Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சென்னை கலை இலக்கியப் பேரவையின் சாதனையாளர் விருது உங்கள் ஆதிராவுக்கு.....

Posted: 02 Jun 2014 10:23 AM PDT

சென்னை கலை இலக்கியப் பேரவையின் சார்பில் இன்று (19.04.14) நடந்த பதம்ஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனார் நினைவுநாள், படத்திறப்பு, மற்றும் உதவிகள் வழங்கும் விழாவில்.... சாதனையாளர் என்னும் விருதினை வழ்ங்கினார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள். உடன் இந்நாள் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. எஸ். விமலா கலமாமணி அரிமா. டாக்டர் மணிலால், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கெ. ராஜன், அரிமா ச்க்தி வேல் ஆகியோர்

என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Posted: 02 Jun 2014 09:18 AM PDT

ஐயா எங்க வீட்டு ஆத்துக்கார அம்மாவுக்கு இன்னிக்கு, 60 வயசுங்கோ. காலையிலேயே இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு. வெளியில சாப்பிட போலாமான்னு கேட்டேன். யோவ், இன்னிக்கு நாங்க சமையுங்கன்னு சொல்லிட்டு டி.வியில போய் உக்காந்திட்டாங்க.  நல்ல வேல எங்க கிருஸ்ணம்மா அக்கா சமையல் பக்கம் போய் ஏதாவது எடுத்து சமச்சி போடலாமுன்னு இருக்கேன்.  இன்னும் 8 நாள்ள எங்க 41 திருமண நாள் அதாங்க 10.6.1973 - 10.6.2014   அந்த அற்புத நாள மறக்க முடியாமா?   மறக்க முடியுமா இந்த ரெண்டு நாள்களையும்.  இந்தப் பட்டுதான் இப்போ ரசிச்சி ...

வெற்றி என்கிற பேரழகான ஆடை

Posted: 02 Jun 2014 09:11 AM PDT

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். ""பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்'' என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார். கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: ""நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். ...

உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Posted: 02 Jun 2014 08:00 AM PDT

ஐக்கியநாடுசபை: சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் 2 பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஐக்கியாநாடு சபை வன்மையாக கண்டித்துள்ளது. கடந்த வாரத்தில் உ. பி., மாநிலம் படானில் 2 பெண்கள் வெளிப்புற கழிப்பிடம் சென்ற போது கற்பழிக்கப்பட்டு, கொலை செய்து, மரத்தில் தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு 2 போலீசாரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்., துணை தலைவர் ராகுல், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தங்களின் கண்டனத்தை தெரிவித்து, பாதிக்கப்ப்பட்டோருக்கு ...

ஆள்பாதி ஆடைபாதி!!

Posted: 02 Jun 2014 07:45 AM PDT

ஆடை எம்மூடே பயணிக்கும் அழகே வாடைக் காற்றுக்கு அசைந்தாடி எம்மழகைக் கூட்டிடும் பெருந் தோழி ஆடையில் பாதி அணிந்தவர் முழுமதி அழகை மறைத்து ஆடை வௌித்திடும் இன்னும் தரும் வெகுமதி மானம் காத்து மறைத்து உடலை அழகாய் அணிந்தவர் பெருமை சேர்த்து ஆடவர் பெண்டிர் மதிப்பைப் பெறுவார் நாடுகள் வேறு இனங்கள் வேறு அணிவதில் வேறென்றாலும் அழகும் மானமுமொன்று உடையது பல ரகம் விலையது மலை மடு ஏழைக்கும் உண்டு பணமுண்டார்க்கும் உண்டு வேறுபாடு விலையில் அழகில் இல்லை அது பெண் குறைத்தால் கவர்ச்சி ஆண் ...

என் கிராமம் எனது மண்

Posted: 02 Jun 2014 07:21 AM PDT

என் கிராமம் எனது மண் எனது மண். ஒரு குக்கிராமம். ராமாபுரம் என்று பெயர். அப்பா அங்கிருக்கும் எலிமெண்டரி ஸ்கூலுக்கு தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுக்கொண்டார். 1969 வாக்கில் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நான் அப்போது ஏழாவது வயதை தொட்டிருந்தேன். நான் ராமாபுரத்தில் படிக்கவில்லை. அருகில் இருக்கும் சிறு டவுன் கடலூர் துறைமுகம் என்று சொல்வார்கள். அங்கு ஒரு கிறிஸ்டியன் ஸ்கூலில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தேன். சனி ஞாயிறு ஆனால் அப்பா என்னை சைக்கிளில் கிராமத்துக்கு அழைத்து வந்து விடுவார்கள். அப்பாவுக்கு ...

மறு அறிமுகம்

Posted: 02 Jun 2014 04:59 AM PDT

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்

நேதாஜி - ஹிட்லர்

Posted: 02 Jun 2014 04:53 AM PDT

நேதாஜி - ஹிட்லர் நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் . ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.. கடைசியில் ஹிட்லரே வந்து ...

D-link modam செட்டிங்ஸ் செய்ய உதவி வேண்டும்

Posted: 02 Jun 2014 04:01 AM PDT

நண்பர்களுக்கு வணக்கம்
D -link 2730 U மாடல் கொண்ட மோடத்திற்கு செட்டிங்ஸ் கூகுளில் தேடிப்
பார்த்தேன் கிடைக்கவில்லை எப்படி செய்வது என தெரிந்த நண்பர்கள்
கூறினால் உதவியாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணா.

Posted: 02 Jun 2014 04:00 AM PDT

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சொன்றார். வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பாிசோதிக்கச் சொன்னாா். மகனும் பரிசோதித்தார். மருந்தை எழுதித் தரச் சொன்ன தலைவர், ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார். பிறகு சொன்னார், 'இது உனக்கு ஆசீர்வாதமாய் தரப்படுவது மட்டுமல்ல, ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்று நீ நினைவில் வைக்கவே உன் ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 02 Jun 2014 03:56 AM PDT

*
பூக்காரியின் கிண்டல்...!!
*
அழுகின்ற குழந்தையை
அடித்தால் அழுகை நிறுத்துமா?
அடிப்பது தாயின் வன்முறை.
*
தாழ்ந்துக் கிடப்பது தெரியாமல்
கண்கள் மூடிப் பிடித்திருக்கிறாள்
சமநீதி தராசு.
*
மல்லிகைப் பூவைக் கேட்டார்
முதியவரைத் தினுசாய் பார்த்து
கிண்டலடித்தாள் பூக்காரி.
*

ஹலோ... எழுந்திருங்க...

Posted: 02 Jun 2014 03:55 AM PDT

(தூங்குகிற நோயாளியை) ஹலோ... எழுந்திருங்க...
எழுந்திருங்க..!

ஏன்... என்னாச்சு சிஸ்டர்..?

இல்ல... டாக்டர் உங்கள தூங்க வைக்க முன்னாடி நீங்க துாங்கிட்டீங்களா" ன்னு செக் பண்ணினேன்..

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 02 Jun 2014 03:30 AM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.

Posted: 02 Jun 2014 02:46 AM PDT

* மஞ்சள் வெயில்…!! * மழை நின்ற பின் அழகாகவிருந்தது அந்தி மஞ்சள் வெயில் *. கூடு திரும்பின இரைதேடி அலுத்தப் பறவைகள். ஆடுகள் மாடுகள் வீடு திரும்பின பொழுதோடு மேய்ந்து வயிறு நிரம்பிய திருப்தியோடு, * வேலைக்குச் சென்றவர்கள் களைப் போடுத் திரும்பினார்கள் தேவையானப் பொருட்களை வாங்கிச் சுமந்து இரவு உணவு சமைப்பதற்கு, * மழை வரும் போல மேகமூட்டம் விலகவில்லை இன்னும், மழையில் நனைந்து சுகிக்கலா மென்று எதிப்பார்த்திருக்கின்ற மௌன மரங்கள். * விடிய விடிய பெய்து தீர்த்தது நள்ளிரவு தொடங்கிய ...

இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை

Posted: 02 Jun 2014 01:09 AM PDT

இலங்கை விவகாரங்களைக் கவனிக்க, தன் நேரடி கண்காணிப்பின் கீழ், சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி மோடி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு, தமிழகத்தில் உள்ள பா.ஜ., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந்தப் பிரச்னையால், மோடி பதவியேற்பு விழாவை, முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். பா.ஜ., ...

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்

Posted: 02 Jun 2014 12:42 AM PDT

எல்லா உயிரும் ஒன்றெனப் போற்றும் வல்லான் நெறியை வள்ளுவர் காட்டினார் கல்லா மாந்தர் கொடுமதி கொண்டே பொல்லா வினையால் பேரிழிவு நாட்டினார்! ஓடுகின்ற குருதியிலே எவ்வுயிரும் ஒன்றன்றோ பாடுகின்ற நல்லறங்கள் சாற்றுவதும் இதுவன்றோ மூளுகின்ற பகையாலே நன்னிலைதான் தோன்றிடுமோ மூடராய் வாழ்வதில்தான் பயனேதும் வந்திடுமோ! வாழ்கின்ற உயிர்களிலே உயர்வுதாழ்வு உண்டோடா? பாழ்சிந்தனை கொண்டுநீ அலைவதுவும் சரியோடா? காழ்ப்புணர்ச்சி கொள்வதால் மானுடம்தான் மாண்புறுமோ! தாழ்ச்சியுற்று இவ்வுலகில் வாழ்வதுவும் முறையாமோ! சாதியெனும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™