Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இன்று ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு

Posted: 21 Jun 2014 02:16 PM PDT

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.

பேருந்து மோதி தொழிலாளி சாவு

Posted: 21 Jun 2014 02:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை அரசு நகரப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா

Posted: 21 Jun 2014 02:15 PM PDT

கும்பகோணம் ஸ்ரீநாகேசுவரசுவாமி கோயிலில் ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ஏக தின லட்சார்ச்சனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தாய்மொழியில் படித்தவர்களால்தான் சுயமாய் சிந்திக்க முடியும்

Posted: 21 Jun 2014 02:15 PM PDT

தாய்மொழியில் படித்தவர்களால்தான் சுயமாய் சிந்திக்க முடியும் என்றார் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

Posted: 21 Jun 2014 02:14 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு, மின் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தபால்காரர் வீட்டில் திருடிய வழக்கில் இளைஞர் கைது

Posted: 21 Jun 2014 02:14 PM PDT

கரூர் அருகே தபால்காரர் வீட்டில் திருடிய வழக்கில் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

"கல்விதான் நிரந்தரமாக வறுமையைப் போக்கும்'

Posted: 21 Jun 2014 02:14 PM PDT

கல்விதான் நிரந்தரமாக வறுமையைப் போக்கும் என்றார் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

அணைக்கரையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

Posted: 21 Jun 2014 02:14 PM PDT

கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை சென்னை மண்டல நீர்வள ஆதார பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் சனிக்கிழமை அதிகாரிகளுட

விவசாயிகள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jun 2014 02:13 PM PDT

தஞ்சை மாவட்ட தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவித்த கரும்பு தொகையை விவசாயிகளுக்கு வழங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தியும், நெஞ்சில் திருநாமப் பட்டையை வரைந்து கொண்டும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுகையில் "அம்மா' மருத்துவ முகாம்

Posted: 21 Jun 2014 02:13 PM PDT

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில், தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் "அம்மா' மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுப் பண்ணையில் பிடிபட்ட குரங்குகள்

Posted: 21 Jun 2014 02:13 PM PDT

அறந்தாங்கி அருகே நாட்டுமங்களம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் சனிக்கிழமை 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

பணம் வைத்து சூதாட்டம்:17 பேர் மீது வழக்கு

Posted: 21 Jun 2014 02:12 PM PDT

அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடியதாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 17 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jun 2014 02:12 PM PDT

புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர் சுடப்பட்ட வழக்கில் உறவினர்கள் இருவர் கைது

Posted: 21 Jun 2014 02:12 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாணவர் சுடப்பட்ட வழக்கில் அவரது உறவினர்கள் இருவரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

100% தேர்ச்சியே இலக்கு: களமிறங்கியது கல்வித் துறை

Posted: 21 Jun 2014 02:11 PM PDT

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை இலக்காக நிர்ணயித்து, அதற்கான செயல்பாடுகளில் தஞ்சாவூர் மாவட்ட கல்வித்துறை களம் இறங்கியுள்ளது.

நிலுவைப் பணத்தை வழங்காத தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கஞ்சித் தொட்டி திறக்க முடிவு

Posted: 21 Jun 2014 02:11 PM PDT

கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்காத தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து, கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டம்

Posted: 21 Jun 2014 02:11 PM PDT

தஞ்சாவூரில் மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"கல்விதான் நிரந்தரமாக வறுமையைப் போக்கும்'

Posted: 21 Jun 2014 02:11 PM PDT

கல்விதான் நிரந்தரமாக வறுமையைப் போக்கும் என்றார் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

ஜூன் 24}ல் தென்னை சாகுபடி பயிற்சி

Posted: 21 Jun 2014 02:10 PM PDT

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 24-ம் தேதி சீர்மிகு தென்னை சாகுபடி என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது.

839 பேருக்கு விலையில்லாப் பொருள்

Posted: 21 Jun 2014 02:10 PM PDT

நீடாமங்கலம் ஒன்றியம், தளிக்கோட்டை மற்றும் நல்லிக்கோட்டை ஊராட்சிகளைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் ஆகிய பொருட்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்னா நடத்த முடிவு

Posted: 21 Jun 2014 02:10 PM PDT

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கக் கோரி ஜூலை 7-ம் தேதி போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தர்னாவில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பி.எஸ்.என்.எல். சேவை விழிப்புணர்வு முகாம்

Posted: 21 Jun 2014 02:09 PM PDT

திருத்துறைப்பூண்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்ற ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படும் சேவை, சலுகை குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போலி கையெழுத்திட்டு சான்றிதழ்: 2 பேர் கைது

Posted: 21 Jun 2014 02:09 PM PDT

வட்டாட்சியரின் கையெழுத்தை போலியாக இட்டு ஜாதிச் சான்றிதழ் அளித்த புகாரில், 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பாம்புரம் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

Posted: 21 Jun 2014 02:09 PM PDT

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ராகு, கேது கோயிலில் சனிக்கிழமை ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

திருநள்ளாறு கோயில் யானைக்கு விரைவில் நெற்றிப்பட்டம்

Posted: 21 Jun 2014 02:09 PM PDT

திருநள்ளாறு கோயில் யானைக்கென திருச்சூரில் தயார் செய்த நெற்றிப்பட்டம் சனிக்கிழமை வந்து சேர்ந்தது. அடுத்த சில நாள்களில் யானைக்கு பொருத்தப்படுமென கோயில் அதிகாரி தெரிவித்தார்

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

Posted: 21 Jun 2014 02:08 PM PDT

அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பள்ளபாளையம் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுறவு வங்கியின் பொது பேரவைக்

Posted: 21 Jun 2014 02:08 PM PDT

கரூர் நகர கூட்டுறவு வங்கியின் பொது பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வங்கியின் தலைவர் பிகேஎஸ். முரளி தலைமை வகித்து, வங்கியின் செயல்பாடு,

ரூ. 27.71 கோடியில் தாலிக்குத் தங்கம்

Posted: 21 Jun 2014 02:08 PM PDT

கரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 6,215 பயனாளிகளுக்கு ரூ. 27.71 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.

மானியத்தில் சான்று பெற்ற பயறு விதைகள் விநியோகம்

Posted: 21 Jun 2014 02:07 PM PDT

மானியத்தில் சான்று பெற்ற பயறு விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மோட்டார்சைக்கிளிலிருந்து விழுந்த பேருந்து நடத்துனர் சாவு

Posted: 21 Jun 2014 02:07 PM PDT

மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த அரசு பேருந்து நடத்துனர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி (37). அரசு பேருந்தில்

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு

Posted: 21 Jun 2014 02:07 PM PDT

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கரூர் தொழிலாளர் ஆய்வாளர் ஓ. ஜானகிராம் தெரிவித்துள்ளார்.

வழிப்பறி, திருட்டுகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Posted: 21 Jun 2014 02:07 PM PDT

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வழிப்பறி திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

குன்னம் அருகேபள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து சாவு

Posted: 21 Jun 2014 02:06 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கிணற்றில் விழுந்த பள்ளி மாணவன் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தான்.

அங்கீகாரம் இல்லாத குழந்தைகள் இல்லங்கள் மூடப்படும்

Posted: 21 Jun 2014 02:06 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் குழந்தைகள் இல்லங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: இளைஞர் சாவு

Posted: 21 Jun 2014 02:06 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே வெள்ளிக்கிழமை மாலை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அலந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திசைந

111 பேருக்கு ரூ. 19 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

Posted: 21 Jun 2014 02:05 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனுநீதி நிறைவு நாள்

அரியலூர் மாவட்டத்துக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு

Posted: 21 Jun 2014 02:05 PM PDT

அரியலூர் மாவட்டத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கு கடன் திட்ட மதிப்பீட்டுக்கான அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

ஊராட்சி அளவிலானக் குழு கூட்டமைப்புக் கூட்டம்

Posted: 21 Jun 2014 02:05 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் கச்சிபெருமாள் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மறுசீரமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்

Posted: 21 Jun 2014 02:04 PM PDT

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி

Posted: 21 Jun 2014 02:04 PM PDT

புதுக்கோட்டையில் பள்ளி அளவிளான ஓவியக் கண்காட்சி பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகே விவசாயி தற்கொலை: சாலை மறியல்

Posted: 21 Jun 2014 02:04 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விவசாயி அளித்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், அவர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, அவரது

புதுகை காவல் நிலையம் அருகே இருவரை வெட்டிய 4 பேர் கைது

Posted: 21 Jun 2014 02:04 PM PDT

புதுக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களிடம் இருந்து தப்பிக்க, காவல் நிலையத்துக்கு ஓடிய இருவரை வெட்டிய 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கந்தர்வகோட்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்

Posted: 21 Jun 2014 02:03 PM PDT

கந்தர்வகோட்டையில் பாஜக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியத் தலைவர் கே. பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்

நாம் தமிழர் கட்சிநிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

Posted: 21 Jun 2014 02:03 PM PDT

: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வறட்சியிலிருந்து கரும்பு பயிரை காக்க வேளாண் துறை யோசனை

Posted: 21 Jun 2014 02:03 PM PDT

தண்ணீர் அதிகமாக தேவைப்படும் நீண்ட நாள் பயிரான கரும்பு வறட்சியினால் பாதிக்கப்படும் போது மகசூல், சர்க்கரை கட்டுமானத்தின் அளவு வெகுவாக குறைகிறது. பயிரை வறட்சியில் இ

"ஆசிரியர்கள் மாணவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்க வேண்டும்'

Posted: 21 Jun 2014 02:03 PM PDT

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது, அவர்களை நாட்டின் நல்ல குடிமகன்களாக ஆக்கும் பெருமை ஆசிரியர் சமுதாயத்திற்கு உண்டு என்றார் திருச்சி பாரதிதாசன்

போலீஸாரின் குழந்தைகள் 158 பேருக்குரூ. 11.72 லட்சம் கல்வி உதவித் தொகை

Posted: 21 Jun 2014 02:02 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட போலீஸாரின் குழந்தைகள் 158 பேருக்கு ரூ. 11.72 லட்சம் கல்வி உதவித் தொகையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜன் வழங்கினார்.

"ஜூன் 30 வரை அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டங்கள்'

Posted: 21 Jun 2014 02:02 PM PDT

அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகள் மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஜூன் 21 முதல் 30-ம் தேதி வரை தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி நடைபெறுகிறது என்று

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தல்

Posted: 21 Jun 2014 02:02 PM PDT

மத்திய அரசு ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கமும், காமராஜர் தேசிய பேரவையும் கோரிக்கை விடுத்துள்ளன.

"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வலுப்படுத்த நடவடிக்கை'

Posted: 21 Jun 2014 02:01 PM PDT

தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்க கூடிய 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வலுப்படுத்துவதற்காக குழு அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அதன் மாநில தலைவர் கே.எம். காதர்மொய்தீன்.

பேருந்து மோதி தொழிலாளி சாவு

Posted: 21 Jun 2014 02:01 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை அரசு நகரப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

"மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் நிறைவேறும்'

Posted: 21 Jun 2014 02:01 PM PDT

மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

நாகூர் நாகநாதசுவாமி கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா

Posted: 21 Jun 2014 02:00 PM PDT

: நாகையை அடுத்த நாகூரில் உள்ள ராகு ஸ்தலங்களுள் ஒன்றான நாகநாதசுவாமி திருக்கோவிலில் ராக - கேது பெயர்ச்சி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கீழபெரும்பள்ளம் கோயிலில் கேது பெயர்ச்சி

Posted: 21 Jun 2014 02:00 PM PDT

சீர்காழியை அடுத்த பூம்புகார் அருகேயுள்ள கீழபெரும்பள்ளம் நாகநாதர்சுவாமி கோயிலில் சனிக்கிழமை கேதுபெயர்ச்சி விழா நடைபெற்றது.

நீடாமங்கலத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 21 Jun 2014 02:00 PM PDT

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இளைஞர் தற்கொலை

Posted: 21 Jun 2014 02:00 PM PDT

திருவாரூர் அருகே காதலி உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த காதலன் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

முதியவர் தற்கொலை

Posted: 21 Jun 2014 01:59 PM PDT

குடவாசல் அருகே முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்களம்பூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி(70). மனநிலை

மறுவாழ்வு இல்லம் நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 21 Jun 2014 01:59 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

வேன் மோதி குழந்தை சாவு

Posted: 21 Jun 2014 01:59 PM PDT

திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை வேன் மோதி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே கிள்ளியூரைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் மகள் பூர்ணிஷ

நகை பறித்த இளைஞர் கைது

Posted: 21 Jun 2014 01:59 PM PDT

திருவாரூரில் வியாழக்கிழமை நள்ளிரவு பெண்ணின் கழுத்தை அறுத்து நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பெண் தற்கொலை

Posted: 21 Jun 2014 01:58 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (38). இவரது மனைவி படவேட்டாள் (28). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். படவேட்டாள் ச

மிருகண்டா அணையை சுற்றுலாத் தலமாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

Posted: 21 Jun 2014 01:58 PM PDT

கலசப்பாக்கம் அருகே உள்ள மிருகண்டா அணையை சுற்றுலாத் தலமாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஆணை வழங்கியுள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

உலக அகதிகள் நாள்

Posted: 21 Jun 2014 01:58 PM PDT

வந்தவாசி நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக அகதிகள் நாள் சிறப்பு நிகழ்ச்சி வந்தவாசி கிளை நூலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஜேசிபி உரிமையாளர் நலச் சங்க தொடக்க விழா

Posted: 21 Jun 2014 01:58 PM PDT

வந்தவாசி வட்ட மண் அள்ளும் ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நலச்சங்கம் தொடக்க விழா வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.

அனுமதியின்றி போர்வெல் அமைத்தவருக்கு அபராதம்

Posted: 21 Jun 2014 01:57 PM PDT

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் அனுமதி பெறாமல் போர்வெல் அமைத்தவருக்கு ஊராட்சி சார்பில் அபராதம் விதித்து பணம் வசூலிக்கப்பட்டது.

"படிப்பது மட்டுமே வளர்ச்சி தராது; பிற திறமைகளையும் அறிந்து செயல்பட வேண்டும்'

Posted: 21 Jun 2014 01:57 PM PDT

படிப்பது மட்டுமே வளர்ச்சி தராது, பிற திறமைகளையும் அறிந்து சூழ்நிலைக்கேற்றவாறு செயல்பட வேண்டும் என ஆட்சியர் ஞானசேகரன் கூறினார்.

திறந்திருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

Posted: 21 Jun 2014 01:57 PM PDT

திருவண்ணாமலையில் திறந்து கிடந்த ஓய்வு பெற்ற நகராட்சி அலுவலக ஊழியர் வீட்டில் இருந்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்லூரியில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 21 Jun 2014 01:57 PM PDT

திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான 3 நாள் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தகராறு செய்ததாக இளைஞர் கைது

Posted: 21 Jun 2014 01:56 PM PDT

போளூர் ரயில்வே கிராஸ் ரோடு பகுதியில் மது குடித்துவிட்டு தகராறு செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

Posted: 21 Jun 2014 01:56 PM PDT

திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகைகள், வெள்ளித் தட்டு ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கலசப்பாக்கத்தில் அம்மா திட்ட முகாம்

Posted: 21 Jun 2014 01:56 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த நட்சத்திர கோவில் என்ற இடத்தில் எலத்தூர், மோட்டூர், சோழவரம் உள்ளிட்ட கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில்

பேராசிரியரின் பைக் திருட்டு

Posted: 21 Jun 2014 01:56 PM PDT

திருவண்ணாமலையில் கல்லூரிப் பேராசிரியரின் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திமுக பொதுக் கூட்டம்

Posted: 21 Jun 2014 01:55 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் நடைபெற்றது.

தஞ்சை

Posted: 21 Jun 2014 01:55 PM PDT

சுடுகாட்டில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jun 2014 01:55 PM PDT

: ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தை அகற்றியதால், ஆரணி சுடுகாட்டில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆரணி பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு அருகில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக

425 பேருக்கு ரூ.1.50 கோடி மதிப்பு திருமண உதவித் தொகை

Posted: 21 Jun 2014 01:55 PM PDT

திருவண்ணாமலையில் 425 பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான திருமண உதவித் தொகையை தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

பேருந்துப் பயணியிடம் நகை, பணம் திருட்டு

Posted: 21 Jun 2014 01:55 PM PDT

திருவண்ணாமலையில் பேருந்து பயணியிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், 1 பவுன் நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 21 Jun 2014 01:54 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த சிதம்பரம் என்பவர் மகன் சண்முகம் (25). கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

செம்மரக் கடத்தல் கும்பல் மீது ஆந்திரத்தில் துப்பாக்கிச் சூடு: ஆரணி இளைஞர் சாவு

Posted: 21 Jun 2014 01:54 PM PDT

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்துக்குள்பட்ட கோலூர் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வனத் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆரணியைச் சேர்ந்த இளைஞர் இறந்தார்.

மாநிலங்களவைத் தேர்தல் தோல்வி: அருணாசல மக்கள் கட்சி மீது பாஜக குற்றச்சாட்டு

Posted: 21 Jun 2014 01:31 PM PDT

அருணாசலப்பிரதேசத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக பிராந்திய கட்சியான அருணாசல மக்கள் கட்சி மீது பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மக்கள் நம்பிக்கையை மோடி இழந்துவிட்டார்: சித்தராமையா

Posted: 21 Jun 2014 01:31 PM PDT

ரயில் கட்டண உயர்வு, ஹிந்தி திணிப்பு ஆகியவற்றின் மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இழந்துவிட்டதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

ரயில் கட்டண உயர்வுக்கு மாயாவதி கண்டனம்

Posted: 21 Jun 2014 01:30 PM PDT

ரயில் கட்டண உயர்வுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கண்டனம் தெரிவித்தார்.

கணினியில் பழைய ஆவணங்கள் பதிவு

Posted: 21 Jun 2014 01:30 PM PDT

மத்திய அரசுத்துறை அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய கோப்புகள், அவை தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவற்றை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உயரதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்: மத்திய வேளாண் அமைச்சர்

Posted: 21 Jun 2014 01:28 PM PDT

நாடு முழுவதும் விரைவில் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம்: உ.பி.யில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சியினர் ரயில் மறியல்

Posted: 21 Jun 2014 01:26 PM PDT

ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சி ஆதரவாளர்கள் ரயில் மறியல் மற்றும் பிரதமரின் உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

ரயில் கட்டண உயர்வு சரியான முடிவு: அருண் ஜேட்லி

Posted: 21 Jun 2014 01:25 PM PDT

""ரயில் கட்டண உயர்வு கடினமானது, ஆனால் சரியான முடிவு'' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் விமானத் தாக்குதல்: 30 தீவிரவாதிகள் சாவு

Posted: 21 Jun 2014 01:23 PM PDT

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் முறைகேடு: அப்துல்லாவின் ஆதரவாளர்கள் போராட்டம்

Posted: 21 Jun 2014 01:22 PM PDT

ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அதிபர் பதவி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரும்பிச் செல்லும் அகதிகளுக்கு நிதி வழங்கும் ஆஸ்திரேலியா

Posted: 21 Jun 2014 01:22 PM PDT

ஆஸ்திரேலியாவின் பசிபிக் குடியேற்ற முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல தாமாக முன்வரும் பட்சத்தில், அவர்களுக்கு 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.5.66 லட்சம்) அந்நாடு வழங்க உள்ளது.

சீனா: போலீஸ் நிலையத்தை தாக்கிய 13 சமூக விரோதிகள் சுடப்பட்டு சாவு

Posted: 21 Jun 2014 01:21 PM PDT

சீனாவில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 13 சமூக விரோதிகள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

போருக்குத் தயாராகுங்கள்; ரஷியப் படைகளுக்கு புதின் உத்தரவு

Posted: 21 Jun 2014 01:21 PM PDT

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டு அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், மத்திய ரஷியப் படைகளை போருக்குத் தயாராகும்படி அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இராக்கில் ராணுவம்-தீவிரவாதிகள் கடும் சண்டை

Posted: 21 Jun 2014 01:19 PM PDT

இராக்கில் சிரியாவை எல்லையொட்டிய காயிம் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி 30 வீரர்களை சுட்டுக் கொன்றதுடன், எல்லைச் சாவடியையும் கைப்பற்றினர்.

ஹைதராபாத்- மதுரை இடையே ஜூலை 3 முதல் விமான சேவை

Posted: 21 Jun 2014 01:18 PM PDT

ஹைதராபாதிலிருந்து மதுரைக்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஏர்கோஸ்டா நிறுவனம் புதிய விமான சேவையை தொடங்குகிறது.

தேயிலை உற்பத்தி 24.48% சரிவு

Posted: 21 Jun 2014 01:16 PM PDT

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 24.48 சதவீதம் சரிவு கண்டுள்ளது. அதிகமாக தேயிலை பயிரிடப்படும் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைவான உற்பத்தியை சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஹீரோ மோட்டோகார்ப். ஆலை அமைக்க சந்திரபாபு நாயுடு அழைப்பு

Posted: 21 Jun 2014 01:15 PM PDT

இரு சக்கர வாகன உற்பத்தி, விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப். நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் உற்பத்திப் பிரிவை அமைக்க முன்வர வேண்டும் என அந்த மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் கிராமப் பகுதியில் 30,000 கழிப்பறைகள்: ஹிந்துஸ்தான் ஜிங்க் திட்டம்

Posted: 21 Jun 2014 01:09 PM PDT

ஸீஸா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஓர் அங்கமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ராஜஸ்தானில் உள்ள கிராமப் பகுதியில் 30,000 கழிப்பறைகளைக் கட்டுகிறது.

"நான் கராச்சி இல்லை, ராஞ்சி'

Posted: 21 Jun 2014 12:45 PM PDT

"ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் ராஞ்சியைச் சேர்ந்தவன் என்று கூறினால், அதனை பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்று வெளிநாட்டு வீரர்கள் அர்த்தம் கொள்வர்' என்று சுவாரஸ்யமான தகவல்களை இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.

உலக பிளிட்ஸ் செஸ்:கார்ல்ஸைன் சாம்பியன்: ஆனந்துக்கு 5ஆவது இடம்

Posted: 21 Jun 2014 12:42 PM PDT

துபையில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

தரவரிசை: 50-வது இடத்தில் இந்திய மகளிர் அணி

Posted: 21 Jun 2014 12:38 PM PDT

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) சமீபத்தில் மகளிர் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ரூனி

Posted: 21 Jun 2014 12:37 PM PDT

இத்தாலியை அடுத்து உருகுவேயிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இதனால் இந்த உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே இங்கிலாந்து வெளியேறியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™