Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மத்தியில் ஆட்சி அமைக்க மம்தாவுடன் கூட்டு சேர ராகுல் திட்டம்

Posted: 08 May 2014 11:11 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 100 இடங்களே கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகளில் கூறப்பட்டது. இந்த நிலையில் மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைவதை தடுக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் 3 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

Posted: 08 May 2014 10:59 PM PDT

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேல் இந்த மழை நீடிப்பதால் கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ள சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் திருவனந்தபுரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம்போல மழை நீர் ஓடுவதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்து போக்குவரத்து நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இதுவரை 300–க்கும்

சீமாந்திராவில் புதிய ஆட்சி: சந்திரபாபு நாயுடுவுடன் பவன்கல்யாண் ஆலோசனை

Posted: 08 May 2014 10:48 PM PDT

ஆந்திராவில் தெலுங்கு தேசம்–பா.ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணிக்கு 'ஜனசேனா' கட்சியை தொடங்கிய நடிகர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தார். தெலுங்கானாவில் கடந்த மாதம் 30–ந் தேதியும், சீமாந்திராவில் கடந்த 7–ந் தேதியும் தேர்தல் நடந்தது. சீமாந்திராவில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக

ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி ஜனார்த்தன ரெட்டி மரணம்

Posted: 08 May 2014 10:17 PM PDT

ஆந்திர மாநில முன்னாள் முதல்– மந்திரி ஜனார்த்தன ரெட்டி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி 1972–ல் அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பல துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்தார். 1990–92–ம் ஆண்டு ஆந்திர முதல்–மந்திரியாக பதவி வகித்தார். தனது ஆட்சி காலத்தில் இவர் நக்சலைட்டு இயக்கத்துக்கு தடை

உ.பி.யில் ரெயில்வே கேட்டை கடந்த போது ஜீப் மீது ரெயில் மோதி 13 பேர் பலி

Posted: 08 May 2014 10:04 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினர் 16 பேர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஜீப்பில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். கோரக்பூர் – நார்கா தியா கஞ்ச் ரெயில் நிலையங்களுக்கு இடையே கோதிபூர் என்ற இடத்தில் ஆள் இல்லாத ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை: கனிமொழி

Posted: 08 May 2014 09:12 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் வாக்குமூலம் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 4 பேர் சி.பி.ஐ. கோர்ட்டில் தங்கள் வாக்கு மூலத்தை பதிவு செய்து உள்ளனர். நேற்று கனிமொழி எம்.பி. தனது வாக்குமூலத்தை நீதிபதி ஓ.பி.சைனி முன்பு பதிவு செய்தார். அவரிடம் அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல்

பீகாரில் பிரியங்கா மீது 2 வழக்கு: 19–ந்தேதி விசாரணை நடக்கிறது

Posted: 08 May 2014 09:04 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது பிரியங்கா சமீபத்தில் தாக்கிப் பேசினார். மோடி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரியங்காவின் பேச்சு பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பீகார் மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுராஜ் நந்தன் மேத்தா பாட்னா ஐகோர்ட்டில் பிரியங்கா மீது வழக்கு தொடுத்தார்.

சத்திஸ்கரில் பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி

Posted: 08 May 2014 05:07 PM PDT

சத்திஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கோன் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற காரும் பேருந்தும் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் படுகாயமடைந்தார்கள். 35 பயணிகளுடன் விக்ரம்பூரிலிருந்து கொப்பேடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததில்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மே 17ந்தேதி பிரியாவிடை

Posted: 08 May 2014 04:54 PM PDT

பிரதமர் பதவியை விட்டு விலகும் முன் வரும் மே 17ந் தேதி பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். அன்றைய தினம், கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது என்று நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார். தனது உரையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டன என்பதை அவர் பட்டியலிடுவார் என்று

மேகாலயாவில் புயல்: ஏழு பேர் படுகாயம்

Posted: 08 May 2014 01:43 PM PDT

மேகாலயாவில் உள்ள ரி-பொய் மாவட்டத்திற்குட்பட்ட சொஹ்ட்பொக், மஹ்வடி மற்றும் நொங்லம் ஆகிய கிராமங்களில் வீசிய புயல் மற்றும் கன மழை காரணமாக 40 வீடுகள் சேதமடைந்ததுடன் 2 வயது குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். சொஹ்ட்பொக் கிராமத்தை சேர்ந்த மார்கிரெட் குர்பாஹ் மற்றும் அவரது

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 250 கிராம் தங்கநகை மாயம்: விசாரணை

Posted: 08 May 2014 01:31 PM PDT

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்மாவதி தாயாருக்கு உற்சவத்தின் போது விலை உயர்ந்த தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. அதில், சுமார் 250 கிராம் எடையிலான தங்கநகையை திடீரென காணவில்லை.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: சி.பி.ஐ விசாரணை அதிகாரி திடீர் இடமாற்றம்

Posted: 08 May 2014 01:14 PM PDT

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) தலைவரான ரஞ்சித் சின்கா, சுரங்க ஒதுக்கீடு வழக்கை விசாரித்த ஓ.பி. கல்ஹோல்த்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ மீது பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

சிபிஐ கூடுதல் இயக்குனராக பதவியேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட்

Posted: 08 May 2014 12:47 PM PDT

தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ புலனாய்வு அமைப்பின் கூடுதல் இயக்குனராக இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள் அவரை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலை பெறாமல் அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசு

இந்தியாவிலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களின் சுகாதாரம்: ஐ.நா. கவலை

Posted: 08 May 2014 12:15 PM PDT

இந்தியாவில் வாழும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் சுகாதாரம் கவலைக்குரியதாக உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொது சுகாதார பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ள போதும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் சுகாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

வாரணாசியை கலக்கும் மோடி: 4 கி.மீ தூரம் கடக்க 3 மணி நேரம்

Posted: 08 May 2014 11:11 AM PDT

வாரணாசியில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனாலும் வாரணாசி நகருக்கு செல்லும் திட்டத்தை மோடி நிறுத்தவில்லை. அலை கடல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் மோடியின் வாகனம் 4 கி.மீ தூரத்தை கடக்க 3 மணி நேரங்கள் ஆனது. வாரணாசிக்குள் வருவதற்கு அதன் புறநகர் பகுதிகளில் பிரச்சாரம் செய்த

சிறுமி பலாத்கார வழக்கு: ஆசாராம் மனு தள்ளுபடி

Posted: 08 May 2014 10:42 AM PDT

16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான "சபல கேஸ்" சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் சிறுமி அல்ல. அவர் மேஜர் ஆனவர் என்று மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சாமியார் சார்பில் மனுதாக்கல்

மோடி பெயரில் நிதி திரட்டுவது சட்டவிரோதம்: மம்தா கண்டனம்

Posted: 08 May 2014 09:16 AM PDT

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பொதுமக்களிடம் இருந்து பா.ஜனதா தேர்தல் நிதி வசூலித்து வருகிறது. பொதுமக்களுக்கும், தங்களுக்கும் இடையேயான உறவு தொடர வேண்டும் என்பதற்காக 'மோடி பார் பி.எம்.' என்ற பெயரில் நிதி வசூலிப்பதாக பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது.

பூரி ஜெகநாதர் கோவிலில் தேர்கள் செய்ய மரக்கட்டைகள் பற்றாக்குறை

Posted: 08 May 2014 08:39 AM PDT

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக அந்த கோவில் வடிவத்தில் 3 பிரமாண்ட தேர்கள் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மிகப்பெரிய மரத்துண்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவிழா ஒருங்கிணைப்புக் கமிட்டி உறுப்பினர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

வாக்கு இயந்திரத்தை பார்த்த ராகுலிடம் விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்

Posted: 08 May 2014 07:46 AM PDT

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தை பார்வையிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

மோடி உண்மையான டீ வியாபாரி அல்ல: காங்கிரஸ்

Posted: 08 May 2014 07:33 AM PDT

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் ஒரு 'டீ' வியாபாரி என்று கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் டீ வியாபாரி அல்ல என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மோடி ஒரு 'டீ' வியாபாரி அல்ல. அவர் பொழுது போக்கிற்காக டீ கடைக்கு சென்றுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் அந்த கேண்டீனை குத்தகைக்கு எடுத்திருந்தார். கஞ்சா விற்பனை செய்ததால் அந்த கடையின் உரிமம் பறிபோனது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™