Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உலகக் கோப்பை கால்பந்து- முதல் சுற்றுடன் வெளியேறிய 16 அணிகள்

Posted: 27 Jun 2014 03:10 PM PDT

20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் வெளியேறி உள்ளன. பிரேசிலில் 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றுப் போட்டிகளில் ஆச்சரியங்களும் அதிர்ச்சியுமாக முடிவுகள் அமைந்தன. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், முன்னாள் சாம்பியன் இத்தாலி, ரொனால்டோவின் போர்ச்சுகல் என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் பலவும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போட்டியைவிட்டே வெளியேறிவிட்டன. வெளியேறிய 16 அணிகள்! குரூப் ஏ குரோசியா, ...

குற்றங்களும் காரணமும்

Posted: 27 Jun 2014 02:48 PM PDT

பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்கின்ற மூன்று தீவிரமான சமூகப் பிரச்னைகள் அமெரிக்க ஊடகங்களில் அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், கல்வி நிறுவனங்களில் பெண்களை மானபங்கம் செய்தல், மரண தண்டனை விதிக்கப்பட்டவரைக் கொடூரமாகக் கொல்லுதல் ஆகியவை. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்று தோன்றலாம். ஆனால், இந்த மூன்றுக்கும் பொதுவானதொரு காரணம் உள்ளது. அண்மைக்காலங்களில் கொடூரமாக நடைபெற்ற சில கொலைச் சம்பங்களைப் பார்ப்போம். (1) 2013 செப்டம்பர் 16ஆம் தேதி வாஷிங்டனில் ...

விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்

Posted: 27 Jun 2014 02:44 PM PDT

அண்மையில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இடைத்தரகர் 5 நபர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, அவர்களை அழைத்து வந்திருந்தார். போக்குவரத்து ஆய்வாளர், உரிமம் பெற வந்தவர்களிடம், சாலையில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிகளை கூறும் குறியீடுகள் நான்கைந்து கூறுங்கள் எனக் கேட்டார். கட்டில் படம் போட்டிருந்தால் அருகில் மருத்துவமனை இருக்கிறது என அர்த்தம், மாணவன் படம் போட்டிருந்தால் பள்ளிப் பகுதி என அர்த்தம் என்ற விவரத்தைக் கூட அவர்களில் ஒருவருக்குக்கூட சொல்லத் ...

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Posted: 27 Jun 2014 02:42 PM PDT

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ...

முதல்வர் சொன்ன கதைகள்

Posted: 27 Jun 2014 02:39 PM PDT

சென்னையில் சிறந்த காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நீதிக்கதைகள் வருமாறு:- ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறு வேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி அந்த வீட்டின் உரிமையாளருக்கு பரிசுப் பொருள் வழங்குவது வழக்கம். ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்கு கை ...

வீரன் வாஞ்சிநாதன்

Posted: 27 Jun 2014 02:37 PM PDT

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில் பயணம் செய்திருக்கிறீர்களா? திருநெல்வேலிக்கு சற்று முன்னால், மணியாச்சி என்றொரு ரயில் நிலையம் வரும். இப்போது உறக்கத்தின் பிடியில் அமைதியாக இருக்கும் அந்த நிலையம், சென்ற நூற்றாண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வீர வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விட்ட ஒரு ரயில் நிலையமாகத் திகழ்ந்தது. திருநெல்வேலியிலும் அந்த மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளிலும், குறிப்பாக வீரகேரளம்புதூர் போன்ற ஜமீன் தொடர்பான சில இடங்களில் ...

குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில்

Posted: 27 Jun 2014 02:32 PM PDT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள், அர்ச்சாவதாரத் திருமேனியுடன் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பக்தர்களுக்கு வரம் தந்து வருகிறார். மலைநாட்டுத் திவ்ய தேசம் போல இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்மாழ்வார் அவதரித்த வேளாளர் குலத்தில் பிறந்த ஆறுமுகக் கவுண்டர் வீரவைஷ்ணவராகி திருநாராயண ராமானுஜதாசர் எனும் திருப்பெயர் பெற்றார். வசதிகள் மிகக் குறைவான, குக்கிராமமான குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாளுக்குத் திருக்கோயில் ...

ஈவ்னிங் ஸ்நாக்ஸ்

Posted: 27 Jun 2014 02:29 PM PDT

மினி சமோசா தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து,  நறுக்கிய வெங்காயம், பூண்டு, ...

osteoporsis - என்றால் என்ன?

Posted: 27 Jun 2014 02:19 PM PDT

osteoporsis - என்றால் என்ன? எலும்புகளின் அடர்த்தி குறையும் போது அதன் வலிமையும் குறையும். உறுதியான எலும்புகள் ஒரு பஞ்சு போன்ற தன்மைக்கு வரும். எலும்புகளில் நேரும் இந்த குறைபாடு osteoporsis எனப்படும். எலும்புகளின் மேல் படியும் கால்சியம் எலும்புக்கு ஒரு சுவர் போன்ற பாதுகாப்பை தருகிறது. வயதாகும் பொது அந்த கால்சியம் சுவர் உதிர்ந்து போகிறது... osteoporsis - என்ன விளைவுகள் ஏற்படும்? முதலில் எலும்பு முறிவு ஏற்படும், உலகில் தற்போது 30% பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக ...

தடுப்பூசி ரகசியங்கள்

Posted: 27 Jun 2014 02:13 PM PDT

நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்! உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் ...

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Posted: 27 Jun 2014 02:04 PM PDT

ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; ...

முதலிரவோடு முடிந்துபோன திருமணம்!

Posted: 27 Jun 2014 02:01 PM PDT

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம். ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்! பள்ளிக்குச் சென்ற தனது மகளைக் காணவில்லை என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை ஒருவர் புகார் தந்தார். 'பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, அவள் இன்று பள்ளிக்கு வரவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்' என்று அவர் சொல்ல... உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினர். ...

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

Posted: 27 Jun 2014 01:59 PM PDT

ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்... அந்தத் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிப்பதை உணர்வீர்கள். ஆனால், பலராலும் அலட்சியப்படுத்தப்படுகிற பகுதி பாதங்கள். வெடிப்புகளோ, சுருக்கங்களோ, தடிப்புகளோ இல்லாத பாதங்கள் பார்வைக்கு மட்டும் அழகில்லை... உங்கள் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பும்கூட! ''ஆரம்பத்தில் பாதங்களைப் பராமரிக்கவென நேரம் ...

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Posted: 27 Jun 2014 01:57 PM PDT

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ...

விளையாட்டு செய்தித் துளிகள்

Posted: 27 Jun 2014 01:56 PM PDT

* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ...

மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்!

Posted: 27 Jun 2014 01:54 PM PDT

மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்! - தமிழகத்தில் புதுமை சிகிச்சை இப்போதெல்லாம் ரெண்டு வீட்டுக்கு ஒன்று என பியூட்டி பார்லர்ஸ் பெருகிவிட்டன. ஃபேஷியல், த்ரெட்டிங், ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் என ஒரு காலத்தில் சினிமா பிரபலங்கள் மட்டுமே செய்துகொண்டிருந்த அழகுப் பிரயத்தனங்களை இப்போது எல்லோரும் செய்கிறார்கள். அப்படியென்றால், சினிமா பிரபலங்கள்..? அடுத்த கட்டம் போயிருப்பார்கள்தானே? ''அந்த அடுத்த கட்டம்தான் சார் அழகு மருத்துவம். எஸ்... இப்போ 'அழகுக் கலை' பழசாகிடுச்சு. அழகு அறிவியல், ...

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி

Posted: 27 Jun 2014 01:51 PM PDT

திருப்பதி : ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய விபத்தில், 15 பேர் தீயில் கருகி பலியாகினர். டீக்கடையில் அடுப்பு பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் இந்த விபரீதம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் மாமிடிகுதுரு மண்டலத்தில் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு குழாய்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலத்துக்கு அடியில் செல்கிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில் நகரம் என்ற கிராமம் வழியாக ...

உலகச் செய்திகள்!

Posted: 27 Jun 2014 01:47 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை

Posted: 27 Jun 2014 01:43 PM PDT

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 30-ந் தேதி பி.எஸ்.எல்.வி சி-23 ராக்கெட் காலை 9.52 மணிக்கு ஏவப்படுகிறது. இதனை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் மூலம் 30-ந் தேதி வெளிநாட்டை சேர்ந்த 5 செயற்கைகோள்கள் அனுப்பப்பட உள்ளன. இந்த ராக்கெட் அன்று காலை 9.49 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. அதற்கு பதிலாக 3 நிமிடம் தாமதமாக ...

எம்எச்370 பற்றிய முதல் தமிழ் தொடர் நாவல்! ராஜேஷ்குமார் எழுதுகிறார்!

Posted: 27 Jun 2014 01:39 PM PDT

எம்எச்370 பற்றிய முதல் தமிழ் தொடர் நாவல்! பிரபல மர்ம நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதுகிறார்! சென்னை, ஜூன் 27 – தமிழகத்தைச் சேர்ந்த குமுதம் வார இதழில், பிரபல மர்ம கதை நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதும் புதிய தொடர் நாவலின் பெயர் 'வெல்வெட் குற்றங்கள்'. "சரி அதுக்கு என்ன இப்போ?" என்று கேட்பவர்கள் கீழே வரும் அடுத்த வரியைப் படித்தவுடன் பரபரப்பாகி விடுவீர்கள். காரணம், 'வெல்வெட் குற்றங்கள்' என்ற தொடர்கதையின் கதை, 3 மாதங்களுக்கு முன் மாயமான மலேசிய விமானம் பற்றியது. "பரபரப்பாகி விட்டீர்கள் ...

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 27 Jun 2014 01:38 PM PDT

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

மலேசியாவில் 7-ஆவது தமிழ் நாளிதழாக “தாய்மொழி” உதயம்

Posted: 27 Jun 2014 01:36 PM PDT

ஏற்கெனவே 6 தமிழ் தினசரி பத்திரிகைகள் மலேசியாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், தற்போது 7ஆவது பத்திரிகையாக தாய்மொழி என்ற பெயரில் மற்றொரு தமிழ் தினசரி உதயமாகியுள்ளது. எந்த ஒரு காலகட்டத்திலும் இத்தனை தமிழ்ப்பத்திரிகைகள் மலேசியாவில் வெளிவந்ததில்லை. இது மலேசிய தமிழ் வாசகர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ்மொழியை வளர்க்க நினைப்பவர்களுக்கும் இனிப்பான செய்திதான் என்றாலும், இதனால் தமிழ்ப்பத்திரிகைகளுக்கு இடையே கடுமையான வர்த்தக போட்டி தலைதூக்கியுள்ளதோடு எந்தப் பத்திரிகையை வாங்குவது ...

இந்தியாவின் 9-வது பிரதமர் நரசிம்ம ராவ் பிறந்த தினம்: ஜூன் 28- 1921

Posted: 27 Jun 2014 01:33 PM PDT

இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் இருந்தவர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 27 Jun 2014 01:30 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

போக்குவரத்து விதிகள், வாகன சட்டங்கள் மற்றும் விளக்கங்கள்

Posted: 27 Jun 2014 01:23 PM PDT

வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்! ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை? ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை. ஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்? அது ...

பெண்கள் மீது போர் எதற்கு?

Posted: 27 Jun 2014 11:55 AM PDT

உலகெங்கிலும் போர்களின் கொடூரக் கரங்களுக்குப் பெண்களும் சிறுவர்களும் இலக்காவது அதிகரித்துக் கொண்டிருப்பது நவீன நாகரிகத்தின் அவலம். இதற்கு எதிராகச் சமீபத்தில் லண்டனில் சர்வதேச மாநாடு ஒன்று நடத்தப்பட்டிருப்பது சற்று நம்பிக்கையைக் கூட்டுகிறது. போர்கள் இல்லாத உலகம் என்பது வெறுங்கனவாகவே இருந்துவருகிறது. போர்கள் என்பவை தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்ட பட்சத்தில், போர்க்களத்திலே எப்படித் தாக்குதல் நடத்த வேண்டும், போரிலிருந்து யாருக்கு விலக்குகள் தர வேண்டும், போர்க் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், போருக்குப் ...

தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Posted: 27 Jun 2014 11:40 AM PDT

பெயர்: சையது சர்தார் சொந்த ஊர்: திருவண்ணாமலை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தமிழ் வலைகளின் தேடல் மூலம் பொழுதுபோக்கு: கணிணி, பூப்பந்து, நல்ல புத்தகங்கள் தொழில்: பாதுகாப்பு சேவையில் மேலும் என்னைப் பற்றி: நல்ல தமிழ் வலையை நீண்ட நாட்களாக தேடி வந்தேன். கிடைத்த சிலவற்றில் சேர மனம் ஒவ்வாது போனது. இன்று வேறு எதையோ தேட ஈகரை அறிமுகமானது. 30 வருடங்களுக்கு மேலாக பிற மாநிலங்களில் வசித்து வந்தாலும் இருந்த இடங்களில் எல்லாம் தமிழ் மன்றம் தோற்றுவித்து தமிழ் உள்ளங்களை இணைத்து, ஒருசேர தமிழ் விழாக்கள், ...

ஆன்லைனில் 37000GB இலவச cloud storage!

Posted: 27 Jun 2014 11:16 AM PDT

ஆன்லைனில் 37000GB இலவச cloud storage கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் கிடைக்கிறது. ஆனால் அது சீன மொழித்தளம், எனவே அனைத்துமே சீன மொழியில் உள்ளது. http://yunpan.360.cn எப்படி 37000GB இலவச cloud storage கிடைக்கும் என்பதைக் கூறுகிறேன்! 1. முதலில் நீங்கள் இங்கு உறுப்பினராக பதிவு செய்ததும் 360 GB இலவச cloud storage கிடைக்கிறது. 2. பதிவு செய்ததும் அந்தத் தளத்தின் desktop client -ஐ நம் கணினியில் பதிந்து லாகின் செய்ததும் 10 TB தருகிறார்கள். 3. அடுத்து உங்கள் அலைபேசிக்கான yunpan ...

சிறு நனி -சிறு கதை தொகுப்பு மின்னூல் வடிவில்.

Posted: 27 Jun 2014 11:01 AM PDT

சிறு நனி -சிறு கதை தொகுப்பு மின்னூல் வடிவில். http://www.mediafire.com/download/32u3taa1unqlkek/sirunani-short-stories-A4%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 27 Jun 2014 11:00 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

ஒழுக்கத்தின் உயர்வு

Posted: 27 Jun 2014 10:45 AM PDT

ஒழுக்கம் என்பது உரமாகும் - நம் அறிவுக்கு அதுவே அரணாகும் விழுப்பம் தந்து வாழ்க்கைக்கே - நல்ல ஏற்றம் நல்கிடும் வரமாகும் ஒழுக்கம் இல்லா வாழ்வினிலே - என்றும் உயர்வுக்கு இடமே இருக்காது இலக்கு இல்லாப் பாதையாகும் - அது துடுப்பு இல்லாத் தோணியாகும் ஒழுக்கம் பேணா அறிவினால் - பல வழுக்கள் வாழ்வில் சேர்ந்திடுமே இழிந்த பிறப்பாய் மாறிடுமே - பிறர் பழிக்கும் படியாய் ஆகிடுமே ஒழுக்கம் என்னும் கவசத்தை - எந்தப் பொழுதும் கையிற் கொள்வாயே உலகம் உன்னை வாழ்த்திடுமே - ஓர் உத்தமன் என்றே வணங்கிடுமே!

ஆபுத்திரன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 27 Jun 2014 10:37 AM PDT

உதயணன் -ஆபுத்திரன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/j1klmcouvb87wnw/Aaputhiran-Udhayanan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

பிறந்த நாள் வாழ்த்துக்கள் --அன்பு சிவாவிற்கு

Posted: 27 Jun 2014 10:31 AM PDT



அன்பு சிவாவிற்கு
அன்புடன் நான் அனுப்பும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நலமும் வளமும் என்றும் உம்முடன் இருக்க
இறைவன் ராகவேந்திரர் அருள்வாராக .

ரமணியன்

பலே பாலுவும் பறக்கும் டிராயரும் .

Posted: 27 Jun 2014 10:23 AM PDT

பலே பாலுவும் பறக்கும் டிராயரும் . பூந்தளிர் காமிக்ஸ் -பலே பாலுவும் பறக்கும் டிராயரும் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/4l9nhvo92jugved/03082013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 27 Jun 2014 10:15 AM PDT

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! ஒரே மாதிரி உருவம் கொண்டவர்கள் எழு பேர் உள்ளனர் என்பது பொய் ! என்னவள் போல உருவம் கொண்ட வேறு ஒருவரும் உலகில் இல்லை ! அவள் போல அவள் மட்டுமே ! --------------------------------- படித்த படிப்பு மறந்து விடுகின்றன ! பாவையை பார்த்த பார்வை மறக்க முடியவில்லை ! ----------------------------------- சிக்கி முக்கி கற்கள் உரசி தீயை கண்டுபிடித்தான் ஆதி மனிதன் ! அவள் பார்வை என் பார்வை உரசி காதல் தீ கண்டுபிடித்தோம் ! -------------------------------------- ஒரே ...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 27 Jun 2014 09:54 AM PDT

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! உயிர் காக்கும் உன்னத மனிதர்கள் மருத்துவர்கள் ! நேரம் காலம் பார்க்காமல் நேயப்பணி புரிவோர் மருத்துவர்கள் ! விடுதலைப் போராட்டம் வித்திட்ட முதல் போர் வேலூர் சிப்பாய் கலகம் ! வீரம் உணர்த்தியது வெள்ளையனுக்கு வேலூர் சிப்பாய் கலகம் ! . பெருகப் பெருக பெருகுது பிரச்சனை மக்கள் தொகை ! மழலை ஒன்று மகத்துவம் இன்று ஒன்றே நனி நன்று ! திருடு போகாத சொத்து கொடுத்தாலும் குறையாதது கல்வி ! உயிருள்ளவரை உடன் இருக்கும் மூச்சுள்ளவரை ...

முருகன் 108 போற்றி

Posted: 27 Jun 2014 09:22 AM PDT

- 1. ஓம் ஆறுமுகனே போற்றி 2. ஓம் ஆண்டியே போற்றி 3. ஓம் அரன்மகனே போற்றி 4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி 5. ஓம் அழகா போற்றி 6. ஓம் அபயா போற்றி 7. ஓம் ஆதிமூலமே போற்றி 8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி 9. ஓம் இறைவனே போற்றி 10. ஓம் இளையவனே போற்றி 11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி 12. ஓம் இடர் களைவோனே போற்றி 13. ஓம் ஈசன் மைந்தா போற்றி 14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி 15. ஓம் உமையவள் மகனே போற்றி 16. ஓம் உலக நாயகனே போற்றி 17. ஓம் ஐயனே போற்றி 88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி 19. ஓம் ஐயப்பன் தம்பியே ...

அரிய புகைப்படங்கள்

Posted: 27 Jun 2014 08:35 AM PDT

[img][/img][img] A 1910 postcard image of a Sri Lankan Tamil girl [/img] காமராஜ்-கருணாநிதி [img]URL=http://img199.imageshack.us/i/29652969302129652985296.jpg/][/URL][/img][img] மரத்தின் நிழலின் ஊடாக கங்கன கிரகணம் (01- 15-2010 இடம் - கன்னியாகுமரி) URL=http://img7.imageshack.us/i/29862994302129863018299.jpg/][/URL][/img]பல்பொருள் அங்காடி -1883

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Posted: 27 Jun 2014 08:34 AM PDT

இப்போது இந்தியா மட்டுமல்லாது, தற்போது வெளிநாட்டு மக்களிடையேயும் யோகாசனம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 49 வயது பெண் ஒருவர் 20 நிமிடத்தில் 310 விதமான யோகாசனங்கள் செய்து உலக சாதனை புரிந்துள்ளார். அவர் டி.ஞானவாணி. அவருடைய உலக சாதனை குறித்துக் கேட்டோம்: "" எனக்கு 500 விதமான யோகாசனங்கள் தெரியும். எனது தந்தை தியாகராஜன் வீட்டில் யோகாசனம் செய்வது வழக்கம். அதைப் பார்த்து எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும்போது 18வயதில் மதுரை சரவணன் ...

யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .

Posted: 27 Jun 2014 08:31 AM PDT

யோகம் என்பது வேறு: யோகாசனப் பயிற்சிகள் வேறு. யோகாசனப் பயிற்சிகள் யோகத்துக்கு நம்மை இட்டுச் செல்ல அடிப்படையான முதல் படியாகும். இந்த யோகாசனத்திலும், மனமும், உடலும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தாலே நாம் சரியாகச் செய்ய முடியும். பெரும்பாலும் யோகா என்றாலே இந்த ஆசனங்களைக் குறித்துத் தான் சொல்கின்றனர். உண்மையில் இது யோகம் அல்ல. வெறும் ஆசனப் பயிற்சிகளே. உடல் பயிற்சியை வேகமாகச் செய்வோம். இதில் ஆசனப் பயிற்சிகளை மெதுவாகச் செய்ய வேண்டும். அதோடு ஒவ்வொரு உடல்கேட்டிற்கும் அதைக் குறைக்க, ஆரம்ப நிலை எனில் ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 27 Jun 2014 05:37 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே ...

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Posted: 27 Jun 2014 04:06 AM PDT

அன்பர்கள் அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்கள் ! எனது பெயர் எஸ்.எஸ்.கந்தசாமி நான் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாநகரில் இருக்கும் காமராஜ் கல்லூரியில் இயற்பியல் துறையில் 33 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு 2001 ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு கணினியோடு இணைந்து வாழ்வு நடாத்துகிறேன் . எனது பொழுது போக்கு தமிழ்த் திரைப் படங்கள் தான் ! நமது குழாயில் '' KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI '' என்ற சேனலில் சுமார் 1500 பழைய தமிழ் திரைப் பட வீடியோப் பாடல்களைத் தரவேற்றி இருக்கிறேன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™