மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கோவில் திருவிழாவில் பிரசாரம்: பாலகிருஷ்ணாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
- வாரணாசி தொகுதியில் மோடிக்கு ஆதரவாக சகோதரர்கள் பிரசாரம்
- ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆ.ராசா வாக்குமூலம்
- நக்சலைட்டுகள் மிரட்டல்: சீமாந்திராவில் 144 தடை உத்தரவு அமல்
- சென்னை, பெங்களூரில் அமெரிக்க, இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி
- கண்ணியமாக வெளியேறுங்கள்: சோனியாவுக்கு மோடி அறிவுரை
- இந்தியாவின் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி
- பொய்யான வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு வழங்குகிறார்: ஷர்மிளா குற்றச்சாட்டு
- தேர்தல் கமிஷன் மீது மோடி பகிரங்க குற்றச்சாட்டு
- யார் ஸ்மிருதி இராணி: பிரியங்கா கேள்வி
- மோடியை கைது செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மம்தா வேண்டுகோள்
- உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு 40 இடங்கள் கிடைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
- மோடிக்கு எதிராக விசாரணை: காங்கிரஸ் கட்சி முடிவுக்கு ஒமர்-பவார் எதிர்ப்பு
- கேதார்நாத் கோவில் பக்தர்களுக்காக இன்று மீண்டும் திறப்பு
- பிபா உலகக் கோப்பை: கொடியேந்தி செல்ல இரண்டு டெல்லி சிறுவர்கள் தேர்வு
- நாசிக்கில் டாக்டரை மிரட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது
- துபாய் சுற்றுலா திருவிழாவில் இடம்பெறும் கோவா
- பாலக்காடு மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் குறைவு
- அரசியல் லாபத்திற்காகவே மோடி தியாகிகள் பெயரை பயன்படுத்துகிறார்: சோனியா
- கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் மத்தியப் பிரதேசப் பொறியாளர் பலி
| கோவில் திருவிழாவில் பிரசாரம்: பாலகிருஷ்ணாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 04 May 2014 11:13 PM PDT ஆந்திராவில் பாராளு மன்ற தேர்தலுடன் சட்ட சபைக்கும் தேர்தல் நடக்கிறது. சீமாந்திரா பகுதியில் வருகிற 7–ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. மறைந்த முதல்–மந்திரி என்.டி.ராம ராவின் மகனான நடிகர் பாலகிருஷ்ணா அனந்தபுரம் மாவட்டம் சிந்துபுரா சட்ட சபை தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிடுகிறார். இது என்.டி. ராமராவ் வெற்றி பெற்ற தொகுதியாகும். நடிகர் பாலகிருஷ்ணா பிரசாரத்துக்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே |
| வாரணாசி தொகுதியில் மோடிக்கு ஆதரவாக சகோதரர்கள் பிரசாரம் Posted: 04 May 2014 11:08 PM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இரண்டு தொகுதியில் போட்டியிடுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவிலும், உத்தரபிரதேச மாநில வாரணாசியிலும் அவர் களத்தில் நிற்கிறார். இதில் வதோதரா தொகுயில் ஏற்கனவே ஓட்டுப் பதிவு முடிந்து விட்டது. வாரணாசிக்கு வருகிற 12–ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே நரேந்திர மோடிக்கு ஆதரவாக அவரது சகோதாரர்கள் சோம் |
| ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆ.ராசா வாக்குமூலம் Posted: 04 May 2014 11:01 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 பேருக்கும் பல்வேறு விதமான பொது கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. மொத்தம் 1718 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் இன்று |
| நக்சலைட்டுகள் மிரட்டல்: சீமாந்திராவில் 144 தடை உத்தரவு அமல் Posted: 04 May 2014 10:34 PM PDT ஆந்திராவில் பாராளு மன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. தெலுங்கானா பகுதியில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதி 119 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30–ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 2–வது கட்டமாக சீமாந்திரா பகுதியில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதி, 175 சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் (7–ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. |
| சென்னை, பெங்களூரில் அமெரிக்க, இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி Posted: 04 May 2014 10:19 PM PDT சென்னை, பெங்களூரில் அமெரிக்க – இஸ்ரேல் தூதரங்களை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக சென்னையில் பிடிப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் திடுக்கிடும் தகவல் வெளியிட்டான். சென்னை மண்ணடியில் சில நாட்களுக்கு முன் ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி பிடிப்பட்டான். |
