Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மே.வங்கத்தில் சட்டம்–ஒழுங்கை கண்காணிப்பதா?: பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை

Posted: 15 Jun 2014 10:47 PM PDT

மேற்கு வங்காளத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. இதை நேரில் பார்வையிடுவதற்காக டெல்லியில் இருந்து துணைத் தலைவர் பல்பீர் புஞ்ஜ் தலைமையில் ஒரு குழுவை பா.ஜனதா அனுப்பி வைத்தது. அவர்கள் பிர்பும் மாவட்டம் இல்லாம் பஜார் பகுதிக்கு சென்று அங்கு கடந்த 7–ந் தேதி திரிணாமுல் காங்கிரசாரின் தாக்குதலில் பா.ஜனதா

வெயிலுக்கு 125 பேர் பலி: பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1½ லட்சம் சந்திரபாபுநாயுடு

Posted: 15 Jun 2014 10:35 PM PDT

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருகிறது. வெயிலுக்கு கடந்த 3 நாட்களில் மட்டும் 306 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 125 பேர் உயிர் இழந்தனர். கடலோர ஆந்திர மக்கள் தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிழக்கு கோதாவரியில் 27 பேரும், விசாகப்பட்டிணத்தில் 33 பேரும், ஸ்ரீகாகுளத்தில் 19 பேரும், விஜயநகரில் 15 பேரும், கிருஷ்ணா, பிரகாசம் மாவட்டங்களில் தலா 10 பேரும், நெல்லூரில் 9 பேரும், இறந்து உள்ளனர்.

ஜெகன்மோகன் தங்கை பற்றி ஆபாச செய்தி: நடிகர் பிரபாஸ் கண்டனம்

Posted: 15 Jun 2014 10:34 PM PDT

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தங்கை ஷர்மிளாவை தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் உடன் இணைத்து இணைய தளத்தில் ஆபாச செய்தி பரப்பப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஷர்மிளா இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். ஆபாச வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மாரடைப்பில் மரணம்

Posted: 15 Jun 2014 10:25 PM PDT

ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்–மந்திரியாக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 8–ந் தேதி பதவி ஏற்றார். ஆந்திர சட்டசபையில் முதல் கூட்டம் வருகிற 19–ந் தேதி கூடுகிறது. ஐதராபாத்தில் உள்ள பழைய சட்டமன்ற கட்டிடத்தில் 5 நாட்கள் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் முதல் நாளில் புதிய

ரெயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: மத்திய மந்திரி அறிவிப்பு

Posted: 15 Jun 2014 10:18 PM PDT

கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி சதானந்த கவுடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பிரதமர் மோடி மந்திரி சபையில் ரெயில் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட் குறித்து சதானந்த கவுடா நிருபரிடம் கூறியதாவது:– ரெயில்வேயில் மத்திய அரசு புதிய கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ரெயில்வேயின் புதிய திட்டங்களுக்கு ஏற்படும் செலவில் அந்தந்த மாநில அரசுகளுக்கும் பாதி பங்கு வழங்க ஆலோசித்து

திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தில் சைக்கிளை போட்டு ரெயிலை கவிழ்க்க சதி

Posted: 15 Jun 2014 09:33 PM PDT

திருவனந்தபுரம் அருகே இடவா ரெயில் நிலையம் உள்ளது. நேற்று அதிகாலை 2.45 மணியளவில் திருவனந்தபுரம் நோக்கி சென்ற காந்திநாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த பகுதி வழியாக சென்றது. அப்போது ரெயில் தண்டவாளத்தில் ஒரு சைக்கிள் போடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார். அதற்குள் அந்த

கூடங்குளம் அணுமின் நிலைய வால்வில் பிரச்சினையா?: அணுசக்தி ஒழுங்குமுறை விளக்கம்

Posted: 15 Jun 2014 08:55 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி பராமரிப்பு பணி நடந்தது. அப்போது அணு உலையில் நீராவியை வெப்ப ஆற்றலாக மாற்றும் எந்திரத்தின் பழுதான வால்வை சரி செய்யும் பணி நடந்தது. இதில் 6 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். வால்வை மாற்றியபோது, திடீரென அதிலிருந்து சுடுநீர் வெளியேறி, ஊழியர்கள் மீது சிதறியது. இதில் அவர்களது முகம் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு வேண்டுகோள்

Posted: 15 Jun 2014 08:40 PM PDT

ஈராக்கில் உள்நாட்டு போர் நடப்பதால் அந்த நாட்டுக்கு செல்வதை தவிர்க்கும்படி இந்தியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத படையினருக்கும், அரசாங்க படையினருக்கும் இடையே கடுமையான போர் மூண்டுள்ளது. தற்போது தீவிரவாத படை சிறிது, சிறிதாக முன்னேறி சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. அவர்கள் பாக்தாத் நகரின் வடக்கு பகுதியை நோக்கி

தேர்தலுக்கு பின் முதன் முதலாக ஆந்திர சட்டசபை 19-ந் தேதி கூடுகிறது

Posted: 15 Jun 2014 08:14 PM PDT

ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ளது. மாநில பிரிவினை மற்றும் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆந்திர சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஐதராபாத்தில் உள்ள பழைய சட்டசபை கட்டிடத்தில் 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது

Posted: 15 Jun 2014 04:44 PM PDT

மத்திய பாரதீய ஜனதா தலைமையிலான அரசு அடுத்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள சில முக்கிய அறிவிப்புகள் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போதே பாரதீய ஜனதா தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

வதோதரா தொகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் செலவு ரூ.50 லட்சம்

Posted: 15 Jun 2014 04:25 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி, வதோதரா ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி வதோதரா தொகுதியில் தேர்தல்

காம வெறியனிடம் சிக்கிய 4 வயது பழங்குடியின சிறுமியின் உயிர் ஊசல்

Posted: 15 Jun 2014 03:09 PM PDT

மத்தியப்பிரதேசம் மாநிலம், கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த கூலி வேலை செய்யும் பழங்குடியின தம்பதியரின் 4 வயது மகளை தூக்கிச் சென்ற ஒரு காமுகன், அங்குள்ள டவுன் ஹால் தோட்டத்தில் அந்த சிறுமியை சீரழித்துள்ளான்

டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல்

Posted: 15 Jun 2014 02:09 PM PDT

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் அரசு அமைத்தது. ஆனால் சட்டசபையில் ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாததால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெறும் 49 நாட்களில் தனது பதவியை ராஜினாமா

ஆந்திராவில் வெயிலுக்கு 169 பேர் பலி

Posted: 15 Jun 2014 12:58 PM PDT

ஆந்திராவில் வெயில் கொளுத்துகிறது. இங்கு அதிபட்சமாக 43 டிகிரி முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருகிறது. அத்துடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

மதிக்காத மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு போலீஸ் வலை

Posted: 15 Jun 2014 12:27 PM PDT

சாப்பாடு பரிமாறும்படி கூறியதை மதிக்காத மனைவியை எரித்துக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மவட்டத்தில் உள்ள நளசொப்பரா பகுதியை சேர்ந்த நந்தகுமார் கவுதம் பர்சாலே என்பவர் கடந்த முதல் தேதி வீட்டுக்கு வந்து தனது மனைவி

தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: அருண் ஜெட்லி

Posted: 15 Jun 2014 12:20 PM PDT

ராணுவ மந்திரியாக பதவி ஏற்ற பின் 2 நாள் சுற்றுப்பயணமான நேற்று முன்தினம் காஷ்மீருக்கு சென்ற அருண் ஜெட்லி, அந்த மாநில கவர்னர் என்.என்.வோராவை சந்தித்து மாநில நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். எல்லைப் பகுதியின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை

உ.பி.யில் தொடரும் அவலம்: மரத்தில் நேற்றும் தொங்கிய இளம்பெண்ணின் பிணம்

Posted: 15 Jun 2014 12:03 PM PDT

நாட்டின் தலைநகரமாக புதுடெல்லி விளங்கி வரும் அதே வேளையில், கற்பழிப்பு சார்ந்த கொலைகளின் தலைநகரமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் திகழ்ந்து வருகிறது. அதிலும், கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்கள் மர்மமான

சட்டம்-ஒழுங்கை மம்தா காக்க தவறினால் மத்திய அரசு தலையிடும்: பா.ஜ.க. மிரட்டல்

Posted: 15 Jun 2014 10:49 AM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் அரசியல் சார்ந்த கொலைகளும், ஆள் கடத்தலும் பெருகி வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்படும் போது, கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க.வினர் மீது பழி சுமத்தப்படுவதும்

டெல்லியில் சுற்றுவழியில் செல்லுமாறு கூறிய போக்குவரத்து காவலர் கொலை

Posted: 15 Jun 2014 07:01 AM PDT

டெல்லியில் மோதி நகர் சவுக் பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிபவர் மானா ராம். நேற்று மாலை அவர் பணியிலிருந்த போது அங்கு டிரைவர் ரமா காந்த் உள்ளிட்ட மூன்று பேர் காரில் வந்தனர். அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு மாற்று பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி இதழில் மோடி ஆட்சேபகரமான புதிர்: கேரளாவில் ஒன்பது மாணவர்கள் கைது

Posted: 15 Jun 2014 06:53 AM PDT

குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பயிலும் ஒன்பது மாணவர்கள் மோடியை பற்றி தங்கள் கல்லூரி இதழில் ஆட்சேபகரமான புதிர் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டனர். இந்த புதிரில் மோடியை பற்றி அவதூறாகவும், ஆட்சேபகரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிரை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™