Tamil Star |
- கேரளாவை சேர்ந்த அனாஸ் பட்விளிகல்வி சுட்டுக் கொலை: சவுதி அரேபியாவில் பயங்கரம்
- இலங்கை, பாகிஸ்தான் சிறையில் இருந்து தமிழக மீனவர் அனைவரும் விடுதலை!
- விடுதலைப் புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!
- விபத்துக்கு உள்ளான 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்பு!
- மலேசியாவில் தீவிர தேடுதல் வேட்டை விடுதலைப் புலிகள் கைது!
- விக்னேஸ்வரன் செய்த பாரிய தவறு: ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தமை!
- சிலாங்கூர் பிரதேசத்தில் புலிகள் அமைப்பு இலங்கையர்கள் மூவர் கைது!
| கேரளாவை சேர்ந்த அனாஸ் பட்விளிகல்வி சுட்டுக் கொலை: சவுதி அரேபியாவில் பயங்கரம் Posted: 25 May 2014 11:53 PM PDT
சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற ஒரு வாரத்தில் இந்திய டிரைவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் அனாஸ் பட்விளிகல்வி (24). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவருக்கு, சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள ஒரு வீட்டில் டிரைவர் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்த அனாஸ், நேற்று முன்தினம் எஜமானியின் மகனை காரில் அழைத்துக் கொண்டு, டைப் என்ற இடத்துக்கு சென்று விட்டு மெக்காவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக, எஜமானியின் மகன் தனது துப்பாக்கியால் அனாசை நோக்கி சரமாரியாக சுட்டார். சம்பவ இடத்திலேயே அனாஸ் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த மெக்கா போலீசார் கொலையாளியை கைது செய்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை, பாகிஸ்தான் சிறையில் இருந்து தமிழக மீனவர் அனைவரும் விடுதலை! Posted: 25 May 2014 11:46 PM PDT
நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்காக இந்தியா பயணம் மேற்கொள்ளும் இலங்கை அதிபர் ராஜபக்சே, நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுபோல, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் வருகையை ஒட்டி, அங்குள்ள சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 151 பேரை அந்த நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. இந்தியாவின் 14வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்க உள்ளார். பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு வெளி நாட்டு தலைவர்களை அழைப்பது வழக்கமில்லை. ஆனால், முதல் முறையாக தெற்காசிய கூட்டமைப்பான சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள் ளார். அவரது அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா வர சம்மதம் தெரிவித்தனர். இதில், ராஜபக்சேவுக்கு மோடி அழைப்பு விடுத்தது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை அழைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று அறிவித்துள்ளார். மோடி பதவி ஏற்பு விழாவுக்காக அதிபர் ராஜபக்சே இந்தியா வர உள்ளதால், நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, தமிழக மீனவர்களை விடுதலை செய்வது இது 2வது முறை. இதற்கு முன், கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தமிழக மீனவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதாக ராஜபக்சே அறிவித்தார். மோடி தலைமையிலான புதிய அரசுடன் இலங்கை நல்லுறவு மேற்கொள்ள முயற்சி செய்வதன் பலனாகத்தான் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், எத்தனை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.மீனவர்கள் விடுதலை அறிவிப்பால், தமிழகத்தில் வாழும் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்தியா வந்துள்ள ராஜபக்சேவுடன் மோடி பேச்சு நடத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவர்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.பாகிஸ்தானும் விடுவித்தது: இலங்கையை போலவே, பாகிஸ்தானும் அங்குள்ள சிறையில் உள்ள 151 இந்திய மீனவர்களை விடுவித்துள்ளது. பாகிஸ்தான் கராச்சியில் உள்ள மலிர் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 59 பேர் மற்றும் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தின் நாரா சிறையில் இருந்து 92 பேரும் நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுவிக்கப்பட்டனர். இது குறித்து கராச்சியில் உள்ள மாலிர் சிறை கண்காணிப்பாளர் சையத் நசீர் ஹுசைன் கூறுகையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் பெரும்பாலானோர் வறுமை நிலையில் உள்ளவர்கள். கடலில் எல்லை தாண்டிய குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார். கைதான மீனவர் ஒருவர் கூறுகையில் 'எங்களை குற்றவாளிகள் போல் நடத்தவில்லை. நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தினரை பார்க்க விரும்புகிறோம் என்றார்.பாகிஸ்தான் சிறையில் தற்போது 229 இந்திய மீனவர்களும், 780 மீன்பிடி படகுகளும் பாகிஸ்தானில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 337 மீனவர்களையும், நல்லெண்ண அடிப்படையில் 15 மீனவர்களையும் பாகிஸ்தான் விடுவித்தது. வாகா எல்லையில் வரவேற்பு பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படும் இந்திய மீனவர் 151 பேரை பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக மீனவர் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் கொண்ட தனி குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக குஜராத் மாநில மீனவர் நலத்துறை தலைமை இயக்குனர் பி.எல்.தர்பார் நேற்று தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் விடுவிக்கும் மீனவர்களில் பெரும்பாலோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் 151 பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது' என்றார். நரேந்திர மோடி வரவேற்பு இந்தியா வருவதை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 151 பேரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இலங்கையும், பாகிஸ்தானும் எடுத்த நடவடிக்கைகளை பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விடுதலைப் புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை! Posted: 25 May 2014 11:34 PM PDT
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கோபி, தேவியன் உள்ளிட்டவர்களை கொலை செய்தமைக்கு பழி தீர்க்கப் போவதாக பிரான்ஸிலிருந்து அவர்களை வழிநடத்திய சந்தோசம் சூளுரைத்துள்ளார். எனவே வடக்கு மற்றும் வன்னிப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டு வரும் படையினர் மற்றும் பொலிஸார் தனித் தனியாக கடமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடமைக்குச் செல்லும் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லுமாறும் புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வன்னிக் காட்டுப் பகுதிகளில் அடிக்கடி தேடுதல் வேட்டைகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விபத்துக்கு உள்ளான 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்பு! Posted: 25 May 2014 11:27 PM PDT
விபத்துக்கு உள்ளான ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் இருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். காலி பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்ற ஆழ்கடல் மீன்பிடி படகே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது. இது குறித்து கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் இன்று காலை 6 மணியளவில் படகில் இருந்த மீனவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலேசியாவில் தீவிர தேடுதல் வேட்டை விடுதலைப் புலிகள் கைது! Posted: 25 May 2014 11:21 PM PDT
மலேசியாவில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பக்கிட் அமான் விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்போது இதுவரைக்கும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மலேசியாவை தளமாக பயன்படுத்துவதற்கு இடம்தரப்படமாட்டாது என்ற மலேசிய பொலிஸார் எச்சரித்துள்ளனர். மலேசியாவை குற்றச்செயல் நடவடிக்கைகளுக்காக எவரும் பயன்படுத்த முடியாது. மலேசியாவில் தற்போது 4300 இலங்கையர்கள் தங்கியுள்ளனர். இதேவேளை 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தளபதி என்று நம்பப்படுவதாக மலேசியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மலேசியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளே விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விக்னேஸ்வரன் செய்த பாரிய தவறு: ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தமை! Posted: 25 May 2014 11:12 PM PDT
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதியுடன் இந்தியா செல்லும் அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் நிராகரித்தமையை அரசாங்கம் கண்டித்துள்ளது. நல்ல எண்ணத்துடன் விடுக்கப்பட்ட இந்த அழைப்பை நிராகரித்தமை விக்னேஸ்வரன் செய்த பாரிய தவறு என்று வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏதுநிலைகள் இந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமானால் ஏற்பட்டிருக்ககூடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் ஜனாதிபதி தலைமையிலான குழு இன்று இந்தியா செல்கிறது. இதில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சேனுக்கா செனவிரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், யாழ்ப்பாண மாநகர முதல்வர் யோகேஸ்வரி ஆகியோர் அடங்கியுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிலாங்கூர் பிரதேசத்தில் புலிகள் அமைப்பு இலங்கையர்கள் மூவர் கைது! Posted: 25 May 2014 10:55 PM PDT
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் சிலாங்கூர் பிரதேசத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 15ஆம் திகதி மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள் மூவரும் கைதாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க இவர்கள் முயற்சித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு மலேசியா சென்றுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்து நிதி சேகரிக்கும் முயற்சிகளில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தேகநபர்கள் குடுவரவுச் சட்டத்தின் கீழ் மலேசியாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






