Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உ.பி.யில் 13 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது

Posted: 27 Jun 2014 11:24 PM PDT

உத்தரபிரதேச ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரி கிராமத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜிதேந்த்ரா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை மாம்பழம் பறித்து தருவதாக கூறி மாம்பழத் தோட்டத்திற்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் பாப்ரி காவல்

பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைகிறது: வரிகுறைப்பு மூலம் நடவடிக்கை

Posted: 27 Jun 2014 11:20 PM PDT

பெட்ரோலியம் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. கடந்த ஆண்டு இந்த வரி விதிப்பு மத்திய அரசுக்கு ரூ.64,335 கோடியை பெற்று கொடுத்தது. நடப்பாண்டில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான சுங்கவரி வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஈராக் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணை

சம்மன் அனுப்பியதை எதிர்த்து சோனியா அப்பீல் செய்ய முடிவு

Posted: 27 Jun 2014 11:13 PM PDT

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் செய்திகளை வெளியிடுவதற்காக ''நேஷனல் ஹெரால்டு'' எனும் பத்திரிகையை 1938–ம் ஆண்டு ஜவகர்லால் நேரு தொடங்கினார். கடன்கள் அதிகரித்ததால் அந்த பத்திரிகை கடந்த 2008–ம் ஆண்டு மூடப்பட்டது. இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் ரூ.1900 கோடி சொத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்,

எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து: தீயில் கருகிய 27 பேர் உயிருக்கு போராட்டம்

Posted: 27 Jun 2014 10:52 PM PDT

ஆந்திர மாநிலத்தில் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மத்திய அரசின் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு வயல்கள் உள்ளன. இங்கு எடுக்கப்படும் எரிவாயு குழாய் மூலம் அமலாபுரம் மண்டலம் நகரம் கிராமத்தின் வழியாக பொன்னமாதா என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கல்வி மந்திரியை விமர்சித்த விவகாரம்: தலைமை ஆசிரியையின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய மறுப்பு

Posted: 27 Jun 2014 10:46 PM PDT

திருவனந்தபுரம் காட்டன்ஹில் பகுதியில் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சமீபத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதனை மாநில கல்வி மந்திரி அப்துரப் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நாளில் மந்திரி அப்துரப் விழாவுக்கு தாமதமாக வந்தார். இதனை பள்ளியின் தலைமை ஆசிரியை ஊர்மிளாதேவி விழா மேடையிலேயே விமர்சித்தார். விழா முடிந்த மறுநாள் தலைமை ஆசிரியை ஊர்மிளாதேவி காட்டன்ஹில் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 30–ந்தேதி கேரளா மறு சீராய்வு மனு

Posted: 27 Jun 2014 10:30 PM PDT

தென்தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அணை பலவீனமாக இருப்பதாகவும், அங்கு புதிய அணை கட்ட வேண்டுமெனவும் கூறி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், அங்கு 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கலாம் என்றும் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கேரள அரசு இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகளில் கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி பி.ஜே. ஜோசப் மற்றும் கேரள அரசு வக்கீல்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

கொச்சி விமான நிலையத்தை தாக்க போவதாக போனில் மிரட்டல்

Posted: 27 Jun 2014 10:26 PM PDT

கொச்சி விமான நிலையம் நெடும்பச்சேரி அருகே உள்ளது. இங்குள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு நேற்று மாலை 6 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவன், ''கொச்சி விமான நிலையத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்துவோம்'' என்று கூறிபோனை வைத்து விட்டான். இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் தீவிரவாத தடுப்பு படையினரும் விமான நிலையத்தைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம்

Posted: 27 Jun 2014 08:43 PM PDT

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் என்ற கிராமத்தில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 15 பேர் பலியானார்கள். இதில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜல்பைகுரி கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம்

Posted: 27 Jun 2014 08:18 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரியை ஒட்டிய காட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நெல், சோளம் போன்றவற்றைப் பயிரிடுகின்றனர். ஆனால் இவை நன்கு முற்றி வரும்போது ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் கூட்டம் இவற்றைத் துவம்சம் செய்துவிடுகின்றன. மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே தொடர்ந்து ஏற்படும் இந்த மோதல்கள் தேயிலைத் தோட்டங்களில் இருந்தும் ம

மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்ட நோயாளியின் மண்டையோட்டு பகுதி மாயம்

Posted: 27 Jun 2014 08:14 PM PDT

கொல்கத்தாவின் லேக் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் அர்னாப் தத்தா(23) என்பவர் ஆவார். கணிணி பொறியியல் மாணவரான இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது தந்தை இறந்த சோகத்தில் அவரது குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ரூபி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மூளையில் ஏற்பட்டிருந்த ரத்தக் கசிவிற்காக அவருக்கு அறுவை சிகிச்சை

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய டிக்கெட் பரிசோதகர்

Posted: 27 Jun 2014 01:10 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் மால்டா ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இன்டர்-சிட்டி ரெயிலில் வகிபூல் பீபீ (வயது35) என்ற பெண்மணி தனது மகளுடன் பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அவர்கள் பயணம் செய்வதாக கூறி அபராத கட்டணமாக ரூ.550-ஐ கட்டும்படி கூறினார்.

பள்ளிக்கூட மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை

Posted: 27 Jun 2014 12:59 PM PDT

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பாலி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தாள். கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி பள்ளி முடிந்து மாணவி வீடு திரும்பி கொண்டிருந்தாள். அங்குள்ள காட்டுப்பகுதி அருகே மாணவி நடந்து வந்தபோது, விரேன் ராஜ்புட்(வயது24) என்ற வாலிபர் அவளை பின் தொடர்ந்து வந்தார்.

மாவோயிஸ்ட்டுகள் மீதான தடையை நீக்குங்கள்: அரசுகளுக்கு சி.பி.ஐ. கோரிக்கை

Posted: 27 Jun 2014 12:11 PM PDT

மாவோயிஸ்ட்டுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய- மாநில அரசுகள் நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

வீட்டுக்குள் புகுந்த வெறி நாய் 2 மாத குழந்தையை கடித்துக் கொன்ற பரிதாபம்

Posted: 27 Jun 2014 10:10 AM PDT

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 மாத குழந்தையை வெறி நாய் கடித்துக் கொன்ற சம்பவம் டெல்லி வாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்றிரவு தனது 2 மாத பெண் குழந்தையை வீட்டில் உள்ள

மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலைய கட்டிடத்தில் திடீர் தீ: 35 பேர் மீட்பு

Posted: 27 Jun 2014 08:01 AM PDT

மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள கட்டிடத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ரெயில்வேயின் புதிய நிர்வாக அலுவலக கட்டிடத்தின் 5-வது மாடியில் தீப்பிடித்ததும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற முயன்றனர். இருப்பினும் சிலர் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள்: ஐ.நா. அதிர்ச்சி தகவல்

Posted: 27 Jun 2014 07:41 AM PDT

உலக அளவில் 6-லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கடந்த 2007ல் காணப்பட்டதைவிட இப்போது நிலைமை முன்னேறியுள்ளதாகக் கூறும் அந்த அறிக்கை இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா ஒரு மில்லியன் சிறுவர்கள் இந்த நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

புளூடூத் மூலம் கல்லூரி தேர்வில் முறைகேடு செய்த மாணவன் சிக்கினான்

Posted: 27 Jun 2014 05:03 AM PDT

மேற்கு வங்காளத்தில் தலைமுடிக்குள் புளூடூத்தை மறைத்து வைத்து அதன்மூலம் தேர்வில் முறைகேடு செய்த கல்லூரி மாணவன் பிடிபட்டான். பிர்பம் மாவட்டம் சூரியில் உள்ள வித்யாசாகர் கல்லூரியில் நேற்று தேர்வு நடைபெற்றது. பி.ஏ. தத்துவவியல் முதலாமாண்டு மாணவரான ரபிகுர் இஸ்லாம், தலையில் விக் அணிந்து தேர்வெழுந்த வந்திருந்தார்.

செக்ஸ் கல்வி தடை விவகாரம்: ஹர்சவர்தன் கருத்தை நிராகரித்தது பா.ஜனதா

Posted: 27 Jun 2014 04:12 AM PDT

எய்ஸ்ட் நோயை தடுப்பதற்கு ஆணுறைகளைவிட திருமணத்தில் நம்பிக்கை வைப்பதே சிறந்த வழி என்று யோசனை கூறிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன், இப்போது பள்ளிகளில் செக்ஸ் கல்வியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் ஆந்தராக்ஸ்: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 27 Jun 2014 04:06 AM PDT

ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தில் உள்ள செமிலிகுடா மற்றும் லமாதாபுர் ஆகிய பகுதியில் கடந்த வாரம் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 4 பேருக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டது. நோய் அறிகுறியை அடுத்து கெட்டுப்போன மாட்டிறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், கோராபுத் மாவட்டத்தில் உள்ள உள்ள லட்சுமிபூர் பகுதியில் உள்ள 6 பேருக்கு ஆந்தராக்ஸ் நோய்

மோடியின் 30 நாள் ஆட்சியில் சிறப்பானது ஏதும் இல்லை- நிதிஷ்

Posted: 27 Jun 2014 03:54 AM PDT

மோடி தலைமையிலான மத்திய அரசு 30 நாட்களை கடந்துள்ளது. இது குறுகிய காலமாக இருந்தாலும், இந்த நாட்கள் மக்களுக்கு நல்ல நாளாக அமையவில்லை என்று ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். ஒரு அரசு தங்களது திறமையான ஆட்சியை நிரூபிக்க 30 நாட்கள் என்பது மிகவும் குறைந்த நாட்களே. மோடியிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™