Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை: இலங்கை அரசாங்கம் விளக்கம்!

Posted: 08 May 2014 11:19 PM PDT

peiris_mecally

peiris_mecallyவிடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி பறிமாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நியுசிலாந்திடம் விளக்கமளித்துள்ளது. இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுமான ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மரேய் மெக்கலி ஆகியோர் ஒக்லேண்டில் வைத்து சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மரே மெக்கலி தொடர்ந்து மூன்று முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டமைக்கு, ஜீ.எல்.பீரிஸ் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிக்காமை தொடர்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் அண்மையில் புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனியாட்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்திருந்த தடை குறித்தும் அவரால் விளக்கமளிக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பு ! இலங்கையில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாடு!

Posted: 08 May 2014 11:14 PM PDT

smoking

smokingஇலங்கையில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலை வைத்தியர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 30 வீதமான ஆண்களும், 4 வீதமான பெண்களும் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் ஆண்டு தோறும் 20000 பேர் வரையில் உயிரிழக்கின்றனர். 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை புகைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் புகைப்பிடித்தல் காரணமாக நோய் ஏற்படும் நபர்கள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்கின்றனர். இலங்கையிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை விடவும் புகைப்பிடித்தல் காரணமாக உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார். புகைத்தல் பழகத்தை இல்லாதொழிக்க கட்சி, மதஈ இன பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சிகரட் பக்கட்டுக்களில் படங்களின் மூலம் எச்சரிக்கையிடுவது சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக பாடசாலைகள் மூடல்!

Posted: 08 May 2014 11:06 PM PDT

school-closing

school-closingயுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக மாத்தறை கல்வி வலயப் பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியீட்டப்பட்டமை தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இம்முறை மாத்தறையில் நடைபெறவுள்ளது. யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள், மாத்தறை கடற்கரையோரப் பாதையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை முன்னிட்டு மாத்தறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மூடப்பட உள்ளன. எதிர்வரும் வாரம் முழுவதிலும் மாத்தறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மூடப்படும் விடயம் குறித்து மாத்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் ரோஹண நாணக்கார, வலயப் பாடசாலை அதிபர்களுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாடசாலை மூடப்படும் மூன்று நாட்களுக்கு, பதிலீடாக எதிர்வரும் வாரங்களில் சனிக்கிழமை நாட்களில் பாடசாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டமை குறித்த கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் மே மாதம் 18ம் திகதி தேசிய நிகழ்வாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம்! மஹிந்த ராஜபக்ச கருத்து!

Posted: 08 May 2014 11:00 PM PDT

Rajabakshe

Rajabaksheஅரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. அரசாங்கத்தின் சட்ட மூலங்கள் மற்றும் வேறு நிர்வாக விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடு இருந்தால் நேரடியாக சொல்ல வேண்டும். பின்னால் சென்று வேறு வேறு இடங்களில் சொல்வதில் பயனில்லை. அமைச்சரவை அல்லது நாடாளுமன்றக்குழுக் கூட்டங்களில் இது குறித்து அறிவிக்க முடியும். வெளிநாடுகளில் சென்று அரசாங்கத்தின் நிர்வாக விவகாரங்களை ஆளும் கட்சியினர் பேசுவது பொருத்தமாகாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவுடனான வர்த்த ஏற்பாடுகள் திருப்தி தரவில்லை: இலங்கை வணிகர் சம்மேளனம் கருத்து!

Posted: 08 May 2014 10:56 PM PDT

CCC

CCCஇந்தியாவுடனான வர்த்த ஏற்பாடுகள் இன்னும் திருப்தி தரவில்லை என்று இலங்கை வணிகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனவே மும்பாயில் உள்ள இலங்கையின் வணிகர் சம்மேளன பிரதிநிதியை விரைந்து பணியாற்றுமாறு கேட்டிருப்பதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கைகள் உள்ள போதும் இன்னும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் தடைகள் உள்ளன. இந்தநிலையில் இலங்கை வணிகர் சம்மேளனம் நேற்று முன்தினம் மும்பாயில் இலங்கையின் உயர்ஸ்தானிகரக அலுவலர் சரோஜா சிரிசேனவுக்கும் அங்குள்ள உள்ளூர் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்துரைத்த இலங்கையின் உயர்ஸ்தானிகரக அலுவலர் சரோஜினி, மும்பாயுடன் சிறந்த வர்த்தக உறவை பேணுவதற்கு இலங்கை எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் இலங்கையின் வர்த்தக பிரமுகர்களும் பங்கேற்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தடைப் பட்டியலைப் புறக்கணிக்கக் கூடாது ! கனடாவை மிரட்டும் சிறிலங்கா

Posted: 08 May 2014 10:47 PM PDT

canada

canadaபயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று தாம் வெளியிட்ட தடைப் பட்டியலைப் புறக்கணிக்கக் கூடாது என்று கனடாவிடம் சிறிலங்கா கோரியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை தடைசெய்து வெளியிட்ட அறிவிப்பை, தாம் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அறிவித்திருந்தார். இதுகுறித்து, நேற்று கொழும்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, "சிறிலங்காவினால் பட்டியலிடப்பட்டுள்ள 16 அமைப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒன்று. விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னமும், தமது நாட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக உள்ளது என்பதை கனடா நினைவில் கொள்ள வேண்டும். கனடா சரியாகச் செயற்படும் என்று நம்புகிறோம். ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாகவே, சிறிலங்கா அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனைப் புறக்கணிப்பது ஐ.நா பிரகடனங்களை மீறுதாக அமையும்." என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் தமிழர் அமைப்புக்கள் ஒன்றுபட்டு முன்னெடுக்கும் நிகழ்வு: தமிழீழத் தேசிய துக்க நாள் மே-18 ல்அனுசரிப்பு!

Posted: 08 May 2014 10:38 PM PDT

mullivaikkaal

mullivaikkaalமுள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன. இதனை கடந்த 6ம் திகதி செவ்வாய்கிழமை ரொறன்ரேவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். கனடாவின் ரொறன்ரோ, ஒட்டோவா, மொன்றியல், எட்மண்டன் ஆகிய பிரதான பெருநகரங்களில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுத்தாமல், பொதுமக்கள் நிகழ்வாக மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை முன்னெடுக்க இருப்பதாக, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு வின் மகாலிங்கம் அவர்கள் உத்தியோகபூர்வ அறிக்கையினை வாசித்து அகவணக்கத்துடன் ஊடக சந்திப்பினை தொடங்கி வைத்திருந்தார். பொதுமக்களின் நேர வசதியினைக் கருத்திற்கொண்டு, மே-18 காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை நினைவேந்தல் வணக்கத்தினை Markham and Milner சந்திப்பில் அமைந்துள்ள, St peter and Paul உள்ளக மண்டபத்தில் ஒழுங்கு செய்துள்ளதாக ஊடக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் உரைகள், சர்வமதப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் யாவும் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது. நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் திரு சு.இராசரத்தினம், தமிழ் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு வேலுப்பிள்ளை தங்கவேலு, கனடியத் தமிழர் பேரவைப் பொருளாளர் வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், கனடாத் தமிழர் இணையத்தின் தலைவர் திரு நாதன் வீரவாகு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் திரு. நிமால் விநாயகமூர்த்தி ஆகியோர் இக்கூட்டு முன்னெடுப்பு குறித்து கருத்துக்களை முன்வைத்திருந்தனர். தொடர்ந்து ஊடகங்கத்துறையினரது கேள்விகளுக்கு வழங்கிய பதில்களின் முக்கிய தொகுப்பு: புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், பலமாக எதிர்கொள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் புரிந்துணர்வோடு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறு ஒன்றுபடுவதற்கான பொதுப்புள்ளியாகவும் பொதுமக்கள் நிகழ்வாகவும் மே-18 வணக்க நாள் இருக்கின்றது. தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசுகளது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டில் உச்சம் தொட்டு, இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இனஅழிப்புக்கு பரிகார நீதியினை வேண்டி எமது விடுதலை அடைவதற்கே அனைவரின் நோக்கமாக இருக்கின்றது. சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது. ஈழத்தமிழ் தளத்தினை மையமாக கொண்டு இயங்குகின்ற ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அத்தியாவசியமானவை. மக்களுக்கான இந்த பொது நிகழ்வில் அனைத்து மக்களும் பங்குபற்றிப் பயன்பெறச் செய்ய ஊடகங்களால் மட்டுமே முடியும். அதைச் செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜோயல் காக்ஸ் என்ற FBI ஏஜன்ட் பாகிஸ்தானில் கைது! ஆயுதங்களுடன் விமானத்தில் பிடிபட்டார்!

Posted: 08 May 2014 10:27 PM PDT

joel-cox

joel-coxபொதுமக்கள் செல்லும் விமானத்தில் தனது பைக்குள் தோட்டாக்கள், ஒரு கத்தி என்பனவற்றை வைத்துக் கொண்டு விமானத்தில் ஏற முயன்ற FBI ஏஜன்ட் ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். Joel Cox என்ற இவர் ஒரு FBI ஏஜன்ட் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் ஞாயிற்றுகிழமை கராச்சி விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பையில் கத்தியும் 15 9அஅ தோட்டாக்களும் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு 2011 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட றேமன்ட் டேவிஸ் என்ற அமெரிக்க சிஐஎ ஒப்பந்ததாரரின் வழக்கை நினைவு படுத்துகின்றதென கூறப்படுகின்றது. இவர் லாகூர் நகரத்தில் இரு மனிதர்களை சுட்டு கொன்றதாகவும் தன்னை அவர்கள் கொள்ளையடிக்க வந்ததாக தான் நம்பியதால் சுட்டதாக கூறியதாகவும் அறியப்படுகின்றது. அச்சமயம் டேவிஸ் மன்னித்து விடுதலை செய்யப்பட்டதாகவும் இறந்தவரகளின் குடும்பத்தினருக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டதாகவும் இதனால் பல பாகிஸ்தானியர்கள் ஆத்திமடைததாகவும் கூறப்பட்டுள்ளது. கொக்ஸ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது லப்ரொப் உட்பட்ட உபகரணங்கள் சோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. தோட்டாக்கள், கத்தியுடன் இவர் என்ன செய்கின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொக்ஸ் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார் என்றும் மீண்டும் சனிக்கிழமை ஆஜராக வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு வாசிங்டன் பாகிஸ்தானுடன் மிக நெருக்கமாக செயற்படுவதாக அரசுதுறையின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நெல்லிக்காயின் மருத்துவ குணம்!

Posted: 08 May 2014 03:16 AM PDT

Nellikay

Nellikayதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை. மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

செவ்வாழை ரகசியம்!

Posted: 08 May 2014 03:08 AM PDT

Sevaazhai

Sevaazhaiஎல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாம்சங் நிறுவனத்தை கலக்கத்திற்கு தள்ளிய மோட்டோ ஜி!

Posted: 08 May 2014 03:01 AM PDT

moto-g

moto-gஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன். இதற்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் உள்ளது. ஆனால் இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் தொழில்நுட்ப வித்தியாசங்கள் இருக்காது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் தங்களின் தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் காப்பியடித்ததாக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றது. இருப்பினும் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனை காட்டிலும் சாம்சங் நிறுவனத்தின் போன்கள் விற்பனையில் சக்கைபோடு போட்டுவருகின்றன. இதனால் தங்களை அடித்துக்கொள்ள ஆளில்லை என்று பெருமை பாடிக்கொண்டிருந்த சாம்சங் நிறுவனம், சமீபத்தில் வெளியான மோட்டரோலா நிறுவனத்தின் மோட்டோ-ஜி வகை ஸ்மார்ட் போன்களை கண்டு மிரண்டு போயுள்ளது. இதற்கு காரணம் சாம்சங் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள அனைத்து நவீன வசதிகளும், மோட்டரோலா நிறுவனத்தில் மோட்டோ-ஜி போனில் உள்ளது. ஆனால் விலை வெறும் 12 ஆயிரம் மட்டுமே. இதனால் அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே அனைத்து போன்களும் விற்றுத்தீர்ந்தது. மோட்டோ-ஜி வகை போன்களின் விற்பனையை பார்த்து சாம்சங் நிறுவனம் அதிர்ச்சியானது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் மோட்டரோலா நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் கூடிய மோட்டோ-இ வகை செல்போன்களை வெளியிட உள்ளது. இந்த போனில் ஒரு ஜிபி ரேம், 1.2 ஜிகாஹ்ர்ட்ஸ் டுயல்கோர் புராசசர், 5 எம்பி பின்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு கிட்கேட் ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் என பல்வேறு நவீன வசதிகளை மோட்டோ-இ வகை செல்போன்களில் புகுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-5சி வகை செல்போனுக்கு நிகராக வசதிகளை கொண்டுள்ளது. இதன் விற்பனை விலை விவரங்களை மோட்டரோலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் இதன் விலை 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கலக்கத்திற்கு இதுவே காரணம், சமீபத்தில் வெளியாகி விற்பனையாகிக்கொண்டிருக்கும் கேலக்சி-5எஸ் போனை ஒப்பிடும் போது இதில் ஒரு சில வசதிகள் மட்டுமே குறைவாக உள்ளது. இருப்பினும் மோட்டோ-இ ஸ்மார்ட் போன் வெளியானால் மோட்டோ-ஜி ஸ்மார்ட்போனை காட்டிலும் சக்கைபோடுபோடும் என்று எதிர்பார்க்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மேக்ஸ்வெல் அதிரடி! சூப்பர் கிங்ஸ் சுருண்டுடது!

Posted: 08 May 2014 01:33 AM PDT

maxwell

maxwellகட்டாக்கில் நேற்று மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டத்தை பேயாட்டம் என்று மட்டுமே சொல்ல வேண்டும். அப்படி ஒரு ஆட்டம்.. அதகளம்.. அதிரடி.. என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். அப்படி ஒரு ஆட்டம் ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களை நையப்புடைத்து விட்டார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிளன் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லின் பிசாசுத்தனமான பார்மில் சிக்கி நேற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சுருண்டு போனது. சென்னைக்கும், பஞ்சாபுக்கும் இடையே நடந்த முதல் போட்டியில் சென்னை 200 ரன்களைத் தாண்டியும் கூட மேக்ஸ்வெல் போட்ட அதிரடியான 95 ரன்களால் அந்த அணி எளிதாக சேஸ் செய்து வெற்றியும் பெற்றது. நேற்றும் மேக்ஸ்வெல் வெறியாட்டம் போட்டு 38 பந்துகளில் 90 ரன்களைக் குவித்து சென்னையை திணறடித்து விட்டார். அவரது அதிரடியான ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி 231 ரன்களைக் குவித்து சென்னையின் தோல்விக்கு வித்திட்டு விட்டது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியைப் பார்த்து மனோரமா கேட்பார்.. நானும்தான் வாசிக்கிறேன். ஆனா நீங்க வாசிச்சா மட்டும் இப்படி மயக்குதே.. அது எப்படி.. என்று.. அதேபோலத்தான் மேக்ஸ்வெல் அடித்தால் பந்துகள் போருக்கும், சிக்ஸுக்கும் மட்டுமே பறக்கின்றன. அப்படி என்ன மாயத்தை தனது பேட்டில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. நடப்புத் தொடரில் இதுவரை 435 ரன்களைக் குவித்து விட்டார் மேக்ஸ்வெல். இன்னும் பல போட்டிகள் உள்ளன. இவர் அடிக்கிற வேகத்தைப் பார்த்தால் ஆயிரம் ரன்களுக்குப் போய் விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை. 7 ரன்கள் எடுக்கும் வரை அப்படியே ஒன்னுமே தெரியாத பாப்பா போல சிரித்தபடி ஆடிக் கொண்டிருந்தார் மேக்ஸ்வெல். அதற்குப் பிறகு அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே.. அய்யகோ.. சொல்ல வார்த்தை ஒன்றும் தோன்றவி்ல்லையே.. அப்படியே கறிக்கடையில் கொத்துக் கறி போடுவது போல பிரித்து மேய்ந்து விட்டார் சென்னை பவுலர்களை. சென்னையின் ஒவ்வொரு பந்தையும் பவுண்டிரிகளுக்கும் சிக்ஸருக்கும் அவர் விரட்டியடித்த விதம்.. சிலாகிக்க வைத்து விட்டது போங்கள்... அவர் அடித்த வேகத்தைப் பார்த்து பொங்கலாகிப் போனார்கள் சென்னை பவுலர்கள். பஞ்சாப் அணி 200 ரன்களைத் தொட்டபோது போதும்டா சாமி ஓவரை குறைச்சிட்டு ஆளை விடுங்கடா அப்பா என்று சென்னை ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். காரணம் அதற்குப் பிறகும் நிறைய பந்துகள் இருந்ததால். கடைசியில் மொஹித் சர்மா பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மேக்ஸ்வெல். சென்னை ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடாத குறை.. ஆனால் அதற்குள் போதிய அளவிலான பாதிப்பை சென்னைக்கு நிறையவே ஏற்படுத்தி விட்டது பஞ்சாப். நேற்றைய போட்டியில் என்ன காமெடி என்றால் சென்னை வீரர்களின் பவுலிங்தான் இப்படி இருந்ததால் பீல்டிங் அதை விட மோசம். எல்லாப் பந்தையுமே நல்லா அடிங்கடா என்று இவர்களே தூக்கித் தூக்கிக் கொடுத்தது போல இருந்தது. அதை விட காமெடி என்னவென்றால், நமது பீல்டர்களை விட வெளியில் இருந்தவர்கள் பிடித்த கேட்ச்தான் அதிகம். அதாவது மேக்ஸ்வெல் அடித்த பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே பாய்ந்தபோது பால் பாய் ஒரு அபாரமான கேட்ச்சைப் பிடித்தார். அட, பஞ்சாப் அணியின் வீரர் ஒருவரே கூட கேட்ச் பிடித்து காமெடியாக்கி விட்டார். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் வேறு யாராவதாக இருந்தால் செத்துப் போயிருப்பார்கள். ஆனால் சென்னை வீரர்க் தான் கிங்குகளாச்சே.. நம்பிக்கையுடன் சேஸ் செய்யத் தொடங்கினர். மேக்ஸ்வெல்லுக்கு சற்றும் குறையாத வேயன் ஸ்மித் இருப்பதால் நம்பிக்கை இருந்தது. ஆனால் முதல் ஓவரிலேயே ஸ்மித் பவுண்டரி அடித்த கையோடு வெளியேறியதால் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. இருப்பினும் பிரன்டன் மெக்கல்லமும், ரெய்னாவும் சேர்ந்து சற்று நம்பிக்கையூட்டனர். மெக்கல்லம் 33 ரன்களிலும், ரெய்னா 35 ரன்களிலும் வீ்ழ்ந்தனர். அதன் பின்னர் டூபிளஸிஸ் சற்று அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவருக்கு நல்ல கம்பெனி ஒருவர் இருந்திருந்தால் நிச்சயம் சென்னையால் வெற்றியைத் தொட்டுப் பார்த்திருக்கலாம். ஆனால் டூபிளஸிஸ் இறங்கிய நேரத்தில் பின்னால் விக்கெட்கள் இல்லாததால் அவரும் டோணியும் சற்று கவனமாகவே ஆட வேண்டிய நிலை. கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 113 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. இதை டோணியும், டூபிளஸிஸும் நம்பிக்கையுடன் துரத்தினர். விட்டால் எடுத்து விடுவார்களோ என்று கூடத் தோன்றியது. ஆனால் முடியவில்லை. சென்னை வீரர்கள் கடைசி வரை ஆடினர் என்பதுதான் இதில் விசேஷம். அதாவது கடைசிப் பந்தில் கூட அஸ்வின் ஒரு சிக்ஸர் அடித்து சென்னை வீரர்களின் கமிட்மென்ட்டை வெளிப்படுத்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விபத்தில் காயமடைந்த சீன மாணவி! ஆம்புலன்ஸ் வரும் வரை ரோட்டில் படுத்து டிக்ஸ்னரி படித்தார்!

Posted: 08 May 2014 01:21 AM PDT

accident

accidentசீனாவில், விபத்தில் காயமடைந்த இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் வரும்வரை நேரத்தை வீணாக்க விரும்பாமல் ரோட்டிலேயே படுத்து டிக்ஸ்னரி படித்ததை போலீசார் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சீனாவின் தலைநகர் பீஜிங் சாலையொன்றில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார் வாங் டாபன் என்ற 18 வயது இளம்பெண். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார் வாங். விபத்தில் வாங்கின் கால் மற்றும் தோளில் ஏற்பட்ட காயத்தால் அவரால் எழுந்து நிற்க இயலவில்லை. இதனால் சாலையில் படுத்தபடியே உடனடியாக தனது செல்போனிலே ஆம்புலன்சுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தார் வாங். ஆம்புலன்ஸ் வருவதற்கு ஆகும் சில நிமிடங்களைக் கூட வீணாக்க விரும்பாத வாங், விபத்து நடந்த இடத்திலேயே படுத்து கொண்டு தான் கொண்டு வந்திருந்த டிஜிட்டல் டிக்சனரியை எடுத்து படிக்க தொடங்கினார். பதட்டப்படாமல் செயல்பட்ட மாணவியின் செயலை சுற்றி நின்றிருந்தவர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் வந்ததும் வாங் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டது. விபத்து தொடர்பாக வாங் கூறும்போது, 'வாழ்க்கை காலம் மிகவும் சிறியது. அந்த வாழ்க்கையில் நேரத்தை வீணாக்காமல் கல்வி பயில வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றார். மேலும் வலி தெரியாமல் இருக்க மனதை வேறு பக்கம் திருப்ப தனக்கு கல்வி உதவியதாகவும், அந்த சில நிமிடங்களில் தான் புதிதாக 107 ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கேப்பிடல் நார்மல் யுனிவர்சிட்டியில் படித்து வரும் வாங்கிற்கு எதிர்காலத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சேர்ந்து படிக்க விரும்புவது தான் ஆசையாம். சம்பவத்தை நேரில் பார்த்த போலீஸ் ஒருவர் கூறுகையில், 'எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மாணவியைப் பார்க்கும் போது. விபத்துக் காரணமாக வலியால் அவதிப் பட்டபோதும், அவர் நிதானமாக டிக்ஸ்னரியில் உள்ள புதிய வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்' என வியப்புடன் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

5.4 அடி உயர "பர்கர்" தயாரித்து லண்டனைச் சேர்ந்த தம்பதியினர் சாதனை!

Posted: 08 May 2014 01:13 AM PDT

big-burger

big-burgerஉலகின் மிகப்பெரிய பர்கரைத் தயாரித்து லண்டனைச் சேர்ந்த தம்பதியினர் சாதனைப் படைத்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜான் கிளார்க்சன்- கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர "பர்கர்" உணவு தயாரித்துள்ளனர். அந்த "பர்கர்" ஆனது இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள் மற்றும் மீன் வகைகள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த பர்கர் மொத்தம் 5 கிலோ 175 கிராம் அதாவது 11½ பவுண்டு எடையுள்ள மாட்டு இறைச்சி சேர்க்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதில் பல அடுக்குகளில் நெய் ஊற்றப்பட்டிருந்தது. இது 30 ஆயிரம் கலோரி திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டது. இதன் உயரம் சுமார் 5.4 அடி ஆகும். இதுவரை இது போன்ற பர்கர் தயாரித்தது இல்லை. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவை குறி வைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவுளிக்கவில்லை: இலங்கை ராணுவம் கருத்து!

Posted: 08 May 2014 01:06 AM PDT

Sri-Lanka-Flag

Sri-Lanka-Flagஇந்தியாவை குறி வைக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு தாங்கள் பயிற்சி அளிக்கவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவை குறி வைக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு இலங்கை பயிற்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம் சாட்டினார். இலங்கையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் இருப்பது அனைவருக்கும் தெரியும். டெல்லியில் உள்ள மத்திய அரசு இந்த விவகாரத்தில் கண்டுகொள்ளாமல் உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரியா கூறுகையில், இந்தியாவில் தேர்தல் நடக்கும் வேளையில் இலங்கையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. 30 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை. நாங்கள் எந்த விதத்திலும் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் படம் வெளியாகாமல் போனதற்கு உண்மையான காரணம் இது தான்!

Posted: 08 May 2014 01:00 AM PDT

kochadaiyaan

kochadaiyaanகோச்சடையான் படம் வெளியாகாமல் போனதற்கு இன்னொரு முக்கிய காரணமாக படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை என்பதைக் காரணமாகக் கூறியுள்ளனர். ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்பட 6 மொழிகளில் வெளியாகிறது. அனைத்து மொழிகளிலும் 2 டி மற்றும் 3டி வடிவங்களில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சென்சார் சான்று பெற வேண்டும். 2டிக்கு தனியாகவும், 3டிக்கு தனியாகவும் சென்சார் சான்று பெற வேண்டியுள்ளது. இதில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் கோச்சடையானின் 3 டி வடிவத்துக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லையாம். இதைத் தான் 'தொழில்நுட்ப காரணம்' காரணமாக படம் ரிலீஸ் தாமதம் என்கிறது தயாரிப்பு தரப்பு. இந்த இரண்டு மொழிகளிலுமே தமிழை விட அதிக அளவிலான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தானம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது!

Posted: 08 May 2014 12:55 AM PDT

santhanam

santhanamசந்தானம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியான மரியாதை ராமண்ணா படத்தின் தமிழ் வடிவம்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப் படத்தை சந்தானமும் பிவிபி சினிமாவும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்தின் டீசருக்கு ஆன்லைனில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்த 'டாக்' நன்றாக இருப்பதால், இதனை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை கேட்டுப் பெற்றுள்ளது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன். இந்த உரிமையைப் பெற மிகப் பெரிய தொகையைத் தந்துள்ளது ஸ்டுடியோ கிரீன். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் மே 10-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. கோச்சடையான் தள்ளிப் போனதால் இந்த திடீர் முடிவாம்!

This posting includes an audio/video/photo media file: Download Now

தாரை தப்பட்டை பாலா படத்துக்காக 10 கிலோ எடை குறைத்த வரலட்சுமி!

Posted: 08 May 2014 12:44 AM PDT

varalaxmi

varalaxmiஇயக்குநர் பாலா படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் வரலட்சுமி பத்துகிலோ எடை குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படம் 'தாரை தப்பட்டை'. சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். சசிகுமார் தன் தாடியை எடுத்துவிட்டு தவில் வாசிக்க கற்றுக் கொண்டு வருகிறார். வரலட்சுமி கரகாட்டம் ஆட கற்றுக் கொண்டு வருகிறார். மற்ற நடிகர்களுக்காக தேர்வும், ஒத்திகையும் நடந்து வருகிறது. நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல... வரலட்சுமி இந்த படத்திற்காக எடைக்குறைந்திருக்கிறார் என்பதுதான். போடா போடி படத்தில் அறிமுகமான வரலட்சுமி நல்ல உயரமும் அதற்கேற்ற எடையுமாய் இருந்தார். அந்த படத்திற்குப் பின் மதகஜராஜா படத்திலும் நடித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் பாலா படத்தில் நடிக்கும் வரலட்சுமி தனது எடையை பத்து கிலோ வரை குறைத்திருக்கிறாராம். படத்திற்காக இரவும் பகலும் கரகாட்டம் பயின்றதோடு... உடல் எடையிலும் கவனம் எடுத்துக்கொண்டாராம் வரலட்சுமி. ஆனால் படத்தில் தனக்கு என்னவேடம் என்பது தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். படப்பிடிப்புக்கு போனாதான் என்ன வேடம் என்பதே தெரியும். பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியிருக்கிறது. எனவே கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்கிறார் வரு. நான் ஈ சுதீப் உடன் மாங்கியா கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமிக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் பாவாடை தாவணி போட்டு கிராமத்துப் பெண்ணாக நடித்தது புது அனுபவம் என்கிறார் வரலட்சுமி. அது தனக்கு சவாலாக இருந்தது என்கிறார். கன்னட திரை உலகம் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்று கூறும் வரலட்சுமி ஒரே படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன் என்கிறார். சசிகுமார் ஜோடியாக வரலட்சுமி நடிக்கும் தாரை தப்பட்டை படத்தின் கதை இதுதான் என்று கிசுகிசுக்கின்றன கோலிவுட் வட்டாரங்கள். பிரமாண குலத்தில் பிறந்த தவில் கலைஞர் சசிகுமாருக்கும், தாழ்ந்த குலத்தில் பிறந்த கரகாட்டக்காரி வரலட்சுமிக்கும் ஏற்படும் காதல்தான் கதையாம். சசிகுமார் குடும்பம் காதலுக்கு சம்மதித்து விடுமா? அவருக்கு பரதநாட்டியம் ஆடும் ஒரு பிராமண பெண்ணை மணம் பேசி முடிக்கிறார்கள். மிருதங்கத்தை விட தவில்தான் பெரிய இசை என்றும், பரதநாட்டியத்தைவிட கரகாட்டம்தான் நல்ல கலை என்றும் சசிகுமார் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் கதையாம். தினசரி, ரிகல்சல், பயிற்சி என இருவரையும் சக்கையாக பிழிகிறார் பாலா. இருவருமே சூட்டிங்கிற்கு தயாராகிவிட்டனர். இந்த மாதம் இறுதியில் சூட்டிங் என்கின்றார் நாயகி வரலட்சுமி. சீக்கிரம் கரகாட்டக்காரியை கண்ல காட்டுங்க பாலா.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனர்களின் உணவு ரசனை….. பாருங்க நீங்களே அதிர்ந்து போவீங்க!

Posted: 08 May 2014 12:32 AM PDT

Chinese-Street-Food

Chinese-Street-Food

This posting includes an audio/video/photo media file: Download Now

சும்மா சொல்லக்கூடாது பாட்டும், தாளமும் செம சூப்பர்!

Posted: 08 May 2014 12:26 AM PDT

singer

singer

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™