மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதி விபத்து: 20 பேர் பலி?
- மோடி பதவியேற்பு விழா: 21 வகை சுவையான உணவுகள் தயாரிப்பு
- மத்தியபிரதேச பள்ளி பாடப்புத்தகத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு
- 2ஜி: ஆ.ராசா, கனிமொழி கோர்ட்டில் ஆஜர் - தயாளு அம்மாளுக்கு விலக்கு
- டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: வைகோ கைது
- மோடியுடன் இன்று பதவியேற்கும் மந்திரிகள் பட்டியல்
- இந்தியாவின் 15–வது பிரதமராக மோடி இன்று பதவி ஏற்கிறார்
- திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு: சிக்கனத்தை கடைபிடிக்க தேவஸ்தானம் முடிவு
- திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் குளத்தை தூர் வார ஏற்பாடு
- ஆப்கானிஸ்தான் அதிபர் இந்தியா வந்தார்
- நவாஸ் ஷெரீப் டெல்லி வந்தடைந்தார்
- சீமாந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 8-ந் தேதி பதவி ஏற்பு
- குருவாயூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பிளஸ்–2 மாணவிகள்
- திருப்பதி கோவிலில் பாதயாத்திரை தரிசனம் 2 நாள் ரத்து ஆகிறது
- வாஜ்பாயுடன் மோடி சந்திப்பு: பதவி ஏற்கும் முன்பு ஆசி பெற்றார்
- ராஜபக்சே டெல்லி வந்தார்
- கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் மகளுக்கு 2–வது திருமணம்
- காந்தி நினைவிடத்தில் மோடி அஞ்சலி
- தனியார் மயமாக்கலுக்கு ஏர் இந்தியா விமானிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது
- இந்தியா வரும் நவாஸ் ஷெரிப் காஷ்மீர் பிரிவினைவாத தலைவரை சந்திக்கமாட்டார்
| சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதி விபத்து: 20 பேர் பலி? Posted: 26 May 2014 12:53 AM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் மீது கோரக்பூர் விரைவு ரயில் மோதியதில் 20 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சன் கபிர் நகர் மாவட்டத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், விபத்து குறித்த முழுத்தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன்பிறகு, விபத்து குறித்து விசாரணை |
| மோடி பதவியேற்பு விழா: 21 வகை சுவையான உணவுகள் தயாரிப்பு Posted: 26 May 2014 12:25 AM PDT இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருந்து கொடுக்கிறார். பதவியேற்பு விழா முடிந்ததும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கிரே டைனிங் அறையில் இந்த விருந்து அளிக்கப்படுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், மாலத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமின், மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம்குலாம், நேபாளம் பிரதமர் சுசில் கொய்லாரா, பூடான் பிரதமர் செரிங் தாப்கே, வங்காளதேச பாராளுமன்ற சபாநாயர் ஷிரின் எஸ்.சவுத்ரி ஆகிய வெளிநாட்டு தலைவர்கள் உள்பட 25 முதல் 30 வி.ஐ.பி.க்களுக்கும் விருந்து அளிக்கப்படுகிறது. |
| மத்தியபிரதேச பள்ளி பாடப்புத்தகத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு Posted: 26 May 2014 12:22 AM PDT பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க மத்திய பிரதேச பாரதீய ஜனதா அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து மத்தியபிரதேச மாநில கல்வித்துறை மந்திரி பராஸ் ஜெயின் கூறுகையில், ''மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாக பள்ளி பாடத்தில் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க உள்ளோம். இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் |
| 2ஜி: ஆ.ராசா, கனிமொழி கோர்ட்டில் ஆஜர் - தயாளு அம்மாளுக்கு விலக்கு Posted: 26 May 2014 12:19 AM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா |
| டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: வைகோ கைது Posted: 25 May 2014 11:45 PM PDT பிரதமர் மோடி பதவி எற்பு விழாவில் பங்கேற்க சார்க் நாட்டு தலைவர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டார். இதற்கு பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த ம.தி.மு.க. தலைவர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைக்க கூடாது என்று பா.ஜனதா தலைவர் ராஜநாத்சிங்கை சந்தித்து வைகோ கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை இந்த நிலையில் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் தனது தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்து இருந்தார். இதற்காக அவர் தொண்டர்களுடன் டெல்லி சென்றார். இன்று காலை 11 மணி அளவில் ஜந்தர் மந்திரில் வைகோ தனது ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார். |
| மோடியுடன் இன்று பதவியேற்கும் மந்திரிகள் பட்டியல் Posted: 25 May 2014 11:38 PM PDT நாட்டின் பதினைந்தாவது பிரதமராக இன்று மாலை 6 மணியளவில் பதவியேற்றுக் கொள்ளும் மோடியுடன் கேபினட் தகுதியுடன் மத்திய மந்திரியாக பொறுப்பேற்கும் 23 பேர்களின் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி:- |
| இந்தியாவின் 15–வது பிரதமராக மோடி இன்று பதவி ஏற்கிறார் Posted: 25 May 2014 11:31 PM PDT இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவுக்காக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து |
| திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு: சிக்கனத்தை கடைபிடிக்க தேவஸ்தானம் முடிவு Posted: 25 May 2014 11:30 PM PDT திருப்பதியில் சில நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திருமலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள நீர்த்தேக்கங்களில் 80 நாட்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பே உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. |
| திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் குளத்தை தூர் வார ஏற்பாடு Posted: 25 May 2014 11:15 PM PDT திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் கண்டு எடுக்கப்பட்டது. இதனை கோவிலை நிர்வகித்த மன்னர் மார்த்தாண்ட வர்மா குடும்பத்தினர் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கோவில் நிர்வாகம் அதிகாரிகள் கைக்கு மாற்றப்பட்டது |
| ஆப்கானிஸ்தான் அதிபர் இந்தியா வந்தார் Posted: 25 May 2014 11:08 PM PDT நாட்டின் பிரதமராக இன்று மாலை பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆப்கான்னிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இந்தியா வந்தடைந்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து தனி விமானம் மூலம் |
| நவாஸ் ஷெரீப் டெல்லி வந்தடைந்தார் Posted: 25 May 2014 11:00 PM PDT நாட்டின் பிரதமராக இன்று மாலை பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வந்தடைந்தார். இன்று காலை 9.30 மணியளவில் பாகிஸ்தான் தலைநகர் |
| சீமாந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 8-ந் தேதி பதவி ஏற்பு Posted: 25 May 2014 10:58 PM PDT சீமாந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி 102 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் சேர்க்கப்பட்டதால் சீமாந்திராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் பதவி ஏற்க அவர் முடிவு செய்தார். இதையடுத்து குண்டூர், விஜயவாடா ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தின் மையப்பகுதியில் இருப்பதால் அநேகமாக விஜயவாடாவில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று உறுதியாக |
| குருவாயூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பிளஸ்–2 மாணவிகள் Posted: 25 May 2014 10:57 PM PDT குருவாயூரை அடுத்த தெக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் கிரீஷ்மா, (வயது 17). சங்கரின் உறவினர் பேபி. இவரது மகள் அஞ்சு, (17). கிரீஷ்மாவும், அஞ்சுவும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலையில் இருந்து இவர்களை காணவில்லை. பல இடங்களில் தேடியும் |
| திருப்பதி கோவிலில் பாதயாத்திரை தரிசனம் 2 நாள் ரத்து ஆகிறது Posted: 25 May 2014 10:51 PM PDT திருப்பதியில் கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. அதுவும் வாரவிடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக் கிழமையில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் நேற்று முன்தினம் தர்ம தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆனது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக நேரடியாக |
| வாஜ்பாயுடன் மோடி சந்திப்பு: பதவி ஏற்கும் முன்பு ஆசி பெற்றார் Posted: 25 May 2014 10:38 PM PDT முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீது நரேந்திர மோடி மிகவும் பற்றும், பாசமும் கொண்டவர். அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல விஷயங்களில் வாஜ்பாயையே மோடி முன் உதாரணமாக கொண்டு செயல்படுகிறார். மோடி குஜராத்தில் இருந்து எப்போது டெல்லி வந்தாலும் வாஜ்பாயை சந்தித்து பேச தவறுவது இல்லை. பா.ஜ.க. அமோக வெற்றி பெற்ற பிறகு 18–ந் தேதி டெல்லி வந்த மோடி முதலில் வாஜ்பாயிடம் சென்று ஆசி பெற்றார். |
| Posted: 25 May 2014 09:59 PM PDT நாட்டின் பிரதமராக இன்று மாலை பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தடைந்தார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்தியாவுக்கான இலங்கை தலைமை |
| கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் மகளுக்கு 2–வது திருமணம் Posted: 25 May 2014 09:58 PM PDT கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி. இவரது மகள் மரியா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இந்த நிலையில் மரியாவுக்கும், எர்ணாகுளம் புலிகோடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் வர்க்கீசுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஜார்ஜும் ஏற்கனவே திருமணமாகி |
| காந்தி நினைவிடத்தில் மோடி அஞ்சலி Posted: 25 May 2014 08:04 PM PDT நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவியேற்கும் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து காரில் ஏறிய மோடி, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இல்லம் நோக்கி சென்றுக் கொண்டுள்ளார். அவரிடம் ஆசி வாங்கிய பின்னர், புதிதாக |
| தனியார் மயமாக்கலுக்கு ஏர் இந்தியா விமானிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது Posted: 25 May 2014 05:21 PM PDT இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா திறமையற்ற நிர்வாகத்தாலும், அரசியல்வாதிகளின் தலையீட்டாலும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகின்றது. வரும் 2020ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருந்த பங்குத்தொகை 30,000 கோடியில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட தொகை தற்போதே செலவழிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலான |
| இந்தியா வரும் நவாஸ் ஷெரிப் காஷ்மீர் பிரிவினைவாத தலைவரை சந்திக்கமாட்டார் Posted: 25 May 2014 05:14 PM PDT பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாரதப் பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க புதுடெல்லி வருகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நீண்ட காலமாக முடங்கி போயுள்ள சூழ்நிலையில் நவாசின் வருகையின் மூலம் அது மீண்டும் தொடங்கப்படும் வாய்ப்பு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |