ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சாதனை
- விடுமுறை விண்ணப்பம்
- பொன்மொழிகள்
- தாய்மொழி கல்வியை காக்க நாளை உண்ணாவிரதம்!
- இது வாங்கினால் அது இலவசம்
- கவிதை எழுத ஆசை
- தூக்கமின்மையால் புற்றுநோய் அபாயம்
- தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....
- தமிழ்- இனிய தமிழ் இனி
- வாழ்வின் தேடல்
- திரிபுராவில் கிராமவாசிகள் வன்முறை: எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்துக் கொலை
- தெய்வங்கள் ஆடிய திருநடனங்கள்
- "மயிலை மாமி ஃபுட் ஃபெஸ்டிவல்'
- மறையட்டும் மாயை!
- அருள்மிகு நடராசர் கோயிலுக்கு ரூ.10 லட்சம் செலவில் வெள்ளி பீடம் வழங்கிய பக்தர்
- விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!
- அறிமுகம்
- கையொப்பம்
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
| Posted: 07 Jun 2014 07:55 AM PDT கூடங்குளம் 1000 மின் வாட் சாதனை ஆனல் தமிழநாடு அம்மவாசை |
| Posted: 07 Jun 2014 07:14 AM PDT நண்பர்களே, வணக்கம். தொழில் நிமித்தம் நான் இன்று மாலை கேரளா செல்வதால், வரும் புதன் வரை விடுமுறை எடுத்துக் கொள்கிறேன். கடவுளின் சொந்த தேசத்தில் இணையத்தில் இணையும் வாய்ப்பிருந்தால் இணைகிறேன். |
| Posted: 07 Jun 2014 06:34 AM PDT ![]() |
| தாய்மொழி கல்வியை காக்க நாளை உண்ணாவிரதம்! Posted: 07 Jun 2014 06:28 AM PDT தமிழகத்தில் தமிழ்மொழி கல்வியை காக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல போராட்டங்களுக்கு பிறகு, நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமை பெற்று 20.11.1978-ல் முதல் கேள்வியை நான் தமிழில் கேட்டு பதில் பெற்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அவ்வாறே செயல்பட்டேன். பெற்ற உரிமையை பேணிக்காக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து சென்றிருக்கும் ... |
| Posted: 07 Jun 2014 06:10 AM PDT இன்று நம்மையெல்லாம் கிளுகிளுக்க வைக்கும் இனிமையான சொல் இலவசம்! இந்தச் சொல்லைக் கேட்டவுடனேயே சிலருக்கு மயிர்க் கூச்செறிகிறது. வாயெல்லாம் பல்லாகிறது. இதைத் தெரிந்துகொண்டுதான் நம் அரசியல் வாணர்கள் இன்று சக்கைப்போடு போடுகிறார்கள். இலவசம், அன்பளிப்பு என்று என்ன என்னவோ கொடுத்து மக்கள் வாக்குச்சீட்டை வாங்கிவிடுகிறார்கள். அரசியல் வாணருக்கு அடுத்தபடி வாணிகர்கள் வந்து நிற்கிறார்கள். சலவைக் கட்டி மூன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேயிலைத் தூள் வாங்கினால் கரண்டி இலவசம். கண்ணாடி வாங்கினால் சீப்பு இலவசம். ... |
| Posted: 07 Jun 2014 06:01 AM PDT எனக்கும் உண்டு வெகு நாள் ஆசை கவிதை ஒன்றை எழுத!! ஹைக்கு என்கிறார்கள் சென்ரியு என்கிறார்கள் இது ஏதும் தெரியலையே எனக்கு? மனதில் தோன்றும் கற்பனைக்கு வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப் போட்டு எழுதினேன், அட இது கவிதை தானே?? இலக்கணப் பிழை என்றும் இலக்கிய சதி என்றும் என்னிடம் யாரும் சண்டையிட வேண்டாம்..!! கவிதை என்பது மனதில் தோன்றும் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருதல் என்பதே எனது தத்துவம்!! எப்படி எழுதலாம் என்று அனு தினமும் யோசிக்கிறேன் எனக்கும் ஒரு கவிதை எழுத ஆசை!! |
| தூக்கமின்மையால் புற்றுநோய் அபாயம் Posted: 07 Jun 2014 05:59 AM PDT தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் பெரும் அலட்சியப் போக்கு காணப்படுகிறது, அது அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்தாக உருமாறியிருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, மான்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கூட்டு எச்சரிக்கையை விடுத்திருப்பவர்கள். மனித உடலின் இயற்கையான செயல்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்கச் செயல்பாட்டு கண்காணிப்புத்தன்மையை 'உடல் கடிகாரம்' என்று ... |
| தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Posted: 07 Jun 2014 05:45 AM PDT 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி... 2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... இதுவும் தப்பு சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ... . 3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்... இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்....... 4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை ... |
| Posted: 07 Jun 2014 05:35 AM PDT தமிழ் இனிய தமிழ் இனி இனிக்கும் தமிழ் இனித் தமிழ்; எங்கும் ஒலிக்கும் ஒலித் தமிழ். தொன்மை யான மொழித் தமிழ்; பொன்மயில் கேட்டாடும் ஒலித் தமிழ். எட்டுத் திசையும் வணங்கிடுமே; எம்மொழிச் சுவைக்க ஏங்கிடுமே. நாவிசைக்கத் தேன் சுரக்கும்; நாள் முழுக்க, முக்கனியாய் இனிக்கும். இனிக்கும் தமிழ் இன்னிசைத் தமிழ். செந்நிறச் சூரியன் - கூட விரும்பும் தமிழ், மெய்யெழுத்தின் புள்ளியாக வேண்டும் என்று. மூன்றாய் உடைந்து, நிலவு கூட மாற விரும்பும் தமிழின் ஆயுத ... |
| Posted: 07 Jun 2014 05:21 AM PDT சிறு அலட்சியத்தினால் தொலைத்த முத்தை அலைகடலில் தேடுகிறேன்! - வாழ்க்கை |
| திரிபுராவில் கிராமவாசிகள் வன்முறை: எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்துக் கொலை Posted: 07 Jun 2014 04:38 AM PDT திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, தெற்கு ராம்நகர். இங்கு, நேற்று இரவு இந்திய-வங்காளதேச எல்லைப் பகுதியில் சில கடத்தல்காரர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துரத்திச் சென்றனர். அப்போது, கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக கிராமவாசிகள் திரண்டு வந்து பாதுகாப்பு படையினரை சரமாரியாக தாக்கினர். இதனால் பாதுகாப்பு படையினர் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கிராமவாசிகளை எச்சரித்தனர். எனினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து வன்முறையில் ஈடுபட்டதால், அவர்களை நோக்கி துப்பாக்கியால் ... |
| Posted: 07 Jun 2014 04:37 AM PDT முத்தமிழ்க் காப்பியமாய் விளங்கும் சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் தெய்வங்கள் ஆடிய நடனங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். சிவபெருமான் ஆடிய ஆடல்கள் கொடு கொட்டி ஆடல். (திரிபுரம் எரியத் தேவர்கள் வேண்டிக்கொண்டபொழுது, வடவைத் தீயை தலையில் வைத்து வெற்றிக் களிப்பால் கைகொட்டி நின்று ஆடிய ஆடல்) பாண்டரங்கக் கூத்து. (இறைவன் திரிபுரம் எரித்த சாம்பலை அணிந்து ஆடிய கூத்து) முருகப் பெருமான் ஆடிய நடனங்கள்: துடிக்கூத்து (சூரனைப் போரில் வென்ற பின் கடல் அலையே அரங்கமாகக் கொண்டு துடி கொட்டி ஆடிய துடிக் கூத்து). ... |
| Posted: 07 Jun 2014 04:32 AM PDT சென்னை ராயப்பேட்டை. டெக்கான் பிளாஸô ஹோட்டல். பெரிய ஹோட்டல்களில் என்னென்ன வெளிநாட்டு உணவுகளைப் பரிமாறுவார்களோ? என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கே பரிமாறப்பட்ட உணவு வகைகளைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். பானகம், கீரை வடை, இனிப்புப் பச்சடி, எள்ளுத் துவையல், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சேப்பங்கிழங்கு வறுவல், வாழைக்காய் புளிக்கூட்டு, எண்ணெய் கத்திரிக்காய் அரைத்த கறி, கீரை மசியல், மாதுளம்பழம் கேசரி, போளி... இப்படி நிறைய... பெரிய ஹோட்டலுக்கு என்ன ஆனது? இல்லை மக்கள் ... |
| Posted: 07 Jun 2014 04:28 AM PDT பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 2.50 லட்சம் அச்சிடப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரை 2.20 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. பூர்த்தி செய்த 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்துசேர்ந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வுக்கானவை. இவை தவிர, நிர்வாக ஒதுக்கீட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் சேர்கிறார்கள். இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், மாணவர்களிடையே பொறியியல் படிப்புக்கான ஆர்வம் சற்று குறைந்திருப்பதுதான். கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் ... |
| அருள்மிகு நடராசர் கோயிலுக்கு ரூ.10 லட்சம் செலவில் வெள்ளி பீடம் வழங்கிய பக்தர் Posted: 07 Jun 2014 04:18 AM PDT சிதம்பரம் அருள்மிகு நடராசர் கோயிலுக்கு மகாபலிபுரத்தைச் சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் செலவில் பித்தளை மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பீடத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். சிதம்பரம் அருள்மிகு நடராசர் கோயிலில் தினமும் காலையில் காலசந்தி (காலை சுமார் 7.30-9.00) நேரத்தில் கலசங்கள் வைத்து பூசை, வேள்வி செய்து தான் பூசைகள் தொடங்குவது வழக்கம். அனந்தாசனம், பத்மாசனம் என இரண்டு ஆசனங்களில் கலசங்கள் வைத்துதான் நடராசர் , சிவகாமியை எழுந்தருளச் செய்து பூசைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூசைக்காக ... |
| விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..! Posted: 07 Jun 2014 03:10 AM PDT குட்டு வெளியே வந்திடுச்சினு சொல்றியே, எந்தக் குட்டு...? - வகுப்புலே வாத்தியார் என்னைத் தலையிலே குட்டின குட்டு, பெருசா வீங்கி வெளியே வந்துடுச்சிடா! - -கே.நடராஜன்,- - --------------------------------- - * கல்வி அதிகாரி: "பரவாயில்லையே, நீ எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டியே?'' மாணவன்: "நீங்க வருஷா வருஷம் இதே கேள்விகளைத்தான் கேப்பீங்கன்னு எங்க வாத்தியார் முதலிலேயே சொல்லிட்டார் சார்!'' - -க. தர்ஷினி, - ------------------------------------- - "விருந்தாளிக்கு மிமிக்ரி ... |
| Posted: 07 Jun 2014 03:07 AM PDT ஈகரை உறவுகளுக்கு..... ஒருகிளையில் ஆயிரம் இலைகளில்-ஒன்றாய், ஆயிரத்தில் ஒருத்தியாய் உங்களில்-நான் ..... |
| Posted: 07 Jun 2014 02:39 AM PDT எனது பெயரை கூட மறந்து கையொப்பம் இட்டு விட்டேன் !!! உனது பெயரை!!!!!!!!!!!!!! |
| Posted: 07 Jun 2014 12:47 AM PDT * பூக்காரியின் கிண்டல்...!! * அழுகின்ற குழந்தையை அடித்தால் அழுகை நிறுத்துமா? அடிப்பது தாயின் வன்முறை. * தாழ்ந்துக் கிடப்பது தெரியாமல் கண்கள் மூடிப் பிடித்திருக்கிறாள் சமநீதி தராசு. * மல்லிகைப் பூவைக் கேட்டார் முதியவரைத் தினுசாய் பார்த்து கிண்டலடித்தாள் பூக்காரி. * |
| Posted: 06 Jun 2014 08:31 PM PDT * நிர்மலமான பரந்த ஆகாயம் எண்ணங்கள் கடந்த மனம் வார்த்தைகளற்ற மௌனம். * விசும்பை எட்டும் குசும்புப் பேச்சு கலக மொழி. * யார் வெறுத்தாலும் சரி என்னைக் கவரும் அழகு நிறம் காக்கையின் கருமை. * சொல்லடி படுவான் மனிதன் கல்லடி படுவான் கனி தரும் மாமரம். * குறைந்தால் குறைபடுவார்கள் மிகுந்தால் சபிப்பார்கள் மண்ணில் இறங்கும் மழை. * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
