Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Posted: 18 Jun 2014 06:44 PM PDT

இன்று தமிழ்...தமிழ் என்று பலர் (நம்மையும் சேர்த்து) முழக்கமிடுவதைக் காண்கிறோம். தமிழ் மொழி என்பது தெய்வமொழி. மற்ற எந்த ஒரு மொழிக்கும் இந்த அடைமொழி கிடையாது. சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ். தனி ஒரு மனிதன் மாறும் போது சமுதாயமும் மாறுகிறது. பெரும் பான்மையான தனி மனிதர்களின் எண்ணமே நம் எதிரே சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. நாம் சமுதாயம் மோசமாகிவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் நாம்தான் மோசமாகி விட்டோம். தமிழ் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 18 Jun 2014 06:15 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5

Posted: 18 Jun 2014 06:11 PM PDT

தொடரைப் படிக்காதவர்கள் படிக்க முதலில் இங்கே சொடுக்கவும் சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-1 2.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-2 3.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-3 4.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-4 காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டாள் என்ற உணர்வில் என் மனதில் இசைவெள்ளம் புயலாக பொங்கியது வீரியமாய் மண்ணில் புதிதாய் முளைக்கும் வித்துப்போல் கிளையை தாவி பிடிக்க படரும் கொடி போல அவளும் என்னைத்தொடர்ந்தாள் நானும் நகர்ந்து கொண்டே இருந்தேன் அந்தியில் ஆதவன் வீடு புக கடலோரம் கடற்கரை மண்ணிலே அலையோடு ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 18 Jun 2014 06:10 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு

Posted: 18 Jun 2014 06:01 PM PDT

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஐந்து கம்பெனிகளுக்கு, 'சீல்' வைத்ததை எதிர்த்தும், நிறுவனங்களை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியானது. நேரத்தை வீணடித்ததாக கூறி, ஒவ்வொரு கம்பெனிக்கும், தலா, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னையில் உள்ள மெடோ அக்ரோ பார்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டி ...

வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள்

Posted: 18 Jun 2014 05:55 PM PDT

பொள்ளாச்சியில் இரண்டு மாணவிகள் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவிகள் தெருவில் இருந்து அழைத்துச் செல்லப்படவில்லை. வழக்கமாகத் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, பல கோடிகளைக் கொட்டி கட்டப்பட்டிருக்கும் உண்டு உறைவிடப் பள்ளி விடுதி கட்டடங்களை வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலமாகத் திறந்துவைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. புதிதாக ஹாஸ்டல்கள் திறப்பது இருக்கட்டும்... ...

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Posted: 18 Jun 2014 05:48 PM PDT

"இடுப்பில் டயர் போட்டுவிட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதைபோட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும். இதுதான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள். பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுதான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப்போகிறது. தொப்பை போடப்போகிறது. இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப்போய் வரவழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் "சப்ஜடேனியஸ்' ...

சிறுகுடற் புழுக்கள்

Posted: 18 Jun 2014 05:39 PM PDT

உணவின் மூலம் உடலுக்கு சென்று பல்கிப் பெருகி உடலை பாழ்படுத்தும் சிறுகுடற் புழுக்களும் உண்டு. இவை உணவின் மூலம் உடலுக்குச் செல்வதோடு, சில சமயங்களில் சருமத்தின் மூலமும், நீரின் மூலமும் செல்கிறது. இவ்வாறு உடலுக்குச் சென்று உடலில் குடித்தனம் நடத்தும் புழுக்கள் நாற்பது வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சிறுகுடற் புழு. Ascaris lumbri coides என்னும் சிறுகுடற்புழு எல்லா நாட்டு மக்களின் உடலிலும் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், சீனா போன்ற நாடுகளிலும், ...

ஆசிய பல்கலைகழகங்களின் தரவரிசையில் 10 இந்திய பல்கலைகழகங்கள்!

Posted: 18 Jun 2014 05:37 PM PDT

புதுடில்லி: இந்தியாவின் பஞ்சாப் பல்கலை கழகம் ஆசியாவின் சிறந்த பல்கலைகழகங்களின் வரிசையில் 32-வது இடத்தை பிடித்துள்ளது.ஆசிய நாடுகளின் பல்கலை கழகங்களின் 2014-ம் ஆண்டு தரவரிசைப்பட்டியல் குறித்த ஆய்வு ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. இதில் ஆசியாவில் உள்ள 100 பல்கலைகழகங்களில் இந்தியாவை சேர்ந்த 10 பல்கலைகழகங்கள் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் பல்கலைகழகங்களை பொறுத்த வரையில் அதன் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது. சீனா முந்தைய ஆண்டைய காட்டிலும் தன்னுடைய ரேங்கிங்கை அதி்கரித்துள்ளது. ...

குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

Posted: 18 Jun 2014 05:32 PM PDT

குவைத் மிகச்சிறிய மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று. எண்ணெய் (பெட்ரோலியம்) வளத்தையே ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு. இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் அமைந்துள்ளன. அரபு ஆட்சி மொழியாக விளங்குகிறது. குவைத்து 1961-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1867 - மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான். * 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ...

வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

Posted: 18 Jun 2014 05:30 PM PDT

இயற்கை வைத்தியம் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தப் பகுதியில் அறிந்து வருகிறோம். ஏற்கனவே மிளகு, மஞ்சள் பால் பற்றி அறிந்தோம். தற்போது வெள்ளைப் பூண்டு பற்றி அறிவோம். வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம். ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும். வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து ...

நல்ல நினைவுகள் விரைவில் மங்குவதில்லை

Posted: 18 Jun 2014 05:27 PM PDT

நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மற்ந்து விடுகிறோம். இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள். மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர்கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் ...

கரப்பான் நோய்

Posted: 18 Jun 2014 05:18 PM PDT

இன்றைய மக்கள் தொகையில் முப்பது சதவீதத்தினர் ஏதேனும் ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய தோல் நோய்களுள் ஒன்றானதும், அதிக மக்களைத் தாக்குவதானதுமான கரப்பான் நோய் பற்றி தெரிந்து கொள்வோம். கரப்பான் நோய்க்கான காரணங்கள் கரப்பான் ஒவ்வாமையால் உருவாவதாகும். இதற்கான காரணத்தைப் பார்த்தால், சுகாதாரமின்மை, உணவு முறை, நோய்க் கிருமிகள் என கூறலாம். பலருக்கு குழந்தைப் பருவம் முதலே இந்த கரப்பான் நோய் இருந்து வருகிறது. இந்நோய் பெற்றோருக்கு இருப்பின் பரம்பரையாக ...

எயிட்ஸ் நோய் முறையாக கண்டறியப்பட்ட தினம்: ஜூன் 18- 1981

Posted: 18 Jun 2014 05:09 PM PDT

கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர். இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:- * 1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். * 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன. * 1812 - 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது. * 1815 - வாட்டர்லூவில் ...

இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது

Posted: 18 Jun 2014 01:04 PM PDT

உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்துடன் நிலையான உணவு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும் நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உலக உணவு தினமான அக்டோபர் 16-ந் தேதி, 'சர்வதேச விருது' வழங்கி அமெரிக்காவில் இயங்கி வரும் உலக உணவு பரிசு நிறுவனம் கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கோதுமை உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்திய இந்தியாவை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உலக உணவு விருதை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவரும், ...

விளையாட்டு செய்தித் துளிகள்

Posted: 18 Jun 2014 01:00 PM PDT

* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ...

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை)

Posted: 18 Jun 2014 12:54 PM PDT

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) 100/70 பணமழை கொட்டும்! எல்லோரிடமும் நட்புடன் பழகும் மேஷ ராசி அன்பர்களே! இது வரை ராகு, கேதுவும் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ராகு ராசிக்கு 7ல் துலாமில் இருந்து இன்னலைத் தந்து கொண்டிருந்தார். இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். தரம் தாழ்ந்தவர்களோடு நட்பு கொள்ள வைத்து செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6-ம் இடமான கன்னிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம். இதனால் இடர்பாடு அனைத்தும் நீங்கி ...

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Posted: 18 Jun 2014 12:37 PM PDT

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ...

சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு!

Posted: 18 Jun 2014 12:34 PM PDT

முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட, மாநில கவர்னர்களை மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இதனால், 'இனியும் அந்தப்பதவியில் தொடர்ந்தால் ஆபத்து தான்!' என கருதி, உ.பி., கவர்னர் ஜோஷி, நேற்று, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில் கவர்னர்களாக இருப்பவர்களை மாற்றம் ...

பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Posted: 18 Jun 2014 12:21 PM PDT

ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் மேலும் 2 நகரங்களைக் கைப்பற்றி விட்டனர். அவர்கள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என தெரியவந்துள்ளது. ஈராக் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். ஈராக்கிலும், சிரியாவிலும் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2வது பெரிய ...

இராக்கில் அமெரிக்கா செய்தது என்ன?

Posted: 18 Jun 2014 12:20 PM PDT

அமெரிக்காவின் இராக் நடவடிக்கைகள்குறித்த ரகசியங்களை வெளியிட்டவர் மனம்திறக்கிறார்! இராக்கில் அமெரிக்கா நடத்திய போர்குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவதென்று 2010-ல் நான் தீர்மானித்தேன். நாட்டின் மீது உள்ள பற்றினாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகுறித்த உணர்வாலும்தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன். அதற்காக 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறேன். மார்ச் 2010-ல் இராக்கில் நடைபெற்ற தேர்தல்களைக் குறித்த செய்திகளை நீங்கள் தொடர்ந்து படித்திருந் தீர்களானால் ஒரு விஷயம் உங்களுக்குத் ...

என் எண்ணங்கள் - சிவா

Posted: 18 Jun 2014 12:05 PM PDT

என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!

என் 6+0+0+6 - பிஜிராமன்

Posted: 18 Jun 2014 11:57 AM PDT

இக்கரை எனக்களித்த - நல் அக்கறை என் சொத்தாம் முக்கிய தருணங்களில் - நான் ஒதுங்குவது இக்கரையாம் இக்கரையினில் நான் பெற்ற - பல முக்கிய முகங்களுக்கு - நான் இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன் யினியவன் என் நெடுநாள் நண்பர் இவரே  - என்னை முழுதாக தெரிந்தவர் இவரே - என் வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில் இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும் அசுரன் சார் பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை எளியாரின்  நன்மைக்கு  உதவிடுவார் -நல் அமைப்புகளை தான் துவங்கி -  படிக்கும் பிள்ளைகள் ...

மின்வெட்டுப் பிரச்சினையில் முதல்வர் பொதுவாக்கெடுப்புக்கு தயாரா?- ராமதாஸ்

Posted: 18 Jun 2014 11:42 AM PDT

தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக்கி விட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா கருதுவாரேயானால், அதையே மக்கள் மன்றத்தில் முன் வைத்து பொது வாக்கெடுப்பு நடத்தவும், அதில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்ளவும் தயாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், ஜூன் 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு ...

அழகிய குளிரும் அழகுதான்...

Posted: 18 Jun 2014 11:31 AM PDT

என்னங்க இது?...

மணி 11க்கு மேல ஆகுது...வெயில் நல்லாத்தான் அடிக்குது...ஆனால் சூடே இல்லை...மாறாக குளிர்கிறது...
மழை சுடுகின்றதே வெயில் குளிர்கின்றதேன்னு பழனிபாரதி அண்ணன் சொன்னது பெங்களூரு பத்திதானா?...

காலை 6 மணிக்கு பெங்களூரு மண்ணைத் தொட்டது முதல் குளிர்ச்சிதான் உள்ளேயும் வெளியேயும்...

இன்னும் சிலநாள்கள் பெங்களூரு மாநகரம்தான் எங்கள் மனமைதானம்...

சும்மா சொல்லக்கூடாது...அழகிய குளிரும் அழகுதான்...

வாடகைதாரரா நீங்கள்..?

Posted: 18 Jun 2014 11:23 AM PDT

சென்னை மாதிரியான நகரங்களில் சொந்த வீட்டில் வசிப்பவர்களைக் காட்டிலும் வாடகை வீட்டுவாசிகள்தான் மிக அதிகம். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நீண்ட காலமாகவே முரண்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றி வாரப் பத்திரிகைகளில் ஜோக்குகள் வரும் அளவிற்கு அந்த முரண்பாடு மிகப் பிரபலம். இருவருக்கும் சட்டப்படியான தெளிவு இல்லாதது இந்த முரண்பாட்டுக்கு முக்கியமான காரணம் எனலாம். கவனிக்க வேண்டிய சில அம்சஙகளை இருவரும் பின்பற்றினால் பிரச்சினை வராமல் இருக்கும். முதலில் ஒப்பந்தப் பத்திரம் ...

நான்தான் பாலா - திரை விமர்சனம்

Posted: 18 Jun 2014 11:18 AM PDT

யாருக்கும் அணு அளவும் கேடு நினைக்காத ஒருவன் வன்முறைச் சூழலில் தன்னை அறியாமல் மாட்டிக்கொள்வதுதான் 'நான்தான் பாலா'. பெருமாள் கோயில் குருக்கள் பாலா (விவேக்) கும்பகோணத்தில் உள்ள அக்கிரகாரம் ஒன்றில் வசிக்கிறான். பாலாவுக்குப் பெற்றோரும் பெருமாளுமே உலகம். அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதை பாக்கியமாக எண்ணி வாழ்கிறான். எப்போதோ ஒருமுறை பெருமாள் கோயில் நகை திருட்டுப்போன குற்றத்திற்காக பாலாவின் தந்தை மீது வழக்கு ஒன்று நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதிலிருந்து தந்தையை விடுவிக்க வேண்டும் என்பது பாலாவின் ...

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Posted: 18 Jun 2014 11:17 AM PDT

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள், . கோர்க்கலாம்  .உதாரணமாக ,தங்க காசு , மாங்கா போன்றவை .  புகைப்படத்துடன் அனுப்பினால் நன்றாக இருக்கும் . நீங்கள் எனக்கு பதில் அனுபுவிர்கள் என்ற நம்பிக்கையில் கேள்வி கேட்டுளேன் . மறவாத பதில் அளிக்கவும் . நன்றி .

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 18 Jun 2014 11:10 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

செசெ வின் முடியும்-நம்பி முடியும்

Posted: 18 Jun 2014 10:56 AM PDT

முடியும்                 -நம்பி முடியும் முடியும் என்றால் விடியும்         வேள்விகள் விடியும் முயன்றாய் என்றால் படியும்         வேதனைகள் படியும் உடையும் பாறைகள்         உழியாலே அடையும் பயணங்கள்         வழி பகுத்தாலே எதை எதையோ         நீ எண்ணாதே எதையோ எண்ணி         பயணத்தை முடிக்காதே சிதைந்த         மனதை சீராக்கு சிகரத்தை விரைந்து        நீ நோக்கு                                    செசெ      (selvamoorthy8390.blogspot.com)

பகத் சிங்கின் இறுதி நாள்

Posted: 18 Jun 2014 08:47 AM PDT

புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்! லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள். பிறகுதான், சிறைச்சாலையின் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (39)

Posted: 18 Jun 2014 08:28 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 18 Jun 2014 07:45 AM PDT

வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி ! காட்டுமிராண்டி காலத்தில் கூட சிசுக்கொலை இல்லை ! கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை ! கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் ! கொன்ற உயிரைத் திரும்பத் தர முடியுமா ? கருவிலேயே பெண் என்று தெரிந்திட்டால் உடன் ! கருவிலேயே கதைமுடிக்கும் மடமைக்கு முடிவு கட்டுக ! பிறந்த குழந்தை பெண் என்றால் இரக்கமின்றி ! பச்சிளம் குழந்தை வாயில் நெல்லிட்டு கொல்லுதல் முறையோ ? கருத்தம்மா திரைப்படத்தில் இயக்குனர் இமயம் ! கருத்துச் சொன்னதை ...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 18 Jun 2014 07:45 AM PDT

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! வண்ணம் மாறவில்லை தீயிலிட்டபோதும் வெண்சங்கு ! ஒளி தந்தது உருகியபோதும் மெழுகு ! வாசம் தந்தது தேய்ந்தபோதும் சந்தனம் ! சீட்டு எடுத்தது சிறையிட்டபோதும் சோதிடக்கிளி ! இறந்த கன்று முன் வைத்தபோதும் பால் தரும் பசு ! அக்கரை சேர்த்தது தண்ணீரில் மிதந்தபோதும் படகு ! மதுவிற்ற தனியாரிடம் கல்வி கல்வி கற்பித்த அரசிடம் மது துன்பத்தில் மக்கள் ! எட்டாக் கனியானது ஏழைகளுக்கு உயர்கல்வி ! உண்ணும் உணவு கேள்விக்குறியானது ...

நான் உங்களில் ஒருவன்

Posted: 18 Jun 2014 06:33 AM PDT

பெயர்: த. தர்மேந்திரா
சொந்த ஊர்: கொழும்பு
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணைய தேடல்
பொழுதுபோக்கு: வாசிப்பு
தொழில்: ஊடகவியலாளர்
மேலும் என்னைப் பற்றி: என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கின்றாய்?

வாழ்வில் வெற்றி பெற முத்தான வழிகள்

Posted: 18 Jun 2014 06:05 AM PDT

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது. 'வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்' என பல புத்தகங்களும், 'தோல்வியை கண்டு துவளாதீர்கள்' என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், 'இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி' என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது. அதுவும் இந்த வேறுபாடு ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 18 Jun 2014 04:37 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே ...

பி. கக்கன்

Posted: 18 Jun 2014 03:22 AM PDT

ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981 கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர் கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது ...

ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?

Posted: 18 Jun 2014 03:06 AM PDT

வணக்கம் நண்பர்களே...! அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம். என்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் ...

ப்ரோஃபைல் படம் எப்படி மாத்துவது

Posted: 18 Jun 2014 12:06 AM PDT

எனது ப்ரோஃபைல் படம் எப்படி மாத்துவது என்பதை சொல்லுக

ஆஸி நாட்டில் வினோதமான நண்டு ஓட்டப் போட்டி

Posted: 18 Jun 2014 12:01 AM PDT

ஆஸ்திரேலியா நாட்டில் வருடாந்தம் இடம்பெற்று வருகின்ற வினோதமான விளையாட்டுப் போட்டிதான் நண்டுகளின் ஓட்டப் பந்தயம். தொடர்ந்து வாசிக்க http://thainaadu.com/read.php?nid=1403024071


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™