Tamil News | Online Tamil News |
- தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்துக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்: டில்லியில் சொத்து வாங்கிய விவகாரம்
- மூன்று நிமிடங்களில் முடிவு எடுக்கும் பிரதமர் மோடி: மத்திய சட்ட அமைச்சர் பாராட்டு
- மத்திய அமைச்சக ஊழியர்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி : வாரத்தில் 6 நாள் வேலை செய்ய உத்தரவு: அரசு ஊழியர்களுக்கும் விரைவில் அமல்?
- கூடங்குளத்தின் 1,000 மெகாவாட் தமிழகத்திற்கு கிடைக்குமா? பிரதமர் மோடியிடம் பதில் எதிர்பார்க்கிறார் முதல்வர்
- ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் காங்., தீவிரம்: எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம்
- நக்சல், பயங்கரவாதிகளை ஒழிக்க செயல் திட்டம்: தயாராகிறது என்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
- மோடியை வரவேற்க காத்திருக்கிறோம்: அமெரிக்கா
- பிரதமர் மோடியை தாக்க சதி திட்டம் : ஜார்க்கண்டில் 18 குண்டுகள் பறிமுதல்
- அ.தி.மு.க.,வில் பலத்த போட்டி :கட்சி பதவிகளில் மாற்றம் வருமா?
- அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை
- தோல்விக்கு சிதம்பரமும் ஓட்டு இயந்திரமும் காரணம்: காங்., ஆலோசனை கூட்டத்தில் அதிரடி தகவல்
| Posted: டில்லி: டில்லியில், விலை மதிப்புள்ள சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையாளர் சம்பத்துக்கு, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகிப்பவர் சம்பத். தமிழகத்தை சேர்ந்தவர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், இவரது தலைமையில் தான் நடத்தப்பட்டது. இவர், டில்லியில் அதிக விலை மதிப்புள்ள சொத்து ஒன்றை வாங்கியதாக, வருமான வரித்துறையின் நுண்ணறிவுப்பிரிவினர் கண்டுபிடித்தனர். கடந்த 2011ம் ஆண்டில் ஐதராபாத்தில் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்றுள்ள ... |
| மூன்று நிமிடங்களில் முடிவு எடுக்கும் பிரதமர் மோடி: மத்திய சட்ட அமைச்சர் பாராட்டு Posted: பாட்னா: ''பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு, மூன்று நிமிடங்களில், முடிவுகளை எடுக்கிறார். தன் முடிவுகளால், எவ்வளவு மக்கள் பயனடைவர் என்பதிலேயே, அவர் அதிக அக்கறை காட்டுகிறார்,'' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான ரவிசங்கர் பிரசாத், மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சராக பதவியேற்ற பின், முதல் முறையாக, பாட்னா நகர் சென்ற அவருக்கு, பா.ஜ., தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த, ... |
| Posted: வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், எண்ணற்ற ஊழல்கள் நிகழ்ந்தது மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் முடங்கிப் போனது. பொருளாதாரம் உட்பட பல பிரச்னைகளில், விரைவில் முடிவெடுக்க ... |
| Posted: கூடங்குளம் அணுமின் நிலைய, முதல் அணு உலை, மொத்த உற்பத்தி திறனான, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியை நேற்று எட்டிப் பிடித்து சாதனை படைத்தது. இதில் உற்பத்தியாகும், 1,000 மெகாவாட் மின்சாரத்தையும், தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான பதில், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து கிடைக்குமா என, அவர் எதிர்பார்த்து காத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், ரஷ்யா தொழில்நுட்ப உதவியுடன், 17,270 கோடி ரூபாய் செலவில், தலா, 1,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ... |
| ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் காங்., தீவிரம்: எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் Posted: ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தேர்வு செய்யப்பட உள்ளார். இது தொடர்பான பணிகளில், காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதை அடுத்து, இம்மாதம் 4ல், லோக்சபா கூடியது.ஆனால், வரும் 3ல், டில்லி யில் நிகழ்ந்த சாலை விபத்தில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்ததால், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், முதல் நாளன்று, லோக்சபா நடவடிக்கைகள் ... |
| நக்சல், பயங்கரவாதிகளை ஒழிக்க செயல் திட்டம்: தயாராகிறது என்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங் Posted: லக்னோ: ''நக்சல்வாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் பிரச்னைகளை தீர்க்க, விரிவான ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம். அதைத் தயார் செய்யும் பணியில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.லக்னோவில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: செயல் திட்டம்: நக்சல்வாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற, பெரிய பிரச்னைகளை கையாள, கடந்த காலங்களில், எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஒருங்கிணைந்த செயல் திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை. அதனால், அந்தப் பணியில், மத்திய உள்துறை ... |
| மோடியை வரவேற்க காத்திருக்கிறோம்: அமெரிக்கா Posted: வாஷிங்டன் : 'இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.குஜராத்தில், 2002ல், நடைபெற்ற கலவரங்களை கண்டித்தும், அந்தக் கலவரங்களை அடக்கத் தவறினார் என, தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையிலும், 2005 முதல், மோடிக்கு, 'விசா' வழங்க, அமெரிக்கா மறுத்து வந்தது.இந்நிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ளதை அடுத்து, தங்கள் நாட்டுக்கு வருமாறு, அவருக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அதிபர் ஒபாமா, மோடியை போனில் தொடர்பு கொண்டு, அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ... |
| பிரதமர் மோடியை தாக்க சதி திட்டம் : ஜார்க்கண்டில் 18 குண்டுகள் பறிமுதல் Posted: ராஞ்சி: ஜார்க்கண்ட்டில், தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த, 18 வெடி குண்டுகளை தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடியை, குறிவைத்து, தாக்குதல் நடத்துவதற்காக, இந்த குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.பாட்னா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., அமைப்பினரால், கடந்த மே மாதம், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பதுங்கியிருந்த இரண்டு பேர், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு ... |
| அ.தி.மு.க.,வில் பலத்த போட்டி :கட்சி பதவிகளில் மாற்றம் வருமா? Posted: அ.தி.மு.க.,வில் பல மாவட்டங்களில், மாவட்ட செயலர் பதவி உட்பட, பல பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகளைப் பெற, கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.அ.தி.மு.க.,வில், மாவட்ட செயலர் உட்பட முக்கிய நிர்வாகிகளை, பொதுச் செயலரான ஜெயலலிதா, நேரடியாக நியமிக்கிறார். தேர்தல் முடிந்ததும், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி தொகுதியில், வெற்றியை கோட்டை விட்டதற்காக, மாவட்ட செயலர்களை பதவியில் இருந்து நீக்கினார்.கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார். மிகப்பெரும் தோல்வியை தழுவிய, தி.மு.க., போன்ற கட்சிகளில், தோல்விக்கு ... |
| அ.தி.மு.க.,விற்கு சென்றவர்கள் அனாதைகளாகி விட்டனர்: மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை Posted: ''அ.தி.மு.க., தலைமையை நம்பி சென்றவர்கள், அரசியல் அனாதைகளாகி விட்டனர். அதேபோன்ற நிலையை, நீங்களும் அடைய வேண்டாம். கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை, விரைவில், உங்களுக்கு உணர்த்துவேன்,'' என, மாவட்ட செயலர்களுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அறிவுரை வழங்கியுள்ளார்.லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, கடந்த 4ம் தேதி, தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.விசாரணைஅப்போது, தேர்தலில் தோல்வியடைந்த, 14 வேட்பாளர்களையும், தனித்தனியாக தனது அறைக்கு அழைத்து, ... |
| தோல்விக்கு சிதம்பரமும் ஓட்டு இயந்திரமும் காரணம்: காங்., ஆலோசனை கூட்டத்தில் அதிரடி தகவல் Posted: லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு, என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக, தமிழக காங்கிரசின் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், நேற்று, சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.மாநில தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடந்த, இந்த கூட்டத்தை, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் ஆதரவு மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என, பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.30 நாள் அவகாசம்கூட்டத்தை துவக்கி வைத்து, ஞானதேசிகன் பேசியதாவது:தேர்தல் நிதி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |