மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வியாபாரி தற்கொலை
- டெல்லி சட்டசபை தேர்தல்: காங்கிரசுடன் கூட்டணி சேர ஆம்ஆத்மி தலைவர்கள் முடிவு
- உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: மாயாவதி கடும் தாக்கு
- கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணைகுழு நாளை கூடுகிறது
- திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 26 மணி நேரம் ஆகிறது
- டெல்லியில் புழுதி புயலுக்கு 45 பேர் பலி
- இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா நாளை உதயம்
- டெல்லியில் நாளை மோடியுடன் உம்மன்சாண்டி சந்திப்பு
- திருப்பதி மலையில் திடீர் காட்டுத் தீ: ஒரு ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்
- ரெயில் கட்டணம் உயர்த்தப்படுமா?: மத்திய மந்திரி சதானந்த கவுடா பதில்
- தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் நாளை பதவி ஏற்பு
- தனியார் எப்.எம். ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்பு: மத்திய அரசு பரிசீலனை
- கோடை வெப்பம் தாங்காமல் 14 மான்கள் சுருண்டு விழுந்து சாவு
- மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 12 பேர் பலி
- மதரசாக்களை நவீனப்படுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ். யோசனை
- சிறுமிகளை பலாத்காரம் செய்து நாயின் மலத்தை சாப்பிட வைத்த கொடூரன்
- கடந்த ஆட்சியில் அமைத்த அமைச்சர்கள் குழுக்கள் கலைப்பு: பிரதமர் மோடி அதிரடி
- கோமாளிகளின் தலைவர் ராகுல்: மற்றொரு காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
| மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வியாபாரி தற்கொலை Posted: 01 Jun 2014 12:04 AM PDT டெல்லி பூராலி பகுதியில் உள்ள தரம்வீர் காலனியில் வசித்தவர் ரதேஷியாம் பிரசாத். வியாபாரியான இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். வீட்டில் இருந்த பிரசாத் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது. அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதி இருந்தார். தனது இந்த தற்கொலைக்கு குடும்பத்தினர்தான் காரணம் என்று கடிதத்தில் குற்றம் சாட்டி இருந்தார். தனது மனைவி பணம் முழுவதையும் அவரது பெற்றோர்களுக்கும், அவரது சகோதரர்களுக்கும் கொடுப்பதாக குறிப்பிட்டு இருந்தார். |
| டெல்லி சட்டசபை தேர்தல்: காங்கிரசுடன் கூட்டணி சேர ஆம்ஆத்மி தலைவர்கள் முடிவு Posted: 31 May 2014 11:42 PM PDT 70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 31 இடங்கள், ஆம்ஆத்மி 28 இடங்கள், காங்கிரஸ் கட்சி 8, சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 36 இடங்கள் வேண்டும் என்பதால், எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் ஆம்ஆத்மி ஆட்சி |
| உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: மாயாவதி கடும் தாக்கு Posted: 31 May 2014 11:39 PM PDT உ.பி.யில் சட்டம் ஓழுங்கு சந்தி சிரிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி தெரிவித்துள்ளார். அங்கு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பதான் மாவட்டத்தில் நடந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்திற்கு சமாஜ்வாதி அரசில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாததே முக்கிய காரணம் என கூறிய அவர் சமாஜ்வாதி ஆட்சியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதான் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க முடிவுசெய்துள்ளார் மாயாவதி. |
| கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணைகுழு நாளை கூடுகிறது Posted: 31 May 2014 11:32 PM PDT வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26–ந்தேதி பதவியேற்றதும் அதில் விசேஷ கவனம் செலுத்தினார். இதையடுத்து 27–ந்தேதி சிறப்பு விசாரணைக் குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு |
| திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 26 மணி நேரம் ஆகிறது Posted: 31 May 2014 11:23 PM PDT திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 45 ஆயிரத்து 744 பேர் சாமி தரிசனம் செய்தனர். |
| டெல்லியில் புழுதி புயலுக்கு 45 பேர் பலி Posted: 31 May 2014 10:48 PM PDT டெல்லியை நேற்று முன் தினம் மிகப்பெரிய சூறாவளி காற்று தாக்கியது. டெல்லி நகரை தலை கீழாகப் புரட்டிப் போட்டு மக்களை கதி கலங்க செய்யும் வகையில் சூறாவளி காற்றின் தாக்கம் இருந்தது. டெல்லியின் பல பகுதியிலும் சுழன்று வந்த அந்த புயலின் ஒரு புழுதிப் புயலாக இருந்தது. இந்த புழுதிப் புயல் மணிக்கு சுமார் 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் வீசியது. அப்போது பலத்த மழையும் பெய்தது. புழுதிப் புயல் சீற்றம் காரணமாக டெல்லியில் சுமார் 400 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 12 பேர் உயிரிழந்தனர். டெல்லியை பந்தாடிய அந்த புயல் நேற்று 2–வது நாளாக வட மாநிலங்களில் அச்சுறுத்தியது. அரியானா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் புழுதிப்புயல் தாண்டவமாடியது. |
| இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா நாளை உதயம் Posted: 31 May 2014 10:40 PM PDT இந்தியா விடுதலை பெற்ற போது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவி இருந்தனர். இந்த 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் அப்போதைய தமிழகமான சென்னை மாகாணத்திலும் மீதமுள்ள 9 மாவட்டங்கள் ஐதராபாத் சமஸ்தானத்திலும் இருந்தன. 1953–ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தில் இருந்த 12 மாவட்டங்கள், ஐதராபாத் சமஸ்தானத்தில் இருந்த 9 மாவட்டங்கள் தனியாக பிரித்து ''ஆந்திரா'' எனும் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. பிறகு ஆந்திராவில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. இந்த 23 மாவட்டங்களிலும் தெலுங்கு பேசப்பட்டு வந்தாலும் வட பகுதியில் உள்ள மக்கள் 'தெலுங்கானா' என்ற பெயரில் தனிப் பகுதியாக செயல்படவே விரும்பினார்கள். 1969–ம் ஆண்டு தனித் தெலுங்கானா கோரி போராட்டம் வெடித்தது. கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரராவ் தலைமையில் போராட்டம் தீவிரமானது. |
| டெல்லியில் நாளை மோடியுடன் உம்மன்சாண்டி சந்திப்பு Posted: 31 May 2014 10:17 PM PDT பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தபோதும் கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி அந்த விழாவில் பங்கேற்க வில்லை. அவரது இந்த செயலுக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எதிர்ப்பை சமாளிப்பதற்காக உம்மன்சாண்டி பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். |
| திருப்பதி மலையில் திடீர் காட்டுத் தீ: ஒரு ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம் Posted: 31 May 2014 09:45 PM PDT திருப்பதி மலைப்பாதையில் திடீரென காட்டுத்தீ பரவியதால் 1 ஏக்கர் பரப்பளவில் மரங்கள், செடி–கொடிகள் எரிந்து நாசமாயின. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் சுமார் 37 இடங்களில் திடீர் திடீரென தீப்பிடித்து |
| ரெயில் கட்டணம் உயர்த்தப்படுமா?: மத்திய மந்திரி சதானந்த கவுடா பதில் Posted: 31 May 2014 04:56 PM PDT ரெயில் கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி டி.வி.சதானந்த கவுடா சூசகமாக பதில் அளித்தார். கர்நாடகத்தை சேர்ந்த டி.வி.சதானந்த கவுடா மத்திய ரெயில் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதன் முறையாக நேற்று தனது சொந்த மாவட்டமான தட்சிண கன்னடத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் நாளை பதவி ஏற்பு Posted: 31 May 2014 02:35 PM PDT நாட்டின் 29-வது மாநிலமாக உதயமாகிற தெலுங்கானாவின் முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் நாளை (2-ந் தேதி) பதவி ஏற்கிறார். ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அந்தப்பகுதி மக்களின் அரை நூற்றாண்டு கனவாக இருந்தது. 2001-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன் வைத்து சந்திரசேகரராவ், தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி என்ற கட்சித் தொடங்கினார். இந்தக் கோரிக்கையை முன்வைத்து எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன. |
| தனியார் எப்.எம். ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்பு: மத்திய அரசு பரிசீலனை Posted: 31 May 2014 01:09 PM PDT நாடு முழுவதும் பல தனியார் எப்.எம். சேனல்கள் சினிமா பாட்டு, 'டாக் ஷோ', சமையல் குறிப்பு உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் ஒலிபரப்பி வருகின்றன. ஆனால், இந்த சேனல்கள் செய்திகளை ஒலிபரப்ப முந்தைய மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர், அனைத்து துறைகளிலும் அதிரடியாக பல மாற்றங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வரும் நிலையில், தனியார் எப்.எம். சேனல்களில் செய்திகளையும் ஒலிபரப்புவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். |
| கோடை வெப்பம் தாங்காமல் 14 மான்கள் சுருண்டு விழுந்து சாவு Posted: 31 May 2014 12:52 PM PDT நாட்டின் பல பகுதிகளை கோடைக்கால வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் 14 மான்கள் பலியாகியுள்ளன. இங்குள்ள டேவாஸ் மாவட்டத்தில் இருக்கும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் வறண்டுப் போனதால், அப்பகுதிக்கு நீர் அருந்த வரும் மான்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. |
| மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 12 பேர் பலி Posted: 31 May 2014 12:28 PM PDT மேற்கு வங்காள மாநிலத்தின் பல பகுதிகளை முன்கூட்டிய பருவமழை நேற்று பதம் பார்த்தது. பயங்கர இடி, மின்னலுடன் சில மாவட்டங்களில் 30 மில்லி மீட்டர் முதல் 50 மில்லி மீட்டர் வரையிலான மழை பொழிவினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டது. மின்னல் தாக்கி முர்ஷிதாபாத் மாவட்டம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்த இருவரும், டல்டான்பூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரும், ரகுநாத் கஞ்ச் பகுதியின் ராஜாநகர் கிராமத்தை சேர்ந்த இருவரும் பலியாகினர். |
| மதரசாக்களை நவீனப்படுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ். யோசனை Posted: 31 May 2014 12:12 PM PDT ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரும், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் ஒருங்கிணைப்பாளருமான இந்திரேஷ் குமார், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மதரசாக்களை நவீனப்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- புதிய அரசின் முன்னர் முன்மாதிரியாக முன்வைப்பதற்கு வசதியாக இங்குள்ள (ராஜஸ்தான்) சுமார் 20 மதரசாக்களை நவீனப்படுத்தும்படி முஸ்லிம் தலைவர்களிடம் கூறியுள்ளேன். |
| சிறுமிகளை பலாத்காரம் செய்து நாயின் மலத்தை சாப்பிட வைத்த கொடூரன் Posted: 31 May 2014 08:09 AM PDT மும்பை அருகே உள்ள கஜ்ரத் பகுதியை சேர்ந்தவர் அஜித் டபோல்கர். அவர் அங்கு ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகளுக்கான தங்குமிடத்துடன் கூடிய கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த தங்குமிடத்தில் தங்கியிருந்த 4 முதல் 16 வயது வரை கொண்ட 32 பேரில் ஐந்து சிறுமிகளை கற்பழித்ததுடன் நாய் மலத்தை சாப்பிட வைத்து கொடுமை செய்துள்ளார் டபோல்கர். இவருக்கு உடந்தையாக லலிதா டோன்டா என்ற பெண்மணியும் செயல்பட்டுள்ளார். |
| கடந்த ஆட்சியில் அமைத்த அமைச்சர்கள் குழுக்கள் கலைப்பு: பிரதமர் மோடி அதிரடி Posted: 31 May 2014 07:06 AM PDT கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கலைத்துள்ளார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முடிவுகளை விரைவாக எடுப்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட 9 அமைச்சர்கள் குழுக்களும், தேவைப்படும் |
| கோமாளிகளின் தலைவர் ராகுல்: மற்றொரு காங்கிரஸ் தலைவர் விமர்சனம் Posted: 31 May 2014 06:41 AM PDT மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியில் தற்போது தலைமை மீதான அதிருப்தி வெளிப்பட ஆரம்பித்துள்ளது. ராகுல் காந்தியை கோமாளி என்று விமர்சித்த கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த வரிசையில் இப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வார் லால் சர்மாவும் ராகுல் காந்தியை சாடியுள்ளார் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |