Tamil News | Online Tamil News |
- கராச்சி விமான நிலையம் தாக்குதல்: 5பாதுகாப்புபடைவீரர்கள் உள்பட 11 பேர் பலி
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் விரைவில் மாற்றம்: சம்பள தாமதத்தை தவிர்க்கவும் அரசு அதிரடி
- மத்திய அரசு நிர்வாகத்தை சுறுசுறுப்பாக்க அறிக்கை தயார்: மோடி உத்தரவின்படி துறை செயலர்கள் தயாரிப்பு
- பா.ஜ., தலைவர்களை கவர்னர்களாக நியமிக்க முடிவு
- 'இலங்கை கடற்படையை கண்டிக்க வேண்டும்'
- அழகிரியை அமைதியாக்கும் முயற்சி: கருணாநிதியின் தூதரானார் ரஜினி?
- மீனவர் நலனுக்கான புதிய துறையின் அமைச்சராகிறார் இல.கணேசன்?
- சீன பேச்சில் முன்னேற்றம்: பயன் தரும் என நம்பிக்கை
- வீடுகளை காலி செய்யும்படி 265 'மாஜி'க்களுக்கு கெடு
- அறநிலைய துறை பணியாளர் நியமனத்தில் 'பலே' சுருட்டல்: கோவில் பணத்தை லஞ்சமாக அள்ளும் அதிகாரிகள்
- வணிக வளாகங்களுக்கு இரவில் 'கரன்ட் கட்'
- தமிழக மீனவர்கள் கைது: இலங்கையிடம் கவலை
- பார்லி., கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை: அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது
| கராச்சி விமான நிலையம் தாக்குதல்: 5பாதுகாப்புபடைவீரர்கள் உள்பட 11 பேர் பலி Posted: கராச்சி:பாகிஸ்தான், கராச்சி விமானநிலையத்தில் நேற்று இரவு புகுந்து பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு 5 பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 6 பொதுமக்கள் என 11 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் இரு விமானங்களும் சேதமடைந்தது.கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் புகுந்த 15 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை போல போலியான அடையாள அட்டையை காட்டி உள்ளே புகுந்துவிட்டனர்.பின்னர் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியானார்கள். பயங்கரவாதிகள் மேலும் கையெறி குண்டுகள் தாக்குதலும் ... |
| ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் விரைவில் மாற்றம்: சம்பள தாமதத்தை தவிர்க்கவும் அரசு அதிரடி Posted: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய திட்டமாக வர்ணிக்கப்பட்ட, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ஏராளமான குறைபாடுகளும், முறைகேடுகளும் நடைபெறுவதாக கூறப்படுவதால், அதில் மாற்றம் செய்யும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இறங்கி உள்ளது.அத்துடன், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும், தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாக கூறப்படும் புகார்களை தடுக்க, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானித்துள்ளது.கிராமப்புற ஏழைகளுக்கு பலன் அளிக்க வேண்டும் என்பதற்காக, எட்டு ஆண்டுகளுக்கு முன் ... |
| மத்திய அரசு நிர்வாகத்தை சுறுசுறுப்பாக்க அறிக்கை தயார்: மோடி உத்தரவின்படி துறை செயலர்கள் தயாரிப்பு Posted: புதுடில்லி : 'திறமை, வேகம், வெளிப்படை ஆகிய இந்த மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு நிர்வாகத்தை சுறுசுறுப்பாக்க, என்னென்ன நடவடிக்கை அவசியமோ, அவற்றை தயாரித்து என்னிடம் தாருங்கள்; இதற்கான காலக்கெடு, 9ல் முடிவடையும்' என, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதன் படி, புதிய செயல்திட்டங்களை தயாரித்துள்ள, மத்திய துறை செயலர்கள், இன்று பிரதமரை சந்திக்க உள்ளனர்.குஜராத் முதல்வராக, மோடி பதவி வகித்த, 13 ஆண்டுகள் தான், அந்த மாநிலத்தின் பொற்காலம். அந்த காலத்தில் தான், குஜராத் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது. அது போன்றதொரு வளர்ச்சியை, நாடு முழுவதும் வழங்க, ... |
| பா.ஜ., தலைவர்களை கவர்னர்களாக நியமிக்க முடிவு Posted: புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், முந்தைய, 10 ஆண்டு கால, மன்மோகன் சிங்கின் ஆட்சியில் கவர்னர்களாக நியமிக்கப்பட்ட பலரும், 'பதவி அம்போ தான்; விரைவில் காலியாகப் போகிறது' என, நினைத்தனர்.எனினும், அத்தகைய எந்த அதிரடி நடவடிக்கையிலும் ஈடுபடாத மோடி அரசு, பதவியிலிருந்து இயல்பாக ஓய்வுபெறும் கவர்னர்களுக்குப் பதிலாக, பா.ஜ., மூத்த தலைவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.அந்த வகையில், முரளிமனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வி.கே.மல்ஹோத்ரா ஆகியோரையும், கட்சியிலிருந்து வெளியேறிய, மூத்த தலைவர், ஜஸ்வந்த் சிங்கையும் ... |
| 'இலங்கை கடற்படையை கண்டிக்க வேண்டும்' Posted: சென்னை: இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்வதால், முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்து, பிரதமர் மோடிக்கு, கடிதம் எழுதியிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது:கடந்த, 3ம் தேதி, உங்களிடம் நான் அளித்த மனுவில், பாக் ஜலசந்தியில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் மோசமான நிலைப்பாடு குறித்து தெரிவித்திருந்தேன்.கடந்த, மூன்று ஆண்டுகளில், 77 முறை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 67 சம்பவங்களில், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். 7ம் தேதி, இரு வெவ்வேறு ... |
| அழகிரியை அமைதியாக்கும் முயற்சி: கருணாநிதியின் தூதரானார் ரஜினி? Posted: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று, நடிகர் ரஜினி, திடீரென சந்தித்து பேசினார்.இருவர், சந்திப்பின் பின்னணியில், கருணாநிதியின் ரகசிய திட்டம் இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அதாவது, தி.மு.க.,விலிருந்து, டிஸ்மிஸ் செய்யப்பட்ட, முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியிடம் பேசி, உட்கட்சி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி விரும்புகிறார்.அதற்காக அழகிரியிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க, தன்னுடைய தூதராக ரஜினியை தேர்ந்தெடுத்திருக்கிறார் கருணாநிதி. அது குறித்து பேசுவதற்காகத்தான், தன் இல்லத்துக்கு ரஜினியை ... |
| மீனவர் நலனுக்கான புதிய துறையின் அமைச்சராகிறார் இல.கணேசன்? Posted: மத்திய அரசில், மீனவர்கள் நலனுக்காக, புதிய அமைச்சகம் துவக்கப்பட உள்ளது. இந்த துறையின் அமைச்சராக, தமிழகத்தைச் சேர்ந்த, இல.கணேசன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, நாட்டின் கடலோர பகுதிகளில் வாழும், மீனவர்கள் பிரச்னை மத்திய அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகாமல் திரும்பி வந்தாலே, அது பெரிய அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது.இப்படி தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ... |
| சீன பேச்சில் முன்னேற்றம்: பயன் தரும் என நம்பிக்கை Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, பதவியேற்றதில் இருந்து, அண்டை நாடுகளுடன், சுமுக உறவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.பிரதமர் மோடி, தன் பதவி யேற்பு விழாவுக்கு, 'சார்க்' அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதில், இலங்கை அதிபரும், பாகிஸ்தான் பிரதமரும் பங்கேற்றது, உலக நாடுகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.வெளியுறவு கொள்கை யின் அடுத்த அதிரடியாக,சீனாவுடனும் பேச்சுவார்த்தையை துவக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியாக, அந்த நாட்டு வெளியுறவு ... |
| வீடுகளை காலி செய்யும்படி 265 'மாஜி'க்களுக்கு கெடு Posted: புதுடில்லி:'இம்மாதம், 18ம் தேதிக்குள், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்ய வேண்டும்' என, முன்னாள் எம்.பி.,க்கள், 265 பேருக்கு, லோக்சபா செயலகம் சார்பில் நோட்டீஸ்அனுப்பப்பட்டு உள்ளது.ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும், மத்திய அரசு சார்பில், டில்லியில் வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம்.எம்.பி., பதவியை இழந்தவர்கள், அந்த வீடுகளை காலி செய்து மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இது, வழக்கமான நடைமுறை.இந்நிலையில், 2009 லோக்சபா தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களில், 265 பேர், இன்னும், தங்கள் வீடுகளை காலி செய்யாமல் ... |
| அறநிலைய துறை பணியாளர் நியமனத்தில் 'பலே' சுருட்டல்: கோவில் பணத்தை லஞ்சமாக அள்ளும் அதிகாரிகள் Posted: தமிழகத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில், பணியாளர் நியமனம் என்ற பெயரில், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பது அம்பலமாகியுள்ளது. கோவில் பணத்தை, லஞ்சமாக அள்ளிய அதிகாரிகள் விசாரணையில் சிக்கியுள்ளனர்.தமிழகத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 36,488 கோவில்களில், 34,336 கோவில்கள் ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக, வருவாய் உள்ளவையாக வகைபடுத்தப்பட்டுள்ளன.மோசடிஇதில், பெரும்பாலான கோ வில்கள், குறைந்த வருவாய் உள்ள கோவில்களாக உள்ளன. இக்கோவில்களில் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிக்கு, தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை.இது ... |
| வணிக வளாகங்களுக்கு இரவில் 'கரன்ட் கட்' Posted: புதுடில்லி:டில்லியில், சமீபகாலமாக கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அளவுக்கு அதிகமான மின் நுகர்வும், சமீபத்தில் வீசிய புழுதிக் காற்று, பலத்த மழை ஆகியவற்றால், மின் கம்பிகள் சேதமடைந்ததும், மின் தட்டுப்பாட்டைஅதிகரித்து விட்டது.பல முக்கிய பகுதிகளில், தினமும், இரண்டிலிருந்து, நான்கு மணி நேரம் வரை, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மேற்கு டில்லியில் உள்ள பல பகுதிகளில், எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால், டில்லியில் வசிக்கும் மக்கள், இதுவரை இல்லாத அளவுக்கு, மின் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு ... |
| தமிழக மீனவர்கள் கைது: இலங்கையிடம் கவலை Posted: புதுடில்லி: தமிழக மீனவர்கள், 73 பேரை, இலங்கை கடற்படை நேற்று பிடித்துச் சென்றதற்கு, இலங்கை அரசுடன், நம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு, கவலை தெரிவித்தனர். இலங்கை கடற்படை பிடித்து சென்று, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், 33 பேர் சமீபத்தில் தான் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் வீடு திரும்பிய இரண்டொரு நாட்களில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், 73 பேரையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை நேற்று பிடித்துச் சென்றுள்ளது. இந்த தகவல் அறிந்ததும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ... |
| பார்லி., கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை: அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது Posted: புதுடில்லி:இன்று நடக்கும் பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார். இந்த உரையில், மோடி தலைமையிலான புதிய அரசு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என, தெரிகிறது.காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணியின், 10 ஆண்டுகால ஆட்சி முடிந்து, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள புதிய அரசிடம், மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன.இந்நிலையில், 16வது லோக்சபாவின் முதல் கூட்டம், சமீபத்தில் துவங்கியது. இதில், புதிதாக தேர்வு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 09,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |