Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நடாலுக்கு பிரெஞ்சு ஓபன் பட்டம்
- பெயரில்தான் எல்லாம் இருக்கிறது
- மக்களால் மக்களுக்காக
- அஸாதின் வெற்றிக்குப் பின்னால்...
- மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையைக் கண்டித்து: ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
- காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம்
- ஆசிரியர் டிப்ளமோ: விண்ணப்பிக்க இன்று கடைசி
- அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 46,271 பேர் தகுதி
- பிளஸ் 2: கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக வேலைவாய்ப்புக்கு பதிவு
- பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு
- கூடங்குளத்தில் 2-ஆவது நாளும் முழு மின் உற்பத்தி
- தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் தலைமையே காரணம்
- "பாதுகாப்பில்லை; போலீஸ் நெருக்கடி' பதாயூனில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார்
- பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சட்டம்: ஜாவடேகர்
- பயணத்தை தொடங்கியது மும்பை மெட்ரோ ரயில்
- ஜோஷி, கல்யாண் சிங், மல்ஹோத்ரா ஆளுநர்களாக நியமனம்?
- 10 ஆண்டுக்குப் பின் பதவிக்கு வந்துள்ள சந்திரபாபு நாயுடு
- மொழிப்போர் தியாகிகள் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
- பெங்களூருவில் திரைப்பட நகரம்: சித்தராமையா
- பணியிடமாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி நடத்த வலியுறுத்தல்
- தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 3,500 டன் அரிசி
- ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த இளநிலை பண்ணை தொழில்நுட்பம் பயின்ற விவசாயிகள்
- தரங்கம்பாடியில் நீதிமன்றம் அமைக்க பாஜக கோரிக்கை
- "கர்ப்பிணிகளுக்கு உடல் நல பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்
- மதரஸாக்களுக்கு தனி கவனம் செலுத்துங்கள்
- பேருந்து மோதி இளைஞர் சாவு : பொதுமக்கள் மறியல்
- மொழிப்போர் தியாகிகள் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
- பிகாரில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வரும்: பாஸ்வான்
- ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு
- தீ விபத்தில் இருசக்கர வாகனம் சேதம்
- 6 பவுன் சங்கிலியை திருடிய உறவினர் கைது
- 18-ஆம் தேதிக்குள் பங்களாக்களை காலி செய்ய வேண்டும்
- பணியிடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தல்
- "கர்ப்பிணிகளுக்கு உடல் நல பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்
- சிறுவர், சிறுமியர் காப்பகம் திறப்பு
- காவலர் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை
- தஞ்சாவூர்
- தேர்தல் வழக்கு:அசோக் சவாணுக்கு எதிராக இன்று விசாரணை?
- அரிமளம்
- பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை: மம்தா சர்மா
- திருப்பி அனுப்பப்பட்ட 92 வங்கதேச அகதிகள்
- "நோட்டா' நேர விரயம்: மகாராஷ்டிர ஆளுநர்
- குற்றவாளிகள் தப்ப முடியாது: அகிலேஷ்
- நொய்டாவில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை
- "பிரியங்காவுக்கான விமான நிலைய சலுகை தொடரும்'
- இலக்கியச் சங்கமம்
- கற்கள் ஏற்றிய லாரிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
- கண்டன்விளை அருகேஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாவு
- நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
- பளுகல் அருகே மோதல்: 5 பேர் கைது
- வேகமாக அழிந்து வரும் கல்யாண முருங்கை மரங்கள்
- சென்னை முதல் குமரி வரை 500 ஊர்க்காவல் படையினருக்கு சிறப்புப் பயிற்சி
- ஜி.புஷ்பாகரன் மறைவு: நல்லகண்ணு ஆறுதல்
- கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி
- வடிவீஸ்வரம் கோயிலில் நாளை மலர் முழுக்கு விழா தொடக்கம்
- பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
- நினைவுச் சின்னம்
- ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு
- நல்லூர் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா
- "விளவங்கோடு: நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்'
- தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை
- மெளன வசந்தம்
- தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கண்காட்சி
- வஞ்சியின் செல்வன்
- செய்துங்கநல்லூர் சாஸ்தா கோயிலில் 12 இல் மஹா கும்பாபிஷேகம்
- கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது
- நடிப்பு: அகம் புறம்
- விதிமுறைகளை கடைப்பிடிக்காத தனியார் மீன்பதனிடும் நிறுவனம் மீது நடவடிக்கை
- விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
- மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்; 3 பேர் கைது
- வரப்பெற்றோம்
- அண்ணா பல்கலை. தரவரிசையில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி முதலிடம்
- மின்கம்பத்தில் ஜீப் மோதி வட்டாட்சியர் உள்பட 3 பேர் காயம்
- கருங்குளம் பகுதியில் சூறைக்காற்று:10 ஆயிரம் வாழைகள் சேதம்
- சிறைப்பிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் விடுவிப்பு: இழப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை
- கார்-பைக் மோதல்: இருவர் காயம்
- ஜப்பான் இளவரசர் கட்சுரா மரணம்
- ஜாதி மோதலைத் தடுக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்: ஜான் பாண்டியன்
- முன்விரோதம்: பாட்டிலால் குத்தியவர் கைது
- பிரிட்டன் நகர மேயராக இந்தியர் பதவியேற்பு
- கட்டடத் தொழிலாளி தற்கொலை
- புதுப்படம், ஆபாச பட சி.டி.க்கள் வைத்திருந்த இளைஞர்கள் கைது
- தப்பியோடிய விடுதலைப்புலிக்கு போலீஸார் வலைவீச்சு
- மாயமான மலேசிய விமானம்: துப்பு கொடுத்தால் ரூ. 30 கோடி
- நாகர்கோவில்
- தாய்லாந்தில் பதற்ற நிலை: கிளர்ச்சியாளர்களை ஒடுக்க போலீஸார் குவிப்பு
- இராக்கில் குண்டுவெடிப்பு: 19 பேர் சாவு
- எகிப்து அதிபராக அல்-சிசி பதவியேற்பு
- "தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை'
- தில்லியில் 47.8 டிகிரி வெயில்: 62 ஆண்டுகளில் அதிகபட்சம்
- "ஆம்ஆத்மி கட்சி ஓராண்டில் சீரமைக்கப்படும்
- தில்லி காவலர் குடியிருப்புகளை சீரமைக்கத் தனிக் குழு: நீதிமன்றம் உத்தரவு
- மலைமந்திர் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்
- மின் தடை நேரப் பட்டியலை அறிவிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவு
- சூறைக்காற்றால் பாதிப்படைந்த ஹூமாயூன் கல்லறையில் சீரமைப்பு பணி
- மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை
- "பிரியங்காவுக்கான விமான நிலைய சலுகை தொடரும்'
- மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறவிட்ட பணப் பை உரியவரிடம் ஒப்படைப்பு
- சிபிஎஸ்இ கோரிக்கையை நிராகரித்தது தில்லி பல்கலை.
- மைனர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 2 இளைஞர்கள் விடுதலை
| நடாலுக்கு பிரெஞ்சு ஓபன் பட்டம் Posted: 08 Jun 2014 02:20 PM PDT பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பட்டத்தை ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வென்றார். இது இவருக்கு 9-வது பிரெஞ்சு ஓபன் பட்டமாகும். |
| பெயரில்தான் எல்லாம் இருக்கிறது Posted: 08 Jun 2014 02:12 PM PDT 'பெயரில் என்ன இருக்கிறது?' என்று கேட்டார் ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். ஆனால் பலரும் பெயரில்தான் எல்லாமே இருக்கிறது என்பதுபோல் குழந்தை பிறப்பதற்கு முன்பே என்ன பெயர் வைக்கலாம் என்று வீட்டில் பட்டிமன்றமே நடத்துகிறார்கள். |
| Posted: 08 Jun 2014 02:11 PM PDT ஜனநாயக நாட்டில் உச்சபட்சமான அதிகாரம் கொண்டது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றந்தான். அது அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டது. |
| அஸாதின் வெற்றிக்குப் பின்னால்... Posted: 08 Jun 2014 02:10 PM PDT எதிர்பார்த்தது போலவே சிரியாவின் அதிபர் பஷார் - அல் - அஸாத் கடந்த வாரம் நடந்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றியடைந்திருக்கிறார். |
| Posted: 08 Jun 2014 02:08 PM PDT ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 56 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரியும் திங்கள்கிழமை முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். |
| காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் Posted: 08 Jun 2014 02:03 PM PDT காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். |
| ஆசிரியர் டிப்ளமோ: விண்ணப்பிக்க இன்று கடைசி Posted: 08 Jun 2014 02:03 PM PDT தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 9) கடைசி நாளாகும். |
| அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 46,271 பேர் தகுதி Posted: 08 Jun 2014 02:02 PM PDT மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர். |
| பிளஸ் 2: கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக வேலைவாய்ப்புக்கு பதிவு Posted: 08 Jun 2014 02:00 PM PDT கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 50 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் கூடுதலாக வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர். |
| பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு Posted: 08 Jun 2014 12:53 PM PDT தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| கூடங்குளத்தில் 2-ஆவது நாளும் முழு மின் உற்பத்தி Posted: 08 Jun 2014 12:50 PM PDT கூடங்குளம் முதல் அணு உலையில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இன்னும், ஓரிரு நாள்களுக்கு இதேநிலையில் உற்பத்தி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. |
| தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் தலைமையே காரணம் Posted: 08 Jun 2014 12:46 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது குற்றம் சுமத்தும் வகையில், "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததற்கு, |
| "பாதுகாப்பில்லை; போலீஸ் நெருக்கடி' பதாயூனில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் Posted: 08 Jun 2014 12:45 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூனில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட 2 சகோதரிகளின் குடும்பத்தினர் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) மற்றும் போலீஸார் நெருக்கடி அளிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். |
| பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சட்டம்: ஜாவடேகர் Posted: 08 Jun 2014 12:45 PM PDT பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். |
| பயணத்தை தொடங்கியது மும்பை மெட்ரோ ரயில் Posted: 08 Jun 2014 12:41 PM PDT மும்பையில் முதல் மெட்ரோ ரயில் சேவையை அந்த மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். |
| ஜோஷி, கல்யாண் சிங், மல்ஹோத்ரா ஆளுநர்களாக நியமனம்? Posted: 08 Jun 2014 12:39 PM PDT பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| 10 ஆண்டுக்குப் பின் பதவிக்கு வந்துள்ள சந்திரபாபு நாயுடு Posted: 08 Jun 2014 12:34 PM PDT புதிய ஆந்திரத்தின் முதல் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். |
| மொழிப்போர் தியாகிகள் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் Posted: 08 Jun 2014 12:34 PM PDT தமிழ்மொழிப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரச |
| பெங்களூருவில் திரைப்பட நகரம்: சித்தராமையா Posted: 08 Jun 2014 12:34 PM PDT பெங்களூருவில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| பணியிடமாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி நடத்த வலியுறுத்தல் Posted: 08 Jun 2014 12:34 PM PDT பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி உரியகாலத்தில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 3,500 டன் அரிசி Posted: 08 Jun 2014 12:33 PM PDT ஆந்திரத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் பொது விநியோகத் திட்டத்துக்காக 3,500 டன் புழுங்கல் அரிசி ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூருக்கு வந்தது. |
| ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த இளநிலை பண்ணை தொழில்நுட்பம் பயின்ற விவசாயிகள் Posted: 08 Jun 2014 12:33 PM PDT கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை பண்ணைத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு பயின்று வரும் விவசாயிகள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தரங்கம்பாடியில் நீதிமன்றம் அமைக்க பாஜக கோரிக்கை Posted: 08 Jun 2014 12:33 PM PDT நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் அமைக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. |
| "கர்ப்பிணிகளுக்கு உடல் நல பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம் Posted: 08 Jun 2014 12:33 PM PDT கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் நலனை பராமரிப்பது குறித்து உரிய விழிப்புணர்வை பெற வேண்டும் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| மதரஸாக்களுக்கு தனி கவனம் செலுத்துங்கள் Posted: 08 Jun 2014 12:32 PM PDT தமிழ்நாட்டில் உள்ள மதரஸாக்களை (திருக்குர்-ஆன் பாடசாலை) காக்க இஸ்லாமியர்கள் தாங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் |
| பேருந்து மோதி இளைஞர் சாவு : பொதுமக்கள் மறியல் Posted: 08 Jun 2014 12:32 PM PDT பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார். தொடரும் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மொழிப்போர் தியாகிகள் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் Posted: 08 Jun 2014 12:32 PM PDT தமிழ்மொழிப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரச |
| பிகாரில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வரும்: பாஸ்வான் Posted: 08 Jun 2014 12:32 PM PDT பிகாரில் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். |
| ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு Posted: 08 Jun 2014 12:31 PM PDT தஞ்சாவூரில் நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் நாகை மாவட்ட இளைஞர்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| தீ விபத்தில் இருசக்கர வாகனம் சேதம் Posted: 08 Jun 2014 12:31 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள புதுவாடியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. |
| 6 பவுன் சங்கிலியை திருடிய உறவினர் கைது Posted: 08 Jun 2014 12:31 PM PDT புதுக்கோட்டை அருகே 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியதாக உறவினரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| 18-ஆம் தேதிக்குள் பங்களாக்களை காலி செய்ய வேண்டும் Posted: 08 Jun 2014 12:31 PM PDT தில்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை இம்மாதம் 18-க்குள் காலி செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.பி.க்கள் 265 பேருக்கு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. |
| பணியிடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தல் Posted: 08 Jun 2014 12:31 PM PDT பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி உரியகாலத்தில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| "கர்ப்பிணிகளுக்கு உடல் நல பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம் Posted: 08 Jun 2014 12:30 PM PDT கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் நலனை பராமரிப்பது குறித்து உரிய விழிப்புணர்வை பெற வேண்டும் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| சிறுவர், சிறுமியர் காப்பகம் திறப்பு Posted: 08 Jun 2014 12:30 PM PDT தங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவிலை அடுத்த அறங்ககுடியில் அல்-கரீம் இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் சிறுவர் மற்றும் சிறுமியர் காப்பகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. |
| காவலர் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை Posted: 08 Jun 2014 12:30 PM PDT சீர்காழி காவல் உட்கோட்டத்தை சேர்ந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Jun 2014 12:29 PM PDT |
| தேர்தல் வழக்கு:அசோக் சவாணுக்கு எதிராக இன்று விசாரணை? Posted: 08 Jun 2014 12:29 PM PDT மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு எதிரான கையூட்டுச் செய்தி மற்றும் தவறான தேர்தல் செலவுக் கணக்கு குறித்த வழக்குகள் மீதான விசாரணையை, தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| Posted: 08 Jun 2014 12:29 PM PDT |
| பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை: மம்தா சர்மா Posted: 08 Jun 2014 12:27 PM PDT பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வலுவான கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மம்தா சர்மா வலியுறுத்தியுள்ளார். |
| திருப்பி அனுப்பப்பட்ட 92 வங்கதேச அகதிகள் Posted: 08 Jun 2014 12:26 PM PDT இந்தியாவில் அகதிகளாக இருந்த, வங்கதேசத்தின் சக்மா மற்றும் திரிபுரி சமூகத்தைச் சேர்ந்த 92 பேர் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். |
| "நோட்டா' நேர விரயம்: மகாராஷ்டிர ஆளுநர் Posted: 08 Jun 2014 12:26 PM PDT ஜனநாயக நடைமுறையிலான தேர்தலில் "நோட்டா' எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வசதி, ஒரு நேர விரயம் என்று மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கரநாராயணன் விமர்சித்துள்ளார். |
| குற்றவாளிகள் தப்ப முடியாது: அகிலேஷ் Posted: 08 Jun 2014 12:25 PM PDT உத்தரப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி விஜய் பண்டிட் கொலையில் குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது என்றும், சம்பவ இடத்துக்கு மூத்த அதிகாரிகள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். |
| நொய்டாவில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை Posted: 08 Jun 2014 12:25 PM PDT தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி நகராட்சித் தலைவர் கீதா பண்டிட்டின் கணவரும், பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான விஜய் பண்டிட் (37) சனிக்கிழமை இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். |
| "பிரியங்காவுக்கான விமான நிலைய சலுகை தொடரும்' Posted: 08 Jun 2014 12:20 PM PDT பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் சேர்ந்து விமான நிலையங்களுக்கு வரும்போது, வழக்கமான சோதனைகளில் இருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 08 Jun 2014 12:17 PM PDT இலக்கியச் சாரல் நடத்தும் இளைஞர் தினம். தலைமை: கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; பங்கேற்பு: மு.தருமராஜன், இலக்கியவீதி இனியவன், கார்முகிலோன், சி.ஜெயலட்சுமி ராமசாமி, ஜெயந்தி நாகராஜன், எஸ்.மோகன், இளையவன்; ஒய்.எம்.ஐ.ஏ.அரங்கம், ஜம்மி கட்டிடம் அருகில், மைலாப்பூர், சென்னை; 10.6.14 மாலை 6.00. |
| கற்கள் ஏற்றிய லாரிகளால் வாகன ஓட்டிகள் அச்சம் Posted: 08 Jun 2014 12:17 PM PDT நாகர்கோவில் நகரப் பகுதியில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| கண்டன்விளை அருகேஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாவு Posted: 08 Jun 2014 12:17 PM PDT கண்டன்விளை அருகே அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக ஓட்டுநரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் Posted: 08 Jun 2014 12:16 PM PDT நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. |
| பளுகல் அருகே மோதல்: 5 பேர் கைது Posted: 08 Jun 2014 12:16 PM PDT பளுகல் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வேகமாக அழிந்து வரும் கல்யாண முருங்கை மரங்கள் Posted: 08 Jun 2014 12:15 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்யாண முருங்கை மரங்கள் வேகமாக அழிந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் விவசாயிகளையும் கவலையடையச் செய்துள்ளது. |
| சென்னை முதல் குமரி வரை 500 ஊர்க்காவல் படையினருக்கு சிறப்புப் பயிற்சி Posted: 08 Jun 2014 12:15 PM PDT தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூரிலிருந்து கன்னியாகுமரி வரை 500 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி |
| ஜி.புஷ்பாகரன் மறைவு: நல்லகண்ணு ஆறுதல் Posted: 08 Jun 2014 12:15 PM PDT குமரி மாவட்டம் காணி மக்கள் மத்தியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நடத்தி வந்த ஜி. புஷ்பாகரன் மறைவையடுத்து, அவரது குடும்பத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய நிர்வாக்குழு உறுப்பினருமான ஆர். நல்லகண்ணு |
| கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி Posted: 08 Jun 2014 12:15 PM PDT கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. |
| வடிவீஸ்வரம் கோயிலில் நாளை மலர் முழுக்கு விழா தொடக்கம் Posted: 08 Jun 2014 12:14 PM PDT நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் மலர் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது. |
| பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு Posted: 08 Jun 2014 12:14 PM PDT பளுகல் அருகே பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். பளுகல் அருகே மாலைக்கோடு மண்ணறத்தறவிளையைச் சேர்ந்தவர் பென்னட்ராஜ் மனை |
| Posted: 08 Jun 2014 12:14 PM PDT நினைவுச் சின்னம் - அ.ரெங்கசாமி; பக்.464; ரூ.400; தமிழோசைப் பதிப்பகம், 1050, சத்தி சாலை, காந்திபுரம், கோயம்புத்தூர்-12. |
| ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 08 Jun 2014 12:14 PM PDT நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி 2014 ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. |
| நல்லூர் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா Posted: 08 Jun 2014 12:14 PM PDT தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கிவரும் மாவட்ட தேசிய பசுமைப்படை அமைப்பின் சார்பில் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. |
| "விளவங்கோடு: நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்' Posted: 08 Jun 2014 12:13 PM PDT விளவங்கோடு பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளார். |
| தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை Posted: 08 Jun 2014 12:13 PM PDT தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை - ஆர்.நல்லகண்ணு; பக்.152; ரூ.100; வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், சென்னை-94; )044- 2361 1311. |
| Posted: 08 Jun 2014 12:13 PM PDT மெளன வசந்தம் - ரெய்ச்சல் கார்சன்; தமிழில்: ச.வின்சென்ட்; பக்.240; ரூ.200; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-2; )04259 - 226012. |
| தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கண்காட்சி Posted: 08 Jun 2014 12:13 PM PDT தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். |
| Posted: 08 Jun 2014 12:12 PM PDT வஞ்சியின் செல்வன் - இரா.மலர்விழி; பக்.392; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810. |
| செய்துங்கநல்லூர் சாஸ்தா கோயிலில் 12 இல் மஹா கும்பாபிஷேகம் Posted: 08 Jun 2014 12:12 PM PDT செய்துங்கநல்லூர் ஸ்ரீ சுந்தரபாண்டி சாஸ்தா கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 12) மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. |
| கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது Posted: 08 Jun 2014 12:12 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள் பறிமு |
| Posted: 08 Jun 2014 12:12 PM PDT நடிப்பு: அகம் புறம் - சுரேஷ்வரன்; பக்.120; ரூ.80; நிழல், 31/48 இராணி அண்ணா நகர், சென்னை - 600 078. |
| விதிமுறைகளை கடைப்பிடிக்காத தனியார் மீன்பதனிடும் நிறுவனம் மீது நடவடிக்கை Posted: 08 Jun 2014 12:12 PM PDT தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தனியார் மீன்பதனிடும் தொழிற்சாலையில் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காத நிலை உள்ளதால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் Posted: 08 Jun 2014 12:11 PM PDT கோவில்பட்டி நகர விசுவ இந்து பரிஷத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மார்க்கெட் சாலையில் உள்ளது. இக்கோயிலை |
| மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்; 3 பேர் கைது Posted: 08 Jun 2014 12:11 PM PDT விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சாயல்குடியிலிருந்து கேரளத்துக்கு மணல் கடத்தி சென்ற 3 டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர்கள் 3 பேரை சூர |
| Posted: 08 Jun 2014 12:11 PM PDT நினைத்துப் பார்க்கிறேன் (1952 முதல் 1961 வரை) இரண்டாம் தொகுதி- கலைமாமணி விக்கிரமன்; பக்.256; ரூ.150; இலக்கியப்பீடம் பதிப்பகம், 3, ஜெய்சங்கர் தெரு, சென்னை-33; )044- 2371 2485. |
| அண்ணா பல்கலை. தரவரிசையில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி முதலிடம் Posted: 08 Jun 2014 12:11 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே முடிவைத்தானேந்தலில் உள்ள ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. |
| மின்கம்பத்தில் ஜீப் மோதி வட்டாட்சியர் உள்பட 3 பேர் காயம் Posted: 08 Jun 2014 12:11 PM PDT விளாத்திகுளம்- மதுரை பிரதானச் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் மின்கம்பம் மீது ஜீப் மோதி, விபத்துக்குள்ளானதில் வட்டாட்சியர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். |
| கருங்குளம் பகுதியில் சூறைக்காற்று:10 ஆயிரம் வாழைகள் சேதம் Posted: 08 Jun 2014 12:10 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். |
| சிறைப்பிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் விடுவிப்பு: இழப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை Posted: 08 Jun 2014 12:10 PM PDT வலைகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் தூத்துக்குடி மற்றும் தூத்தூர் மீனவர்களிடையே எழுந்த பிரச்னையில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 மீனவர்களும் ஞாயிற்றுக்கிழமை |
| Posted: 08 Jun 2014 12:10 PM PDT செய்துங்கநல்லூர் அருகே கார்-பைக் மோதியதில் இருவர் காயமடைந்தனர். |
| Posted: 08 Jun 2014 12:10 PM PDT ஜப்பான் இளவரசர் கட்சுரா தனது 66-ஆவது வயதில் வியாழக்கிழமை மரணமடைந்தார். |
| ஜாதி மோதலைத் தடுக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்: ஜான் பாண்டியன் Posted: 08 Jun 2014 12:10 PM PDT ஜாதி மோதலைத் தடுக்க தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தவேண்டும் என சனிக்கிழமை இரவு நாசரேத் அருகே மின்னொளி கபடி போட்டியைத் தொடங்கிவைத்து ஜான்பாண்டியன் கூறினார். |
| முன்விரோதம்: பாட்டிலால் குத்தியவர் கைது Posted: 08 Jun 2014 12:09 PM PDT விளாத்திகுளம் அருகே மாவிலோடை கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு பாட்டிலால் குத்து விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| பிரிட்டன் நகர மேயராக இந்தியர் பதவியேற்பு Posted: 08 Jun 2014 12:09 PM PDT பிரிட்டனின் சவுத்வார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சுனில் சோப்ரா, சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். |
| Posted: 08 Jun 2014 12:09 PM PDT கழுகுமலையில் சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| புதுப்படம், ஆபாச பட சி.டி.க்கள் வைத்திருந்த இளைஞர்கள் கைது Posted: 08 Jun 2014 12:09 PM PDT கோவில்பட்டி அருகே புதுப்படம் மற்றும் ஆபாச பட சி.டி.க்களை வைத்திருந்த 2 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தப்பியோடிய விடுதலைப்புலிக்கு போலீஸார் வலைவீச்சு Posted: 08 Jun 2014 12:09 PM PDT இலங்கையில் தப்பியோடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணரை அந்நாட்டு போலீஸார் தேடி வருகின்றனர். |
| மாயமான மலேசிய விமானம்: துப்பு கொடுத்தால் ரூ. 30 கோடி Posted: 08 Jun 2014 12:09 PM PDT மூன்று மாதங்களுக்கு முன்பு நடுவானில் மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 29.6 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். |
| Posted: 08 Jun 2014 12:08 PM PDT |
| தாய்லாந்தில் பதற்ற நிலை: கிளர்ச்சியாளர்களை ஒடுக்க போலீஸார் குவிப்பு Posted: 08 Jun 2014 12:06 PM PDT தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை நிலவுவதால் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். |
| இராக்கில் குண்டுவெடிப்பு: 19 பேர் சாவு Posted: 08 Jun 2014 12:05 PM PDT இராக் தலைநகர் பாக்தாத் அருகே இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர். |
| எகிப்து அதிபராக அல்-சிசி பதவியேற்பு Posted: 08 Jun 2014 12:03 PM PDT எகிப்தின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி அப்துல் ஃபட்டா அல்-சிசி (59), அந்நாட்டின் 7-ஆவது அதிபராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். |
| "தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை' Posted: 08 Jun 2014 12:00 PM PDT இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டிலுள்ள இந்திய தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார். |
| தில்லியில் 47.8 டிகிரி வெயில்: 62 ஆண்டுகளில் அதிகபட்சம் Posted: 08 Jun 2014 11:59 AM PDT தலைநகர் தில்லியில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஞாயிற்றுக்கிழமை வெயில் 47.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. |
| "ஆம்ஆத்மி கட்சி ஓராண்டில் சீரமைக்கப்படும் Posted: 08 Jun 2014 11:59 AM PDT ஆம்ஆத்மி கட்சியின் நிர்வாக அமைப்புகள் அனைத்தும் ஓராண்டில் சீரமைக்கப்படும் என்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். அக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் வெள்ளி, சனி, ஞாயிற் |
| தில்லி காவலர் குடியிருப்புகளை சீரமைக்கத் தனிக் குழு: நீதிமன்றம் உத்தரவு Posted: 08 Jun 2014 11:59 AM PDT தில்லியில் காவலர் குடியிருப்புகளை சீரமைப்பதற்கு தனிக் குழு அமைக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. |
| மலைமந்திர் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம் Posted: 08 Jun 2014 11:59 AM PDT தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீ உத்தர ஸ்வாமிநாத ஸ்வாமி கோயில் (மலை மந்திர்) மஹா கும்பாபிஷேகம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| மின் தடை நேரப் பட்டியலை அறிவிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவு Posted: 08 Jun 2014 11:58 AM PDT தில்லியில் ஏற்படும் மின் தடை குறித்த கால அட்டவணையை மின் விநியோக நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டார். |
| சூறைக்காற்றால் பாதிப்படைந்த ஹூமாயூன் கல்லறையில் சீரமைப்பு பணி Posted: 08 Jun 2014 11:58 AM PDT தில்லியில் சூறைக்காற்று வீசியதால் பாதிப்படைந்த ஹுமாயூன் கல்லறையை சீரமைக்கும் பணியை இந்திய தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. |
| மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை Posted: 08 Jun 2014 11:58 AM PDT மனைவியை கொலை செய்தததாகத் தொடரப்பட்ட வழக்கில், கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| "பிரியங்காவுக்கான விமான நிலைய சலுகை தொடரும்' Posted: 08 Jun 2014 11:58 AM PDT பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோரா ஆகியோர் சேர்ந்து விமான நிலையங்களுக்கு வரும்போது, வழக்கமான சோதனைகளில் இருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறவிட்ட பணப் பை உரியவரிடம் ஒப்படைப்பு Posted: 08 Jun 2014 11:57 AM PDT தில்லி வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் ரொக்கம் ரூ.1.80 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதைத் தவறவிட்ட பயணியிடம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்), பத்திரமாக அதை ஒப்படைத்தனர். |
| சிபிஎஸ்இ கோரிக்கையை நிராகரித்தது தில்லி பல்கலை. Posted: 08 Jun 2014 11:57 AM PDT மதிப்பெண் குறைப்பு விவகாரத்தில் சிபிஎஸ்இ விடுத்த கோரிக்கையை தில்லி பல்கலைக்கழகம் நிராகரித்துவிட்டது. |
| மைனர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 2 இளைஞர்கள் விடுதலை Posted: 08 Jun 2014 11:57 AM PDT மைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரை தில்லி நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |