Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மேற்கு வங்கத்தில் பழுக்காத லிச்சி பழங்கள் சாப்பிட்ட 8 குழந்தைகள் மரணம்

Posted: 12 Jun 2014 12:24 AM PDT

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் கடந்த 8ஆம் தேதியன்று குறைந்தது எட்டு குழந்தைகள் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோயின. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது 3 முதல் 5 வயது கொண்ட இந்தக் குழந்தைகள் அனைவரும் கலியாசக் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அங்கு இந்த வருடம் லிச்சி

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 11 Jun 2014 11:53 PM PDT

இந்தியாவில் நூற்றுக் கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.ஜி.ஓ. எனப்படும் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வெளி நாடுகளில் இருந்து லட்சம், லட்சமாக பணம் பெறுகின்றன. பொது மக்களுக்கு சேவை செய்வதற்கு பயன்படுத்துவதாக கூறி வரி விலக்குடன் இந்த பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செலவு செய்கின்றன.

சந்திரபாபு நாயுடு மந்திரி சபையில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு

Posted: 11 Jun 2014 11:29 PM PDT

புதிய ஆந்திர முதல்– மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 8–ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்–மந்திரிகள் உள்பட 18 மந்திரிகள் பதவி ஏற்றனர். புதிய மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. இதன்படி முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நீதி நிர்வாகம், மின்சாரம், தொழில் வர்த்தகம், அரசு துறை நிர்வாகம் போன்ற இலாகாவை கவனிப்பார். துணை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ள கே.ஏ.கிருஷ்ண மூர்த்திக்கு வருவாய் துறையும், இன்னொரு துணை முதல்வர் சின்ன ராஜப்பாவுக்கு உள்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான எனமல

பியாஸ் ஆற்று வெள்ளத்தில் மாணவர்கள் பலி: உடலை தேடும் பணி தீவிரம்

Posted: 11 Jun 2014 11:08 PM PDT

இமாச்சலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற ஐதராபாத் தனியார் என்ஜினீயரிங் மாணவ –மாணவிகள் 24 பேர் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 2 மாணவர்கள், 3 மாணவிகள் பிணங்கள் மீட்கப்பட்டது. 4 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு மாணவன் உடல் மீட்கப்பட்டது. மேலும் 18 மாணவ– மாணவிகள், ஒரு சுற்றுலா வழிகாட்டி வெள்ளத்தில் சிக்கி மாயமாகி விட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகி விட்டதால் அவர்கள் உயிருடன் இல்லை என்பது உறுதியாகி விட்டது. உடல்களையாவது மீட்டு கொடுங்கள் என உறவினர்கள் கெஞ்சி கதறுவதால் உடல்களை மீட்க ராணுவ உதவியை தெலுங்கானா அரசு கோரி உள்ளது. இதன்படி ராணுவ வீரர்கள் தேடும் பணியில் இறங்கி உள்ளனர்.

பாஜக புதிய தலைவர் இந்த மாத இறுதியில் தேர்வு

Posted: 11 Jun 2014 10:53 PM PDT

பா.ஜ.க. தேசியத் தலைவராக உள்ள ராஜ்நாத்சிங், தற்போது மத்திய மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். இதனால் பா.ஜ.க.வுக்கு புதிய தேசியத் தலைவரை தேர்ந்து எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க. பொதுச் செயலாளர்களாக உள்ள அமித்ஷா, ஜகத்பிரகாஷ் நட்டா ஆகிய இருவரில் ஒருவர் புதிய பா.ஜ.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள்

கல் குவாரியை திறக்க ரூ.17 லட்சம் லஞ்சம்: போலீஸ் சூப்பிரண்டு பதவி நீக்கம்

Posted: 11 Jun 2014 10:51 PM PDT

கேரள மாநிலம் பத்தனம்திட்டா போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் ராகுல் ஆர்.நாயர் (வயது 28). கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் அவர் போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்றார். முதலில் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக

புதிய தலைநகர் அமைக்க மக்களிடம் நிதி திரட்டும் ஆந்திர அரசு

Posted: 11 Jun 2014 10:29 PM PDT

புதிய ஆந்திராவின் தலைநகர் குண்டூர்– விஜயவாடா இடையே அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மாநிலத்தின் மையப் பகுதியில் தலைநகர் அமைக்கப்படுவதன் மூலம் சுற்று வட்டார மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என அவர் கருதுகிறார். புதிய தலைநகரில் அனைத்து துறை அலுவலகமும் செயல்படும் என்றும் ஐதராபாத்தை விட அழகுற அமையும் என்றும் கூறிய சந்திரபாபு நாயுடு புதிய தலைநகர் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி தரும்படி மத்திய அரசை கேட்டுள்ளார். இந்த நிலையில் புதிய தலைநகர் உருவாக்க பொது மக்களிடமும் நிதி திரட்டுகிறார். இதற்காக முதல்–அமைச்சர் நிவாரண நிதி கணக்கில் ''புதிய தலைநகர் முன்னேற்ற நிதி'' என்ற பெயரில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிரக பயணம்: 70 சதவீத தூரத்தை கடந்தது மங்கள்யான்

Posted: 11 Jun 2014 10:22 PM PDT

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5–ந்தேதி விண்ணில் செலுத்தினார்கள். கடந்த 7 மாதங்களாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பூமியில் இருந்து செவ்வாய் அருகில் மங்கள்யான் செல்வதற்கான மொத்த தூரம் 680 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாகும். இதில் தற்போது 460 மில்லியன் கிலோ மீடடர் தூரத்தை அதாவது 70 சதவீத தூரத்தை மங்கள்யான் கடந்து விட்டது.

உத்தரப்பிரதேசம்: காவல்நிலையத்தில் இளம்பெண் கற்பழிப்பு

Posted: 11 Jun 2014 09:34 PM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் அடிக்கடி கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பதான் மாவட்டத்தில் தலித் சகோதரிகள் 2 பேர் கும்பலால் கற்பழித்து, கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது

பென்சன் திட்டத்துக்கு ரூ.5,000 கோடி: சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று முடிவு

Posted: 11 Jun 2014 09:32 PM PDT

தெலுங்கானா பிரிவினையைத் தொடர்ந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதலாவது முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடு கடந்த 8–ந் தேதி பதவி ஏற்றார். அவர் பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் உத்தரவுகளில் கையெழுத்திட்டார். சந்திர பாபு நாயுடு அறிவித்த வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம் ரூ.5,000 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இன்று மாலை ஐதராபாத்தில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திர மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில்

பெங்களூரில் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை

Posted: 11 Jun 2014 05:24 PM PDT

பெங்களூர் பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மகள் வினிதா(வயது 18). சம்பவத்தன்று பெங்களூரில் நடந்த மருத்துவக்கல்வி படிப்புக்கான கலந்தாய்வு கூட்டத்தில், வினிதா தனது தந்தை நந்தகுமாருடன் வந்து கலந்து கொண்டார். அப்போது வினிதாவுக்கு மருத்துவக்கல்வி பயில வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் வினிதா மனவேதனை அடைந்தார். அவருக்கு

மராட்டியம், அசாம் மாநில முதல்–மந்திரிகள் மாற்றம்: ராகுல் காந்தி முடிவு

Posted: 11 Jun 2014 04:57 PM PDT

பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் மராட்டியம், அசாம் மாநில முதல்–மந்திரிகளை மாற்ற ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை தழுவியது. இது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தேர்தல் தோல்வி பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரசின் உயர் மட்டக்குழுவை

எம்.பி.யின் கார், மந்திரி உமா பாரதியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியது: 3 பேர் காயம்

Posted: 11 Jun 2014 04:42 PM PDT

டெல்லி பாராளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மாவின் கார் மத்திய அமைச்சர் உமா பாரதியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு போலீசார் உள்பட மூவர் காயமடைந்தனர். வாகனங்கள் இரண்டும் விஜய் சவுக்கில் மோதிக்கொண்ட போது எம்.பி.யோ, மந்திரியோ அந்த வாகனத்தில் இல்லை. எம்.பி.யின் டிரைவரான நவீன்

ஊழல் மிகுந்த இந்தியாவை திறமைமிகுந்த இந்தியா என மாற்றுவோம்: மோடி பேச்சு

Posted: 11 Jun 2014 03:16 PM PDT

நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதவ் கன்னிப்பேச்சை துவக்கி பேசினார். அப்போது இந்தியாவை ஊழல் மிகுந்த நாடு என்று அழைப்பதை மாற்றி திறமை மிகுந்த இந்தியா என அழைக்க வைப்பதே தனது லட்சியம் என்று கூறினார். எதிர்க்கட்சிகள் தனது அரசுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், ஆட்சி முறைக்கான ஆலோசனைகளையும் வழங்கவேண்டும் என்று

மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 11 Jun 2014 02:43 PM PDT

இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பாயும் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானார்கள். அப்பகுதிக்கு சுற்றுலா வந்த அம்மாணவர்கள் ஆற்றில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் பாயும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

Posted: 11 Jun 2014 02:26 PM PDT

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை பேராசிரியராக பணிபுரிந்த சுகதா போஸ் தனது முதல் நாடாளுமன்ற உரையால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது பேச்சை கேட்ட காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி அவரது இருக்கைக்கு சென்று அவரை பாராட்டி கைகுலுக்கினார். மேற்கு வங்கத்தில்

மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடிதம்

Posted: 11 Jun 2014 12:22 PM PDT

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி கடந்த மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். இந்த விழாவில் 'சார்க்' அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அழைப்பை ஏற்று மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். மறுநாள், மோடியுடன் அவர் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உ.பி.யில் பா.ஜ.க தலைவரான புனீத் சிங்கால் துப்பாக்கியால் சுடப்பட்டார்

Posted: 11 Jun 2014 11:52 AM PDT

உத்திரபிரதேச மாநிலத்திற்குட்பட்ட புலந்த்சாகிர் பகுதியில் பா.ஜ.க தலைவரான புனித் சிங்கால் அங்குள்ள கடை வீதியில் வந்துகொண்டிருந்தபோது அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஒரு நபரிடம் பணத்தை பறித்து கொண்டு ஓடியது. வியாபாரியான புனீத் இதை பார்த்தவுடன் அந்த நான்கு பேரையும் பிடிக்க முற்பட்டார்.

உ.பி.யில் 45 வயது பெண் கற்பழித்துக் கொலை

Posted: 11 Jun 2014 11:28 AM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் கற்பழித்து கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பதான் மாவட்டத்தில் தலித் சகோதரிகள் 2 பேர், கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொன்று, உடல்களை மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

மம்தா பானர்ஜியின் பணிகளை மனதார பாராட்டிய மோடி

Posted: 11 Jun 2014 07:19 AM PDT

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி மனதாரப் பாராட்டினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மக்களவையில் மோடி பேசுகையில், "மேற்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™