Tamil News | Online Tamil News |
- மத்திய அமைச்சர்கள் கருத்துக்கு ஜெயலலிதா கண்டனம்: காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம்
- உதயகுமார் கும்பல் மீது நடவடிக்கை எப்போது?
- முன்னாள், இந்நாள் எம்.பி.,க்கள் ஆறு பேர் மீது வழக்கு: விடுமுறை கால பயண சலுகை மோசடி செய்ததாக புகார்
- 1,200 ஆண்டு கால அடிமைத்தனம்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சின் அர்த்தம் என்ன?
- 'சரிந்த செல்வாக்கை மீட்க தொகுதியில் சுத்துங்க!': எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் அறிவுரை
- ராமதாஸ் பேரனுக்குத் திருமணம் : தி.மு.க., கூட்டணிக்கு முடிச்சிடப்படுமா?
- ரூ.2,000க்கு போலி பல்கலை மதிப்பெண் சான்றிதழ்கள்: 3 லட்சம் போலி சான்றிதழ்களுடன் கைது
- 'அம்மா உப்பு' விற்க ஆளில்லை: ஊழியர் பற்றாக்குறையில் 'அமுதம்' கடைகள்
- சிறுவாணி அணை பிரச்னையில் கிடைத்தது தீர்வு: மூடிய குழாயை திறக்க கேரள அதிகாரிகள் சம்மதம்
| மத்திய அமைச்சர்கள் கருத்துக்கு ஜெயலலிதா கண்டனம்: காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் Posted: சென்னை: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை' எனக் கூறிய மத்திய அமைச்சர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரதமருக்கு விரிவான கடிதமும் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: இம்மாதம், 3ம் தேதி, உங்களை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத் தேன். அதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை, வலியுறுத்தி இருந்தேன். உங்களிடம் பேசும் போதும், ... |
| உதயகுமார் கும்பல் மீது நடவடிக்கை எப்போது? Posted: புதுடில்லி: 'தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அமைப்புகள், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன' என்று ஐ.பி., உளவு அமைப்பு தெரிவித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அந்த அமைப்புகள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, அவற்றின் சட்ட விரோத செயல்பாடுகளை தடை செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நம் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பிரமாண்ட தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள் போன்றவற்றிற்கு எதிராக செயல்படும், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சில கட்சிகளின் ... |
| முன்னாள், இந்நாள் எம்.பி.,க்கள் ஆறு பேர் மீது வழக்கு: விடுமுறை கால பயண சலுகை மோசடி செய்ததாக புகார் Posted: புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, எம்.பி.,க்களுக்கும், விடுமுறை கால பயண சலுகை வசதி உண்டு. இந்த திட்டத்தின்படி, விடுமுறை காலங்களில், சுற்றுலா மேற்கொண்டால், அதற்கான செலவுத் தொகையை, மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின்படி, போலியான விமான டிக்கெட்டுகளை கொடுத்து, மத்திய அரசிடம் இருந்து, 9.5 லட்சம் ரூபாய் பெற முற்பட்டதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், ராஜ்யசபா எம்.பி., அனில் குமார் சகானி, டிராவல் ஏஜென்ட் ஒருவர் மற்றும் ஏர் - இந்தியா நிறுவன ஊழியர் ஒருவர் என, மூன்று பேர் மீது, கடந்த ஆண்டு, மத்திய புலனாய்வு ... |
| 1,200 ஆண்டு கால அடிமைத்தனம்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சின் அர்த்தம் என்ன? Posted: புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து, லோக்சபாவில் கடந்த 11ல், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் போது, '1,200 ஆண்டு கால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவித்து வருகிறது; சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும் போது, அவருடன் பேச கூட நடுங்குகிறோம்' என, குறிப்பிட்டிருந்தார். அது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.'வெள்ளையர்கள் தானே நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களும், 15ம் நூற்றாண்டில் இருந்து, 20ம் நூற்றாண்டு வரை தானே நம்மை அடிமைப்படுத்தினர். பிரதமர் மோடி, முஸ்லிம் மன்னர் ... |
| 'சரிந்த செல்வாக்கை மீட்க தொகுதியில் சுத்துங்க!': எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் அறிவுரை Posted: 'லோக்சபா தேர்தலில் சரிந்த செல்வாக்கை மீட்பதற்கு, தொகுதியிலேயே சுற்றுங்கள்; மக்கள் பிரச்னைகளுக்கு எதிராக போராடுங்கள்' என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.லோக்சபா தேர்தலில் கட்சி தோல்வியை சந்தித்ததும், கட்சியின் எதிர்காலம் குறித்த கவலையில், கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் ஆழ்ந்தனர். சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த போது, இந்த தகவலை விஜயகாந்த் அறித்து கொண்டார். அதைத் தொடர்ந்து தான், கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, அவர் ரகசிய உத்தரவு பிறப்பித்துவிட்டு, மலேசியாவுக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து ... |
| ராமதாஸ் பேரனுக்குத் திருமணம் : தி.மு.க., கூட்டணிக்கு முடிச்சிடப்படுமா? Posted: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் கடுமையான விரக்தியில் இருக்கும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தில் நடக்கவிருக்கும் திருமண விழாவை வைத்து, அடுத்த கட்ட அரசியலுக்கு வித்திடும் யோசனையில் இருப்பதாக, கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.ராமதாசின் மகன் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், மகள் காந்திமதியின் மகன் ப்ரித்திவனுக்கும் திருமணம் செய்ய, குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். இதற்கான நிச்சயதார்த்த விழாவையும் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர். விரைவில், திருமண நிச்சயதார்த்த விழா நடக்கவிருக்கிறது. அடுத்த சில ... |
| ரூ.2,000க்கு போலி பல்கலை மதிப்பெண் சான்றிதழ்கள்: 3 லட்சம் போலி சான்றிதழ்களுடன் கைது Posted: சென்னை: தமிழகம் மற்றும் வெளிநாட்டு பல்கலைகள், பொறியியல் கல்லூரிகளின் பட்டம், மதிப்பெண் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும், போலியாக தயாரித்து, ஒரு செட், 2,000 ரூபாய் என விற்று வந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, பட்டாளத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 52; ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை, இவரும், வியாசர்பாடி பி.எஸ்.என்.எல்., குடியிருப்பைச் சேர்ந்த தேவராஜ் என்பவரும், வியாசர்பாடி, ஏ.ஏ., சாலையில் நடந்து சென்றனர். இவர்கள் மீது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களிடம் விசாரித்தனர். போலீசார் சற்று ... |
| 'அம்மா உப்பு' விற்க ஆளில்லை: ஊழியர் பற்றாக்குறையில் 'அமுதம்' கடைகள் Posted: நுகர்பொருள் வாணிப கழக, 'அமுதம்' கடைகளில், ஊழியர் பற்றாக்குறை காரணமாக, 'அம்மா உப்பு' விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், வெளிச்சந்தை உணவு பொருட்கள் விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' என்ற பெயரில், பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறது.20 சதவீத விலை குறைவு: சென்னையில், 19; கடலூரில், மூன்று என, மொத்தம், 22, 'அமுதம்' பல்பொருள் அங்காடிகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், அரிசி, சர்க்கரை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை, வெளிச்சந்தையை விட, 10 - 20 சதவீதம் விலை குறைவாக விற்கப்படுகிறது. கடைகளில், ... |
| சிறுவாணி அணை பிரச்னையில் கிடைத்தது தீர்வு: மூடிய குழாயை திறக்க கேரள அதிகாரிகள் சம்மதம் Posted: கோவை: சிறுவாணி அணையில் அடைக்கப்பட்ட குழாயை திறக்கவும், 'டனல்' நுழைவாயிலில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி, தமிழகத்திற்கு வழங்கும் தண்ணீரை அளவிடவும் கேரளா மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.கோவையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை, கேரள மாநிலத்தில் உள்ளது. அணை பராமரிப்பு அம்மாநில நீர்ப்பாசனத்துறை வசமுள்ளது. இதற்கான செலவினம் கோவை மாநகராட்சி நிதியில் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கடந்த 8ல் டனலுடன் இணைந்துள்ள பழைய குழாயை அடைத்தனர். இதனால், வறட்சியான காலகட்டத்தில் அணையின் நிரந்தர நீர் இருப்பில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |