Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தாதாவை வைத்து மிரட்டுகிறாரா ப்ரீத்தி? தொழில் அதிபர் வாடியா பரபரப்பு புகார்

Posted:

மும்பை: இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா, சமீபத் தில் மும்பை போலீசில், தன் மாஜி காதலரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பரபரப்பான புகாரை அளித்தார். அதில், 'மும்பை மைதானத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் பேட்டி நடந்தபோது, நெஸ் வாடியா என்னிடம் தவறாக நடந்ததுடன், தரக்குறைவாகவும் பேசினார்' என, தெரிவித்திருந்தார். இதையடுத்து, நெஸ் வாடியா மீது, மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நெஸ் வாடியாவின் தந்தையும் தொழில் அதிபருமான, நஸ்லி வாடியாவின் உதவியாளர், மும்பை போலீசில் ஒரு புகார் ...

ஈராக் நாட்டில் பயங்கரவாதிகளால் 40 இந்தியர்கள் கடத்தல்: எந்த தகவலும் இல்லாததால் உறவினர்கள் பீதி

Posted:

பாக்தாத்:ஈராக் நாட்டில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரு வாரங்களாக, அரசுக்கு எதிராக கடும் சண்டையிட்டு வரும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், 40 இந்தியர்களை கடத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள, 10 ஆயிரம் இந்தியர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே ரத்தக்களரி நடப்பது வழக்கமான ஒன்று. ஆட்சியில் இருக்கும் ஷியா பிரிவு முஸ்லிம் ...

இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்த சீன ஹெலிகாப்டர்

Posted:

புதுடில்லி : சீன விமானப்படைக்கு சொந்த மான ஹெலிகாப்டர், இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்த தகவல், தற்போது வெளியாகிஉள்ளது.இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை உள்ளது. இந்த நிலையில், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், சீன அரசு, அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.சமீபத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியா வந்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில், இம்மாதம், 13ம் தேதி, சீன விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ...

'வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுங்க!':'மாஜி' அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கெஞ்சல்

Posted:

புதுடில்லி: முன்னாள் எம்.பி.,க்களுக்கு, டில்லியில் உள்ள அரசு வீடுகளை, காலி செய்வதற்கான கெடு முடிவடைவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பெரும்பாலான மாஜிக்கள், வீட்டை காலி செய்வதற்கு, கூடுதல் அவகாசம் ஒதுக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுமுகங்களுக்கு...எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும், தலைநகர் டில்லியில், மத்திய அரசு சார்பில், வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். பதவிக் காலம் முடிந்ததும், இந்த வீடுகளை அவர்கள் காலி செய்ய வேண்டும்.தற்போது, லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்று உள்ளனர். ...

மேற்பார்வை குழு அமைக்க ஒப்புதல்

Posted:

புதுடில்லி: ''முல்லை பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,'' என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார்.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதன்பின், மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டி:'முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்தலாம்' என, உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட, குழு ஒன்றை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.இந்த விவகாரம் குறித்து, அமைச்சரவை ...

பொக்கிஷங்களை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க முடிவு: திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில் விவகாரத்தில் திருப்பம்

Posted:

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், பத்மனாப சுவாமி கோவில் பாதுகாப்பு பெட்டக அறைகளில் உள்ள, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம், வைர ஆபரணங்கள் மற்றும் பொருட்களை, பொதுமக்கள் பார்வைக்கு, அருங்காட்சியகத்தில் வைக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பல நூறு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நகைகளை, அனைவரும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.காங்கிரசை சேர்ந்த, முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில், பத்மனாப சுவாமி கோவில் என்ற விஷ்ணு கோவில் உள்ளது. திருவாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, இந்த ...

'இந்தியாவின் நிக்சன் மோடி': பாராட்டும் ஜெய்ராம் ரமேஷ்!

Posted:

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர், சசி தரூர், 'இரண்டாம் தலைமுறைக்கான சிறந்த தலைவர்' என, பாராட்டியது போல், முந்தைய மன்மோகன் சிங் அரசில் அமைச்சராக இடம் பெற்றிருந்த ஜெய்ராம் ரமேஷும், பிரதமர் மோடியை, 'இந்தியாவின் நிக்சன்' என, புகழ்ந்து பாராட்டியுள்ளார்.லோக்சபா தேர்தல் முடிந்து, பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், முந்தைய அரசில், வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த சசி தரூர், மோடியை பாராட்டி பேசியிருந்தார்.அது போல், இப்போது, ஜெய்ராம் ரமேஷும் பாராட்டியுள்ளார். 'இந்தியாவின் நிக்சன் போல், மோடி திகழ்கிறார்' என, ரமேஷ் ...

இலங்கை முஸ்லிம்களை காக்க கருணாநிதி வேண்டுகோள்

Posted:

'இலங்கையில் தாக்கப்படும் முஸ்லிம்களை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கை:கடந்த, 2012ம் ஆண்டு, மியான்மர் நாட்டில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாகவும், தொடர்ச்சியாகவும், 2012ம் ஆண்டு முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே, அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில், கொழும்பு நகருக்கு அருகில் அலுதமா பகுதியில், ...

எதிர்க்கட்சி தலைவர் பதவி ராஜினாமா?இமேஜை உயர்த்த விஜயகாந்த் திட்டம்

Posted:

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து, ஆலோசனை செய்து வரும் விஜயகாந்த், இது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெற்றது.இதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பெற்றார்.ஆனால், அந்த பொறுப்பை அவர் சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டைச் சொல்லி, கட்சியின், எட்டு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்தனர். ஆனால், அவர்கள் மீது, இன்று வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கட்சியில் இருந்து ...

தமிழகத்தில் முதல் முறையாக மின் நுகர்வு உச்சம்: 'ஓவர் லோடு' காரணமாக மின் தடை தொடர்கிறது

Posted:

கடும் வெப்பம் காரணமாக, மின் தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ப, மின் வினியோகம் செய்ய முடியாததால், மின் தடை தொடர்கிறது.தமிழகத்தில், நாள்தோறும், மின் தேவை, சராசரியாக, 12 ஆயிரம்; மின் உற்பத்தி, 11,500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு சிரமம்நடப்பாண்டில், அக்னி நட்சத்திர காலம் முடிந்த பின்பும், வெயிலின் தாக்கம் குறையவில்லை. வறண்ட வானிலை, அனல் காற்று ஆகியவற்றால், பொதுமக்கள், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய ...

ஐ.நா., மனித உரிமை விசாரணையை ஏற்க முடியாது: இலங்கை பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றம்

Posted:

கொழும்பு: இலங்கையில், கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷன் விசாரணையை நிராகரித்து, இலங்கை பார்லிமென்டில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'அத்தகைய விசாரணையை அனுமதிக்க முடியாது' என, இலங்கை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.கடந்த 2009ல் நடந்த போரின் போது, 40,000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக தமிழர் அமைப்புகள் புகார் கூறி வருகின்றன; அதை, இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு மறுத்து வருகிறது.இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™