| கண்ணியமாக வெளியேறுங்கள்: சோனியாவுக்கு மோடி அறிவுரை Posted: 04 May 2014 09:08 PM PDT பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களை வெற்றிப் பெற செய்து அமோக ஆதரவு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், இதனை குறிப்பினால் உணர்த்தும் வகையில் டி.வி.க்களில் வரும் மறைந்த கார்கில் தியாகிகள் தொடர்பான 'யே தில் மாங்கே மோர்' (என் உள்ளம் இன்னும் அதிகமாக கேட்கிறது) என்ற பாடலின் முதல் வரியை குறிப்பிட்டும் அவர் வாக்கு சேகரித்தார். |
| இந்தியாவின் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி Posted: 04 May 2014 05:12 PM PDT விண்ணிலிருந்து ஏவி வானில் உள்ள இலக்கை தாக்கும் அஸ்த்ரா ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் கடற்படை தாக்குதல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகோய்- 30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்த்ரா ஏவுகணை ஏவப்பட்டு மிக துல்லியமாக இலக்கை நோக்கி சென்று தாக்கியது. கண்ணுக்கு புலப்படாத இலக்கை தாக்கும் இந்த ஏவுகணையை முதல் |
| பொய்யான வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு வழங்குகிறார்: ஷர்மிளா குற்றச்சாட்டு Posted: 04 May 2014 03:56 PM PDT ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தெலுங்கு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷர்மிளா குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது அவர் பேசியதாவது: |
| தேர்தல் கமிஷன் மீது மோடி பகிரங்க குற்றச்சாட்டு Posted: 04 May 2014 02:25 PM PDT மேற்கு வங்காளம், பீகார், உ.பி.யில் தேர்தல் மோசடிகளை தடுக்கவில்லை என்று தேர்தல் கமிஷன் மீது பகிரங்க குற்றச்சாட்டு கூறிய மோடி, தேர்தல் கமிஷனுக்கு சவால் விட்டார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநிலம், அசான்சோல் என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆவேசமாகப் பேசிய அவர் கூறியதாவது:- பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டியது உங்களின் (தேர்தல் கமிஷன்) பொறுப்பு. உங்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறேன். இங்கே, பீகாரில், மேற்கு உத்தரபிரதேசத்தில் வாக்குச்சாவடியில் (கள்ள ஓட்டுகள் போடுதல் உள்ளிட்ட) மோசடிகள், வன்முறைகள் நடைபெற்றுள்ளன. நீங்கள் அவற்றை |
| யார் ஸ்மிருதி இராணி: பிரியங்கா கேள்வி Posted: 04 May 2014 01:33 PM PDT காங்கிரஸ் கட்சியன் துணை தலைவரான ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியான பிரியங்கா தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இம்முறை அவருக்கு பா.ஜ.க.வை சேர்ந்த ஸ்மிருதி இராணி கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். அதே போல் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஸ்மிருதி பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், யார் ஸ்மிருதி இராணி என்று பிரியங்கா கேள்வியெழுப்பினார். இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள ஸ்மிருதி, இது குறித்து தான் ஆச்சரியப்படவில்லை. தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை செய்த ஊழலை மறந்தவர்கள் எதற்காக என்னுடைய பெயரை நினைவில் |
| மோடியை கைது செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மம்தா வேண்டுகோள் Posted: 04 May 2014 11:20 AM PDT பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி வருகிறார். இவ்வாறு பேசி வரும் அவரை கைது செய்வதுடன், மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இனி அவர் கலந்து கொள்ளவும் தடை விதிக்கவேண்டும் என மம்தா கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா |
| உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு 40 இடங்கள் கிடைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல் Posted: 04 May 2014 11:07 AM PDT உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்ணிப்பில் தெரிய வந்துள்ளது. இது வரை அம்மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் 33 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. அந்த 33 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்புக்கு அதிக இடமுள்ளது என தனியார் தொலைக்காட்சி ஒன்று சில தினங்களுக்கு |
| மோடிக்கு எதிராக விசாரணை: காங்கிரஸ் கட்சி முடிவுக்கு ஒமர்-பவார் எதிர்ப்பு Posted: 04 May 2014 10:57 AM PDT பெண் ஒருவரை வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஒருவரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அதன் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பான தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அக்கட்சியின் முக்கிய தலைவரான பிரபுல் |
| கேதார்நாத் கோவில் பக்தர்களுக்காக இன்று மீண்டும் திறப்பு Posted: 04 May 2014 09:29 AM PDT கடந்த வருடம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெருமழையிலும், பெருவெள்ளத்திலும் கேதார்நாத் கோவில் பகுதிகள் மிகவும் சேதமடைந்தன. அங்கு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் சிக்கி 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இவர்களில் பெரும்பான்மையானோர் பலியானதாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீரமைப்பு |
| பிபா உலகக் கோப்பை: கொடியேந்தி செல்ல இரண்டு டெல்லி சிறுவர்கள் தேர்வு Posted: 04 May 2014 08:32 AM PDT பிரேசில் நாட்டில் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் உலககோப்பை கால்பந்துப் போட்டி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் துவக்கவிழாவில் கொடிகளை ஏந்தி செல்லும் சிறுவர்களுக்கான தேர்வு புது டெல்லியில் இன்று நடைபெற்றது. அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் நட்சத்திரத் தூதரான பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். டெல்லி நகரைச் சேர்ந்த 500 சிறுவர்கள் இந்தத் தேர்விற்கு வந்திருந்தனர். |
| நாசிக்கில் டாக்டரை மிரட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது Posted: 04 May 2014 07:57 AM PDT நாசிக் ரோடு பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் மோகன் பூரி. சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு 4 பேர் வந்தனர். உங்களது ஆஸ்பத்திரியில் கொடுக்கப்படும் மருந்துகள் அனைத்தும் தரம் குறைவானவை. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. இதை வெளியில் எடுத்து சொல்லி, கிளினிக்கிற்கு அவபெயர் ஏற்படுத்தி தருவோம். அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், எங்களுக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டினர். |
| துபாய் சுற்றுலா திருவிழாவில் இடம்பெறும் கோவா Posted: 04 May 2014 06:36 AM PDT துபாயில் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பிரம்மாண்ட ஹோட்டல்களின் உரிமையாளர்கள் பங்கேற்கும் அரேபியன் டிராவல் மார்க்கெட் என்ற சுற்றுலா திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தொடர்ந்து 21வது ஆண்டாக இந்த திருவிழா துபாயின் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நாளை துவங்குகிறது. வரும் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் திரளான வெளிநாட்டினர் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு நாடுகளின் சுற்றுலா அமைப்புகளும், பிரமுகர்களும் அவரவர் நாட்டின் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர். |
| பாலக்காடு மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் குறைவு Posted: 04 May 2014 04:42 AM PDT பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் நீர்மட்டம் பெருமளவு குறைந்து விட்டதால் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுள்ளியார் அணை, மீன்கரை டேம், மலம்புழா, மங்களம்டேம் மற்றும் சிறுவாணி அணைகள் மிக முக்கியமானது ஆகும் |
| அரசியல் லாபத்திற்காகவே மோடி தியாகிகள் பெயரை பயன்படுத்துகிறார்: சோனியா Posted: 04 May 2014 04:29 AM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அரசியல் ஆதாயம் பெறும் நோக்கிலேயே, கார்கில் ஹீரோக்களுக்கு தனது கட்சி ஆதரவு அளிப்பது போன்று பேசுகிறார் என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- மோடியின் உள்ளம் அதிகாரத்தை மட்டுமே தேடுகிறது. அரசியல் லாபத்திற்காக மட்டுமே தியாகிகள் பெயரை அவர் பயன்படுத்துகிறார். |
| கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் மத்தியப் பிரதேசப் பொறியாளர் பலி Posted: 04 May 2014 04:20 AM PDT கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று நைஜீரியாவின் ஹார்கோர்ட் துறைமுகத்தில் இருந்து லாகோஸ் நோக்கி எஸ்.பி.பிரஸ்ஸல்ஸ் என்ற கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. அதில் இரண்டு பாதுகாவலர்களுடன் 17 ஊழியர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். ஜெர்மன் தயாரிப்பான இந்தக் கப்பல் மெடாலியன் மரைன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தது. இதில் பயணித்தவர்களில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |