Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


14 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இலங்கை பெண்! கனடாவிலிருந்து நாடு கடத்த திட்டம்!

Posted: 04 May 2014 10:41 PM PDT

canada-flage

canada-flageகுறித்த இலங்கைப் பெண் கனடாவின் வன்குவார் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கனேடியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட ஜனினா இபாரா என்ற பெண்ணே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றார். 15 வயதில் இபாரா கனடாவைச் சென்றடைந்ததாகவும், அவருக்கு தற்போது 10 மற்றும் 7 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இபாராவை கனேடிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தனர். குடும்பத்தை பிரித்து ஜனினாவை இலங்கைக்கு நாடு கடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவரது கணவர் எலிசானோ இபாரா தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்னதாக ஆவணமொன்று காணாமல் போன காரணத்தினால் இவ்வாறான நெருக்கடிகளை தமக்கு எதிர்நோக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஆவணமொன்று கனேடிய குடிவரவு திணைக்களத்திலோ அல்லது கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலோ தொலைந்ததினால் இபாரா இந்த நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனினாவின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நைஜீரிய அரசாங்கத்தின் வலுவற்ற பதிலை எதிர்த்து கண்டனம்: வீதிகளில் உலகளாவிய ஆர்ப்பாட்டம்!

Posted: 04 May 2014 10:29 PM PDT

student-strike

student-strikeவாசிங்டனில் லிங்கன் மெமோரியலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி கடத்தப்பட்ட பெண்கள் விடயத்தில் நைஜீரிய அரசாங்கத்தின் வலுவற்ற பதிலை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை யு.எஸ்.அரசுத்துறை செயலாளர் ஜோன் கென்னி நைஜீரிய அதிபர் குட்லக் ஜொநதனுடன் தொடர்பு கொண்டு நைஜீரியாவின் வடகிழக்கு கிராமப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து ஏப்ரல் மாதம் 14-ந்திகதி காணாமல் போன 200-ற்கும் மேற்பட்ட மாணவிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் படி கேட்டுக் கொண்டுள்ளார். தீவிர வாதிகளால் கடத்தி செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் 200-பேர்களையும் காப்பாற்ற நைஜீரியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் படி சர்வதேச நாடுகளை கேட்டு ஞாயிற்றுக் கிழமை வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து லண்டன் வரையிலான ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. போக்கோ ஹராம் எனப்படும் தீவிரவாத கும்பல் இந்த கடத்தலை செய்துள்ளதாகவும் இப்பெயரின் மொழிபெயர்ப்பு 'மேற்கத்திய கல்வி ஒரு பாவம்' என்பது என்றும் அறியப் படுகின்றது. இக்கும்பல் பெண்கள் கல்வியை எதிர்ப்பவர்கள். பெண்கள் வீட்டில் இருந்து பிள்ளைகளை வளர்ப்பது மற்றும் தங்கள் கணவன் மார்களை கவனிப்பது தான் பெண்களின் வேலை என்பது இவர்களது ஷரியா சட்டத்தின் பதிப்பில் உள்ளதெனவும் தெரியவருகின்றது. இக்குழுவின் அங்கத்தவர்கள் குறிப்பிட்ட பெண்கள் பாடசாலையில் ஆயுதம் தாங்கியவர்களாக படுக்கையில் இருந்த பெண்களை பலவந்தமாக லாரிகளில் ஏற்றிச்சென்றுள்ளனரென கூறப்பட்டுள்ளது. 276-மாணவிகள் கடத்தப்பட்டதாகவும் அவர்களில் 53-பேர்கள் வரை தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பாடசாலை பதிவேட்டின் பிரகாரம் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடலாமென எதிபார்க்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிங்கிளாக இருப்பது ஜாலியாக இருக்கு மனம் திறக்கும் சிம்பு!

Posted: 04 May 2014 06:57 AM PDT

simbu

simbuகாதலிக்கும் போது செய்ய முடியாதவற்றை இப்போது என்னால் செய்ய முடிகிறது என்று சிம்பு தெரிவித்துள்ளார். சிம்புவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. முதலில் பெரிய நடிகர் ஒருவரின் மகளை காதலித்தார்.அதன் பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்தார். நயனுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்து அதுவும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் காதல் குறித்து சிம்பு கூறுகையில், காதல் ஒரு அனுபவம். பலர் அதை அனுபவிக்காமல் திருமணம் செய்து குழந்தை பெத்துக்கிறாங்க. குடும்பம், குழந்தை பற்றி நினைத்தால் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அதை தானே அனைவரும் செய்கிறார்கள். இதுவரை திருமணம் எனக்கு கைகூடவில்லை. எனக்கு திருமணம் ஒத்து வருமா என்றும் தெரியவில்லை. நான் வேதாந்தம், தத்துவம் என்று போய் கொண்டிருக்கிறேன். என் வருங்கால மனைவியையும் அதே வழியில் செல்ல கட்டாயப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. சிங்கிளாக இருப்பது ஜாலியாக இருக்கு. காதலிக்கும் போது செய்ய முடியாதவற்றை எல்லாம் இப்போது என்னால் செய்ய முடிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓவிய ஆடையுடன் தெருவில் உலா வந்த நடிகை!

Posted: 04 May 2014 06:49 AM PDT

Filleculnulille

Filleculnulille

This posting includes an audio/video/photo media file: Download Now

ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை! சூப்பர் கிங்ஸ் வெற்றி தொடரும்….

Posted: 04 May 2014 06:43 AM PDT

jadeja

jadejaஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி நடை தொடரும் என்று ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில், நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 34 ரன் வித்தியாசத்தில் வென்று தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய அந்த போட்டி, தலா 17 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடந்தது. டாசில் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி 17 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. ஸ்மித் 16, மெக்கல்லம் 56 (40 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரெய்னா 31 ரன் எடுத்து (25 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தனர். டோனி 22, ஜடேஜா 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 17 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ராபின் உத்தப்பா 47 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), யூசுப் பதான் 41 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாச, கேப்டன் கம்பீர் (6) உள்பட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். சென்னை பந்துவீச்சில் ஜடேஜா 4 (40124), மோகித் ஷர்மா 3 (30223), அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா, சென்னை அணியின் வெற்றி குறித்து கூறியதாவது: பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அடுத்து வரும் லீக் ஆட்டங்களிலும் எங்கள் அணியின் வெற்றி நடை தொடரும் என நம்புகிறேன். அணியின் வெற்றிக்காக பங்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் கணிசமாக ரன் எடுத்து வருகிறேன். கடைசி கட்ட ஓவர்களில் விரைவாக ரன் அடிப்பது மிகவும் முக்கியம். அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். பஞ்சாப் அணி பலமானது என்பதை ஏற்பதற்கில்லை. டி20ல் எந்த அணியையும் அப்படி சொல்ல முடியாது என நினைக்கிறேன். எல்லா அணிகளுமே சம பலம் வாய்ந்தவை. ஒரு சிறப்பான கேட்ச் அல்லது ரன் அவுட் கூட ஆட்டத்தின் முடிவை மாற்றிவிடும். கிங்ஸ் லெவனுக்கு எதிராக நாங்கள் ஒரு கேட்ச் வாய்ப்பை வீணடித்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதை பிடித்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம். இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

2-ம் கட்ட பேச்சுவார்த்தை தமிழக-இலங்கை மீனவர்கள் பிரச்சனை 12-ம் தேதி கொழும்பில்!

Posted: 04 May 2014 06:35 AM PDT

rajitha

rajithaதமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையிலான 2-ம்கட்ட பேச்சுவார்த்தை வரும் 12-ம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது. இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே இத்தகவலை தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேச்சுவாத்தையில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு மீன்வளத்துறை நிபுணர்களின் கூட்டம் நடைபெறும் அவர் கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இருதரப்பு மீனவ பிரதிநிதிகளின் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்றது. அடுத்த கூட்டம் மார்ச் மாதம் கொழும்பில் நடைபெற இருந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை தரப்பால் தாக்கப்பட்டதால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 12-ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற இலங்கை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை சீர்குலைப்பதற்கான களமாக இந்தியாவை பயன்படுத்துகிறதா?

Posted: 04 May 2014 06:25 AM PDT

india-vs-srilanka

india-vs-srilankaகொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டுக்குள் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அல்லது அதற்கான ஆளணியையும் தகவல்களையும் திரட்டுவதற்கான களமாக பாகிஸ்தான் கொழும்பிலுள்ள தமது தூதரகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று இந்தியத் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த வாரம் கண்டியைச் சேர்ந்த ஜாகீர் ஹசேன் என்ற முஸ்லிம் நபர் சென்னையில் கைது செய்யப்பட்டமை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றை அடுத்து, இந்த விவகாரம் இன்னும் தீவிரம் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சென்னையில், கண்டியைச் சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு முகவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மறுநாளே ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்புக்கு, யார் காரணம் என்று இந்தப் பத்தி எழுதப்படும் வரை கண்டறியப்படவில்லை. பொதுவாகவே, இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், அல்லது தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், அதனை பாகிஸ்தான் உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி சந்தேகிப்பது வழக்கம். ஆனால், இந்தக் குண்டுவெடிப்புக்கு, நக்சலைட் எனப்படும் இடதுசாரித் தீவிரவாதிகள், அல்லது வடகிழக்கு மாநிலங்களில் செயற்படும் ஏதாவது தீவிரவாத அமைப்புக்கூட பொறுப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் உண்டு. ஏனென்றால், அசாம் தலைநகர் கௌகாத்தி செல்லும் ரயில், சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் வந்து நின்ற போது தான் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், நக்சல்களினது ஆதிக்கமும் அதிகம், ஏனைய சுதந்திரம் கோரும், தனி மாநிலம் கோரும் சிறிய போராளிக் குழுக்களினது செயற்பாடுகளும் அதிகம். எனவே, இந்தத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்று கண்டறியப்பட்ட பின்னரே, இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும். எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்குத் தொடர்புகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தென்னிந்தியாவை அது குறி வைத்துள்ளது என்று சமீபகாலமாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் குழப்பங்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புக்கள் அவ்வப்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆனால், இம்முறை அந்த எச்சரிக்கையையும் மீறி, இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு இந்தியாவினது, குறிப்பாக தமிழ்நாட்டினது பாதுகாப்புத் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளும் நெருக்கமும் அதிகரித்துள்ள சூழலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளி அதிகரித்துள்ள சூழலில், தான் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவினது பாதுகாப்பு விடயத்தில், கூடுதல் கவனத்தையும், இலங்கையுடனான நெருக்கத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை புதுடில்லிக்கு உணர்த்தியுள்ளது. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள், தென்னிந்தியாவுக்குள் தமது புலனாய்வு முகவர்களை ஊடுருவச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டு, இப்போது எழுகின்ற ஒன்றல்ல. ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு பலமுறை கூறப்பட்டது. கடந்த ஆண்டு, தமீம் அன்சாரி என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக புலனாய்வு முகவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். அதற்குப் பின்னர், தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி, அங்கிருந்து மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறித்த அதிகாரியை கொழும்பில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, கொழும்புக்கு புதுடில்லி அழுத்தங்களைக் கொடுத்ததாகவும் கூட கூறப்பட்டது. மீண்டும் இப்போது அதே பிரச்சினை தோன்றியுள்ளது. பொதுவாக, முக்கியமான நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், அந்த நாட்டையோ அல்லது அயல்நாட்டையோ உளவு பார்ப்பதற்கான அதிகாரிகளைக் கொண்டிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. பனிப்போர் காலத்தில் கிழக்கு மேற்கு என்று உலகம் பிளவுபட்டிருந்த போது, புலனாய்வு அதிகாரிகளே சக்திவாய்ந்த நாடுகளின் இராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அத்தகைய அதிகாரிகளை குறித்த நாடு வெளியேற்றுவதும், அதற்கு பதிலடியாக மற்ற நாடு வெளியேற்றுவதும் சிலவேளைகளில் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரியை பிடித்து தண்டிப்பதும் கூட பனிப்போர் காலத்தில் நிகழ்ந்துள்ளன. தூதரகங்கள் என்பது தனியே நாடுகளுக்கிடையிலான உறவுகளை வளர்ப்பதற்கான களமாக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அதையும் தாண்டி, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்ட புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும், சிலவேளைகளில் எதிரி நாட்டைச் சீர்குலைப்பதற்கான களமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தகைய பின்னணிக்கு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகமும் விதிவிலக்கானதாக இருக்கும் என்று கருத முடியாது. தூதரகங்ளில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியானது, குறித்த நாடு பற்றிய பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை திரட்டுவதற்கு உருவாக்கப்பட்டதே என்பதை நினைவில் கொள்ளலாம். எவ்வாறாயினும், தனக்கு எதிரான சதித்திட்டங்களுக்காக கொழும்பு களமாகப் பயன்படுத்தப்படுவதை, புதுடில்லி ஒருபோதும் விரும்பாது. ஏற்கனவே, இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், பாகிஸ்தானைத் தளமாக கொண்ட லஷ்கர் இ.தொய்பா தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் நுழைவதற்கான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. அதனை இலங்கை அரசாங்கம் அப்போது நிராகரித்திருந்தது. அதுமட்டுமன்றி, இந்தியாவைக் கண்காணிக்கும் தகவல் தொடர்பு நிலையம் ஒன்றை, வடக்கில் பாகிஸ்தான் அமைத்திருப்பதாகவும் கூட செய்திகள் வெளியாகின. பொதுவாகவே இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவு இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துவது வழக்கம் என்று சிபிஐயின் முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. போர் முடிவுக்கு வந்த பின்னர், குறிப்பாக கடந்த இரண்டொரு ஆண்டுகளில் இலங்கை மீதான பாகிஸ்தானின் கரிசனைகள் அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நெருக்கமடைந்துள்ளதை புதுடில்லியால் அவ்வளவு சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயம். அண்மைக்காலமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் படை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள் அதிகரித்துள்ளது ஒரு காரணம். ஆனால், இவ்வாறு இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் ஜெனரல்களும் சரி, உயர்மட்ட அதிகாரிகள் குழுக்களும் சரி, தமிழ்நாட்டில் இருந்து சில பத்து கி.மீ. தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது இந்தியாவினது சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இரண்டு பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழுக்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தன. இவை வெளிப்படையானதாக இருந்தாலும், போருக்குப் பின்னர், இலங்கையைத் தமது இரகசியத் தளமாகப் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கை மையமாகவும் கொழும்பை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் மிக அண்மையில் குற்றம் சாட்டியிருந்தன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், மத்திய நிதிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை ஒன்றில், கொழும்பிலுள்ள தமது தூதரகம் மூலம், இந்தியாவுக்குள் போலி நாணயத்தாள்களை பாகிஸ்தான் அனுப்பி வருவதாக குறிப்பிட்டிருந்தனர். பங்களாதேஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளையும் இதற்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட 5 ரூபா, 10 ரூபா, 20 ரூபா, 50 ரூபா போலி நாணயத்தாள்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றியும் இருந்தனர். இந்தப் பின்னணியில் தான், கண்டியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், சென்னையில் பாகிஸ்தான் புலனாய்வு முகவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அங்கு தகவல்களைத் திரட்டவும், தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆட்களைச் சேர்க்கவும் அனுப்பி வைக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இது உண்மையானால் அது தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இலங்கையிலும் கூட அமைதியற்ற நிலையை உருவாக்கும். கொழும்புக்கும், புதுடில்லிக்கும் இடையிலான உறவுகள் சற்று குழம்பிப் போயுள்ள சூழலில், புதுடில்லியில் அடுத்துப் பதவியேற்கவுள்ள அரசாங்கத்துக்கு இது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். ஏனென்றால், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளன. அது இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கும் போது இந்தியா சும்மாயிருக்க முடியாது. அதுவும் இந்த விவகாரத்தில் கடும்போக்கைக் கடைப்பிடிக்கக் கூடிய பாஜக ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்பட்டால் இந்த விவகாரத்தில், கொழும்புக்குச் சங்கடங்கள் அதிகம் ஏற்படலாம்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

புலம்பெயர் அமைப்பு தடையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை அமெரிக்கா அறிக்கை!

Posted: 04 May 2014 06:13 AM PDT

US-and-Canada-Flag

US-and-Canada-Flagஇலங்கை அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதே நிலைப்பாட்டை தற்போது அமெரிக்காவும் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் அமைப்பு தடையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களிடம் புலிகள் தொடர்ந்தும் நிதி திரட்டி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் அறிவித்த போதிலும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பட்டியலை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கவில்லை. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், தடையை அமுல்படுத்தப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™