Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கல்லூரி பாடப் புத்தகங்கள் இலவசம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 13 Jun 2014 02:11 PM PDT

ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி அறக்கட்டளை, கல்லூரி மாணவர்களிடம் இருந்து இலவச பாடப் புத்தகங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இலவச ஆலோசனை முகாம்

Posted: 13 Jun 2014 02:08 PM PDT

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச கல்வி ஆலோசனை முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.

சர்ச்சைக்குரிய பெனால்டி கிக்

Posted: 13 Jun 2014 01:51 PM PDT

ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் குரோஷியாவின் டீஜன் லாரென், ஃபிரெடை கீழே தள்ளி விட்டதாக, நடுவர் நிஷிமுரா பிரேசிலுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார்.

ரசிகர்களுக்கு நன்றி

Posted: 13 Jun 2014 01:50 PM PDT

பிரேசில் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் ரசிகர்கள் தந்த உற்சாகம்.

நின்ற லாரி மீது பால் வேன் மோதல்: ஓட்டுநர் உள்பட மூவர் சாவு

Posted: 13 Jun 2014 01:27 PM PDT

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வெள்ளிக்கிழமை நின்ற லாரி மீது பால் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம்:  டிஇஎல்சி தேவாலய நிர்வாகிகளை கைது செய்யக் கோரிக்கை

Posted: 13 Jun 2014 01:25 PM PDT

பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டிஇஎல்சி தேவாலய நிர்வாகிகளைக் கைது செய்யவேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியார் பல்கலை. துணைவேந்தராக சி.சுவாமிநாதன் நியமனம்

Posted: 13 Jun 2014 01:22 PM PDT

பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சி.சுவாமிநாதன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற 16-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

பாரதிதாசன் பல்கலை. புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு

Posted: 13 Jun 2014 01:21 PM PDT

மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற வி.எம். முத்துக்குமார் (படம்) தெரிவித்தார்.

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

Posted: 13 Jun 2014 01:20 PM PDT

நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளராக அரசு முன்னாள் தலைமை வழக்குரைஞரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருமான ஏ.நவநீதகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை மீனவர்கள்: வலைகள் சேதம்

Posted: 13 Jun 2014 01:20 PM PDT

பாம்பன் பகுதியிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை மீன்பிடிக்க விடாமல், இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடித்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் 14 பேர் விடுதலை: ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Jun 2014 01:19 PM PDT

தூத்துக்குடிக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேரையும் நல்லெண்ணம் மற்றும் மனிதநேய அடிப்படையில் ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் கல்வியில் விரைவில் அதிரடி மாற்றம்

Posted: 13 Jun 2014 01:19 PM PDT

அனைத்து நிலை ஆசிரியர் கல்வியிலும் விரைவில் அதிரடி சீர்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

பண முறைகேடு விவகாரம்: பஸ் நடத்துநரை பணிநீக்கம் செய்தது செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Jun 2014 01:11 PM PDT

பண முறைகேடு செய்த பஸ் நடத்துநரை பணி யிலிருந்து நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வலுவிழந்தது "நானாக்' புயல்

Posted: 13 Jun 2014 01:09 PM PDT

அரபிக் கடலில் உருவாகியிருந்த "நானாக்' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை: தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 13 Jun 2014 01:08 PM PDT

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தங்கம்: பவுனுக்கு ரூ.296 உயர்வு

Posted: 13 Jun 2014 01:07 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பவுனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேல்மருவத்தூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் ரத்து

Posted: 13 Jun 2014 01:06 PM PDT

ஒலக்கூர் - திண்டிவனம் இடையிலான வழித்தடத்தில் ஜூன் 16 முதல் ஜூலை 2 - ஆம் தேதி வரை (ஜூன் 22 மற்றும் 29 தவிர்த்து) 15 நாள்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

மோகனாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

Posted: 13 Jun 2014 01:05 PM PDT

வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4.04 கோடி ரொக்கம், 73 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணைக்காக 48 மணி நேர காவலில் வைத்திருக்க அனுமதி பெற்று கரகாட்டக் கலைஞர் மோகனாவை அழைத்துச் சென்ற போலீஸார் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரை காட்பாடி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தினர்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: பக்ருதீன் உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை நகல் அளிப்பு

Posted: 13 Jun 2014 01:02 PM PDT

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

செய்த பாவமென்ன?

Posted: 13 Jun 2014 12:55 PM PDT

அரசுப் பணியிலோ அல்லது தனியார் நிறுவனப் பணியிலோ முக்கியப் பணியிடத்தில் சேருவதற்கான தகுதி அனைத்தையும் கொண்டிருக்கிறேன்.

விஞ்ஞானிகள் கைவிரிப்பு!

Posted: 13 Jun 2014 12:54 PM PDT

வளி மண்டலத்தில் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் (கிரீன் ஹவுஸ்) வாயுக்கள் நிறைந்ததால் அதன் உலகளாவிய வெப்பநிலை உயர்ந்து கொண்டே போகிறது.

அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு!

Posted: 13 Jun 2014 12:53 PM PDT

பதினாறாவது மக்களவையின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்துக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை, பதவி ஏற்றிருக்கும் நரேந்திர மோடி அரசின் செயல்திட்டங்களையும், அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

உதயகுமாருக்கு அமெரிக்க நிதி: மத்திய உளவுத் துறை குற்றச்சாட்டு

Posted: 13 Jun 2014 12:51 PM PDT

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் எஸ்.பி. உதயகுமாருக்கு அமெரிக்காவில் இருந்து நிதி வழங்கப்பட்டதாக மத்திய உளவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

Posted: 13 Jun 2014 12:50 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சூரிய மின் சக்தியில் 3 ஆயிரம் மெகாவாட் இலக்கு எட்டப்படும்

Posted: 13 Jun 2014 12:49 PM PDT

தடைகள் நீக்கப்பட்டு தமிழகத்தில் சூரிய மின் சக்தியில் 3 ஆயிரம் மெகாவாட் இலக்கு எட்டப்படும் என மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கூறினார்.

ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்): தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Posted: 13 Jun 2014 12:48 PM PDT

ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்), பி.காம்.,பி.எல். (ஹானர்ஸ்) படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது

Posted: 13 Jun 2014 12:45 PM PDT

"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனால், கர்நாடக நலனுக்கு எந்தவிதப் பாதிப்பும் இருக்காது' என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.

"தென்னக நதிகளை இணைப்பதால் மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்னை தீரும்'

Posted: 13 Jun 2014 12:44 PM PDT

தென்னக நதிகளை இணைப்பதால் மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்னை தீரும் என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.

தமிழகம் முழுவதும் இன்று வி.ஏ.ஓ தேர்வு: 243 மையங்களில் 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

Posted: 13 Jun 2014 12:42 PM PDT

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வினை 10 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக, மாநிலம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் செலவு கணக்கு: வேட்பாளர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள்

Posted: 13 Jun 2014 12:40 PM PDT

மக்களவைத் தேர்தல் செலவு கணக்குகளை வரும் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதற்கான நினைவூட்டல் கடிதங்கள் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.24 கோடியில் விளையாட்டு கட்டமைப்புகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted: 13 Jun 2014 12:40 PM PDT

தமிழகத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான விளையாட்டு வசதிகளுக்கான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்.

பிலாய் உருக்காலை விபத்தில் மேலும் ஒருவர் சாவு: விசாரணைக்கு உத்தரவு

Posted: 13 Jun 2014 12:35 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில், பிலாய் உருக்காலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாது: அமைச்சர்

Posted: 13 Jun 2014 12:33 PM PDT

""வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படாது, நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கையும் தொடரும்'' என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்: நவாஸ் ஷெரீஃபுக்கு பிரதமர் மோடி கடிதம்

Posted: 13 Jun 2014 12:32 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் மற்றும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருதரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க முனைப்புடன் இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

சிறையில் காயமடைந்த யஷ்வந்த் சின்ஹா

Posted: 13 Jun 2014 12:31 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வெள்ளிக்கிழமையன்று கீழே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டது.

செங்கம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

Posted: 13 Jun 2014 12:31 PM PDT

செங்கம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ டி.சுரேஷ்குமார் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார் .

22 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்?

Posted: 13 Jun 2014 12:31 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் 22 காவல் ஆய்வாளர்கள் ஓரிரு நாளில் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என்று காவல் துறை வட்டாரங்கள்

கோவா எம்எல்ஏக்களின் பிரேசில் பயணம் ரத்து

Posted: 13 Jun 2014 12:31 PM PDT

பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டியைக் காண்பதற்கு அரசு செலவின் 6 எம்எல்ஏக்கள் செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, கோவா அரசு பயண திட்டத்தை ரத்து செய்துள்ளது.

200 டெட்டனேட்டர், 200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 13 Jun 2014 12:30 PM PDT

திருவண்ணாமலை அருகே உரிய அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 200 டெட்டனேட்டர்கள், 200 ஜெலட்டிகள் குச்சிகள், டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஆரணி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 13 Jun 2014 12:30 PM PDT

ஆரணி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

Posted: 13 Jun 2014 12:30 PM PDT

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் கரிப்பூர் மதுரா, கரிப்பூர்காலன், நாச்சாவரம் உள்ளிட்ட 5 குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் கரிப்பூரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின்க

தந்தையைக் கொன்ற மகன் கைது

Posted: 13 Jun 2014 12:30 PM PDT

திருவண்ணாமலை அருகே சொத்துத் தகராறில் தந்தையைக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.

அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடக்கம்

Posted: 13 Jun 2014 12:29 PM PDT

செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது .

கோவிலில் உண்டியல் உடைப்பு

Posted: 13 Jun 2014 12:29 PM PDT

ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள பூட்டை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை உடைத்துள்ளனர்.

சீமாந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது

Posted: 13 Jun 2014 12:29 PM PDT

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் சீமாந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என்று மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள்-விவசாயிகள் கலந்துரையாடல்

Posted: 13 Jun 2014 12:29 PM PDT

போளூரில் வேளாண் விஞ்ஞானிகள்-விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குரு பெயர்ச்சி: கோயில்கள், ஆஸ்ரமங்களில் சிறப்பு யாகம்

Posted: 13 Jun 2014 12:29 PM PDT

குரு பெயர்ச்சியையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட கோயில்கள், ஆஸ்ரமங்களில் சிறப்பு யாகம், ஹோமங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி?

Posted: 13 Jun 2014 12:28 PM PDT

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி என்பது குறித்து ஆரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் வியாழக்கிழமை செயல்விளக்கம் செய்துகாண்பித்தனர்.

நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 13 Jun 2014 12:28 PM PDT

ஆரணி நகராட்சிப்  பகுதியில் உள்ள 4 நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் போட்டி

Posted: 13 Jun 2014 12:28 PM PDT

வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ரத்த தான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 13 Jun 2014 12:28 PM PDT

உலக ரத்த தான கொடையாளர்கள் தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் ரத்த தான விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குண்ணத்தூரில் திமுக பொதுக்கூட்டம்

Posted: 13 Jun 2014 12:27 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்த நாள் விழாவையொட்டி, குண்ணத்தூர் கிராமத்தில் திமுக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்று விஏஓ பணி தேர்வு: 34,541 பேர் எழுதுகின்றனர்

Posted: 13 Jun 2014 12:27 PM PDT

 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வை திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 127 தேர்வு மையங்களில்  சனிக்கிழமை 34,541 பேர் எழுதுகின்றனர்.

எதிர்க்கட்சி அந்தஸ்து: காங்கிரஸூக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு

Posted: 13 Jun 2014 12:27 PM PDT

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

ஹாலே ஓபன்: 2ஆம் சுற்றில் நடால் தோல்வி

Posted: 13 Jun 2014 12:22 PM PDT

புல் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனுக்கு, ஒத்திகை பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் போட்டியில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2ஆவது சுற்றில் தோல்வி அடைந்தார்.

இத்தாலி - இங்கிலாந்து பலப்பரீட்சை

Posted: 13 Jun 2014 12:21 PM PDT

பிரேசிலில் அமேசான் காடுகள் நிறைந்த மனாஸ் நகரில் 15லிம் தேதி அதிகாலை நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலியும், இங்கிலாந்தும் மோதவுள்ளன.

டுவிட்டர் ஹீரோ

Posted: 13 Jun 2014 12:20 PM PDT

உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தையொட்டி, பிரேசிலின் நெய்மரை வாழ்த்தி 150லிக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் 1.22 கோடி டுவிட்களை டுவிட்டர் இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

புறாவிளை பகுதியில் மின் குறைபாட்டைப் போக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 13 Jun 2014 12:19 PM PDT

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே புறாவிளை மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, குலசேகரம் இளமின் பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை

நெய்மருக்கு கருணையா?

Posted: 13 Jun 2014 12:19 PM PDT

பிரேசிலுக்கு ஆதரவாக பெனால்டி கிக் வழங்கியது, நெய்மருக்கு சிவப்பு அட்டை காண்பிக்காமல் மஞ்சள் அட்டை காட்டியது என முதல் ஆட்டத்திலேயே சர்ச்சையுடன் தொடங்கியுள்ளது இந்த உலகக் கோப்பை.

குமரி அருகே ஊர் பெயர் பலகை வைப்பதில் தகராறு

Posted: 13 Jun 2014 12:19 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த மாதவபுரம் மற்றும் ஒற்றையால்விளை ஊர் நிர்வாகிகளிடையே பெயர் பலகை வைப்பது தொடர்பாக, வெள்ளிக்கிழமை மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

பிரேசிலியர்களை உருக்கிய "நெய்'மர்

Posted: 13 Jun 2014 12:18 PM PDT

ஆறாவது முறையாக உலகக் கோப்பை வெல்லும் கனவில் இருக்கும் பிரேசில் அணி அதற்கான முதல் அடியை கவனத்துடன் எடுத்து வைத்துள்ளது.

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 13 Jun 2014 12:17 PM PDT

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா நோய் தடுப்புப் பணிகள்

Posted: 13 Jun 2014 12:16 PM PDT

அகஸ்தீசுவரம் ஒன்றியம், தேரேகால்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட மேலதத்தையார்குளம், கோதைகிராமம் கிராமங்களில் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

அரசு ஊழியரின் கார் திருட்டு

Posted: 13 Jun 2014 12:16 PM PDT

மார்த்தாண்டம் அருகே வீட்டருகே நிறுத்தி சென்றிருந்த அரசு ஊழியரின் கார் திருடு போயுள்ளது.மார்த்தாண்டம் அருகே அயினிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தம்பி சுரேஷ் (44). இவர் கேரளத்தில்,

நாகர்கோவிலில் அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

Posted: 13 Jun 2014 12:15 PM PDT

அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. அப்புநடேசன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவர் கைது

Posted: 13 Jun 2014 12:15 PM PDT

நாகர்கோவில் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு

Posted: 13 Jun 2014 12:15 PM PDT

வழக்குரைஞர்கள் குறித்து, உச்சநீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, குமரி மாவட்டத்தில் நீதிமன்றப் பணிகளை வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை புறக்கணித்தனர்.

குமரி பகவதியம்மன் கோயிலில் பௌர்ணமி விழா

Posted: 13 Jun 2014 12:15 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பௌர்ணமி விழா நடைபெற்றது.

நூருல் இஸ்லாம் பல்கலை.க்கு தமிழகத்தில் சிறந்த தனியார் பல்கலைக்கழக விருது

Posted: 13 Jun 2014 12:14 PM PDT

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்துக்கு சிறந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கான தேசிய விருதை, இந்திய அரசின் மிகச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கேபினட்

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 13 Jun 2014 12:14 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 

குமரி மாவட்டத்தில் தொடரும் அஞ்சல் தலை தட்டுப்பாடு

Posted: 13 Jun 2014 12:14 PM PDT

குமரி மாவட்டத்தில் நிலவும் அஞ்சல் தலை தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தேங்கும் கழிவுநீர்: சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்

Posted: 13 Jun 2014 12:14 PM PDT

களியக்காவிளை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Posted: 13 Jun 2014 12:13 PM PDT

தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

எஸ்.ஐ. க்கு கொலை மிரட்டல்: கூலித்தொழிலாளிகள் 4 பேர் கைது

Posted: 13 Jun 2014 12:13 PM PDT

கருங்கல் அருகே பாலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளிகள் 4 பேரை கருங்கல் போலீஸார் கைதுசெய்தனர்.

முள்ளங்கனாவிளையில் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கல்

Posted: 13 Jun 2014 12:13 PM PDT

முள்ளங்கனாவிளை ஒய்.எம்.சி.ஏ. சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் 16-ல் விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 13 Jun 2014 12:13 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையக் கல்லூரியில், பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16 ஆம் தேதி முதல் விநியோகம் செய்ய

குருபெயர்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 13 Jun 2014 12:12 PM PDT

தூத்துக்குடி சித்தர் நகரில் உள்ள ஸ்ரீ பிரத்யங்கிராதேவி ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை குரு மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அம்மா திட்ட முகாம்: 85 மனுக்களுக்கு தீர்வு

Posted: 13 Jun 2014 12:12 PM PDT

கோவில்பட்டி வட்டம், கே.வெங்கடேஸ்வரபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 85 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

விஏஓ தேர்வுதூத்துக்குடி மாவட்டத்தில் 30,679 பேர் எழுதுகின்றனர்

Posted: 13 Jun 2014 12:12 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான எழுத்துத் தேர்வை 30 ஆயிரத்து 679 பேர் எழுதுகின்றனர்.

தூத்துக்குடியில் கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Jun 2014 12:11 PM PDT

ரேஷன் கடைகளுக்கு பொருள்களை பொட்டலங்களில் அடைத்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேர்ந்தபூமங்கலம் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 13 Jun 2014 12:11 PM PDT

ஆத்தூர் அருகேயுள்ள சேர்ந்தபூமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை  நடைபெற்றது.

எட்டயபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க கோரிக்கை

Posted: 13 Jun 2014 12:11 PM PDT

எட்டயபுரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வட்டக்குழு சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 13 Jun 2014 12:10 PM PDT

தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் (ஐடிஐ) சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Jun 2014 12:10 PM PDT

உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி -  சென்னை விரைவு ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தல்

Posted: 13 Jun 2014 12:10 PM PDT

கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், கோவில்பட்டியில் தொடர்ந்து நின்று செல்ல வேண்டும் என கோவில்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்கள் இயக்க நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்

Posted: 13 Jun 2014 12:10 PM PDT

தூத்துக்குடியில்  ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்க சமூக செயல்பாட்டாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 13 Jun 2014 12:09 PM PDT

எட்டயபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில்,  மழைநீர்

"மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்'

Posted: 13 Jun 2014 12:09 PM PDT

தூத்துக்குடியில் ஜூன் 21ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என

வாலிபால் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

Posted: 13 Jun 2014 12:09 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற கோடைக்கால சிறப்பு வாலிபால் பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

"குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

Posted: 13 Jun 2014 12:09 PM PDT

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கோவில்பட்டியில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின விழாவில் ஆட்சியர் ரவிக்குமார் வலியுறுத்தினார்.

எட்டயபுரத்துக்கு வல்லநாடு குடிநீர் வழங்கக் கோரிக்கை

Posted: 13 Jun 2014 12:08 PM PDT

எட்டயபுரத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் சாவு

Posted: 13 Jun 2014 12:08 PM PDT

:நாசரேத்தில் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை இறந்தார். வைத்திலிங்கபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (12). இவர்,

பெண்ணிடம்  தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 13 Jun 2014 12:08 PM PDT

வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

Posted: 13 Jun 2014 12:08 PM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கும் நிகழ்ச்சியில் 9 பேருக்கு கல்வி, திருமணம், இறப்புக்கான நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஆத்தூரில் கலவர தடுப்பு போலீஸார் அணிவகுப்பு

Posted: 13 Jun 2014 12:08 PM PDT

ஆத்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வரையிலான ஊர்களில் கலவர தடுப்பு போலீஸார் வியாழக்கிழமை அணிவகுப்பு  நடத்தினர்.     

விளாத்திகுளம் அருகே ஏலச் சீட்டு மோசடி: பெண் கைது

Posted: 13 Jun 2014 12:07 PM PDT

விளாத்திகுளம் அருகே மெட்டில்பட்டியில் ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த பெண்ணை புதூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

Posted: 13 Jun 2014 12:07 PM PDT

வல்லநாடு அருகே மணல் கடத்தவிருந்த மினி லாரியை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஆலோசனை கூட்டம்

Posted: 13 Jun 2014 12:07 PM PDT

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

Posted: 13 Jun 2014 12:06 PM PDT

உக்ரைன்: நிலக்கரி சுரங்க விபத்தில் 7 பேர் சாவு

Posted: 13 Jun 2014 12:00 PM PDT

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™