்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Jun 2014 11:54 PM PDT
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். லண்டனில் நேற்று ஆரம்பமான வன்முறையின் போது பாலியல் வன்புணர்ச்சியை தடுக்கும் பிரகடனத்துக்கான மாநாட்டின் ஆரம்ப நாளில் அகதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குழுக்கள் முன்வைத்த முறைப்பாட்டின் பின்னரே ஹேக் தமது தகவலை வெளியிட்டார். அண்மைய வாரங்களில் நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகளும் இவ்வாறான சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினார்கள். இதற்கு பதில் வழங்கிய வில்லியம் ஹேக், அகதிகள் விடயத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சே கையாளுகிறது என்று குறிப்பிட்டார். எனவே அந்த அமைச்சு இந்த விடயத்தில் விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாக ஹேக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை பொறுத்தவரை அது அடைக்கலம் கோருவோருக்கு திறந்த நாடு எனினும் ஒழுங்குகள் உரிய முறையில் பேணப்படும். எவராவது இந்த ஒழுங்குகள் பேணப்படவில்லை என்று உணர்ந்தால், அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஹேக் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை நேற்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பிரதிநிதி அஞ்சலினா ஜொய்லி, மாநாட்டில் பிரித்தானியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் தொடர்பில் பேசவுள்ளதாக குறிப்பிட்டார். இந்தநிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் மற்றும் துஸ்பிரயோக வன்முறைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அன்டனியே கட்டரஸ் நாளை வியாழக்கிழமை மாநாட்டுக்கு வரும் போது கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் இலங்கையில் பொலிஸும் இராணுவமும் சித்திரவதைகளை ஒரே மாதியாக செயற்படுத்தி வருவதாக சித்திரவதை தொடர்பான கொள்கை வகுப்பாளர் பேனியட் லௌவிஒக்ஸ் குறிப்பிட்டார். இதற்கிடையில் குடிவரவு தொடர்பான சட்டத்தரணியாக செயற்படும் குலசேகரம் கீதாத்தனன் தமது உரையில், பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் இலங்கையில் பாரிய சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர். எனினும் பிரித்தானிய தொடர்ந்தும் தமிழர்களை நாடு கடத்துவதாக அவர் குற்றம் சுமத்தினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசாங்கம் எம்முடன் பேசத் தயாரா? தேசியக் கூட்டமைப்பு கேள்வி! Posted: 10 Jun 2014 11:47 PM PDT
சர்வதேச விசாரணையொன்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்துத்தரப்பு இணக்கப்பாடு தொடர்பில் பேசுகின்றனர். அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசாங்கம் எம்முடன் பேசத் தயாரா? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியது. சர்வதேசத்தின் நடுநிலைமை இருந்தால் மாத்திரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 26ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரச மற்றும் எதிர்த்தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு விடயத்தில் கருத்துக்களை வெளியிடுகின்றமை தொடர்பில் வினவிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில் எவரும் அதிகாரப் பகிர்வு பற்றியோ இரு தரப்பு இணக்கப்பாடு பற்றியோ பேச விரும்பவில்லை. இன்று இலங்கை மீதான சர்வதேச விசாரணையொன்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளும் அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துக்களை வெளியிடுகின்றனர். உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை காண இவர்கள் விரும்பினால் ஆரம்பத்திலேயே அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்தியிருக்க முடியும். அரசாங்கம் தமது சுயநலத்தினை கருத்திற் கொண்டே இவ்வாறு கருத்துக்களை வெளியிடுகின்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் பயனற்று போய்விட்டது. இவ்வாறான நிலைமையில் இணக்கப்பாட்டினை அரச தரப்பு விரும்பாத சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் தலையீட்டின் மூலம் சர்வதேச மத்தியஸ்தத்தில் ஓர் தீர்வினைப் பெற்றுக்கொள்வதே ஒரே வழியாகும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம். அதேபோல் இப்போதாவது அரசாங்கம் தமது உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அல்லது அதிகாரப் பகிர்வு பற்றி எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். மாறாக அரசாங்கத்திற்குள் இருக்கும் ஒரு சிலர் அதிகாரப் பகிர்வு விடயத்தில் பேசத் தயாரில்லை எனக் கூறுவதும், வேறு சிலர் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதும் அர்த்தமற்ற விடயமாகும். வெறுமனே காலத்தை கடத்தும் பேச்சுவார்த்தைக்கு நாம் இனி ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சித்தாண்டி முருகன் கோவில் பூந்தோட்டத்திலிருந்து சடலம் மீட்பு! Posted: 10 Jun 2014 11:41 PM PDT
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் போலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி முருகன் கோவிலின் பூந்தோட்டத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சித்தாண்டி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி விநாயகம் (வயது 56) என்பவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் போலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி முருகன் கோவில் சம்பந்தப்பட்ட வழக்கொன்று தொடர்பில் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திற்கு சாட்சியாக இவர் இன்றையதினம் சமூகமளிக்கவிருந்தாரென உறவினர்கள் தெரிவித்ததாக, சித்தாண்டி 03 பிரிவு கிராம அலுவலகர் த.சுதாகரன் கூறினார். இது தொடர்பில் போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| லண்டன் மாநாட்டில், இலங்கை பாலியல் வன்முறைகள் குறித்த விவாதம் இடம்பெறாதது ஏன்? Posted: 10 Jun 2014 11:31 PM PDT
பிரித்தானியா, லண்டனில் நேற்று செவ்வாயக்கிழமை ஆரம்பமான மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்த அனைத்துலக மாநாட்டில், இலங்கை குறித்த விவாதத்துக்கு இடமளிக்கப்படாதது ஏன் என பிரித்தானிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. பிரித்தானிய வெளிவிவகார அமைச்ர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஏஞ்சலினா ஜொலி ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் 140 வரையான நாடுகள் பங்கேற்கின்ற போதும், இலங்கை இதனைப் புறக்கணித்துள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சிரியா, கொங்கோ உள்ளிட்ட நாடுகளில் பாலியல் வன்முறைகள் தொடர்பான விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதும், இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இலங்கையில் போரின் போது, பாலியல் வன்முறைகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ள போதும், அதற்கான ஆதாரங்கள் பல கிடைத்துள்ள போதும், இந்த மாநாட்டில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று பிரித்தானிய ஊடகங்கள் விசனம் வெளியிட்டுள்ளன. பாலியல் ரீதியாக வன்முறைக்குட்படுத்தப்பட்ட பலர் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையிலும், போரின் போது இசைப்பிரியா பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான போதிலும், இன்னும் இத்தகைய குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் உள்ள போதிலும் இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் கவனிக்கப்படாமல் போயுள்ளது குறித்து இந்த ஊடகங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. இலங்கையில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலக மாநாடு ஏன் மறந்து போனது என்றும் இந்த ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோ தேர்தல்: வாக்குரிமையைப் பயன்படுத்தி அரசியலில் தமிழ்சமூகம் பலம் பெறுவது அவசியம்! Posted: 10 Jun 2014 11:23 PM PDT
ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருக்கின்றன. இதில் போட்டியிடும் கட்சிகள் மாகாணம் முழுதும் அனல் பறக்கும் பரப்புரையை மேற்கொண்டுள்ளன. கட்சித் தலைவர்கள் மக்களை சிறு சிறு நகர மண்டபக் கூட்டங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். பாரிய பொருட் செலவில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் என ஊடகங்கள் அனைத்திலும் விளம்பரங்கள் வருகின்றன. ஒரு கட்சி இன்னொரு கட்சியை தாக்கி வெளியிடும் விளம்பரங்கள் தான் மிக அதிகம். பல ஊழல்களில் சிக்குண்ட லிபரல் கட்சியின் முன்னாள் தலைவர் டால்ரன் மக்குயின்ரி தனது முதல்வர் பதவியைத் துறந்ததை அடுத்து கத்லீன் வின் பெப்ரவரி 13, 2013 இல் ஒன்ராறியோ முதல்வராகப் பதவியேற்றார். இதன் மூலம் அவர் இரண்டு சாதனைகளைப் படைத்தார். ஒன்று அவர்தான் ஒன்ராறியோ மாகாணத்தின் முதல் பெண் முதல்வர். இரண்டு அவர்தான் முதல் ஓரினப்பால் முதல்வர். டால்ரன் மக்குயின்ரி மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 106 உறுப்பினர்கள் கொண்ட மாகாண நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு 48 இருக்கைகளே கிடைத்தன. முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு 34 இருக்கைகளும் புதிய ஜனநாயக் கட்சிக்கு 21 இருக்கைகளும் கிடைத்தன. ஆளும் சிறுபான்மை லிபரல் கட்சியின் நடப்பு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைப் புதிய ஜனநாயக் கட்சியின் தலைவர் Andrea Horwath ஆதரிக்க மறுத்த காரணத்தாலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முந்திய தேர்தல் ஒக்தோபர் 06, 2011 இல் நடைபெற்றது. கருத்துக் கணிப்புக்கள் இம்முறையும் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்கின்றன. மீண்டும் ஒரு சிறுபான்மை அரசு வரலாம் என எதிர்வு கூறப்படுகிறது. யூன் 09 இல் எடுத்த கருத்துக் கணிப்பு பின்வருமாறு அமைந்துள்ளது. வாக்குக் கணிப்புப் பெரும்பாலும் பிழைப்பதில்லை. ஆனால் பிழைத்தும் இருக்கின்றன. இந்தத் தேர்தலில் நிருவாக ஊழல், பணவிரயம், வேலை வாய்ப்பு, வரிக் குறைப்பு, பாதாள தொடர்வண்டி போன்ற பேசுபொருள்கள்தான் முக்கியம் வகிக்கின்றன. மேலும் தொடருமுன் ஒன்ரேறியோ மாகாணம் பற்றிய சில புள்ளி விபரங்களை அறிந்து கொள்வோம். லிபரல் கட்சி 2007 இல் பதவிக்கு வந்த போது இரண்டு வாயு மின் நிலையங்கள் கட்டுவதற்கான உடன்படிக்கைகள் எழுதப்பட்டன. ஒன்று மிசிஸ்சாக்காவிலும் மற்றது ஓக்வில்லிலும் கட்டப்பட இருந்தது. இதற்கு அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் அமைப்புக்களும் போர்க்கொடி உயர்த்தின. தேர்தலில் லிபரல் கட்சியைத் தோற்கடிக்குமாறு குரல் எழுப்பின. எதிர்ப்பைக் கண்டு பயந்துபோன லிபரல் கட்சி தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்க (செம்தெம்பர் 28, 2011) தாம் ஆட்சிக்கு வந்தால் இந்த வாயு மின்நிலையங்களுக்கான உடன்படிக்கைகளை இரத்து செய்யப் போவதாக அறிவித்தது. ஒக்தோபர் 6 அன்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒக்தோபர் 7 ஆம் நாள் மிசிஸ்சாக்கா மற்றும் ஓக்வில் வாயு மின்நிலையங்கள் கட்ட எழுதப்பட்ட உடன்படிக்கைகள் இரத்து செய்யப்பட்டு விட்டதாக லிபரல் அரசு அறிவித்தது. மின் நிலைய ஒப்பந்தகாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இழப்பீடு மிசிஸ்சாக்கா மின்நிலையத்துக்கு 190 மில்லியன் டொலரும் ஓக்வில் மின்நிலையத்துக்கு 40 மில்லியன் டொலரும் மொத்தம் 230 மில்லியன் வரும் என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் பென்ட்லி அறிவித்தார். இழப்பீட்டை மதிக்க அரசு ஒரு வல்லுநரை நியமித்தது. அவர் இழப்பீடு 1.1 பில்லியன் வரும் எனக் கணித்துச் சொன்னார். ஆனால் முதல்வர் டால்ரன் மக்குயின்ரி தொடர்ந்து இழப்பீட்டுத் தொகை 230 மில்லியன் டொலரைத் தாண்டாது என அடம் பிடித்தார். ஆனால் எதிர்ப்பு நாலா பக்கத்திலும் அதிகரிக்கவே அவர் தனது பதவியை விட்டு விலகினார். எரிசக்தி அமைச்சர் கிறிஸ் பென்ட்லியும் தனது பதவியைத் துறந்தார். இந்த வாயு மின்நிலைகளை மூடியதால் ஏற்பட்ட இழப்பு இந்தத் தேர்தலில் பூதாகாரமாக எழுந்து லிபரல் கட்சித் தலைவர் கத்லீன் வின்னைத் துரத்துகிறது. அவர் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டும் எதிர்க்கட்சிகள் அவரை விடுவதாக இல்லை. கத்லீன் வின்தான் 2011 லிபரல் தேர்தல் பரப்புரைக்கு தலைமை வகித்தவர். ஆன காரணத்தால் அவர் பொறுப்பில் இருந்து தப்ப முடியாது என எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. போதாக் குறைக்கு இந்த நேரம் பார்த்து இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக காவல்துறை (RCMP) விசாரணை நடத்தும் செய்தி வெளிவந்துள்ளது. இந்த விசாரணை கத்லீன் வின்னை மேலும் சங்கடத்துக்குள் மாட்டியுள்ளது. அதுமட்டுமல்ல டால்ரன் மக்குயின்ரி முதல்வராக இருந்த காலத்தில் ஒறேஞ், e.Health, Ontario Lottery and Gaming Corprations போன்ற அரச நிறுவனங்களில் நடந்த ஊழல், பண விரயம் இன்றைய முதல்வர் கத்லீன் வின்னை தூங்கவிடாமல் துரத்துகின்றன. மீறித் தூங்கினால் அவை கனவில் வந்து வெருட்டுகின்றன. மாகாண அரசின் கீழ் கையளவு தொலைவில் 560 வாரியங்கள், ஆணையங்கள் இயங்குகின்றன. இவையெல்லாம் திறமாக இயங்குகின்றனவா? தக்க முறையில் கண்காணிக்கப் படுகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் தனது தேர்தல் அறிக்கையில் 100,000 ஆயிரம் அரச பணியாளர்களை அடுத்த 4 ஆண்டுகளில் வேலையில் இருந்து துரத்தப் போவதாகவும் அதே சமயம் பெரும் தொழில்நிறுவனங்களுக்கான வரியை 30 விழுக்காட்டால் குறைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும் அட்டகாசமான உறுதிமொழிகளை வாக்காளர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் பொருளாதார வல்லுநர்கள் இது பிழையான கணக்கு எனச் சொல்கிறார்கள். ஒரு இலட்சம் அரச பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் குடாக்கின் திட்டத்துக்கு லிபரல், புதிய ஜனநாயக் கட்சி, தொழிற் சங்கங்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இருந்து பாரிய எதிர்ப்பு குடாக்குக்கு எதிராக எழுந்துள்ளது. இந்த அறிவிப்பை வைத்துக் கொண்டு எல்லோரும் அவரை வறுத்து எடுக்கிறார்கள். ஆனால் அவரோ ஒன்ரேறியோ மாகாண அரசுக்கு 1. 2 மில்லியன் ஊழியர்கள் தேவையில்லை என அடித்துச் சொல்கிறார். ரிம் குடாக் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஒன்ரேறியோ அரச பணியில் இருப்பவர்கள் எடுக்கிற சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை. வெள்ளி பிற்பகல் அரச அலுவலங்களுக்குப் போனால் பாதிப் பேர் இருக்கைகளில் இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களது வீட்டுக்கு வேளையோடு கிளம்பி இருப்பார்கள். பொதுவாக அரச பணியாளர்களை, முக்கியமாக கீழ் நிலை அரச பணியாளர்களை, தேர்வு மூலம் பணியில் சேர்த்துக் கொள்வதில்லை. ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் தங்களது உறவினர், நண்பர்களைப் பின் கதவால் காதோடு காதாகச் சேர்த்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வேலை பார்க்கிறார். அவரது மகள் பட்டம் பெற்று வெளியேறியதும் தான் பணி செய்யும் அதே திணைக்களத்தில் மகளைச் சேர்த்துவிட்டார். இந்தத் தேர்தலில் ஒரு சிறப்பு அம்சம் 3 தமிழர்கள் – அதுவும் தமிழ் சமூகத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள் – போட்டியிடுகிறார்கள். இவர்கள் இனப்பற்றும் மொழிப்பற்றும் உடையவர்கள். இவர்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் இந்தத் தொகுதிகளில் கணிசமான தமிழ் வாக்களார்கள் இருக்கிறார்கள். அவர்களது வாக்குகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் இந்த வேட்பாளர்களுக்கு அளித்தால் அவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம். இதில் நீதன் சண் கடந்த தேர்தலின் போது போட்டியிட்டு இரண்டாவது இடத்துக்கு வந்தவர். 2147 (5.91விழுக்காடு) வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் பெற்ற வாக்குகள் 13,088 (35.97 விழுக்காடு). 2007 இல் நடந்த தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை விட 22.43 விழுக்காடு அதிகமாகும். இந்தத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை உறுப்பினராக இருக்கும் பாஸ் பால்கிசூடனோடு (லிபரல்) மீண்டும் நீதன் சண் மோதுகிறார். கென் கிருபா ஸ்காபரோ கில்வுட் தொகுதியில் ஓகஸ்ட் 01, 2013 இல் இடம்பெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு 1,247 (5.56 விழுக்காடு) வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவருக்கு விழுந்த வாக்குகள் 7,605 (30.80 விழுக்காடு) ஆகும். எந்ததெந்தத் தொகுதிகளில் எந்தெந்த சமூகம் பெரும்பான்மையாக உள்ளதோ அந்தந்தத் தொகுதிகளில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் ஒரு எழுதாத விதியாக வைத்திருக்கின்றன. ரொறன்ரோ நகரிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் பெரும் எண்ணிக்கையான தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். ரொறன்ரோ மாநகரில் 2,791,140 மக்கள் (2013 யூலை) வாழ்கிறார்கள். இதில் தமிழ்மொழி பேசுவோரது விழுக்காடு 1.9 ஆகும். மொழிவாரியாக தமிழ் பேசுவோரது எண்ணிக்கை 10 ஆவது இடத்தில் இருக்கிறது. உண்மையில் இந்த விழுக்காடு இன்னும் அதிகமாக இருக்கலாம். பலர் குடிமக்கள் கணக்கெடுப்பின் போது தங்களைத் தமிழர் என அடையாளப்படுத்தத் தவறியிருக்கலாம். இவ்வளவு தொகை மக்கள் இருந்தும் மத்திய, மாகாண, நகர அரசுகளில் தமிழர்களது பிரதிநித்துவம் எமது எண்ணிக்கைக்கு ஒப்பீடாக இல்லை. மைய நாடாளுமன்றத்தில் ஒருவரும் மாநகரசபையில் ஒருவரும் ஆக இருவர் மட்டுமே தமிழ்மக்களைப் பிரதிநித்துவப் படுத்துகிறார்கள். மாகாண நாடாளுமன்றத்திலும் ரொறன்ரோ மாநகரசபையிலும் தமிழர்களது பிரதிநித்துவம் அறவே இல்லாது இருக்கிறது. த மிழ் சமூகம் கல்வி, வணிகம், தொழில்துறை போன்றவற்றில் வளர்ந்து வரும் சமூகம். தேசிய மட்டத்தில் அதன் அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தமிழ்மக்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும். தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்பது ஜனநாயகத்துக்கு எதிரானதல்ல. சீக்கியர்கள் சீக்கியர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். மற்ற இனத்தவரும் அப்படித்தான். ஒருபால் இனத்தவர், தொழிற்சங்கங்கள் போன்றவை தங்களைப் பிரதிநித்துவப் படுத்து முகமாக தேர்தலில் போட்டியிடுகின்றன. ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள அரசியல் கட்சிகள் தமிழ்ச் மூகத்தைப் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. பழமைவாதக் கட்சியோடு நாம் பேசிய போது தமிழ்மக்கள் இலக்கு வைத்த சமூகங்களில் (targeted communities) ஒன்றாகப் பார்க்கப்பட வில்லை என ஒரு அமைச்சர் சொன்னார். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. இப்போது தமிழ்மக்களது வாக்குப் பலத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தமிழர்களைப் பற்றிய பார்வை மாறிவிட்டது. குறிப்பாக இராதிகா சிற்சபைஈசன் ஸ்காபரோ றூச்றிவர் தொகுதியில் புதிய ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு 5,000 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான் ஏனைய கட்சிகள் விழித்துக் கொண்டன. அவருக்கு விழுந்த மொத்த வாக்குகள் 18,935 (40.6 விழுக்காடு) ஆகும். அதுவரை லிபரல் கட்சியின் பாதுகாப்பான தொகுதி என எல்லோராலும் கருதப்பட்ட அந்தத் தொகுதியில் போட்டியிட்ட லிபரல் வேட்பாளர் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ரொறன்ரோ பெரும்பாகத்தில் தோராயமாக 300,000 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களது எண்ணிக்கைக்கு ஒப்ப பிரதிநித்துவம் இல்லை. தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் முகமாக இந்தத் தேர்தலில் மூன்று தமிழர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அந்தக் கட்சிகள் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பினை சரிவரப் பயன்படுத்த வேண்டியது அவசியம். தமிழ்மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் விழுக்காடு பெரிதாக இல்லை. அதிலும் மாகாண நாடாளுமன்றத் தேர்தல் என்றால் அதிக அக்கறை காட்டுவதில்லை. சிலருக்கு தேர்தல் நடைபெறுவதே தெரியாது. தெரிந்தவர்களுக்கும் என்ன நாளில் தேர்தல் நடைபெறுகிறது என்பது தெரியாமல் இருக்கிறது. மைய அரசை விட மாகாண அரசின் செயற்பாடுகள்தான் எமக்கு முக்கியம். கல்வி. நல்வாழ்வு, குடிதண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, முதியோர் ஓய்வூதியம் போன்றவை மாகாண நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட செயற்பாடுகளாகும். ஒரு மக்களாட்சி முறைமையில் வாக்குரிமை என்பது மிகவும் பெறுமதி மிக்க ஆயுதமாகும். இந்த வாக்குரிமைதான் மக்களது இறைமை என அழைக்கப்படுகிறது. அதனைத் தமிழ்சமூகம் தனது அரசியல் பலத்தை அதிகரிக்கவும் தனது சமூக நலத்தை மேம்படுத்துவும் பயன்படுத்த வேண்டும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொழிலாளர் சந்தை தேவைகளை நிரப்ப தகுதிவாய்ந்த குடிவரவாளர்களிற்கு எக்பிரஸ் நுழைவு! Posted: 10 Jun 2014 11:14 PM PDT
2015-தொடக்கத்தில் மத்திய அரசு குடிவரவு அமைப்பில் புதிய திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக வர விரும்பும் தகுதிவாய்ந்த குடிவரவாளர்களிற்கு' எக்பிரஸ் நுழைவு' வழங்க திட்டமிட்டுள்ளது. கனடிய தொழிலாளர்கள் கிடைக்கப்பெறமுடியாத வேலைவாய்ப்புக்களை நிரப்பும் பொருட்டு இத்திட்டம் கொண்டு வரப்படுமென அறியப்படுகின்றது. தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்து வருகின்றது. இதன் முடிவு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் படி' எக்பிரஸ் நுழைவு' தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் போலல்லாது திறமைவாய்ந்த குடிவரவாளர்கள் நாட்டின் தொழிலாளர் தேவைகளை பூர்த்திசெய்ய உதவும் வகையில் கனடாவில் நிரந்தரமாக குடியேற வழிவகுக்குமென அறியப்படுகின்றது. கனடிய முதலாளிகள் தங்கள் வேலை வெற்றிடங்களை நிரப்ப கனடியர்கள் அல்லது நிரந்தர வதிவுடைமை பெற்றவர்களை பெற முடியாத பட்சத்தில் அவர்கள்' எக்ஸ்பிரஸ் நுழைவு' வேட்பாளர்களை கருத்தில் கொள்ள முடியும் என குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டரின் செய்தியாளர் அலெக்சிஸ் பவ்லிச் ஒரு மின்அஞ்சல் மூலம் சிபிசி செய்திக்கு தெரிவித்துள்ளார். வேலை வழங்கப்படும் தகுதிவாய்ந்த குடிவரவாளர்கள் கனடிய தொழிலாளருக்கு மேலாக வெளிநாட்டு தொழிலாளரை பணியில் அமர்த்த வேண்டுமென்ற தொழிலாளர் சந்தை கருத்துக்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்தர நிலை விண்ணப்பதாரர்கள் நிரந்தர வதிவிட கோரிக்கை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பெறுவர். குறைந்தது ஆறு மாதங்களிற்குள் செயல்முறைப்படுத்தும் என அரசாங்கம் உறுதியளிக்கின்றது. கனடிய அரசாங்கம் 50-வேறு பட்ட தொழில்துறைகளில் குடிவரவாளர்களை தீவிரமாக நியமனம் செய்கின்றது. குடும்ப வைத்தியர்கள், நிபுணர்கள், பதிவு செய்யப்பட்ட தாதிமார், சிவில், மெக்கானிக்கல், எலெக்ரிக்கல் பொறியியலாளர்கள், நிதி மேலாளர்கள், தணிக்கையாளர்கள், கணக்காய்வாளர்கள் போன்றன இவற்றுள் அடங்குகின்றது. மத்திய பயிற்சி பெற்ற தொழிலாளர் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 25,000 விண்ணப்பங்களை2014- மே மாதம் 1-ந் திகதியிலிருந்து ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளது. புதிய திட்டம் 2015-ல் நடைமுறைக்கு வரும் வரை மட்டுமே இது அமுலில் இருக்கும் கூறப்படுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















